- ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத்
- தேசனைத் தலைமைத் தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்துநின் றேத்தா
- நீசரை நாண்இல் நெட்டரை நரக நேயரைத் தீயரைத் தரும
- நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
- டேசரே நீர்இங்கு வாரீர்
- நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈசர் பலிக்குழல்299 நேசர்என் றன்பர்கள்
- ஏசநின் றீர்இங்கு வாரீர்
- நாசமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
- ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
- தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
- தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
- ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
- எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
- ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
- என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
- ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
- அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
- கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
- கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.