- இடைமுடியின் றீங்கனியென் றெல்லின் முசுத்தாவும்
- கடைமுடியின் மேவுங் கருத்தா - கொடைமுடியா
- இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்
- இட்டமதை விட்டற்113 கிசைந்திலையே - முட்டகற்றப்
- இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும்
- விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார்
- கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம்
- புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே.
- இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
- எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
- கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
- மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
- இட்டங் களித்த தொற்றியுளீ ரீண்டிவ் வேளை யெவனென்றேன்
- சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொலுமென்றேன்
- பட்டுண் மருங்குற் பாவாய்நீ பரித்த தன்றே பாரென்றே
- யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ ரென்ன சாதி யினரென்றேன்
- தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் சாதி நீபெண் சாதியென்றார்
- விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் வியப்பா மென்றே னயப்பானின்
- னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
- மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
- நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
- திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.
- இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
- எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
- மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
- வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
- துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
- சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
- விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
- வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே.
- இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
- தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
- இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
- நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
- இனிநான் தரியேன் தரியேன் அபயம்
- விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
- விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
- உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
- குனவே எனவே அலவே அபயம்
- சுடர்மா மணியே அபயம் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
- சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற
- தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்
- பொன்னேர் பதத்தைப் புகழ்.
- இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
- மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
- திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
- நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே
- எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே
- நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே
- நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
- கிதுதரு ணம்இங்கு வாரீர்
- இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
- இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
- ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
- உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்