- பரதுரிய வநுபவம் குருதுரிய பதமம் பகம்பகா தீதவிமலம்
- பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற் பதாதீத மின்பவடிவம்
- பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு பவவிலாசப் பிரகாசம்
- பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த பதமகா மௌனரூபம்
- உள்ளிருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
- புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் -கள்ளிருக்கும்
- கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
- திருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே
- வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
- ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே - நேமார்ந்த
- உடம்பூர் பவத்தை யொழித்தருளும் மேன்மைக்
- கடம்பூர்வாழ் என்னிரண்டு கண்ணே - தடம்பொழிலில்
- வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
- வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக்
- வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
- உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே - பண்பகன்ற
- உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
- புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ்
- காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
- பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே - ஆம்புவனம்
- ஓங்குந் திருத்தொண்டர் உள்குளிர நல்லருளால்
- தாங்குங் கருக்குடிவாழ் சங்கரனே - ஆங்ககனந்
- நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத்
- தண்பனையூர் மேவுஞ் சடாதரனே - பண்புடனே
- மண்மண் டலிகர் மருவுமா ரூர்ப்பரவை
- உண்மண் டலி63 எம் உடைமையே - திண்மைக்
- எருக்கரவீ ரஞ்சே ரெழில்வேணி கொண்டு
- திருக்கரவீ ரஞ்சேர் சிறப்பே - உருக்க
- நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
- உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர்
- நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
- நெல்வேலி உண்மை நிலயமே - வல்வேலை
- ஆங்குந் தினையூர்ந் தருளாயென் றன்பர்தொழு
- தோங்குந் தினையூர் உமாபதியே - தீங்குறுமொன்
- உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
- அண்ணா மலைவாழ் அருட்சுடரே - கண்ணார்ந்த
- வீத்தூர78 மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்ததிரு
- ஓத்தூரில் வேதாந்த உண்மையே - பூத்தவிசின்
- ஊற லடியா ருறத்தொழுது மேவுதிரு
- ஊற லழியா உவகையே - மாறுபடு
- மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
- பாசூரில் உண்மைப் பரத்துவமே - தேசூரன்
- வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
- ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில்
- சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
- நேர்ந்தார் உபநிடத நிச்சயமே - தேர்ந்தவர்கள்
- தத்த மதுமதியாற் சாரும் அரசிலியூர்
- உத்தமமெய்ஞ் ஞான ஒழுக்கமே - பத்தியுள்ளோர்
- உண்ணற் கெளியாய் உருத்திரன்மா லாதியர்தங்
- கண்ணிற் கனவினிலுங் காண்பரியாய் - மண்ணுலகில்
- எள்ள லடியேன் எனக்குள் ஒளியாமல்
- உள்ள படியே யுரைக்கின்றேன் - விள்ளுறுமியான்
- நெஞ்சம் உருகி நினைக்குமன்பர் போலெனைநீ
- அஞ்சலென நின்றாள் அடுத்தநிலை - விஞ்சுலகர்
- போகமென்றா லுள்ளமிகப் பூரிக்கும் அன்றிசிவ
- யோகமென்றா லென்னுடைய உண்ணடுங்கும் - சோகமுடன்
- எற்றோ இரக்கமென்ப தென்றனைக்கண் டஞ்சியெனை
- உற்றோ ரையுமுடன்விட் டோடுங்காண் - சற்றேனும்
- மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத்
- தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - எந்தைஇனி
- ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த
- தீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால்
- மண்ணா ருயிர்களுக்கும் வானவர்க்குந் தானிரங்கி
- உண்ணாக் கொடுவிடமும் உண்டனையே - எண்ணாமல்
- வில்லடிக்கு நெஞ்சம் விரும்பியதல் லால்எறிந்த
- கல்லடிக்கும் உள்ளங் களித்தனையே - மல்லலுறும்
- வாய்ச்சங்கு நூலிழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
- கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே - ஏச்சறுநல்
- ஏணுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன்
- ஆணைஎனக் குற்றதுணை யாருமில்லை - நாணமுளன்
- நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில்
- சென்றே உடலோம்பச் செய்யற்க - நன்றேநின்
- றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத்
- தீங்கு நெறியில் செலுத்தற்க - வீங்கடங்கி
- உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங்
- கள்ளறியா துண்டு கவல்கின்றேன் - தெள்ளுறுமென்
- உய்வ தறியா உளத்தினே னுய்யும்வகை
- செய்வ தறியேன் திகைக்கின்றேன் - சைவநெறி
- உண்ணிரம்பு நின்கருணை உண்டோ இலையோஎன்
- றெண்ணியெண்ணி உள்ளம் இளைக்கின்றேன் - மண்ணினிடைக்
- வள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னுமென
- உள்ளமது நீரா யுருகுகின்றேன் - எள்ளலுறு
- இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென
- ஒப்பாரி யேனும் உடையேன்காண் - தப்பாய்ந்த
- மட்டுவிடேன் உன்தாள் மறக்கினும்வெண்ணீற்றுநெறி
- விட்டுவிடேன் என்றனைக்கை விட்டுவிடேல் - துட்டனென
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்
- இலகும் சிவமாய் இறையாய் - விலகும்
- உருவாய் உருவில் உருவாய் உருவுள்
- அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்
- ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
- நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்
- ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்
- ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான
- செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்
- உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் - மொய்கொள்
- தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த
- ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா
- ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்
- என்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர்
- தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
- சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்
- பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்
- சிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் - மற்றுருவின்
- வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
- செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
- ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்
- திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்
- கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்
- செய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை
- மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்
- செய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும்
- உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்
- சிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம்
- கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்
- செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா
- அல்லா அயனும் அரியும் உருத்திரனும்
- செல்லா நெறிநின்ற சித்தனெவன் - ஒல்லாத
- தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்
- கண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - விண்டகலா
- மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்
- கண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு
- முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்
- தன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர்
- ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்
- சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும்
- வெண் றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்
- கண்ர் அருவி கலந்தாடி- உண்ர்மை
- என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி
- அன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று
- உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்
- அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும்
- வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்
- கோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித்
- தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்
- கங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும்
- வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்
- எல்லாம் உடைய விதத்தனெவன் - எல்லார்க்கும்
- எள்ளித் திரிந்தாலும் இந்தா87 என் றின்னமுதம்
- அள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண்
- உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு
- நிட்டூரம் செய்யாத நேசன்காண் - நட்டூர்ந்து9
- ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
- நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத்
- விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
- கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற
- உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே
- கொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில்
- ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா
- தோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன்
- துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்
- கொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின்
- எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்
- தெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்
- ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்
- கட்டிநின்ற வீரக் கழலழகும் - எட்டிரண்டும்
- ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்
- சொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும்
- பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்
- உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன்
- நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்
- புண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம்
- துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு
- பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்
- அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்
- நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்
- தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
- ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்
- பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்
- அத்தோ93உனக்கீ தறைகின்றேன் - சற்றேனும்
- ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே
- ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச்
- குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்
- ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக்
- கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்
- கல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை
- ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்
- வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ
- உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்
- நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி
- ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்
- வெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்
- வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
- சொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில்
- கட்கு வளைஎன்றாய்க் கண்ர் உலர்ந்துமிக
- உட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு
- மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்
- உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா
- வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ
- டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை
- உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்
- கண்டோர்பூட்105 டுண்டென்பார் கண்டிலையே - விண்டோங்கும்
- போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்
- மாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர்
- மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ
- தொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்107 - ஒன்றாச்சொல்
- ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது
- கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்
- உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்
- உண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக்
- கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்
- உண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும்
- உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்
- இன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும்
- நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்
- வீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத்
- ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்
- தேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம்
- ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக
- மாயா விகாரம் மகிழ்ந்தனையே - சாயாது
- தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
- மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்
- ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு
- நீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக
- உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை
- மறங்கருதி அந்தோ மறந்தாய்117 - கறங்கின்
- நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்
- மருவும் குறட்பா மறந்தாய்118 - தெருவில்
- நெய்விடல்போல் உற்றவர்கண்ணீர்விட் டழவுயிர்பல்
- மெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின்
- தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்
- விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே - தட்டாமல்
- உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்
- கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார்
- ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
- சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு
- நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
- பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே
- பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே
- காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து
- மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ
- கற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை
- நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்
- வந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல்
- உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்
- மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை
- ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை
- இன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில்
- உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ
- என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின்
- நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்
- உட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே - நட்புடையாய்
- எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்
- இம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில்
- தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ
- மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்
- விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்
- உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங்
- கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ
- கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க
- ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
- ஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்
- உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்
- கண்டனவே கண்டு களிக்கின்றாய் - கொண்டனவே
- ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ
- நானென்று சொல்லி நலிந்தனையே - நானென்று
- துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்
- உள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ
- சிந்தோடும்126 ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்
- அந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும்
- கச்சோதம்127 என்னக் கதிரோன் தனையெடுப்பர்
- அச்சோ உனையார் அடக்குவரே - வைச்சோங்கு
- வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
- ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற
- உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப
- எந்நினைவு கொண்டோமற் றிவ்வுலகர் - எந்நவையும்
- காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்
- ஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்
- ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்
- தான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம்
- ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
- வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்
- றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்
- போதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ
- டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா
- நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த
- வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்
- செய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான்
- போகம் சுகமென்றும் போகம் தரும்கரும
- யோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய்
- தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த
- நன்றே சுகமென்றும் நாம்புறத்தில் - சென்றேகண்
- வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே
- சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற
- எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்
- உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் - வள்ளலென
- துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்
- எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது
- பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே
- வாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப்
- சைவமெங்கே வெண்ற்றின் சார்பெங்கே மெய்யான
- தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே
- எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்
- பொல்லா வலக்காரர் பொய்உகவேல் - புல்லாக
- கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே
- ரின்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக்
- பண்ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்
- கண்ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்ரில்
- வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்
- செய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில்
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப்
- பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
- நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால்
- நீடும் படிநீ நிகழ்த்து.
- உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
- அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
- நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
- என்தாயே என்தந்தை யே.
- வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
- நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
- எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
- உண்டோ இலையோ உரை.
- அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை
- அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்
- சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம்
- சோதிஉரு வாக்குந் துணை.
- பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
- யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள்
- வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
- ஒளியாகி நின்ற உனை.
- தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
- நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
- ஒண்பொரு உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
- வண்பொருளும் ஈதல் மறந்து.
- இன்றோ பகலோ இரவோ வருநாளில்
- என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
- தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
- நாயனையேன் வாழ்கின்ற நாள்.
- ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
- ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
- அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
- நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.
- உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
- என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
- தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
- எந்தாயிங் கொன்றுமறி யேன்.
- உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ
- வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ - செப்பறியேன்
- கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா
- துண்ணப் பருக்கும் உடம்பு.
- வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
- வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
- ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
- வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்.
- மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
- மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
- மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
- தலக்கூடல் தாழாத் தலை.
- சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
- கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
- தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
- சும்மா அடைக்கின்ற சோறு.
- சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு
- மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க
- எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா
- துண்ணுவார் உண்ணும் இடத்து.
- ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
- தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
- வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
- பாழ்மனையில் சென்றுண் பது.
- வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
- பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ - தோயுமயல்
- நீங்கஅருள் செய்வோய்வெண்ணீறணியார் தீமனையில்
- ஆங்கவரோ டுண்ணு மது.
- கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில்
- ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய
- பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை
- வேண்டாதார் வீழ்ந்து விரைந்து.
- வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
- உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
- நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
- என்னென்ப தையா இயம்பு.
- வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
- நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
- மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
- வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
- கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில்
- உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன்
- வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா
- என்செய்வேன் நின்னருளின் றேல்.
- மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென்
- செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு
- நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க
- அஞ்சினேன் அன்பின்மை யால்.
- மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
- போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
- யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
- போனாலென் செய்வேன் புகல்.
- எண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்
- தண்ணிலகுந் தாழல் சார்ந்திடுங்காண் - மண்ணில்வருந்
- தீங்கென்ற எல்லாமென் சிந்தையிசைந் துற்றனமற்
- றாங்கொன்றும் இல்லாமை யால்.
- உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்
- வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற
- அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின்
- எச்சங்கண் டாற்போல வே.
- என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
- உன்னார் உயிர்க்குறுதி உண்டோதான் - பொன்னாகத்
- தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த138வர்க்குமற்றை
- யார்க்கும் புகலுன் அருள்.
- திண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும்
- எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் - அண்ணலுன்பால்
- நித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின்
- சித்தம் இரங்காச் செயல்.
- எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி
- நொந்தா குலத்தின் நுழைகின்றேன் - சிந்தாத
- காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும்
- மீளமகிழ் கின்றேன் விரைந்து.
- கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம்
- அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக்
- கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன்
- இருகூ றளித்தேன் இடர்க்கு.
- பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
- கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில்
- கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
- எள்ளுவார் கண்டாய் எனை.
- ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன்
- வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின்
- செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று
- நம்பாத நாயடியேன் நான்.
- கண்ணா ணிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை
- அண்ணா அருளுக் கழகன்றே - உண்ணாடு
- நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின்
- என்னடியான் என்பாய் எடுத்து.
- துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை
- நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய்
- கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக
- வேற்றுரைத்தே னில்லை விரித்து.
- 130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
- 131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன்என்பது இனிமை. தொ.வே.
- 132. வங்கணம் - நட்பு. தொ.வே.
- 133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
- 134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
- 135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
- 136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
- 137. வித்தம் - அறிவு. தொ.வே.
- 138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
- 139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.
- கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
- துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
- தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
- கண்ணுடையோய் சிதையா ஞானப்
- பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
- மலர்வாயோய் பொய்ய னேன்றன்
- மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்
- கசிந்துருக்கும் வடிவத் தோயே.
- உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
- உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
- கலகநிலை அறியாத காட்சி யாகிக்
- கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
- இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
- இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
- அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
- தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
- உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி
- யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
- கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்
- களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
- விலகலுறா நிபிடஆ னந்த மாகி
- மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
- இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்
- இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே.
- தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
- துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
- சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
- சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
- ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
- உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
- ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
- எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே.
- இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி
- இயல்புருட னாய்க்கால பரமு மாகிப்
- பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்
- பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி
- வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி
- மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற
- அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்
- அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.
- அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
- அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
- களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
- கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
- உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
- ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
- பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
- பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
- வாயாகி வாயிறந்த மவுன மாகி
- மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
- காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
- கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
- தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
- தானாகி நானாகிச் சகல மாகி
- ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
- ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.
- உருவாகி உருவினில்உள் உருவ மாகி
- உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
- அருவாகி அருவினில்உள் அருவ மாகி
- அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
- குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
- குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
- மருவாகி மலராகி வல்லி யாகி
- மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.
- சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
- சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
- அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
- அவையனைத்தும் அணுகாத அசல மாகி
- இகலுறாத் துணையாகித் தனிய தாகி
- எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
- உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
- ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.
- மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்
- வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
- நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற
- நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
- கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்
- கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
- தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்
- தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே.
- வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்
- வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
- தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்
- தாபரமே சங்கமமே சாற்று கின்ற
- ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்
- துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
- தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்
- தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே.
- விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
- வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
- கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
- கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
- தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
- தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
- பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
- பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.
- மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
- மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
- பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
- புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
- ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
- அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
- தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
- சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
- ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த
- நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
- காலமே காலமெலாம் கடந்த ஞானக்
- கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
- கோலமே குணமேஉட் குறியே கோலங்
- குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
- சீலமே மாலறியா மனத்திற் கண்ட
- செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே.
- காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
- கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
- மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
- வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
- ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
- அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
- சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
- துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை
- அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்
- உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை
- ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த
- களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்
- கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்
- வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன
- வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே.
- சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
- சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
- அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
- ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
- நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
- நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
- கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
- கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
- அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்
- அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
- நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு
- நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
- தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்
- தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
- மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி
- வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே.
- உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
- உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
- கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
- கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
- விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
- வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
- தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
- சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
- கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று
- கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
- கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே
- காணாமற் காண்கின்ற காட்சியே உள்
- அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்
- அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
- உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்
- உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே.
- சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
- தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
- பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
- பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
- தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
- ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
- சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
- சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
- வான்காணா மறைகாணா மலரோன் காணான்
- மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
- நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
- நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
- மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
- வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
- ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
- அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.
- மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
- மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
- அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
- அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
- கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
- கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
- எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
- என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
- வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
- பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
- புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
- கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
- கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
- உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
- ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
- பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
- வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
- மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
- ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
- உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
- ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
- அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.
- கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
- கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
- பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
- புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
- நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
- நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
- சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
- திருவாளர் உட்கலந்த தேவ தேவே.
- உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
- உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
- ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்
- வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
- இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்
- எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
- கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்
- கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.
- எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
- தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
- பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
- பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
- கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்
- கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
- விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
- வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
- உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
- உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
- மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை
- வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
- கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
- களைவினவ மற்றவையுங் காணேம் என்று
- வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
- வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.
- அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
- அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே
- உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
- உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
- எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
- எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
- முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
- முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
- தோன்றுபர சாக்கிரமும் கண்டோம் அந்தச்
- சொப்பனமும் கண்டோம்மேல் சுழுத்தி கண்டோம்
- ஆன்றபர துரியநிலை கண்டோம் அப்பால்
- அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்
- ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்
- இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று
- சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற
- தன்மயமே சின்மயமே சகசத் தேவே.
- அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
- அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
- கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
- கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
- திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
- திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
- பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
- பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
- என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
- இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
- அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்
- அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
- நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்
- நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
- தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
- தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.
- தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
- தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
- வானாகி வளியனலாய் நீரு மாகி
- மலர் தலைய உலகாகி மற்று மாகித்
- தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
- தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
- நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
- நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
- ஆரமுதே என்னுறவே அரசே இந்த
- மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
- வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
- பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
- போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
- என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.
- படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே
- படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
- ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்
- உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
- பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
- பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
- நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே
- நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.
- மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
- மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
- பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ
- பேயேறி நலிகின்ற பேதை யானேன்
- வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்
- மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
- ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்
- உடையானே இதுதகுமோ உணர்கி லேனே.
- என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற
- என்தாயே என்குருவே எளியேன் இங்கே
- தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற
- சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
- மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்
- வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
- கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே
- குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே.
- அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்
- தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே
- இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த
- இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும்
- மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்
- வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன்
- புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப்
- புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ.
- உய்குவித்து143 மெய்யடியார் தம்மை எல்லாம்
- உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
- மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து
- வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
- கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்
- கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ
- செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன்
- கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே
- எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும்
- இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ
- பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்
- பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி
- இற்றவளைக்144 கேள்விடல்போல் விடுதி யேல்யான்
- என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே.
- கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும்
- குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத்
- தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்
- தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து
- ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன்
- உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே
- தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும்
- தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே.
- வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி
- விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக்
- கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்
- கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே
- உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர்
- உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும்
- பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம்
- பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே.
- அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
- ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
- இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ
- இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
- பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்
- பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
- கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்
- குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ.
- பொன்னுடையார் இடம்புகவோ அவர்கட் கேற்கப்
- பொய்ம்மொழிகள் புகன்றிடவோ பொதிபோல் இந்தக்
- கொன்னுடையா உடல்பருக்கப் பசிக்குச் சோறு
- கொடுக்கவோ குளிர்க்காடை கொளவோ வஞ்ச
- மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ
- வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான்
- என்னுடையாய் என்னுடையாய் என்னை இங்கே
- எடுத்துவளர்த் தனைஅறியேன் என்சொல் வேனே.
- வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
- மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
- அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
- கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
- இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
- இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
- ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
- உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே
- பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்
- புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
- நென்மலையோ நிதிமலையோ என்று தேடி
- நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
- மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
- வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
- கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக்
- கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ.
- தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
- தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
- வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
- விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
- செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
- செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
- இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
- இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.
- கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்
- கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
- உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்
- ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
- மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ
- மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
- வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே
- மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே.
- நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோம் இந்த
- நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே
- பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில்
- பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே
- உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே
- உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்
- பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்
- பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.
- எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்
- எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே
- நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி
- நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
- தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்
- தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
- புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்
- பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ.
- புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு
- பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
- உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை
- உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
- மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும்
- வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான்
- கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும்
- கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- 140. எதுகை நயம்பற்றி நின்றது. தொ.வே.
- 141. விது - சந்திரன். ஈண்டு இரண்டன் உருபுவிரிக்க. தொ.வே.
- 142. இழுக்குது என்பது மரூஉ வழக்கு. அல்லதூஉம், ஆசிரியர் தொல்காப்பியனார்கூறிய 'கடிசொல்லில்லை' என்பதனால் கோடலுமாம். இங்ஙனமாதல், ''இனியேதெமக்குனருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்'' எனத் தாயுமானார் முதலியபிற சான்றோர் செய்யுட்களாலும் உணர்க என்க. தொ. வே.
- 143. உய்குவித்துஎன்பதனுள் '' கு '' சாரியை. தொ. வே
- 144. இற்றவள் - மனையறங் காப்போள். தொ. வே.
- துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
- இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
- அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
- சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.
- என்னே முறையுண் டெனில்கேள்வி உண்டென்பர் என்னளவில்
- இன்னே சிறிதும் இலையேநின் பால்இதற் கென்செய்குவேன்
- மன்னேமுக் கண்ணுடை மாமணி யேஇடை வைப்பரிதாம்
- பொன்னேமின் னேர்சடைத் தன்னே ரிலாப்பரி பூரணனே.
- தண்டாத சஞ்சலங் கொண்டேன் நிலையைஇத் தாரணியில்
- கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள்
- துண்டார் மலர்ச்சடை எந்தாய் இரங்கிலை தூய்மையிலா
- அண்டார் பிழையும் பொறுப்போய் இதுநின் அருட்கழகே.
- பொய்யாம் உலக நடைநின்று சஞ்சலம் பொங்கமுக்கண்
- ஐயாஎன் உள்ளம் அழலார் மெழுகொத் தழிகின்றதால்
- பையார் அரவ மதிச்சடை யாய்செம் பவளநிறச்
- செய்யாய் எனக்கருள் செய்யாய் எனில்என்ன செய்குவனே.
- விடமிலை யேர்மணி கண்டாநின் சைவ விரதஞ்செய்யத்
- திடமிலை யேஉட் செறிவிலை யேஎன்றன் சித்தத்துநின்
- நடமிலை யேஉன்றன் நண்பிலை யேஉனை நாடுதற்கோர்
- இடமிலை யேஇதை எண்ணிலை யேசற் றிரங்கிலையே.
- நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு
- தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ
- கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன்
- ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே.
- பொய்யோ அடிமை உரைத்தல்எந் தாய்என்னுட் போந்திருந்தாய்
- ஐயோநின் உள்ளத் தறிந்ததன் றோஎன் அவலமெல்லாம்
- கையோட வல்லவர் ஓர்பதி னாயிரங் கற்பநின்று
- மெய்யோ டெழுதினுந் தான்அடங் காத வியப்புடைத்தே.
- வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
- என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
- நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
- டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே.
- வீணே பொழுது கழிக்கின்ற நான்உன் விரைமலர்த்தாள்
- காணேன்கண் டாரையுங் காண்கின்றி லேன்சற்றும் காணற்கன்பும்
- பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
- நாணேன் விலங்கிழி யாணே யெனுங்கடை நாயினனே.
- நானோர் எளிமை அடிமையென் றோநல்லன் அல்லனென்று
- தானோநின் அன்பர் தகாதென்பர் ஈதென்று தானினைத்தோ
- ஏனோநின் உள்ளம் இரங்கிலை இன்னு மிரங்கிலையேல்
- கானோடு வேன்கொல் கடல்விழு வேன்கொல்முக் கண்ணவனே.
- சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
- பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
- தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
- போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
- தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
- வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
- ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
- நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே.
- ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
- போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
- கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
- நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.
- சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
- வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
- பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
- பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே.
- நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
- தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
- நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
- சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.
- பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
- அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
- கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
- மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே.
- மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
- பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
- எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
- விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே.
- ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
- வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
- சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
- போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.
- விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
- மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
- குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்146அருளக் குறித்திலையேல்
- பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே.
- ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
- வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
- கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
- திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.
- முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
- அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
- கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
- என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.
- வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
- மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
- ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்
- ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே.
- நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள்
- நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய்
- பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல்
- தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே.
- உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
- தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
- பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
- அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.
- மானெழுந் தாடுங் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந்
- தானெழந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம்
- ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க
- நானெழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே.
- வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச்
- சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின்
- முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன்
- மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே.
- சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
- கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
- அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
- நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.
- கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்
- திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்
- ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்
- உருமுக149 வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே.
- கருத்தறி யாச்சிறி யேன்படுந் துன்பக் கலக்கமெல்லாம்
- உருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னையன்றித்
- திருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும்
- எருத்தறி யாதுநற் சேதா அறியும் இரங்குகவே.
- பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்
- உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே
- பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்
- மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே.
- மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன்
- உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம்
- அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன்
- கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே.
- எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
- முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
- வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
- உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே.
- வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
- பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
- சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
- தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே.
- சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம்
- மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும்
- இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய்
- அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே.
- அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
- தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
- பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
- இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
- தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை
- ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும்
- கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால்
- வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே.
- இன்றல வேநெடு நாளாக ஏழைக் கெதிர்த்ததுன்பம்
- ஒன்றல வேபல எண்ணில வேஉற் றுரைத்ததயல்
- மன்றல வேபிறர் நன்றல வேயென வந்தகயக்
- கன்றல வேபசுங் கன்றடி யேன்றனைக் காத்தருளே.
- உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்னடிச்சீர்
- தடையாதும் இன்றிப் புகல்வதல் லால்இச் சகத்திடைநான்
- நடையால் சிறுமைகொண் டந்தோ பிறரை நவின்றவர்பால்
- அடையா மையுநெஞ் சுடையாமை யுந்தந் தருளுகவே.
- தஞ்சமென் றேநின்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர்
- பஞ்சமின் றேஉல கெல்லாநின் சீரருட் பாங்குகண்டாய்
- எஞ்சநின் றேற்குனை யல்லால் துணைபிறி தில்லைஇது
- வஞ்சமன் றேநின் பதங்காண்க முக்கண் மணிச்சுடரே.
- சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால்
- மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற்
- கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப்
- பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே.
- நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
- சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
- கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
- றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே.
- எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே
- நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய்
- வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம்
- மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே.
- உற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற
- நற்றா யினும்இனி யானேநின் நல்லருள் நல்கில்என்னை
- விற்றா யினுங்கொள வேண்டுகின் றேன்என் விருப்பறிந்தும்
- சற்றா யினும்இரங் காதோநின் சித்தம் தயாநிதியே.
- நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
- கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
- சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
- ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே.
- வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
- இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
- உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
- களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.
- காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
- சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
- தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
- சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.
- பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால்
- வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத்
- ` தாம்பா யினும்156 ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார்
- தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே.
- நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர்
- பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத்
- தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம்
- இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே.
- கல்லாத புந்தியும் அந்தோநின் தாளில் கணப்பொழுதும்
- நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீண்மதமும்
- கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல் தின்கின்ற கொள்கையைஇங்
- கெல்லாம் அறிந்த உனக்கெளி யேனின் றிசைப்பதென்னே.
- கண்ணார் நுதற்செங் கரும்பேநின் பொன்னருட் கான்மலரை
- எண்ணாத பாவிஇங் கேன்பிறந் தேன்நினை ஏத்துகின்றோர்
- உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சிசற்றும்
- நண்ணாத நெஞ்சமும் கொண்டுல கோர்முன்னர் நாணுறவே.
- ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும்
- மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக்
- காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர்
- சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே.
- கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும்
- பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால்
- புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால்
- ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே.
- காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்
- நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்
- பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்
- ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.
- மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட
- நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா
- போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ
- ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே.
- ஊர்தரு வார்நல்ல ஊண்தரு வார்உடை யுந்தருவார்
- பார்தரு வார்உழற் கேர்தரு வார்பொன் பணந்தருவார்
- சோர்தரு வார்உள் ளறிவுகெ டாமல் சுகிப்பதற்கிங்
- கார்தரு வார்அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே.
- மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
- காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
- கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
- பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.
- மைவிட்டி டாமணி கண்டாநின் தன்னை வழுத்தும்என்னை
- நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி லான்மெய்ந் நெறியறியான்
- பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி டான்மயல் போகமெலாம்
- கைவிட்டி டான்எனக் கைவிட்டி டேல்வந்து காத்தருளே.
- சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
- கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி
- நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர்
- இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்டவாய்
- பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட வாய்வரும் பேச்சற்றவாய்
- துணிகொண்ட வாயனற் சூடுண்ட வாய்மலஞ் சோர்ந்திழிவாய்
- குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட வாய்எனக் கூறுபவே.
- சகமிலை யேஎன் றுடையானை எண்ணலர் தங்கள்நெஞ்சம்
- சுகமிலை யேஉணச் சோறிலை யேகட்டத் தூசிலையே
- அகமிலை யேபொரு ளாவிலை யேவள்ள லாரிலையே
- இகமிலை யேஒன்றும் இங்கிலை யேஎன் றிரங்குநெஞ்சே.
- வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
- ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
- உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுழல்பவர்மேல்
- தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே.
- எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
- உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
- தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
- வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே.
- நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
- குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
- பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
- உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.
- தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திருத்
- துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே
- எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி
- பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே.
- மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக்
- கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ
- பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள
- மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே.
- தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
- அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ
- உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
- சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.
- ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும்
- பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும்
- ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா
- மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே.
- ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
- துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
- செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
- உப்பற்ற புன்கறி உண்டோர்தந் நாவுக் குவப்புளதே.
- விடநாகப் பூணணி மேலோய்என் நெஞ்சம் விரிதல்விட்டென்
- உடனாக மெய்அன்பு ளூற்றாக நின்னரு ளுற்றிடுதற்
- கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச் செய்குவ திங்குனக்கே
- கடனாக நிற்பது கண்டேன்பின் துன்பொன்றுங் கண்டிலனே.
- தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
- வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
- ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
- பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.
- வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத்
- தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
- பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே
- கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே.
- உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய
- விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத்
- தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென்
- கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே.
- சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி
- ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா
- தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ்
- வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே.
- கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக்
- குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார்
- உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு
- மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே.
- களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற்
- றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா
- வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும்
- இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே.
- மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம்
- காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம்
- தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின்
- நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே.
- ஏற்றிலிட் டார்கொடி கொண்டோய் விளக்கினை ஏற்றபெருங்
- காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
- ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
- சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே.
- தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
- சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
- பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
- ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
- களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
- வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
- மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
- உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே.
- என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
- என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
- என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
- என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.
- இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
- மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
- வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
- புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே.
- உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
- கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
- தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
- மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.
- போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
- போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
- போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
- போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
- கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண்
- நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன்
- நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல்
- பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே.
- நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
- வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
- தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
- ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே.
- ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
- பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
- எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
- கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.
- உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்
- நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்
- புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன்
- விடையென்று மாலறங் கொண்டோயென் துன்பம் விலக்குகவே.
- கள்ளா டியகொன்றைச் செஞ்சடை யோய்நற் கனகமன்றின்
- உள்ளா டியமலர்ச் சேவடி யோய்இவ் வுலகியற்கண்
- எள்ளா டியசெக் கிடைப்படல் போல்துன் பிடைஇளைத்துத்
- தள்ளா டியநடை கொண்டேற்கு நன்னடை தந்தருளே.
- மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
- இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
- செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
- ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.
- மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத்
- துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப்
- பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக்
- கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே.
- 145. ஓர்பிள்ளைப்பேர் - மதலை - சரக்கொன்றை. ச. மூ. க.
- 146. மயங்குகின்றேன், மயங்கின்றேன் என விகாரமாயிற்று. தொ. வே.
- 147. கொண்டிடேல் என முன்னிலை எதிர்மறை ஏவன்முற்றாகக் கொள்க. தொ. வே.
- 148. செல் - மேகம். தொ. வே.
- 149. உரும் - இடி. தொ. வே.
- 150. மாழை - பொன். தொ. வே.
- 151. பொன்கின்று பூத்த சடை - கொன்றை பூத்த சடை. தொ. வே.
- 152. கல் - மலை. தொ. வே.
- 153. வேணி - நதி. தொ. வே.
- 154. பாணிக்குமோ - தாமதிக்குமோ. ச. மு. க.
- 155. பாணி - கை, நீர். ச. மு. க.
- 156. கடா, தாம், பாயினும் - பாய்ந்தாலும் ; தாம்பு - கயிறு. ச. மு. க.
- 157. சொல் - நெல், தொ. வே.
- 158. கனல் - அக்கினி. இனன் - சூரியன். இந்து - சந்திரன். ச. மு. க.
- கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
- உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
- அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
- மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
- உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
- பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
- அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
- மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய்
- நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
- தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
- மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
- தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
- வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
- எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
- மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
- காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி
- யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
- நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
- மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
- கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
- தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
- வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
- துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
- என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
- மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
- றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
- காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
- வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
- வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
- பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
- காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
- மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
- போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
- வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
- ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
- மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
- ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
- பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
- தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
- மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
- ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
- காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
- வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
- எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
- கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
- மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
- விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
- வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
- குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன்
- மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
- பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
- துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை
- இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
- மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
- மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
- தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
- வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
- எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
- இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
- மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
- எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
- தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
- செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே
- வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
- தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்
- தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த
- இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம்
- மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.
- கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே
- குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன்
- பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ
- மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்
- பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
- புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
- மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
- மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
- திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
- விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
- வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
- என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
- நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
- பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
- மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
- இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
- கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
- வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
- பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
- சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
- மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
- வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
- பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
- பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
- வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
- எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
- சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
- சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
- மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
- சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
- நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
- வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
- நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ
- வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
- மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
- சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
- நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
- மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
- மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
- காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
- வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
- களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
- உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
- குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
- வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
- நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
- படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
- மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
- என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
- முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
- ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
- காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
- ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
- சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
- மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
- தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
- ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
- வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
- வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
- வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
- வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- (வினா உத்தரம்)
- உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன்
- குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார்
- விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே
- னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
- யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
- முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
- சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றே
- யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
- கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன்
- மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை
- யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடையா ரென்பா ருமையொற்றி யுடையீர் பணந்தா னுடையீரோ
- நடையா யேற்கின் றீரென்றே னங்காய் நின்போ லொருபணத்தைக்
- கடையா ரெனக்கீழ் வைத்தருமை காட்டேம் பணிகொள் பணங்கோடி
- யிடையா துடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடுக்கும் புகழா ரொற்றியுளா ருடைதா வென்றார் திகையெட்டு
- முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
- முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்மூடி
- யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
- கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
- மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
- லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று
- கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
- பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு
- மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உதயச் சுடரே யனையீர்நல் லொற்றி யுடையீ ரென்னுடைய
- விதயத் தமர்ந்தீ ரென்னேயென் னெண்ண மறியீ ரோவென்றேன்
- சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா
- மிதையுற் றறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
- பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
- அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
- துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
- ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
- உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
- அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
- கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
- அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
- கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
- அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
- தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
- இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
- பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
- உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
- வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
- இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பொன்உ லாவிய புயம் உடை யானும்
- புகழ்உ லாவிய பூஉடை யானும்
- உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
- மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
- இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
- கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
- உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
- நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
- எண்ணும் என்மொழி குருமொழி ஆக
- எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
- பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
- உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
- பசையில் நெஞ்சரால் பரிவுறு கின்றாய்
- எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
- சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
- உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
- நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
- இலவு காத்தனை என்னைநின் மதியோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
- பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
- உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
- உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
- குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
- நிறைந்த சண்முக குருநம சிவஓம்
- நிமல சிற்பர அரகர எனவே
- அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
- உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
- தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
- சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
- பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
- பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
- நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
- வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
- பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
- பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
- ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
- அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
- நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
- உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
- கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
- கடந்த மேலவர் கலந்திடும் உறவை
- எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
- யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
- நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
- சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
- உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
- உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
- மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
- விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
- நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
- பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
- உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
- உயிரை மேவிய உடல்மறந் தாலும்
- கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
- கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
- நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உடைஉ டுத்திட இடைமறந் தாலும்
- உலகு ளோர்பசிக் குணமறந் தாலும்
- படையெ டுத்தவர் படைமறந் தாலும்
- பரவை தான்அலைப் பதுமறந் தாலும்
- புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும்
- பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும்
- நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
- கணைகன் ஏவினும் காலனே வரினும்
- பூவின் மன்னவன் சீறினும் திருமால்
- போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
- ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
- ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
- நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
- நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
- வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
- வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான்
- கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
- கொடிய காமனைக் கொளுவிய நுதல்தீ
- நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
- மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
- கலங்கு றேல்அருள் திருவெண் றெனது
- கரத்தி ருந்தது கண்டிலை போலும்
- விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
- விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
- நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
- மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
- சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
- செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
- ஊர னாருடன் சேரனார் துரங்கம்
- ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
- நார மார்மதிச் சடையவன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- தலங்கள் தோறும்சென் றவ்விடை அமர்ந்த
- தம்பி ரான்திருத் தாளினை வணங்கி
- வலங்கொ ளும்படி என்னையும் கூட
- வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே
- இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
- என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
- நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
- மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
- ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
- காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே.
- வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
- திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
- உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
- கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.
- செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
- வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
- வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
- கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.
- ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
- கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
- வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
- காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.
- மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
- மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
- ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
- காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.
- கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள்
- கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
- அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை
- அணியும் தொண்டரை அன்புடன் காண்க
- தடவும் இன்னிசை வீணைகேட் டரக்கன்
- தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
- நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
- நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.
- தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
- சீறு பாம்புகண் டெனஒளித் தேக
- சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
- சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
- செய்ப வன்செய லும்அவை உடனே
- செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
- உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
- ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
- நல்ல நீறிடா நாய்களின் தேகம்
- நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
- வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
- வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
- சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
- சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
- அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
- முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
- பத்தி நீறிடும் பத்தர்கள் காலால்
- பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
- புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
- போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
- சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
- தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
- நாட நீறிடா மூடர்கள் கிடக்கும்
- நரக இல்லிடை நடப்பதை ஒழிக
- ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
- உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
- கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
- குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
- ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
- அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.
- நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
- நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
- கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
- கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
- மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
- மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
- அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
- அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
- ஊற்றம் உற்றுவெண்
- நீற்றன் ஒற்றியூர்
- போற்ற நீங்குமால்
- ஆற்ற நோய்களே.-
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
- கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்
- மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
- வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில்
- இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
- இகலும் கோபமும் இருக்கின்ற தானால்
- தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
- காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
- செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
- செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
- எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
- ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
- செய்த வத்திரு மடந்தையர் நடனம்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள்
- அன்னை என்பர்கள் அழவலி இல்லாக்
- கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்
- குற்றம் அன்றது மற்றவள் செயலே
- தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே
- துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம்
- செழுது மாதவி மலர்திசை மணக்கத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
- உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
- வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
- மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
- வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
- விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
- தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
- வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன்
- மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்
- மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்
- ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்
- உள்ளம் எப்படி அப்படி அறியேன்
- திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- புன்னு னிப்படும் துளியினும் சிறிய
- போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
- என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
- என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
- மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
- வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
- தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
- ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
- கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
- கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா
- பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
- புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
- செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
- வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
- ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
- உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
- மானை நோக்கிய நோக்குடை மலையாள்
- மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்
- தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல்
- வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம்
- தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய்
- கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக்
- கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே
- தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
- ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
- ஆட உன்னியே மங்கையர் மயலில்
- அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய்
- நாட உன்னியே மால்அயன் ஏங்க
- நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
- தேட உன்னிய மாதவ முனிவர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல்
- காமம் உந்திய நாமநெஞ் சகத்தால்
- எல்லை உந்திய பவக்கடல் கடப்பான்
- எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ
- அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே
- அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே
- தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல்
- நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
- பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன்
- புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ
- கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக்
- கமலம் மேவிய விமலவித் தகனே
- செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
- தோகையர் மயக்கிடை அழுந்தி
- ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
- மாமணிக் குன்றமே மருந்தே
- ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
- யூர்வரும் என்னுடை உயிரே.
- கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
- கடையனேன் விடையமே உடையேன்
- இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
- தெய்வமே தெய்வநா யகமே
- உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
- ஒற்றியூர் வாழும்என் உவப்பே.
- இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
- இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
- எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
- கண்ணுதல் உடையசெங் கனியே
- தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
- திருவொற்றி யூர்வரும் தேவே.
- முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
- மூடனேன் முழுப்புலை முறியேன்
- எட்டியே அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
- ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
- கட்டியே தேனே சடையுடைக் கனியே
- காலமும் கடந்தவர் கருத்தே.
- கருதென அடியார் காட்டியும் தேறாக்
- கன்மனக் குரங்கனேன் உதவா
- எருதென நின்றேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- மருதிடை நின்ற மாணிக்க மணியே
- வன்பவம் தீர்த்திடும் மருந்தே
- ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
- ஒற்றியூர் மேவும்என் உறவே.
- வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை
- வஞ்சனேன் நின்னடி யவர்பால்
- எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்
- கோலநெஞ் சொளிர் குணக் குன்றே
- உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி
- யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே.
- தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
- தீயனேன் பேயனேன் சிறியேன்
- எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
- இடையிடர்ப் பசியசெம் பொன்னே
- செவ்வண மணியே திகழ்குணக் கடலே
- திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.
- வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
- வஞ்சக மனத்தினேன் பொல்லா
- ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
- புனிதமே புதுமணப் பூவே
- பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
- பாதுகாத் தளிப்பதுன் பரமே.
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
- சுந்தரா சுந்தரன் தூதா
- மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
- அறிவிலேன் எனினுநின் கோயிற்
- கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
- முக்கணா மூவர்க்கும் முதல்வா
- மன்னிய கருணை வாரியே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
- அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
- என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
- புண்ணியா கண்ணுதல் கரும்பே
- மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
- உன்திரு அடித்துணை அறிய
- என்னைஈன் றவனே முகமறி யார்போல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- தாயின் மேவிய தற்பர மேமுல்லை
- வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
- கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
- தேயின் மேவி இருந்தனன் என்னையே.
- தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
- முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
- தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
- எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.
- வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
- குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
- உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
- களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.
- சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
- ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
- தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
- ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
- சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
- பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
- மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
- கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.
- வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
- அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
- கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
- நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
- மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
- கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
- எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
- பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.
- திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
- உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ்
- வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ
- தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ.
- வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே
- மாலை கொண்ட வளர்வல்லி கேசனே
- பாலை கொண்ட பராபர நீபழஞ்
- சேலை கொண்ட திறம்இது என்கொலோ.
- பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
- மன்னும் மாமணி யேவல்லி கேசனே
- உன்ன நீஇங்கு டுத்திய கந்தையைத்
- துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
- கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே
- மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ
- தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை
- உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே.
- ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
- மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ
- பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
- தோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.
- திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
- தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
- வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
- யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
- உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.
- வெள்ளி மாமலை வீடென உடையீர்
- விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
- வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
- ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
- ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
- களிக்க வேபடிக் காசளித் தருளும்
- வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
- ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
- உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
- ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
- வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
- தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
- உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
- சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
- வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
- என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
- உந்தி வந்தவ னோடரி ஏத்த
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- கல்லை யும்பசும் பொன்எனப் புரிந்த
- கருணை கேட்டுமைக் காதலித் திங்கு
- வல்லை வந்துநின் றேற்றிடில் சிறிதும்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இல்லை நீர்பிச்சை எடுக்கின்றீ ரேனும்
- இரக்கின் றோர்களும் இட்டுண்பர் கண்டீர்
- ஒல்லை இங்கென துளங்கொண்ட தறிவீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
- தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
- வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
- அடிய னேன்அலை கின்றதும் அழகோ
- ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
- குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
- மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
- கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
- உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
- புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
- மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
- அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
- உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
- தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
- வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
- குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
- ஒயி லாதுநல் தொண்டருக் கருள்வான்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
- இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
- முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
- என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
- தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
- ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
- ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
- தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.
- காதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி
- ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
- போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
- நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
- சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
- தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
- நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
- ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
- ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின்
- சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும்
- கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன்
- ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ.
- தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
- நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
- வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
- தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.
- அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
- நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
- குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்றும்
- பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.
- உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
- வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
- மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
- கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
- விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
- தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே.
- அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
- வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
- சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.
- காண்பது கருதி மாலொடு மலர்வாழ் கடவுளர் இருவரும் தங்கள்
- மாண்பது மாறி வேறுரு எடுத்தும் வள்ளல்நின் உருஅறிந் திலரே
- கோண்பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக் கொள்கைகொண் டறிகுவதையா
- பூண்பது பணியாய் பொதுவில்நின் றாடும் புனிதநின் அருளலா தின்றே.
- சுடர்கொளும் மணிப்பூண் முலைமட வியர்தம் தொடக்கினில் பட்டுழன் றோயா
- இடர்கொளும் எனைநீ ஆட்கொளும் நாள்தான் எந்தநாள் அந்தநாள் உரையாய்
- படர்கொளும் வானோர் அமுதுண நஞ்சைப் பரிந்துண்ட கருணைஅம் பரமே
- குடர்கொளும் சூலப் படைஉடை யவனே கோதையோர் கூறுடையவனே.
- உடைமைவைத் தெனக்கின் றருள்செயா விடினும் ஒப்பிலாய் நின்னடிக் கெனையே
- அடைமைவைத் தேனும் நின்அருட் பொருள்இங் களித்திட வேண்டும் இன்றெவைக்கும்
- கடைமையேன் வேறோர் தேவரை அறியேன் கடவுள்நின் திருவடி அறிக
- படைமைசேர் கரத்தெம் பசுபதி நீயே என்உளம் பார்த்துநின் றாயே.
- பார்த்துநிற் கின்றாய் யாவையும் எளியேன் பரதவித் துறுகணால் நெஞ்சம்
- வேர்த்துநிற் கின்றேன் கண்டிலைகொல்லோ விடம்உண்டகண்டன்நீஅன்றோ
- ஆர்த்துநிற் கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கிலக் காவனோ தமியேன்
- ஓர்த்துநிற் கின்றார் பரவுநல் ஒற்றி யூரில்வாழ் என்உற வினனே.
- உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா
- மறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான் வருந்துவ தன்றிஎன் செய்கேன்
- நிறவனே வெள்ளை நீறணி பவனே நெற்றிமேல் கண்ணுடை யவனே
- அறவனே தில்லை அம்பலத் தாடும் அப்பனே ஒற்றியூர்க் கரைசே.
- கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
- விரைபடா மலர்போல் இருந்துழல்கின்றேன்வெற்றனேன் என்செய விரைகேன்
- திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே
- உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.
- நல்அமு தனையார் நின்திரு வடிக்கே நண்புவைத் துருகுகின் றனரால்
- புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பதொன் றறியேன்
- சொல்அமு தனைய தோகைஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக்
- கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ கடையனேன் கழறுவ தென்னே.
- என்னைநின் னவனாக் கொண்டுநின் கருணை என்னும்நன் னீரினால் ஆட்டி
- அன்னைஅப் பனுமாய்ப் பரிவுகொண் டாண்ட அண்ணலே நண்ணரும் பொருளே
- உன்னருந் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும்என் உறவே
- நன்னர்செய் கின்றோய் என்செய்வேன் இதற்கு நன்குகைம் மாறுநா யேனே.
- தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
- பவள மேனிப் படம்பக்க நாதரே
- கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
- இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
- சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
- பால மேவும் படம்பக்க நாதரே
- ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
- ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.
- உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே
- படைகொள் சூலப் படம்பக்க நாதரே
- கடைகொள் நஞ்சுண்டு கண்டம்க றுத்தநீர்
- இடையில் ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
- நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
- பறைய நின்றப டம்பக்க நாதரே
- உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
- குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.
- சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
- முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
- நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
- எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
- பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
- முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
- எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
- மைப்படியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
- கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
- இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
- எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
- பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
- சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
- எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
- உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
- புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
- கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
- எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
- கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
- இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
- என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.
- ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
- சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
- நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லஎன்றே
- யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
- ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
- பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
- ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
- ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
- பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய
- தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
- ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
- கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
- உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
- றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
- பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
- நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
- உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
- எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
- அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
- சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
- இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
- உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
- மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
- பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
- இல்லை உண்டென எய்தி ஐயுறும்
- கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
- ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
- நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- விடங்க லந்தருள் மிடறுடை யவனே
- வேதன் மால்புகழ் விடையுடை யவனே
- கடங்க லந்தமா உரியுடை யவனே
- கந்த னைத்தரும் கனிவுடை யவனே
- இடங்க லந்தபெண் கூறுடை யவனே
- எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே
- திடங்க லந்தகூர் மழுவுடை யவனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
- மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
- ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
- யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
- நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
- நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
- சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
- நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
- வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
- வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
- கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
- குற்ற முங்குண மாக்குறிப் பவனே
- தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- அம்ப லத்துள்நின் றாடவல் லானே
- ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
- சம்பு சங்கர சிவசிவ என்போர்
- தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
- தும்பை வன்னியம் சடைமுடி யவனே
- தூய னேபரஞ் சோதியே எங்கள்
- செம்பொ னேசெழும் பவளமா மலையே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
- ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
- அடையாளம் என்னஒளிர் வெண்ற் றுக்கும்
- அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
- நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்
- இடையாத கொடுந்தீயால் கடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
- கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்
- பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்
- பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே
- நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ
- எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண்
- மாமணியே உனைநினையேன் வாளா நாளைக்
- கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும்
- களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை
- நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால்
- நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்
- எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
- பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
- கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
- கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
- ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
- உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
- இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்
- சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்
- விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி
- வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை
- உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி
- உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்
- எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன்
- ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன்
- மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல்
- வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச்
- செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ
- திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து
- எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- காரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற
- ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல்
- நீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான்
- பேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- மன்னும் கதிர்வேல் மகனா ரோடும் மலையா ளொடும்தான் வதிகின்ற
- துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கொன் றருளானேல்
- மின்னும் சூலப் படையான் விடையான் வெள்ளிமலையொன் றதுஉடையான்
- பின்னும் சடையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
- தணியாக் கோலம்கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
- மணிசேர் கண்டன் எண்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
- பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- சூத மெறிவேல் தோன்ற லொடும்தன் துணைவி யொடும்தான் அமர்கின்ற
- காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
- ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன்மாற் கிறையானான்
- பேதம் இல்லான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம் ஐய னொடுந்தான் அமர்கின்ற
- திறங்கொள் கோலம் கண்டுக ளிப்பான் சிறக்க எமக்கொன் றருளானேல்
- மறங்கொள் எயில்மூன் றெரித்தான் கனக மலையான் அடியார் மயல்தீர்ப்பான்
- பிறங்கும் சடையான்ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
- செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
- வந்து நின்னடிக் காட்செய என்றால்
- வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
- எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
- இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே
- அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
- உள்ளம் என்வசம் உற்றதின் றேனும்
- என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
- இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ
- முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
- மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ
- அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
- தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான்
- உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
- ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல்
- இன்ன தென்றறி யாமல இருளில்
- இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே
- அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
- கடுகின் எல்லைதான் கலந்திடு மானால்
- விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
- வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால்
- மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
- மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே
- அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
- வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண்
- இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே
- எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால்
- உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்
- றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி
- அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
- உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
- திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
- திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
- வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
- மாயு மோஎன மயங்குவேன் தன்னை
- அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
- என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
- தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
- தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம்
- பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
- பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
- ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
- உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
- வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே
- மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க்
- கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
- கோயில் மேவிநம் குடிமுழு தாளத்
- தாள்த லந்தரும் நமதருள் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- ஏங்கி நோகின்ற தெற்றினுக் கோநீ
- எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு
- வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல்
- மகிழ்ந்து நெஞ்சமே வருதிஎன் னுடனே
- ஓங்கி வாழ்ஒற்றி யூர்இடை அரவும்
- ஒளிகொள் திங்களும் கங்கையும் சடைமேல்
- தாங்கி வாழும்நம் தாணுவாம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே
- காம ஐம்புலக் கள்வரை வீட்டி
- வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை
- மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே
- உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்
- குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்
- தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை
- தாயி லார்எனத் தயங்குகின் றாயே
- மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்
- உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்
- தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- விடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ
- வெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ
- மடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல
- வாழ்வு வந்தது வருதிஎன் னுடனே
- இடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா
- ரியார்கண் டாய்ஒன்றும் எண்ணலை கமலத்
- தடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
- போக்கி நின்றனை போனது போக
- வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
- வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
- திருந்தி நின்றநம் மூவர்தம் பதிகச்
- செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
- தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா
- நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
- வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்
- கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்
- தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
- உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
- மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
- அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
- தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்
- எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்
- கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது
- குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்
- பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்
- பேய ருண்மனை நாயென உழைத்தேன்
- செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள்
- மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
- துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச்
- சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ
- வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற
- வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம்
- செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- இருக்க வாவுற உலகெலாம் உய்ய
- எடுத்த சேவடிக் கெள்ளள வேனும்
- உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்
- ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே
- தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்
- தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்
- திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
- எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
- நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
- நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
- வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
- வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
- திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
- வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி
- விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல்
- விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே
- தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில்
- சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ
- செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- புல்ல னேன்புவி நடையிடை அலையும்
- புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
- அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
- அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி
- ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
- உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
- செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
- எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
- அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
- ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
- களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
- கருணை ஈகுதல் கடன்உனக் கையா
- தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- ஒற்றி மேவிய உத்தம னேமணித்
- தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
- நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
- பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
- மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
- ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றியப் பாஉன்தன்
- ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
- கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
- உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
- செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
- பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
- எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
- வைத்த நின்அருள் வாழிய வாழிய
- மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
- உய்த்த நல்அருள் ஒற்றியப் பாஎனைப்
- பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
- போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
- சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
- தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
- ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.
- உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
- தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
- கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
- எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
- தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
- காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
- யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான்
- தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்
- எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- பொன்னார் விடைக்கொடிஎம் புண்ணியனைப் புங்கவனை
- ஒன்னார் புரம்எரித்த உத்தமனை - மன்னாய
- அத்தனைநம் ஒற்றியூர் அப்பனைஎல் லாம்வல்ல
- சித்தனைநீ வாழ்த்துதிநெஞ் சே.
- நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால்
- அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய் - எஞ்சாத்
- தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச்
- சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று.
- சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே
- நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு
- ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து
- மற்றிசைப்ப தெல்லாம் வரும்.
- வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே
- ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப்
- போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய்
- ஆவான் திருவடிஅல் லால்.
- அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக்
- கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த
- விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என்
- கண்மணியை நெஞ்சே கருது.
- என்றும்உனக் காளாவேன் என்நெஞ்சே வன்நெஞ்சர்
- ஒன்றும் இடம் சென்றங் குழலாதே - நன்றுதரும்
- ஒற்றியப்பன் பொன்அடியை உன்னுகின்றோர் தம்பதத்தைப்
- பற்றிநிற்பை யாகில் பரிந்து.
- என்றென் றழுதாய் இலையேஎன் நெஞ்சமே
- ஒன்றென்று நின்ற உயர்வுடையான் - நன்றென்ற
- செம்மைத் தொழும்பர்தொழும் சீர்ஒற்றி யூர்அண்ணல்
- நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்.
- பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத்
- தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள்
- உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப்
- பெற்றமர்தி நெஞ்சே பெரிது.
- திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
- புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
- ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
- வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
- தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர்
- மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும்
- வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப்
- போத மலரைநெஞ்சே போற்று.
- கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
- ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
- உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
- நள்ளவனை நெஞ்சமே நாடு.
- நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர்
- கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
- சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
- உத்தமனை நெஞ்சமே ஓது.
- ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
- தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி
- ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
- பாதம் பிடிக்கும் பயன்.
- பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ
- டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார்
- உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ்
- உள்ளத் தவரை உறும்.
- வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
- நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்
- கொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்
- செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே.
- பொய்யே புலம்பிப் புழுத்தலை நாயின் புறத்திலுற்றேன்
- மெய்யே உரைக்கும்நின் அன்பர்தம் சார்பை விரும்புகிலேன்
- பையேல் அரவனை யேன்பிழை நோக்கிப் பராமுகம்நீ
- செய்யேல் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மருவார் குழலியர் மையல் கடல்விழும் வஞ்சநெஞ்சால்
- வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்குகண்டாய்
- உருவாய் அருவும் ஒளியும் வெளியும்என் றோதநின்ற
- திருவார் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்
- நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே
- வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்
- தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே.
- களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா
- ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்
- தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்
- தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
- மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
- நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
- சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.
- பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
- கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
- பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ
- பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே.
- வள்ளலே நின்அடி மலரை நண்ணிய
- உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட்
- கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை
- எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே.
- செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப்
- பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல்
- வையநின் றையவோ மயங்கல் அன்றியான்
- உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே.
- இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
- தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
- வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
- தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.
- இல்லையே என்பதிங் கில்லை என்றருள்
- நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
- கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
- ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே.
- உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும்
- எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
- அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
- வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ.
- மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
- உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
- கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
- பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
- சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
- தூயனை யாவரும் சொல்லரி யானைப்
- பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
- பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
- மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
- வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
- எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்
- கருணாநி தியைக்க றைமிடற் றானை
- ஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை
- ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
- நண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை
- நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
- எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
- வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
- கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
- கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
- உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
- உலகுடை யானைஎன் உற்றது ணையை
- எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை
- வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
- களங்கம்இ லாதக ருத்துடை யானைக்
- கற்பனை முற்றும்க டந்துநின் றானை
- உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை
- உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
- இளம்பிறை சூடிய செஞ்சடை யானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
- திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
- பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
- பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
- வைத போதினும் வாழ்த்தென நினைத்து
- மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
- கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
- கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
- அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
- ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
- கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
- கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
- மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
- முன்னு றாவகை என்னுறும் உன்னால்
- இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
- என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- நன்று செய்வதற் குடன்படு வாயேல்
- நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
- இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
- இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
- ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
- உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
- அன்று முன்னரே கடந்தனர் அன்றி
- அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
- அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
- அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
- ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
- உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
- முன்றில் காத்தனை அவ்வள வேனும்
- முயன்று காத்திலை முன்னவன் கோயில்
- துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
- தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
- கரிய மாலன்று கரியமா வாகிக்
- கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
- பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
- பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
- உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
- உம்பர் நாயகர் தம்புயம் புனைய
- வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
- திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
- கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
- காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
- உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
- ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
- மருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
- காலில் போந்துமுன் காணரு முடியார்
- அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
- அம்மை காணநின் றாடிய பதத்தார்
- செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
- தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
- மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
- மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
- சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
- தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
- போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
- பூத நாதர்நற் பூரணா னந்தர்
- தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
- தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
- வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
- மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
- விதியும் மாலுமுன் வேறுரு எடுத்து
- மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
- நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
- நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
- பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
- பணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
- வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
- குணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்
- உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
- ஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்
- களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
- கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
- வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்
- பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
- திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
- தேவர் நாயகர் திங்களம் சடையார்
- அணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்
- அழகர் அங்கவர் அமைந்துவீற்றிருக்கும்
- மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- 24. நிதன - உருகுகின்ற ச.மு.க.பற்றின் திறம் பகர்தல்
- தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
- சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
- யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
- யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
- மாது வேண்டிய நடனநா யகனார்
- வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
- ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
- ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.
- இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்
- இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ
- கரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல்
- கருதி வந்தவர் கடியவர் எனினும்
- புரக்கின் றோர்மலர்ப் புரிசடை உடையார்
- பூத நாயகர் பொன்மலைச் சிலையார்
- உரக்குன் றோர்திரு வொற்றியூர்க் கேகி
- உன்னி ஏற்குதும் உறுதிஎன் நெஞ்சே.
- இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
- என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
- பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
- பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
- நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
- குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
- கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.
- மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
- மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
- அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
- அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
- என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
- இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
- வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
- வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.
- மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்
- வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்
- இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்
- யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
- பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்
- பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே
- வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து
- வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே.
- காலம் செல்கின்ற தறிந்திலை போலும்
- காலன் வந்திடில் காரியம் இலைகாண்
- நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்
- நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்
- ஏலம் செல்கின்ற குழலிஓர் புடையார்
- இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்
- நல்கு வார்அவை நல்குவன் உனக்கே.
- சென்று நீபுகும் வழியெலாம் உன்னைத்
- தேட என்வசம் அல்லஎன் நெஞ்சே
- இன்ற ரைக்கணம் எங்கும்நேர்ந் தோடா
- தியல்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- அன்று வானவர் உயிர்பெற நஞ்சம்
- அருந்தி நின்றஎம் அண்ணலார் இடத்தே
- நின்று வேண்டிய யாவையும் உனக்கு
- நிகழ வாங்கிநான் ஈகுவன் அன்றே.
- கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
- கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
- அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனைநீ
- அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
- தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
- தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
- மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
- வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே.
- என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
- இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
- மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
- வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
- உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
- உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
- இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
- சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
- வன்ப தாகிய நீயும்என் னுடனே
- வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
- ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
- ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
- இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
- ஆடு கின்றசே வடிமலர் நினையாய்
- வாட்டு கின்றனை வல்வினை மனனே
- வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்
- கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
- குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்
- ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
- வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
- நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
- நானும் அங்கதை நயப்பது நன்றோ
- தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
- தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
- எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
- நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும்
- நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
- நன்று நின்செயல் நின்றிடு மனனே
- ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே
- ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
- கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
- மாறு மாயையால் மயங்கிய மனனே
- வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
- ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
- ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
- அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
- போது போக்கினை யேஇனி மனனே
- போதி போதிநீ போம்வழி எல்லாம்
- கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
- குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
- ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- விச்சை வேண்டினை வினையுடை மனனே
- மேலை நாள்பட்ட வேதனை அறியாய்
- துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
- சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ
- பிச்சை எம்பெரு மான்என நினையேல்
- பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால்
- இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
- சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
- ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
- ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
- நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
- நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
- ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
- மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
- பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
- பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
- ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
- இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
- ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
- குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
- கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
- கண்ட பாவியே காமவேட் டுவனே
- இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
- இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
- ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
- பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
- வாதை உற்றிட வைத்தனை ஐயோ
- மதியில் காமமாம் வஞ்சக முறியா
- ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
- எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
- ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
- கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற
- பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
- பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
- சாவ நீயில தேல்எனை விடுக
- சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
- ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
- தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள்
- ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்
- இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய்
- சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய்
- சுகமி லாதநீ தூரநில் இன்றேல்
- ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
- முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
- போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
- போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
- சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
- சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
- ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ
- வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா
- சிதமெ னும்பரன் செயலினை அறியாய்
- தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
- இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார்
- யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க்
- குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- அமைவ றிந்திடா ஆணவப் பயலே
- அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
- எமைந டத்துவோன் ஈதுண ராமல்
- இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
- கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
- கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
- உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கருமை யாம்அகங் காரமர்க் கடவா
- கடைய னேஉனைக் கலந்தத னாலே
- அருமை யாகநாம் பாடினோம் கல்வி
- அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
- இருமை இன்பமும் பெற்றனம் என்றே
- எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
- ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
- விடுவி டென்றனை வித்தகம் உணராய்
- தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
- தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
- அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
- அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
- உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்
- ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா
- வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக்
- கோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத் தாரனைச் சராசர சடத்துள்
- உடையனை ஒற்றி ஊரனை மூவர் உச்சனை உள்கிநின் றேத்தாக்
- கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக
- நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- புகழே விரும்பிப் புலன்இழந்தேன் போந்துன் பதத்தைப் போற்றுகிலேன்
- இகழேன் எனைநான் ஒற்றியப்பா என்னை மதித்தேன் இருள்மனத்தேன்
- திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர் சிறியர் அறியேன் தீவினையை
- அகழேன்எனினும் எனையாளா தகற்றல் அருளுக் கழகன்றே.
- அன்றும் அறியார் மாதவரும் அயனும் மாலும் நின்நிலையை
- இன்றும் அறியார் அன்றியவர் என்றும் அறியார் என்னில்ஒரு
- நன்றும் அறியேன் நாயடியேன் நான்எப்படிதான் அறிவேனோ
- ஒன்றும் நெறிஏ தொற்றியப்பா ஒப்பார் இல்லா உத்தமனே.
- ஒப்பார் இல்லா ஒற்றியப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
- வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
- இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
- விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுத்தேனே.
- விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
- மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
- அடுத்தேன் ஒற்றி யப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
- படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.
- படுவேன் அல்லேன் நமன்தமரால் பரிவேன் அல்லேன் பரமநினை
- விடுவேன் அல்லேன் என்னையும்நீ விடுவாய் அல்லை இனிச்சிறிதும்
- கெடுவேன் அல்லேன் சிறியார்சொல் கேட்பேன் அல்லேன் தருமநெறி
- அடுவேன் அல்லேன் திருஒற்றி யப்பா உன்றன் அருள்உண்டே.
- உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர் ஒற்றி யப்பா உன்னுடைய
- திண்டோள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன் சேர்ந்தேத்தேன்
- எண்தோள் உடையாய் என்றிரங்கேன் இறையும் திரும்பேன் இவ்வறிவைக்
- கொண்டே உனைநான் கூடுவன்நின் குறிப்பே தொன்றும் அறியேனே.
- அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி யப்பாநான்
- சிறியேன் எனினும் நினைஅன்றித் தெளியேன் மற்றோர் தேவர்தமை
- வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய்வேன்அடியேன்
- நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே.
- கடனே அடியர் தமைக்காத்தல் என்றால் கடையேன் அடியன்அன்றோ
- உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன் உள்ளத் துயரும் தவிர்த்திலையே
- விடன்நேர் கண்டத் தின்னமுதே வேத முடியில் விளங்கொளியே
- அடன்ஏர் விடையாய் திருஒற்றி யப்பா உனைநான் அயர்ந்திலனே.
- நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
- ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
- கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
- தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.
- அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
- சுணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் உண் டாங்கொலோ அறியேன்
- கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
- உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.
- தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
- யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
- தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்
- ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.
- ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்
- நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
- சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
- மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.
- மணித்தலை நாகம் அனையவெங் கொடியார் வஞ்சக விழியினால்மயங்கிப்
- பிணித்தலைக் கொண்டு வருந்திநின் றுழலும்பேதையேற்குன்னருள் உளதோ
- கணித்தலை அறியாப் பேர்ஒளிக்குன்றே கண்கள்மூன் றுடையஎன் கண்ணே
- அணித்தலை அடியர்க் கருள்திரு வொற்றி அப்பனே செப்பரும்பொருளே.
- ஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
- வெப்பில் ஆழ்ந்தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற
- இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள்கிடைக்கும்
- துப்புர வொழிந்தோர் உள்ளகத்தோங்கும் சோதியே ஒற்றியூர்த்துணையே.
- துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை
- இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே
- அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
- பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.
- பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல்
- இரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன்
- எரிந்திட எயில்மூன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே
- விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.
- செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
- உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
- நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
- வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக வாழ்க்கையில் வரும்பொலாஅணங்கே.
- இன்றிருந் தவரை நா€ளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
- என்றிருந் தவத்தோர் அரற்றுகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
- சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
- மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அ€டையாப்
- பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் ப€தைப€தைத் துருகுகின் றனன்காண்
- கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வ€கை அறியேன்
- வாவிஏர் பெறப்பூஞ் சோ€லைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
- நீரின்மேல் எழுதும் எழுத்தினும் வி€ரைந்து நி€லைபடா உடம்பி€னை ஓம்பிப்
- பாரின்மேல் அ€லையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
- காரின்மேல் வரல்போல் கடாமி€சை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
- வாரின்மேல் வளரும் திருமு€லை ம€லையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே.
- கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கணமிருந் ததுதான்
- வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்
- பெருங்கணம் சூழ வடவனத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்
- மருங்கண வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.
- கன்னியர் அளகக் காட்டி€டை உழன்ற கல்மனக் குரங்கினேன் த€னைநீ
- அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங் கார்சொல வல்லவர் ஐயா
- என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள் என்செய்வேன் என்செய்வேன் அந்தோ
- மன்னிய வன்னி மலர்ச்ச€டை மருந்தே வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
- மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே €மைவடித் தெடுக்குநர் போல
- நொடிக்குளே ம€றையும் உடம்பி€னை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
- படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
- வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- அங்€கையில் புண்போல் உலகவாழ் வ€னைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
- பங்கமுற் ற€லைவ தன்றிநின் கமல பாதத்€தைப் பற்றிலேன் அந்தோ
- இங்கெ€னை நிகரும் ஏ€ழையார் எனக்குன் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
- மங்€கையோர் பு€டைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
- கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் து€ழைக்கும்
- குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
- பணத்தினில் பொலியும் பாம்ப€ரை ஆர்த்த பரமனே பிரமன்மால் அறியா
- வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
- புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
- எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
- தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.
- கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை
- விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய
- பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்
- துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே.
- துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்
- பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
- இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
- கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே.
- வலமே உடையார் நின்கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
- மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும் உவர்ச்
- சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
- நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ.
- என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்பம் எனவே எனக்கவர்நோய்
- தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
- பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
- இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக் கிவண்நிற் கின்றேனே.
- ஓங்கும் பொருளே திருஒற்றி யூர்வாழ் அரசே உனைத்துதியேன்
- தீங்கும் புழுவும் சிலைநீரும் சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத்
- தூங்கும் மடவார் புலைநாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன்
- வாங்கும் பவம்தீர்த் தருள்வதுநின் கடன்காண் இந்த மண்ணிடத்தே.
- துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
- கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
- உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
- அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.
- ஒற்றியூர் அமரும் ஒளிகெழு மணியே உன்அடி உள்கிநின் றேத்தேன்
- முற்றியூர் மலினக் குழிஇருள் மடவார் முலைஎனும் மலநிறைக் குவையைச்
- சுற்றிஊர் நாயின் சுழன்றனன் வறிதே சுகம்எனச் சூழ்ந்தழி உடலைப்
- பற்றியூர் நகைக்கத் திரிதரு கின்றேன் பாவியேன் உய்திறம் அரிதே.
- அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும் ஐயவோ நான்அதை அறிந்தும்
- மருள்வதென் இயற்கை என்செய்வேன் இதனை மனங்கொளா தருள்அரு ளாயேல்
- தெருள்வதொன் றின்றி மங்கையர் கொங்கைத் திடர்மலைச் சிகரத்தில் ஏறி
- உருள்வதும் அல்குல் படுகுழி விழுந்தங் குலைவதும் அன்றிஒன் றுண்டோ.
- உண்டுநஞ் சமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னைக்
- கண்டுநெஞ் சுருகிக் கண்கள்நீர் சோரக் கைகுவித் திணையடி இறைஞ்சேன்
- வண்டுநின் றலைக்கும் குழல்பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கிக்
- குண்டுநீர் ஞாலத் திடைஅலை கின்றேன்கொடியனேன் அடியனேன் அன்றே.
- அன்றுநீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ரூரனார் உன்னைச்
- சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
- ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
- தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே.
- இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம்
- கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன்
- துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால்துணைநினை அன்றி ஒன் றறியேன்
- தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே.
- இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக்
- குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்
- பொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி
- நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.
- நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
- கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
- உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
- மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
- அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
- தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
- உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றியப்பா உன்னுடைய
- மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.
- ஆறடுத்துச் சென்றஎங்கள் அப்பருக்கா அன்றுகட்டுச்
- சோறெடுத்துச் சென்ற துணையே சுயஞ்சுடரே
- ஊறெடுத்தோர் காணரிய ஒற்றியப்பா உன்னுடைய
- நீறடுத்த எண்தோள் நிலைமைதனைப் பாரேனோ.
- சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
- மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
- உய்வைத்த உத்தமனே ஒற்றியப்பா உன்னுடைய
- தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ.
- பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
- சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
- ஊணாக உள்ளுவந்த ஒற்றியப்பா மால்அயனும்
- காணாத நின்உருவைக் கண்டு களியேனோ.
- கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
- துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிதம்
- உள்ளுவார் உள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.
- செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
- எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
- உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றியப்பா உன்வடிவம்
- இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ.
- மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
- குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
- ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றியப்பா என்னுடைய
- வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ.
- குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
- நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
- உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றியப்பா என்கருத்து
- முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
- வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
- நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
- உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.
- இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
- துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
- உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றியப்பா என்வாய்உன்
- தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.
- பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
- கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
- ஒண்மணியே தேனேஎன் றொற்றியப்பா உன்தனைநான்
- பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.
- மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
- ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
- ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ.
- கல்லார்க் கிதங்கூறிக் கற்பழிந்து நில்லாமல்
- எல்லார்க்கும் நல்லவனே என்அரசே நல்தருமம்
- ஒல்லார் புரமெரித்த ஒற்றியப்பா உன்அடிக்கே
- சொல்லால் மலர்தொடுத்துச் சூழ்ந்தணிந்து வாழேனோ.
- கற்பவற்றைக் கல்லாக் கடையரிடம் சென்றவர்முன்
- அற்பஅற்றைக் கூலிக் கலையும் அலைப்பொழிய
- உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- நற்பதத்தை ஏத்திஅருள் நல்நலந்தான் நண்ணேனோ.
- தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
- சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
- உந்தைஎன்போர் இல்லாத ஒற்றியப்பா உன்அடிக்கீழ்
- முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.
- பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்றும் பேசாத
- வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலானேன்
- உய்என் றருள்ஈயும் ஒற்றியப்பா உன்னுடைய
- மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ.
- பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
- மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
- உன்னாசை கொண்டேஎன் ஒற்றியப்பா நான்மகிழ்ந்துன்
- மின்னாரும் பொன்மேனி வெண்ற்றைப் பாரேனோ.
- கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
- துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
- உள்உண்ட தெள்அமுதே ஒற்றியப்பா உன்தனைநான்
- வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
- பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
- வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
- ஓராதார்க் கெட்டாத ஒற்றியப்பா உன்னுடைய
- நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ.
- வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
- கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
- உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ.
- புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
- எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
- உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
- தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடியில் கொள்ளேனோ.
- நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக்
- கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான்
- ஒன்றுமனத் துள்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
- வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ.
- கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
- வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
- ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா நீஉலகை
- ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ.
- மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
- பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
- உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
- தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.
- சீலம்அற நிற்கும் சிறியார் உறவிடைநல்
- காலம்அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்தம்
- ஓலம்அற நஞ்சருந்தும் ஒற்றியப்பா உன்னுடைய
- நீல மணிமிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ.
- சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும்
- யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன்
- ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றியப்பா உன்இதழித்
- தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ.
- கல்லைப் புறங்கண்ட காய்மனத்துக் கைதவனேன்
- தொல்லைப் பழவினையின் தோய்வகன்று வாய்ந்திடவே
- ஒல்லைத் திருவருள்கொண் டொற்றியப்பா உன்னுடைய
- தில்லைப் பொதுவில் திருநடனம் காணேனோ.
- கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச
- நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணையேன் துன்பொழிய
- உடையவனே உலகேத்தும் ஒற்றியப்பா நின்பால்வந்
- தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.
- வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில்
- பேதை எனவீழ்ந்தே பிணிஉழந்த பேயடியேன்
- ஓதை கடற்கரைவாய் ஒற்றியப்பா வாழ்த்துகின்றோர்
- தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ.
- பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
- வெய்யற் கிரிமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
- உய்யற் கருள்செய்யும் ஒற்றியப்பா உன்அடிசேர்
- மெய்யர்க் கடிமை செய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ.
- சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
- தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில்
- பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
- பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
- வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
- வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
- புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
- மூட னேன்தனை முன்வர வழைத்துப்
- பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
- பித்தர் என்றுமைப் பேசிட லாமே
- என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
- இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர்
- புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய்
- வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ
- இன்மை யாளர்போல் வலியவந் திடினும்
- ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால்
- தன்மை அன்றது தருமமும் அன்றால்
- தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே
- பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
- உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்
- இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
- எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்
- அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
- அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்
- புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்
- கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார்
- அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும்
- ஐய நீர்உம தருள்எனக் களிக்க
- இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும்
- ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ
- பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ்
- விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால்
- கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும்
- கடமை நீங்குறார் உடமையின் றேனும்
- நெருப்பு நும்உரு ஆயினும் அருகில்
- நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால்
- பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
- கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
- அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
- ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
- நெடிய மால்அயன் காண்கில ரேனும்
- நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
- பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- வினையி னால்உடல் எடுத்தன னேனும்
- மேலை நாள்உமை விரும்பிய அடியேன்
- எனைஇன் னான்என அறிந்திலி ரோநீர்
- எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர்
- மனையி னால்வரும் துயர்கெட உமது
- மரபு வேண்டியே வந்துநிற் கின்றேன்
- புனையி னால்அமர்ந் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது
- பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ
- மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற
- மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல்
- உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார்
- உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண்
- புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப் பதகனேன் படிற்றுரு வகனேன்
- வசைஇலார்க் கருளும் மாணிக்க மணியே வள்ளலே நினைத்தொழல் மறந்து
- நசைஇலா மலம்உண் டோடுறும் கொடிய நாய்என உணவுகொண் டுற்றேன்
- தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- அன்னைபோன் றடியர்க் கருத்தியில் அருத்தும் அப்பநின் அடியினை காணா
- தென்னையோ மலம்உண் டுழன்றிடும் பன்றி என்னஉண் டுற்றனன் அதனால்
- புன்னைஅம் சடைஎம் புண்ணிய ஒளியே பூதநா யகஎன்றன் உடலம்
- தன்னைநீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்தினை மறந்துபாழ் வயிற்றை
- மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி மலம்பெற வந்தனன் அதனால்
- எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே இறைவனே நீஅமர்ந் தருளும்
- தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- நின்முனம் நீல கண்டம்என் றோதும் நெறிமறந் துணவுகொண் டந்தோ
- பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று
- மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே விரிகடல் தானைசூழ் உலகம்
- தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால்
- செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் செப்புதல் மறந்தனன் அதனால்
- விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே மென்கரும் பீன்றவெண் முத்தம்
- தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால்
- அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன்
- சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே
- தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- அருமருந் தனையாய் நின்திரு முன்போந் தரகர எனத்தொழல் மறந்தே
- இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால்
- கருமருந் தனைய அஞ்செழுத் தோதும் கருத்தர்போல் திருத்தம தாகத்
- தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கண்நுதல் கரும்பே நின்முனம் நீல கண்டம்என் றோதுதல் மறந்தே
- உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் உன்முனம் நின்றனன் அதனால்
- நண்ணுதல் பொருட்டோர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்தம்உள்ளத்
- தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல கண்டம்என் றுன்திரு முன்னர்
- சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால்
- செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா தேவஓம் அரகர எனும்சொல்
- சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- முறைப்படி நினது முன்புநின் றேத்தி முன்னிய பின்னர்உண் ணாமல்
- சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல் சென்றுநின் முன்னர்உற் றதனால்
- கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகுசீர்
- தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- நீல னேன்கொடும் பொய்யல துரையா
- நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
- சால ஆயினும் நின்கழல் அடிக்கே
- சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
- ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
- அகில கோடியும் அழிந்திடும் அன்றே
- சீல மேவிய ஒற்றியம் பரனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- கண்ணுன் மாமணி யேஅருட் கரும்பே
- கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே
- எண்ணுள் உட்படா இன்பமே என்றென்
- றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும்
- மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன்
- மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே
- திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன்
- நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண்
- சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ
- தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன்
- வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே
- மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண்
- செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்
- ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக்
- காட்டு கின்றவான் கடலிடை எழுந்த
- காள முண்டஅக் கருணையை உலகில்
- நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய
- நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்
- தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
- ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
- செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
- செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
- மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
- மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
- செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- வாடு கின்றனன் என்றனை இன்னும்
- வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப்
- பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
- பாது காப்பதுன் பரம்அது கண்டாய்
- தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
- தேவர் யாவரும் தெரிவரும் பொருளே
- சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும்
- சீல மென்பதுன் திருமொழி அன்றே
- வறிய னேன்பிழை யாவையும் உனது
- மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ
- இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை
- ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும்
- செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
- மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்
- சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
- வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே
- பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
- உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல்
- செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
- பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன்
- பொய்யி தல்லஎம் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- கந்த மும்மல ரும்என நின்றாய்
- கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
- சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- எந்த நல்வழி யால்உனை அடைவேன்
- யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
- புந்தி இன்பமே ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி
- அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த்
- தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஒல்லை இங்குவா என்றருள் புரியா
- தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ
- புல்லர் மேவிடா ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
- நாய்க ளுக்கெலாம் நாயர சானேன்
- சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
- இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே
- போல என்றுரை யாஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக்
- களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய் திலைஅருட் கரும்பே
- அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே அருமருந் தேவட வனத்துத்
- தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே தயையிலி போல்இருந் தனையே.
- இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என்துயர் அறிந்திலை போலும்
- முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் முலைத்தலை உருண்டன னேனும்
- மருந்தனை யாய்உன் திருவடி மலரை மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்
- வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.
- உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா துறைந்தது நாடொறும் அடியேன்
- கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் கண்டுகண் டுளமது நெகவே
- விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன்நான் அன்றோ
- அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே அலைகின்றேன் அறிந்திருந் தனையே.
- தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கல என்பார்
- வினையனேன் பிழையை வினையிலி நீதான் விவகரித் தெண்ணுதல் அழகோ
- உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் உழன்றிடுந் தேவரை மதியேன்
- எனையலா துனக்கிங் காளிலை யோஉண்டென்னினும் ஏன்றுகொண் டருளே.
- ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
- ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
- நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் நாஎழா துண்மையீ திதற்குச்
- சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
- கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே
- மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ்
- உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்தஉடம்புகொண் டுழல்வனோஎன்று
- நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் நான்செயும் வகைஎது நவிலே.
- வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
- தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
- திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
- பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
- பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
- பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
- மற்று நோக்கிய வல்வினை அதனால்
- வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
- அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
- அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
- உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
- கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
- கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
- கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
- அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
- ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
- ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
- கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்
- சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
- சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
- ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
- ஏட நீகடை என்றிடில் அவர்முன்
- ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
- வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
- கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
- காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
- எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
- தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
- உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
- விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
- மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
- வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
- தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
- சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
- உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- யாதும் உன்செய லாம்என அறிந்தும்
- ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
- தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
- தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
- கோது செய்மலக் கோட்டையைக் காவல்
- கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
- பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
- இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
- ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
- அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
- அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
- உந்த மட்டினால் தருதியோ உரையாய்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
- ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
- ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
- அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
- வான மேவிய அமரரும் அயனும்
- மாலும் என்முனம் வலியிலர் அன்றே
- ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
- அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
- எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
- எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
- களிய மாமயல் காடற எறிந்தாங்
- கார வேரினைக் களைந்துமெய்ப் போத
- ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன்
- நரகில் ஏகென நவிலினும் அமைவேன்
- ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன்
- அல்லல் ஆம்பவம் அடைஎனில் அடைவேன்
- தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர்
- தருதல் இல்எனச் சாற்றிடில் தரியேன்
- ஓகை நாட்டிய யோகியர் பரவும்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம்வைத் தோம்புறும் பொருட்டாய்ப்
- பொற்பது தவிரும் புலையர்தம் மனைவாய்ப் புந்திநொந் தயர்ந்தழு திளைத்தேன்
- சொற்பதங் கடந்த நின்திரு வடிக்குத் தொண்டுசெய் நாளும்ஒன் றுளதோ
- கற்பது கற்றோர் புகழ்திரு வொற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.
- முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன்
- என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் எய்தில னேல்உயி‘க் குறுதிப்
- பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் பேதையில் பேதைநான் அன்றோ
- கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே கடவுளே கருணையங் கடலே.
- மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும்
- எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடு கின்றேன்
- விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது மெல்அடிக் கடிமைசெய் வேனோ
- கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே கடவுளே கருணையங் கடலே.
- அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம் ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல்
- இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டுகொல் இலைகாண்
- தளர்விலா துனது திருவடி எனும்பொற் றாமரைக் கணியனா குவனோ
- களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே கனந்தரும் கருணையங் கடலே.
- ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன்
- ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் எவ்வணம் உய்குவ தறியேன்
- வானநா டவரும் பெறற்கரு நினது மலரடித் தொழும்புசெய் வேனோ
- கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- மாலொடு நான்கு வதனனும் காணா மலரடிக் கடிமைசெய் தினிப்பாம்
- பாலொடு கலந்த தேன்என உன்சீர் பாடும்நாள் எந்தநாள் அறியேன்
- வேலொடு மயிலும் கொண்டிடுஞ் சுடரை விளைவித்த வித்தக விளக்கே
- காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
- ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
- கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
- கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
- இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
- இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
- திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
- இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
- கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
- பிரமன் ஆதியர் பேசரும் திறனே
- தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த
- ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க்
- காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மாணு றக்களங் கறுத்தசெம் மணியே
- வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே
- சேணு றத்தரும் ஒற்றிநா யகமே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ
- யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில்
- காது கின்றதென் வஞ்சக நெஞ்சம்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- ஓது மாமறை உபநிட தத்தின்
- உச்சி மேவிய வச்சிர மணியே
- தீது நீக்கிய ஒற்றியந் தேனே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- இம்மை இன்பமே வீடெனக் கருதி
- ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே
- கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மும்மை யாகிய தேவர்தம் தேவே
- முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
- செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
- போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
- கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- விலையி லாஉயர் மாணிக்க மணியே
- வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
- சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச்
- சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான்
- கந்த வாதனை இயற்றுகின் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த
- இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே
- சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர்
- குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும்
- கடிய தாதலின் கசிந்தில தினிஇக்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அடிய னேன்பிழை உளத்திடை நினையேல்
- அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே
- செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- மாலை ஒன்றுதோள் சுந்தரப் பெருமான்
- மணத்தில் சென்றவண் வழக்கிட்ட தெனவே
- ஓலை ஒன்றுநீர் காட்டுதல் வேண்டாம்
- உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை
- வேலை ஒன்றல மிகப்பல எனினும்
- வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண்
- சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன்
- புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன்
- பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும்
- பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன்
- ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன்
- என்று கொள்விரேல் எனக்கது சாலும்
- சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- உப்பி டாதகூழ் இடுகினும் உண்பேன்
- உவந்திவ் வேலையை உணர்ந்துசெய் எனநீர்
- செப்பி டாமுனம் தலையினால் நடந்து
- செய்ய வல்லன்யான் செய்யும்அப் பணிகள்
- தப்பி டாததில் தப்பிருந் தென்னைத்
- தண்டிப் பீர்எனில் சலித்துளம் வெருவேன்
- துப்பி டாஎனக் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- கூலி என்பதோர் அணுத்துணை யேனும்
- குறித்தி லேன்அது கொடுக்கினும் கொள்ளேன்
- மாலி னோடயன் முதலியர்க் கேவல்
- மறந்தும் செய்திடேன் மன்உயிர்ப் பயிர்க்கே
- ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண்
- அருளை வேண்டினேன் அடிமைகொள் கிற்பீர்
- சூலி ஓர்புடை மகிழ்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத்
- தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன்
- ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர்
- ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள்
- ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல்
- உய்கி லேன்இஃ தும்பதம் காண்க
- சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர்
- பூரு வத்தினும் பொன்னடிக் கடிமைப்
- பதிய வைத்தனன் ஆயினும் அந்தப்
- பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே
- முதியன் அல்லன்யான் எப்பணி விடையும்
- முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன்
- துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக்
- குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல்
- புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம்
- போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள்
- பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்
- பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர்
- தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப்
- பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும்
- இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல்
- இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர்
- செச்சை மேனியீர் திருவுளம் அறியேன்
- சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண்
- துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க்
- கமுது வேண்டிமா லக்கடல் கடைய
- ஓல வெவ்விடம் வரில்அதை நீயே
- உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன்
- சாலம் செய்வது தகைஅன்று தருமத்
- தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும்
- சூல பாணியீர் திருவொற்றி நகரீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
- முந்து றேன்அவர் முற்பட வரினும்
- சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
- தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
- புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
- பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
- துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- என்ன நான்அடி யேன்பல பலகால்
- இயம்பி நிற்பதிங் கெம்பெரு மானீர்
- இன்னும் என்னைஓர் தொண்டன்என் றுளத்தில்
- ஏன்று கொள்ளிரேல் இருங்கடற் புவியோர்
- பன்ன என்உயிர் நும்பொருட் டாகப்
- பாற்றி நும்மிசைப் பழிசுமத் துவல்காண்
- துன்னு மாதவர் புகழ்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
- வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
- எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
- இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர்
- தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில்
- தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு
- நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்
- விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
- உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை
- உவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன்
- கண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்
- கண்டி ருப்பது கற்றவர்க் கழகோ
- நண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- குற்ற மேபல இயற்றினும் எனைநீர்
- கொடியன் என்பது குறிப்பல உமது
- பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப்
- பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண்
- உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால்
- உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண்
- நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- உள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர்
- உலகு ளோர்இந்த உறுதிகொண் டடியேன்
- கள்ளம் ஓதிலேன் நும்மடி அறியக்
- காம வேட்கையில் கடலினும் பெரியேன்
- வள்ள லேஉம தருள்பெறச் சிறிது
- வைத்த சிந்தையேன் மயக்கற அருள்வீர்
- நள்ளல் உற்றவர் வாழ்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
- ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
- பரந்த நீரிடை நின்றழு வானேல்
- பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
- கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
- கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
- நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப்
- பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ
- மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல்
- வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ
- உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை
- ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர்
- நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்
- வண்கை உள்ளவர் மற்றதுபோலக்
- கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்
- கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை
- மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்
- மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ
- நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப்
- புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல்
- உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில்
- ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன்
- ஐய நும்மடிக் காட்செயல் உடையேன்
- ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ
- நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச்
- சமைவர் என்பது சற்றும்இன் றுலகில்
- எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில்
- இருத்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன்
- பந்த மேலிட என்பரி தாபம்
- பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர்
- நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர்
- கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண்
- செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன்
- சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ
- பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப்
- பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே
- நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- மண்ணில் நல்லவன் நல்லவர் இடத்தோர்
- வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால்
- எண்ணி நம்புடை இருஎன உரைப்பர்
- ஏன்வ ணங்கினை என்றுரைப் பாரோ
- கண்ணின் நல்லநும் கழல்தொழ இசைந்தால்
- கலக்கம் காண்பது கடன்அன்று கண்டீர்
- நண்ணி மாதவன் தொழும்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கண்ணப்பா என்றருளும் காளத்தி யப்பாமுன்
- வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
- உண்ணப்பா என்றுரைத்த ஒற்றியப்பா வந்தருள
- எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ.
- மஞ்சுபடும் செஞ்சடில வள்ளலே உள்ளுகின்றோர்
- உஞ்சுபடும் வண்ணம்அருள் ஒற்றியூர் உத்தமனே
- நஞ்சுபடும் கண்டம்உடை நம்பரனே வன்துயரால்
- பஞ்சுபடும் பாடுபடும் பாவிமுகம் பாராயோ.
- கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்
- அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்
- நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி
- எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ.
- நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில்
- நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும்
- தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப்
- பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே
- ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே
- தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது
- ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ.
- தொண்டர்க் கருளும் துணையே இணையில்விடம்
- உண்டச் சுதற்கருளும் ஒற்றியூர் உத்தமனே
- சண்டப் பவநோயால் தாயிலாப் பிள்ளையெனப்
- பண்டைத் துயர்கொளும்இப் பாவிமுகம் பாராயோ.
- உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
- மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது
- தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண்
- எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ.
- மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக்
- கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்ணுடையாய்
- சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட்
- பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
- ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
- அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
- கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
- யாது செய்குவன் போதுபோ கின்ற
- தண்ண லேஉம தன்பருக் கடியேன்
- கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
- கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
- வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
- வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
- மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- எனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ
- என்னை வஞ்சகர் யாவருங் கூடிக்
- கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக்
- கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன்
- தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல்
- தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண்
- மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்
- திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்
- தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே
- சரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல்
- வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்
- வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்
- மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
- முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
- மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
- அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
- அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
- வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே
- கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்
- சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்
- சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
- ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்
- இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்
- வாம மாதராள் மருவொற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்
- என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன்
- துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச்
- சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன்
- அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர்
- அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ
- வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- ஊழ்வி னைப்படி எப்படி அறியேன்
- உஞற்று கின்றனன் உமதருள் பெறவே
- தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த்
- தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண்
- பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும்
- பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால்
- வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- இறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை
- எவ்வம் நீக்கியே எவ்விதத் தானும்
- மறப்பி லாதுளம் நினைத்திடில் காமம்
- வழிம றித்ததை மயக்குகின் றதுகாண்
- குறிப்பி லாதென்னால் கூடிய மட்டும்
- குறைத்தும் அங்கது குறைகில தந்தோ
- வறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- சஞ்சி தந்தரும் காமம்என் றிடும்ஓர்
- சலதி வீழ்ந்ததில் தலைமயக் குற்றே
- அஞ்சி அஞ்சிநான் அலைகின்றேன் என்னை
- அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன்
- துஞ்சி னால்பின்பு சுகம்பலித் திடுமோ
- துணையி லார்க்கொரு துணைஎன இருப்பீர்
- மஞ்சின் நீள்பொழில் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்
- காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச்
- சொல்ல வோமுடி யாதெனை ஆளத்
- துணிவு கொள்விரோ தூயரை ஆளல்
- அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல்
- அருட்கணீர்எனை ஆளலும் தகுங்காண்
- மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த
- பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த
- நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட
- மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.
- ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
- போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
- ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
- சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
- கண்டவ னேசற்றும் நெஞ்சுரு காக்கொடுங் கள்வர்தமை
- விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம்அனைத்தும்
- உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக்
- கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.
- பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார்
- பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்
- கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக்
- கண்ர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை
- எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய்
- என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன்
- அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
- வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
- மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
- துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
- தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
- அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றாள்
- சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
- மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
- மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
- இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
- கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
- அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை
- வந்தனைசெய் தானந்த வயத்தே நின்றார்
- பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
- பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
- ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
- தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க
- அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
- ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
- இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
- எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
- வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
- மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
- அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால்
- எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
- வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
- வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே.
- எளியேன் இழைத்த பெறும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
- களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
- ஒளியே முக்கட் செழுங்கரும்பே ஒன்றே அன்பர் உறவேநல்
- அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.
- காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
- ஏமக் கொடுங்கூற் றெனும்மகரம் யாது செயுமோ என்செய்கேன்
- நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
- தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே.
- மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால்
- புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
- பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
- கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே.
- வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன்
- பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த
- நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த
- அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே.
- வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்
- அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
- மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
- பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
- நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
- எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
- கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
- பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
- அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்
- சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல்
- வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய
- செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே.
- நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன்
- சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல்
- பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர்
- வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே.
- ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என்
- அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும்
- தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
- இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ.
- எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
- தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
- சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
- நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
- உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
- கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
- நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும்
- எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
- முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
- தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
- சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
- எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
- வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
- கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
- நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
- தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
- சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
- நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
- தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
- வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
- கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
- எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
- உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
- மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.
- எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
- களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
- வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
- அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
- வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
- எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
- அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
- மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
- சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
- ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
- விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
- செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
- அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு
- நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம்
- மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல்
- கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே.
- ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ
- அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம்
- களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா
- வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே.
- மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால்
- ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு
- நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன்
- நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே.
- நாயினும் கீழ்ப்பட்ட என்நெஞ்சம் நன்கற்ற நங்கையர்பால்
- ஏயினும் செல்கின்ற தென்னைசெய் கேன்உனை ஏத்தியிடேன்
- ஆயினும் இங்கெனை ஆட்கொளல் வேண்டும்ஐ யாஉவந்த
- தாயினும் நல்லவ னேஒற்றி மேவும் தயாநிதியே.
- நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம்
- சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம்
- விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள
- மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே.
- மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால்
- நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம்
- கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி
- வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
- வாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால்
- வீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள்
- தாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய்
- சூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே.
- குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
- சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே
- நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும்
- ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
- துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண்
- கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின்
- இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே
- பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே.
- பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம்
- இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும்
- மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ
- அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே.
- ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த
- அயன்முன் ஆகிய ஐவரை அளித்து
- நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த
- நித்த நீஎனும் நிச்சயம் அதனைத்
- தாக்க எண்ணியே தாமதப் பாவி
- தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே
- ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்
- காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப்
- பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்
- பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண்
- குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்
- கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம்
- உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி
- இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின்
- சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்
- துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக்
- குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்
- கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே
- உமைக்கு நல்வரம் உதவிய தேவே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
- சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
- நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
- நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
- என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
- எந்தை யேஎனை எழுமையும் காத்த
- உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கோடி நாவினும் கூறிட அடங்காக்
- கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை
- நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்
- நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே
- வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா
- வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்
- ஊடி னாலும்மெய் அடியரை இகவா
- ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
- முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்
- என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
- இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்
- பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
- பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
- உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கண்ணி லான்சுடர் காணிய விழைந்த
- கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
- பண்ணி லாவிய பாடலந் தொடைநின்
- பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்
- உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்
- உண்மை அன்றென உணர்த்தியும் எனது
- பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்
- பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்
- வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ
- வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ
- ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- நையு மாறெனைக் காமமா திகள்தாம்
- நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்
- செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
- திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே
- வையு மாறிலா வண்கையர் உளத்தின்
- மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
- உய்யு மாறருள் அம்பலத் தமுதே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- ஊழை யேமிக நொந்திடு வேனோ
- உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
- பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
- பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
- மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
- மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
- தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
- மோக வாரியின் மூழ்கின னேனும்
- அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
- அப்ப நின்அருள் அம்பியை நம்பி
- தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
- சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
- இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
- உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
- நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
- நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
- பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
- பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
- றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்
- அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
- புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
- போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
- உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
- உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
- இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தம்பி ரான்தய விருக்கஇங் கெனக்கோர்
- தாழ்வுண் டோஎனத் தருக்கொடும் இருந்தேன்
- எம்பி ரான்நினக் கேழையேன் அளவில்
- இரக்கம் ஒன்றிலை என்என்ப தின்னும்
- நம்பி ரான்என நம்பிநிற் கின்றேன்
- நம்பும் என்றனை வெம்பிடச் செயினும்
- செம்பி ரான்அருள் அளிக்கினும் உனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
- சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
- இட்ட நல்வழி அல்வழி எனவே
- எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
- விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
- வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
- சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- ஊட்டு கின்றனை உண்ணுகின் றனன்மேல்
- உறக்கு கின்றனை உறங்குகின் றனன்பின்
- காட்டு கின்றனை காணுகின் றனன்நீ
- களிப்பிக் கின்றனை களிப்புறு கின்றேன்
- ஆட்டு கின்றனை ஆடுகின் றனன்இவ்
- அகில கோடியும் அவ்வகை யானால்
- தீட்டும் அன்பருக் கன்பநின் தனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல்
- கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன்
- எண்ணி லாஇடை யூறடுத் ததனால்
- இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென்
- உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய்
- உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம்
- விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான்
- நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன்
- நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ
- இச்சை நன்றறி வாய்அருள் செய்யா
- திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே
- செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- நாடுந் தாயினும் நல்லவன் நமது
- நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே
- வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை
- வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண்
- பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப்
- பண்பென் மட்டும்நின் பால்இலை போலும்
- தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில்
- வருத்து கின்றனை மற்றெனக் குன்றன்
- அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே
- அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப்
- பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின்
- பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே
- தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- தாயி னும்பெருந் தயவுடை யவன்நந்
- தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன்
- நாயி னும்கடை யேன்படும் இடரை
- நாளும் கண்டனை நல்அருள் செய்யாய்
- ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும்
- அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம்
- தேயி னும்மிக நன்றெனக் கருள்உன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- வானும் வையமும் அளிக்கினும் உன்பால்
- மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார்
- நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில்
- நாடி நின்னருள் நலம்பெற விழைதல்
- கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில்
- குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்
- தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
- ஏன்றுகொள் பவரிலை அந்தோ
- அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
- அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
- புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
- பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
- திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
- செல்வமே சிவபரம் பொருளே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
- என்றுநின் உருவுகண் டிடும்நாள்
- என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
- என்றென தகத்துயர் அறும்நாள்
- மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
- வானவர் கனவினும் தோன்றா
- தொன்றுறும் ஒன்றே அருண்மய மான
- உத்தம வித்தக மணியே.
- வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப
- விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ
- அத்தக வேனை எடுப்பவர் நின்னை
- அன்றிஎங் கணும்இலை ஐயா
- மத்தகக் கரியின் உரிபுனை பவள
- வண்ணனே விண்ணவர் அரசே
- புத்தக நிறைவின் அடியவர் வேண்டும்
- பொருள்எலாம் புரிந்தருள் பவனே.
- அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
- அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
- மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
- வானமும் தேடினும் இன்றே
- இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
- இணைதுணை எனநினைந் துற்றேன்
- மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
- வாழிய அருட்பெருந் துறையே.
- தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
- தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
- கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
- யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
- எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
- அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
- பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
- கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே.
- உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்
- என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே
- நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே
- முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே.
- ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
- பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
- ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
- கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே.
- ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
- பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
- வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
- கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே.
- நன்றி ஒன்றிய நின்னடி யவர்க்கே
- நானும் இங்கொரு நாயடி யவன்காண்
- குன்றின் ஒன்றிய இடர்மிக உடையேன்
- குற்றம் நீக்கும்நல் குணமிலேன் எனினும்
- என்றின் ஒன்றிய சிவபரஞ் சுடரே
- இன்ப வாரியே என்னுயிர்த் துணையே
- ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன்
- தீய னேன்கொடுந் தீக்குண இயல்பே
- ஏது செய்தன னேனும்என் தன்னை
- ஏன்று கொள்வதெம் இறைவநின் இயல்பே
- ஈது செய்தனை என்னைவிட் டுலகில்
- இடர்கொண் டேங்கென இயம்பிடில் அடியேன்
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- சென்ற நாளினும் செல்கின்ற நாளில்
- சிறிய னேன்மிகத் தியங்குறு கின்றேன்
- மன்ற நான்இவண் இவ்வகை ஆனால்
- வள்ள லேநினை வழுத்துமா றெதுவோ
- என்ற னால்இனி ஆவதொன் றிலைஉன்
- எண்ணம் எப்படி அப்படி இசைக
- உன்ற னால்களித் துவகைகொள் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
- வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
- ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
- அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
- செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
- தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
- உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால்
- வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம்
- எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற்
- றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன்
- அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால்
- அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன்
- உண்ண நல்அமு தனையஎம் பெருமான்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே
- அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன்
- என்னை இப்படி இடர்கொள விடுத்தால்
- என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன்
- பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப்
- போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ
- உன்னை எப்படி ஆயினும் மறவேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- நீலம் இட்டகண் மடவியர் மயக்கால்
- நெஞ்சம் ஓர்வழி நான்ஒரு வழியாய்
- ஞாலம் இட்ட இவ் வாழ்க்கையில் அடியேன்
- நடுங்கி உள்ளகம் நலியும்என் தன்மை
- ஆலம் இட்டருள் களத்தநீ அறிந்தும்
- அருள்அ ளித்திலை ஆகமற் றிதனை
- ஓலம் இட்டழு தரற்றிஎங் குரைப்பேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- கொடிய பாவியேன் படும்பரி தாபம்
- குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது
- நெடிய காலமும் தாழ்த்தனை நினது
- நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ
- அடியர் தந்துயர் கண்டிடில் தரியார்
- ஐயர் என்பர்என் அளவஃ திலையோ
- ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன்
- இறைவ நின்றனை இறைப்பொழு தேனும்
- உன்என் றால்என துரைமறுத் தெதிராய்
- உலக மாயையில் திலகமென் றுரைக்கும்
- மின்என் றால்இடை மடவியர் மயக்கில்
- வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால்
- உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர்
- அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன்
- கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும்
- கூலி யாளனைப் போல்எனை நினைத்தே
- நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும்
- நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும்
- ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்
- குளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்
- தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்
- உளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே.
- அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்
- பொன்பொலி மேனிக் கருணையங் கடலே பொய்யனேன் பொய்மைகண் டின்னும்
- துன்பமுற் றலையச் செய்திடேல் அருணைத் தொல்நக ரிடத்துன தெழில்கண்
- டென்புளம் உருகத் துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கிவண் அருளே.
- பூத்திடும் அவனும் காத்திடு பவனும் புள்விலங் குருக்கொடு நேடி
- ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும்
- கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்றுநல் லோர்கள்
- சாற்றிடும் அதுகேட் டுவந்தனன் நினது சந்நிதி உறஎனக் கருளே.
