- ஈதல் ஒழியா வண்கையினார் எல்லாம் வல்ல சித்தர்அவர்
- ஓதல் ஒழியா ஒற்றியில்என் உள்ளம் உவக்க உலகம்எலாம்
- ஆதல் ஒழியா எழில்உருக்கொண் டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
- காதல் ஒழியா தென்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
- இரண்டரைக் கடிகையில் நினக்கே
- ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
- உண்மைஈ தாதலால் இனிவீண்
- போதுபோக் காமல் மங்கலக் கோலம்
- புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
- தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
- தெருட்டிய சிற்சபை யவரே.
- ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
- கெட்டா திருந்தீரே வாரீர்
- நட்டார்க் கெளியீரே வாரீர். வாரீர்
- ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
- கீதல்செய் வீர்இங்கு வாரீர்
- ஓதரி யீர்இங்கு வாரீர். வாரீர்