- இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென
- ஒப்பாரி யேனும் உடையேன்காண் - தப்பாய்ந்த
- இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை
- எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன்
- இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை
- அப்பா எனும்நங்கள் அப்பன்காண் - செப்பாமல்
- இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்
- செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில்
- இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு
- முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்
- இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது
- செப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் - செப்பிறப்பின்
- இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென்
- அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் - இப்பாரில்
- நானினது தாழல் நண்ணுமட்டும் நின்னடியர்
- பானினது சீர்கேட்கப் பண்.
- இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
- வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
- எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
- அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை
- அப்பாநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
- அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி
- இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
- எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும்
- துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ
- அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே.
- இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
- தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
- எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
- அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே