- ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்
- கூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர்
- ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
- மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
- து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
- ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
- ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
- பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
- ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
- ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
- அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
- என்றே எனக்குநினக் கும்.
- ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
- இயம்பநின் றீர்இங்கு வாரீர்
- வயந்தரு வீர்இங்கு வாரீர் வாரீர்
- ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
- என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
- காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
- கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
- தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
- தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
- மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
- வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.