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- உலகுயிர் தொறும்நின் று‘ட்டுவித் தாட்டும் ஒருவனே உத்தம னேநின்
- இலகுமுக் கண்ணும் காளகண் டமும்மெய் இலங்குவெண்ணீற்றணி எழிலும்
- திலகஒள் நுதல்உண் ணாமுலை உமையாள் சேரிடப் பாலுங்கண் டடியேன்
- கலகஐம் புலன்செய் துயரமும் மற்றைக் கலக்கமும் நீக்குமா அருளே.
- ஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும் என்உயிர்க் கொருபெருந் துணையே
- தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயல்எனக் களித்தஎன் தேவே
- வாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன் வருந்துறா வண்ணம்எற் கருளித்
- தாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில் சந்நிதிக் கியான்வர அருளே.
- வேத னேனும்வி லக்குதற் பாலனோ
- தீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய
- நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல்
- நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே.
- தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
- மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
- மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
- ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
- வைய நாயக வானவர் நாயக
- தையல் நாயகி சார்ந்திடும் நாயக
- உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல்
- வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே.
- பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி
- உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப்
- பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது
- நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ.
- சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய
- தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு
- உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல்
- நைவ தற்குந ணுகுவ நோய்களே.
- நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
- சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
- குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
- புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
- அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
- பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
- இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
- மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
- வாயார நின்பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன்
- ஓயா இடர்உழந் துள்நலி கின்றனன் ஓகெடுவேன்
- பேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ் வேன்புலைப் பேறுவக்கும்
- நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான்இங்ஙனே.
- வையகத் தேஇடர் மாக்கடல் மூழ்கி வருந்துகின்ற
- பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால்
- நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண்
- மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே.
- விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
- பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
- அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
- புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.
- உண்டோஎன் போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ
- கண்டோர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன்
- பண்டோர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற்றிநின்றேன்
- எண்டோள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே.
- கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை
- விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ
- தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள்
- உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே.
- கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
- உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
- எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
- எள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே.
- பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
- உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
- அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
- என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
- வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்
- தன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்
- புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
- என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே.
- துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
- அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
- கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
- என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.
- கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
- நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
- அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
- எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே.
- விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
- இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
- நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
- உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
- கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
- உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
- மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
- சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.
- கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்
- வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
- உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ
- எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே.
- வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
- உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
- தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
- கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.
- என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
- உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
- மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
- தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.
- குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
- உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
- நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
- கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே.
- பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்
- செய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்
- அய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்
- குய்ய வேறுபு கல்இலை உண்மையே.
- கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
- வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
- உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
- கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே.
- பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
- குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
- உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
- கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே.
- சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
- எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
- இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
- தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே.
- உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்
- பொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ
- மின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே
- என்னை நாடிஎ னக்கருள் செய்கவே.
- மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை
- என்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்
- பொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே
- உன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே.
- குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
- படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
- பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
- கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- அற்ப அளவும் நிச்சயிக்கல் ஆகா உடம்பை அருமைசெய்து
- நிற்ப தலதுன் பொன் அடியை நினையாக் கொடிய நீலன்எனைச்
- சற்ப அணியாய் நின்றன்ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின்புகழைக்
- கற்ப அருள்செய் தனைஅதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- உண்டு வறிய ஒதிபோல உடம்பை வளர்த்தூன் ஊதியமே
- கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை
- விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக்
- கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
- வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
- ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
- காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே
- துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை
- உள்ளற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
- கள்ளப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் பொல்லாக் கூரைதனை
- நாட்டும் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை
- ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன் ஒற்றி யூர்வந் துறநினைவு
- காட்டுங் கருணை செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- ஊணத் துணர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
- தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை
- மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர்
- காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
- நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
- உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
- கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
- எய்துகபி றப்பில்இனிநான்
- எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
- இன்பம்எய் தினும்எய்துக
- வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு
- வாழ்வுவந் திடினும்வருக
- வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
- மதிவரினும் வருகஉயர்வோ
- டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
- தெதுபோ கினும்போகநின்
- இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
- எனக்கடைதல் வேண்டும்அரசே
- கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
- கதிமருந் துதவுநிதியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
- அடியனேன் மனத்தகத் தெழுந்த
- இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
- ஏழையேன் நின்றனைப் பாடும்
- தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
- சிந்தைநைந் துலகிடை மயங்கும்
- மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
- மதிநதி வளர்சடை மணியே.
- நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
- நெறிதரு நிமலமே போற்றி
- மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
- வாழ்வித்த வள்ளலே போற்றி
- விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
- வியன்நெறி விளக்கமே போற்றி
- பதிபசு பதியே போற்றி நின்பாதம்
- பாடஎற் கருளுக போற்றி.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
- போற்றிநின் பூம்பதம் போற்றி
- ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
- அமலநின் அடிமலர் போற்றி
- ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
- இறைவநின் இருங்கழல் போற்றி
- சாற்றுமா றரிய பெருமையே போற்றி
- தலைவநின் தாட்டுணை போற்றி.
- நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
- நலந்தரல் வேண்டுவன் போற்றி
- ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
- இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
- ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
- ஓதநீ உவந்தருள் போற்றி
- மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
- வள்ளலே போற்றிநின் அருளே.
- இரங்கா திருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்தமனக்
- குரங்கால் அலைப்புண் டலைகின்ற கொடிய பாவி இவன்என்றே
- உரங்கா தலித்தோர் சிரிப்பார்நான் உலகத் துயரம் நடிக்கின்ற
- அரங்காக் கிடப்பேன் என்செய்வேன் ஆரூர் அமர்ந்த அருமணியே.
- மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
- அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
- தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
- திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
- இந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ
- அந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ
- பொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ
- என்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே.
- உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
- வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
- கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
- தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
- இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
- பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
- திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
- விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.
- திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
- உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
- தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
- இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே
- வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை
- முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான்
- என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
- பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
- மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
- என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை
- உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை
- மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன்
- என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே
- இலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே
- கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ
- திலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே.
- நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
- தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
- வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
- பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே.
- பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
- போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
- வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
- ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
- உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
- நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
- விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
- திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.
- செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
- வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
- உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
- நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே.
- என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
- பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
- புன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்
- வன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே.
- வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
- பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
- ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
- ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே.
- காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்
- பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ
- வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்
- தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே.
- அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
- கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
- செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
- பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே.
- குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்
- நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்
- பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே
- என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே.
- தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
- வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
- ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
- வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
- ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
- தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
- ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
- வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
- ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
- இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
- கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
- துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.
- ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
- தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
- வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
- நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
- பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
- எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
- கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
- உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே.
- நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன்
- பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
- எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
- தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.
- இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
- மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
- நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
- திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.
- அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
- தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
- மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
- பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்றே.
- நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
- கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
- தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
- சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
- அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
- பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
- உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
- கரிய பெருமால் உடையேற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.
- சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
- மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
- புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
- அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.
- ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
- அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
- வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
- வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
- நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
- நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
- கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
- கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.
- வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
- வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
- தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
- சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
- ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
- அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
- ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
- தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே.
- என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
- என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
- தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
- தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
- உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
- உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
- முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
- முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே.
- என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
- இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
- நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
- நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
- மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
- மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
- உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
- உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே.
- உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
- உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
- கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
- கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
- எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
- எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
- வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
- மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே.
- வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
- மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
- தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
- தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
- மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
- மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
- பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
- பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே.
- விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
- வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
- அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
- ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
- கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
- கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு
- நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை
- நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே.
- நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
- நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
- இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
- எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
- கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
- கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
- அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
- அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.
- நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத்
- தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும்
- பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம
- ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால்
- கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும்
- தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால்
- ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
- சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால்
- ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும்
- ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
- பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
- கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
- ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
- இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
- மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
- உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
- நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
- துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
- பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே.
- படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
- முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
- கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
- பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே.
- செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
- நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
- உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
- வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே.
- மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
- இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
- உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
- பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
- ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
- தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
- வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
- ஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே.
- மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
- மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
- பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
- நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே.
- வாடக்கற் றாய்இஃ தென்னைநெஞ் சேயிசை வாய்ந்தசிந்து
- பாடக்கற் றாய்இலை பொய்வேடம் கட்டிப் படிமிசைக்கூத்
- தாடக்கற் றாய்இலை அந்தோ பொருள்உனக் கார்தருவார்
- நீடக்கற் றார்புகழ் ஒற்றிஎம் மானை நினைஇனியே.
- நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும்
- பாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ
- வாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால்
- சேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே.
- வாழைக் கனிஉண மாட்டாது வானின் வளர்ந்துயர்ந்த
- தாழைக் கனிஉணத் தாவுகின் றோரில் சயிலம்பெற்ற
- மாழைக் கனிதிகழ் வாமத்தெம் மான்தொண்டர் மாட்டகன்றே
- ஏழைக் கனிகர் உளத்தினர் பாற்சென்ற தென்னைநெஞ்சே.
- காயார் சரிகைக் கலிங்கம்உண் டேல்இக் கலிங்கங்கண்டால்
- நீயார்நின் பேர்எது நின்ஊர் எதுநின் நிலையெதுநின்
- தாயார்நின் தந்தை எவன்குலம் ஏதென்பர் சாற்றும்அவ்வல்
- வாயார் இடஞ்செலல் நெஞ்சே விடைதர வல்லைஅன்றே.
- எண்சீர்க்20 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- துட்ட வஞ்சக நெஞ்சக மேஒன்று சொல்லக் கேள்கடல் சூழ்உல கத்திலே
- இட்டம் என்கொல் இறையள வேனும்ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்
- நட்ட மிக்குறல் கண்டுகண் டேங்கினை நாணு கின்றிலை நாய்க்குங் கடையைநீ
- பட்ட வன்மைகள் எண்ணில் எனக்குடல் பதைக்கும் உள்ளம் பகீல்என ஏங்குமே.
- அறுசீர்க்21 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளாம் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
- துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
- அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
- உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே.
- மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
- புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
- சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
- உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
- மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
- வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீஅக்
- கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு கிலைஅந்தோ கருதும் வேதம்
- நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும் அறிகிலைநின் நலந்தான் என்னே.
- ஆசிரியத் துறை
- உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
- இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
- திலக வாணுத லார்க்கு ழன்றனை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
- கலக மேகனிந்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே.
- நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
- தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
- அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
- எங்ஙனம்என் றுள்ளம் எழும்.
- உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
- பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
- விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
- கொடாதே எனைஏன்று கொள்.
- அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
- என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
- உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
- கடையேன் படுந்துயரைக் கண்டு.
- பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
- கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
- பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
- என்னேநின் தன்மைமன மே.
- இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
- அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
- சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
- கென்னால் உறவே தினி.
- கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
- பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
- கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
- பெரிதார ஓர்மொழியைப் பேசு.
- 173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
- 174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
- 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.
- ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
- பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
- அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
- இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
- கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
- மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
- பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
- இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.
- விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
- விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
- நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
- நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
- எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
- இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
- பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
- தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
- ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
- அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
- ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
- என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
- சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
- தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.
- நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
- நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
- பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
- ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம்.
- செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்
- கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த
- பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்
- சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே.
- எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
- இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
- விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
- விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
- பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
- பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
- கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
- கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே.
- கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
- முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
- வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
- உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
- பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
- மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
- என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே.
- உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச
- நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
- வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
- தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே.
- கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
- மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
- நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
- உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
- அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
- கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
- தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே.
- பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
- பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
- கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
- எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
- பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே
- இன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்
- மின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்
- என்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
- ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
- நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
- ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
- தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்.
- நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
- தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
- தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
- ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய்.
- அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
- இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
- மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
- தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ.
- ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
- அழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ
- பொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ
- இழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ.
- வெள்ளங்கொண் டோங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
- பள்ளங்கொண் டோங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
- உள்ளங்கொண் டோங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
- கள்ளங்கொண் டோங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே.
- ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்
- பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்
- தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
- மெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே.
- வேறு
- உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட
- இலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே
- அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்
- திலக நீவிழை வாய்நட ராசசி காமணியே.
- என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
- முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
- நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
- பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே.
- சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
- காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
- ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
- பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ.
- நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
- பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
- ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
- நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே.
- கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்
- பந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்
- அந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே
- இந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே.
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை
- உண்ண வோஉண வுக்கும் வழியிலை
- படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை
- பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
- எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்
- கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்
- விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
- வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே.
- தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
- துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
- ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
- டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
- தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
- தயவு தான்நினக் கில்லை உயிரையும்
- விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
- விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
- சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்
- பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட
- மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி
- உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே.
- 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
- இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
- next page
- மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
- உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
- கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
- குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.
- மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
- பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
- செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
- நெய்விளக்கே போன்றொருதண்ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.
- ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
- அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
- நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
- நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
- வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
- விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
- தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
- தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.
- திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
- திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
- பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
- பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
- ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
- உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
- தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.
- உலக முஞ்சரா சரமும் நின்றுநின்
- றுலவு கின்றபே ருலகம் என்பதும்
- கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற்
- கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
- இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர்
- இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
- திலகம் என்றநங் குருசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
- மனம டங்குசிற் கனந டந்தரும்
- உரமு றும்பதம் பெறவ ழங்குபே
- ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
- பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
- பரம மாகியே பரவு மாமறைச்
- சிரமு றும்பரம் பரசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக்
- கரிசற உணர்ந்து கேட்டுக்
- காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து
- கருநெறி அகன்ற பெரியோர்
- பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு
- புரிபவை எலாம்பு ரிந்துன்
- புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும்
- போதவை எலாம்அ ருளுவாய்
- நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய
- நிறைபவை எலாஞ்செய் நிலையே
- நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும்
- நித்தியா னந்த வடிவே
- அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
- இனிவரு கணப்போ திலே
- இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
- என்செய்கோம் இடியும் எனில்யாம்
- தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
- தீக்கணம் இருப்ப தென்றே
- சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
- திகழ் பரம சிவசத்தியே
- எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
- இமாசல குமாரி விமலை
- இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
- இருந்த ருள்தருந் தேவியே
- அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
- போகாத நாளும் விடயம்
- புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
- புந்திதள ராத நிலையும்
- எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
- என்றும்மற வாத நெறியும்
- இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
- ஏழையேற் கருள்செய் கண்டாய்
- கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
- கோமளத் தெய்வ மலரே
- கோவாத முத்தமே குறையாத மதியமே
- கோடாத மணிவி ளக்கே
- ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
- பதிநிலை அணைந்து வாழப்
- பகலான சகலமுடன் இரவான கேவலப்
- பகையுந் தடாத படிஓர்
- தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
- தமியேன் நடத்த வருமோ
- தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
- சரணமே சரணம் அருள்வாய்
- உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
- உறவான முத்தர் உறவே
- உருவான அருவான ஒருவான ஞானமே
- உயிரான ஒளியின் உணர்வே
- அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
- உற்றிடில் சிறுது ரும்பும்
- உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
- உயர்மறைகள் ஓர்அ னந்தம்
- தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
- தியானம் இல்லா மல்அவமே
- சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
- சேராமை எற்க ருளுவாய்
- களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
- கருணைதரு கலாப மயிலே
- கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
- கலைகி ளரவளர் அன்னமே
- அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி தன்னை அன்பர்
- துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத்
- திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
- தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்.
- கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
- நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
- தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
- சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.
- தற்பர யோக மருந்து - உப
- சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
- சிற்பர யோக மருந்து - உயர்
- தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து. - நல்ல
- சேதப்ப டாத மருந்து - உண்டால்
- தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
- பேதப்ப டாத மருந்து - மலைப்
- பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து. - நல்ல
- பால்வண்ண மாகு மருந்து - அதில்
- பச்சை நிறமும் படர்ந்த மருந்து
- நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே
- நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து. - நல்ல
- அளவைக் கடந்த மருந்து - யார்க்கும்
- அருமை யருமை யருமை மருந்து
- உளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும்
- ஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து. - நல்ல
- உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப
- உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமா ரே.
- ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்
- உத்தமருக் குறவாவேன் பாங்கிமா ரே.
- குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள
- குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமா ரே.
- தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
- தான்கொண்ட நாயக ராரே டி
- அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
- ஐய ரமுத ரழக ரடி.
- செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
- செங்கை பிடித்தவ ராரே டி
- அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
- ஆனந்தத் தாண்டவ ராஜ னடி.
- கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்
- கன்னி யழித்தவ ராரே டி
- உன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்
- உத்தம ரானந்த சித்த ரடி.
- தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
- சேர்ந்து கலந்தவ ராரே டி
- தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
- தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.
- அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
- அன்பிற் புணர்ந்தவ ராரே டி
- துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
- தூய திருநட ராய ரடி.
- காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
- கற்பை யழித்தவ ராரே டி
- பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
- பித்தர் பரானந்த நித்த ரடி.
- இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
- என்ன வர்மஞ் சொலையா.
- இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
- என்ன வர்மஞ் சொலையா.
- அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
- திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.
- திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
- மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
- இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
- வெருவிஉட் குழைவாள் விழிகர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே.
- ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
- தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
- பாடுவாள்பதைப்பாள் பதறுவாள்நான்பெண்பாவிகாண்பாவிகாண்என்பாள்
- வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே.
- உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்
- இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
- அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்
- திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே.
- திருஎலாம்அளிக்கும்தெய்வம்என் கின்றாள் திருச்சிற்றம்பலவன்என்கின்றாள்
- உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
- கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
- மருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே.
- கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்
- பெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்
- ஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்
- தருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே.
- மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரைஎன்கின்றாள்
- வன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை மறப்பனோ கணமும்என் கின்றாள்
- ஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம் உடையவன்ஆகும்என்கின்றாள்
- பொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றேபொற்றொடிபொங்குகின்றாளே.
- திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
- பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
- மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
- குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே.
- அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்
- கம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்
- வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்
- உம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே.
- விண்படைத்த பொழிற்றில்லை183 அம்பலத்தான் எவர்க்கும்
- மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
- பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
- பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
- பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
- பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
- கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
- சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
- வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
- மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
- ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
- ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
- காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
- என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
- தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
- தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
- பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
- பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
- கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
- செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
- அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
- அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
- மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
- மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
- இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
- இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ.
- என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
- என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
- பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
- பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
- வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
- வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
- வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
- விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ.
- பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
- புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
- கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
- குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
- செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
- திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
- நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
- நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ.
- கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
- கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
- தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
- தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
- பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
- பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
- உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
- உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ.
- ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
- உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
- பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
- பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
- தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
- தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
- கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
- குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.
- தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
- தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
- இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
- என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
- அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
- அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
- துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
- சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ.
- 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
- மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
- தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
- துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
- பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
- பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
- வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே.
- முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
- முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
- என்னவனே என்துணையே என்உறவே என்னை
- ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
- மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
- மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
- அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
- ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே.
- ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
- உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
- வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
- மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
- கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
- குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
- நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
- நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே.
- என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
- என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
- பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
- பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
- அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
- அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
- மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
- மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.
- எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
- என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
- மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
- மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
- கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
- கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
- குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
- கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே.
- மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
- மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
- தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்
- சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
- சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே
- சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
- இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்
- ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே.
- நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
- நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
- மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
- வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
- தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
- சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
- தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
- தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே.
- குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
- குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
- சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
- சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
- பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
- பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
- இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
- என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.
- சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
- ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
- வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
- ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
- வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
- போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
- ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
- அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
- தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
- எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார்
- நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ
- அண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும்
- உண்ணும் உணவோ டுறக்கமுநீத் துற்றாள் என்றிவ் வொருமொழியே.
- வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
- நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
- நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
- மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்
- தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்
- ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.
- ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
- தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
- ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
- தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
- தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
- ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
- பாடல் கமழும் பதம்உடையார் பணைசேர் ஒற்றிப் பதிஉடையார்
- வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
- ஆடல் அளிசூழ் குழலாய்உன் ஆணை ஒன்றும் அறியனடி
- கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஒற்றி நகர்வாழ் உத்தமனார் உயர்மால் விடையார் உடையார்தாம்
- பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகைதெரிந்து
- வெற்றி மதனன் வீறடங்க மேவி அணைந்தார் அல்லரடி
- குற்றம் அணுவும் செய்தறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வானும் புவியும் புகழ்ஒற்றி வாணர் மலர்க்கை மழுவினொடு
- மானும் உடையார் என்றனக்கு மாலை யிட்ட தொன்றல்லால்
- நானும் அவருங் கூடியொரு நாளும் கலந்த தில்லையடி
- கோனுந் தியவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
- தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
- படுத்தும் அறியார் எனக்குரிய பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும்
- கொடுத்தும் அறியார் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உழைஒன் றணிகைத் தலம்உடையார் ஒற்றி உடையார் என்றனக்கு
- மழைஒன் றலர்பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
- பிழைஒன் றறியேன் பெண்களெலாம் பேசி நகைக்கப் பெற்றேன்காண்
- குழைஒன் றியகண் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால்அயனும்
- எய்தற் கரியார் மாலையிட்டார் எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால்
- உய்தற் கடியேன் மனையின்கண் ஒருநா ளேனும் உற்றறியார்
- கொய்தற் கரிதாங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- போர்க்கும் உரியார் மால்பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
- யார்க்கும் அரியார் எனக்கெளியர் ஆகி என்னை மாலையிட்டார்
- ஈர்க்கும் புகுதா முலைமதத்தை இன்னுந் தவிர்த்தார் அல்லரடி
- கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் ஊரார் என்னை உடையவனார்
- மடுப்பார் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழைஉரைத்துக்
- கெடுப்பார் இல்லை என்சொலினும் கேளார் எனது கேள்வர்அவர்
- கொடுப்பார் என்றோ மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் மேலார் ஒற்றி யூரர்என்பால்
- சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் சேர்ந்தார் அல்லர் யான்அவரை
- அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
- குன்றிற் றுயர்கொண் டழும்எனது குறையை எவர்க்குக் கூறுவனே.
- தோளா மணிநேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
- மாளா நிலையர் என்றனக்கு மாலை இட்டார் மருவிலர்காண்
- கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்த தெனினும்அதைக்
- கோளார் உரைப்பார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார்
- வலத்திற் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
- நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித் தையோ எனைத்தமது
- குலத்திற் சேரார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் என்கண் மணியார் என்கணவர்
- வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் வாழா தலைந்து மனமெலிந்து
- சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
- கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின்
- உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
- வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம்
- மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
- பொன்னேர் சடையார் கீள்உடையார் பூவை தனைஓர் புடைஉடையார்
- தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திருப்பவனி
- இன்னே வந்தார் என்றார்நான் எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
- முன்னே மனம்என் தனைவிடுத்து முந்தி அவர்முன் சென்றதுவே.
- காண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை
- ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார்
- மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான்
- நாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- விடையார் கொடிமே லுயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
- உடையா ரொற்றி யூரமர்ந்தா ருவந்தென் மனையி லின்றடைந்தார்
- இடையா வைய மென்றார்நா னிடைதா னைய மென்றேனாற்
- கடையா ரளியா ரென்றார்கட் கடையா ரளியா ரென்றேனே.
- தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட் களத்தார் செவ்வணத்தார்
- கல்லை வளைத்தார் என்றன்மனக் கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
- எல்லை வளைத்தார் தியாகர்தமை எழிலார் ஒற்றி எனும்நகரில்
- ஒல்லை வளைத்துக் கண்டேன்நான் ஒன்றும் உரையா திருந்தாரே.
- வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
- தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
- சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
- பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- உளத்தே இருந்தார் திருஒற்றி யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
- களத்தே வதிந்தார் அவர்என்றன் கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
- இளத்தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பன்றே
- வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.
- வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
- தருந்தேன் அமுதம் உண்டென்றும் சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
- திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
- மருந்தேன் மையற் பெருநோயை மறந்தேன் அவரை மறந்திலனே.
- மாடொன் றுடையார் உணவின்றி மண்ணுன் டதுகாண் மலரோன்றன்
- ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார் ஊரை மகிழ்வோ டுவந்தாலங்
- காடொன் றுடையார் கண்டமட்டுங் கறுத்தார் பூத கணத்தோடும்
- ஈடொன் றுடையார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- கடுத்தாழ் களத்தார் கரித்தோலார் கண்ணால் மதனைக் கரிசெய்தார்
- உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத்
- தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித் துதிக்க ஒருகால் அம்பலத்தில்
- எடுத்தார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- உரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
- கரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
- வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
- இரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்
- மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்
- பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
- எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- ஆக்கம் இல்லார் வறுமையிலார் அருவம் இல்லார் உருவமிலார்
- தூக்கம் இல்லார் சுகம்இல்லார் துன்பம் இல்லார் தோன்றுமல
- வீக்கம் இல்லார் குடும்பமது விருத்தி யாக வேண்டுமெனும்
- ஏக்கம் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார் உறவொன் றில்லார் பகைஇல்லார்
- பேரும் இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சில்லார்
- நேரும் இல்லார் தாய்தந்தை நேயர் தம்மோ டுடன்பிறந்தோர்
- யாரும் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தங்கு மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார்புனைவார்
- துங்கும் அருட்கார் முகில்அனையார் சொல்லும் நமது சொற்கேட்டே
- இங்கும் இருப்பார் அங்கிருப்பார் எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
- எங்கும் இருப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
- முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
- புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
- எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி
- தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
- கானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.
- சேவார் கொடியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- பூவார் கொன்றைப் புயங்கள்மனம் புணரப் புணர வரும்பவனி
- ஓவாக் களிப்போ டகங்குளிர உடலங் குளிரக் கண்டலது
- பாவார் குதலைப் பெண்ணேநான் பரிந்து நீரும் பருகேனே.
- சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- உற்றங் குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும்பவனி
- சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின்அலது
- முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் முடிக்கோர் மலரும் முடியேனே.
- தென்னஞ் சோலை வளர்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் பிறங்கா நிற்க வரும்பவனி
- மன்னுங் கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்திக் கண்டலது
- துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் சோறெள் ளளவும் உண்ணேனே.
- மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன்
- வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார்
- நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
- கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார்
- மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார்
- கருவில் தோன்றும் எங்கள்உயிர் காக்க நினைத்த கருணையினார்
- குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- என்னா ருயிர்போல் மகளேநீ என்ன தவந்தான் இயற்றினையோ
- பொன்னார் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொற்பதத்தார்
- தென்னார் ஒற்றித் திருநகரார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொன்னார் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
- மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
- வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
- கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
- மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
- பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
- கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- வில்லார் நுதலாய் மகளேநீ மேலை நாட்செய் தவம்எதுவோ
- கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண்விழித்தார்
- வில்லார் விசையற் கருள்புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
- கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ
- வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார்
- கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால்
- கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
- சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
- காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
- கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மலைநேர் முலையாய் மகளேநீ மதிக்கும் தவமே தாற்றினையோ
- தலைநேர் அலங்கல் தாழ்சடையார் சாதி அறியாச் சங்கரனார்
- இலைநேர் தலைமுன் றொளிர்படையார் எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
- குலைநேர் சடையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
- வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண் றுடையார் வெள்விடையார்
- பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
- குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
- வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே
- எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித்
- தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாலே றுடைத்தாங் கொடிஉடையார் வளஞ்சேர் ஒற்றி மாநகரார்
- பாலே றணிநீற் றழகர்அவர் பாவி யேனைப் பரிந்திலரே
- கோலே றுண்ட மதன்கரும்பைக் குனித்தான் அம்புங் கோத்தனன்காண்
- சேலே றுண்கண் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம்
- ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
- வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
- செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார்
- பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
- ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
- தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாணி உயிர்காத் தந்தகனை மறுத்தார் ஒற்றி மாநகரார்
- காணி உடையார் உலகுடையார் கனிவாய் இன்னுங் கலந்திலரே
- பேணி வாழாப் பெண்எனவே பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
- சேணின் றிழிந்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வன்சொற் புகலார் ஓர்உயிரும் வருந்த நினையார் மனமகிழ
- இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் என்நா யகனார் வந்திலரே
- புன்சொற் செவிகள் புகத்துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
- தென்சொற் கிளியே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க உரைக்கும் இன்சொலினார்
- தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
- மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் வழியே பழிசெல் வழிஅன்றோ
- தெட்டிற் பொலியும் விழியாய்நான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உலகம் உடையார் என்னுடைய உள்ளம் உடையார் ஒற்றியினார்
- அலகில் புகழார் என்தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே
- கலகம் உடையார் மாதர்எலாம் கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
- திலக முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உந்து மருத்தோ டைம்பூதம் ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
- இந்து மிருத்தும் சடைத்தலையார் என்பால் இன்னும் எய்திலரே
- சந்து பொறுத்து வார்அறியேன் தமிய ளாகத் தளர்கின்றேன்
- சிந்துற் பவத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
- ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
- வாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத்
- தேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
- செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
- செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
- கானம் உடையார் நாடுடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
- மானம் உடையார் எம்முறவோர் வாழா மைக்கே வருந்துகின்றார்
- தீனம் அடையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார்
- உரமன் னியசீர் ஒற்றிநகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
- அரமன் னியவேற் படையன்றோ அம்மா அயலார் அலர்மொழிதான்
- திரமன் னுகிலேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வண்டார் கொன்றை வளர்சடையார் மதிக்க எழுந்த வல்விடத்தை
- உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார் உடையார் என்பால் உற்றிலரே
- கண்டார் கண்ட படிபேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது
- செண்டார் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உணவை இழந்தும் தேவர்எலாம் உணரா ஒருவர் ஒற்றியில்என்
- கணவர் அடியேன் கண்அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே
- குணவர் எனினும் தாய்முதலோர் கூறா தெல்லாம் கூறுகின்றார்
- திணிகொள் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
- நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
- ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
- தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
- உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- எற்றென் றுரைப்பேன் செவிலி அவள் ஏறாமட்டும் ஏறுகின்றாள்
- செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
- யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
- தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
- ஓமப் புகைவான் உறும்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- காமப் பயலோ கணைஎடுத்தான் கண்ட மகளீர் பழிதொடுத்தார்
- சேமக் குயிலே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங் காட்டார் அரசிலியார்
- ஊரூர் புகழும் திருஒற்றி யூரார் இன்னும் உற்றிலரே
- வாரூர் முலைகள் இடைவருத்த மனநொந் தயர்வ தன்றிஇனிச்
- சீரூர் அணங்கே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தரும விடையார் சங்கரனார் தகைசேர் ஒற்றித் தனிநகரார்
- ஒருமை அளிப்பார் தியாகர்எனை உடையார் இன்று வருவாரோ
- மருவ நாளை வருவாரோ வாரா தென்னை மறப்பாரோ
- கருமம் அறிந்த குறமடவாய் கணித்தோர் குறிதான் கண்டுரையே.
- ஆழி விடையார் அருளுடையார் அளவிட் டறியா அழகுடையார்
- ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம்வாழ் உத்தமனார்
- வாழி என்பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ
- தோழி அனைய குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
- அணியார் அடியார்க் கயன்முதலாம் அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
- பணியார் ஒற்றிப் பதிஉடையார் பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
- தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
- குணியா எழில்சேர் குறமடவாய் குறிதான் ஒன்றும் கூறுவையே.
- பொன்னார் புயத்துப் போர்விடையார் புல்லர் மனத்துட் போகாதார்
- ஒன்னார் புரந்தீ உறநகைத்தார் ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார்
- என்னா யகனார் எனைமருவல் இன்றோ நாளை யோஅறியேன்
- மின்னார் மருங்குல் குறமடவாய் விரைந்தோர் குறிநீ விளம்புவையே.
- நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீலகண்டர்
- ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என்கணவர்
- பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாரா தணைவாரோ
- வருத்தந் தவிரக் குறப்பாவாய் மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.
- வன்னி இதழி மலர்ச்சடையார் வன்னி எனஓர் வடிவுடையார்
- உன்னி உருகும் அவர்க்கெளியார் ஒற்றி நகர்வாழ் உத்தமனார்
- கன்னி அழித்தார் தமைநானுங் கலப்பேன் கொல்லோ கலவேனோ
- துன்னி மலைவாழ் குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
- கற்றைச் சடைமேல் கங்கைதனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
- பொற்றைப் பெருவிற் படைஉடையார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்து வாரோ எய்தாரோ
- சுற்றுங் கருங்கட் குறமடவாய் சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.
- பூணா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
- ஊணா உவந்தார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
- நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
- காணா தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஓட்டில் இரந்துண் டொற்றியிடை உற்றார் உலகத் துயிரைஎலாம்
- ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளிய ளாம்எனவே
- ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என்முன்உருக்
- காட்டி மறைத்தார் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஈதல் ஒழியா வண்கையினார் எல்லாம் வல்ல சித்தர்அவர்
- ஓதல் ஒழியா ஒற்றியில்என் உள்ளம் உவக்க உலகம்எலாம்
- ஆதல் ஒழியா எழில்உருக்கொண் டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
- காதல் ஒழியா தென்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- தொண்டு புரிவோர் தங்களுக்கோர் துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
- வண்டு புரியுங் கொன்றைமலர் மாலை அழகர் வல்விடத்தை
- உண்டு புரியுங் கருணையினார் ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
- கண்டுங் காணேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அடியர் வருந்த உடன்வருந்தும் ஆண்டை அவர்தாம் அன்றயனும்
- நெடிய மாலுங் காணாத நிமல உருவோ டென்எதிரே
- வடியல் அறியா அருள்காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
- கடிய அயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- கொற்றம் உடையார் திருஒற்றிக் கோயில்உடையார் என்எதிரே
- பொற்றை மணித்தோட் புயங்காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக்
- குற்றம் அறியேன் மனநடுக்கங் கொண்டேன் உடலங் குழைகின்றேன்
- கற்றிண் முலையாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டிநின்றார்
- தளித்தார் சோலை ஒற்றியிடைத் தமது வடிவம் காட்டியுடன்
- ஒளித்தார் நானும் மனம்மயங்கி உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக்
- களித்தார் குழலாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
- நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
- உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
- தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.
- நாக அணியார் நக்கர்எனும் நாமம்உடையார் நாரணன்ஓர்
- பாகம் உடையார் மலைமகள்ஓர் பாங்கர் உடையார் பசுபதியார்
- யோகம் உடையார் ஒற்றியுளார் உற்றார் அல்லர் உறுமோக
- தாகம் ஒழியா தென்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
- பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார்
- மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
- இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
- வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
- எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்
- மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற
- என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
- மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
- எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கலக அமணக் கைதவரைக் கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
- வலகை குவித்துப் பாடும்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உலக நிகழ்வைக் காணேன்என் உள்ளம் ஒன்றே அறியுமடி
- இலகும் அவர்தந் திருஅழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
- வண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி
- எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
- இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
- உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
- புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
- தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
- ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
- தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
- களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
- ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்
- வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார்
- தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்
- உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்
- பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
- அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ
- உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
- மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
- வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
- உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்
- மிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்
- துக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்
- ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்
- வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து
- வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ
- உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
- சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
- பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
- ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
- வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
- கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
- உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
- அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
- உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
- இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
- கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
- இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
- எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
- உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
- இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
- மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
- ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
- ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
- ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
- ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
- உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
- தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
- எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்
- ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ
- நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ
- ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
- வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
- கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
- எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
- அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
- திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
- கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
- அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
- ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
- கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
- கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
- வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்
- கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
- அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
- துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்
- கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
- ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்
- நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
- கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
- தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்
- ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்
- காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
- அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்
- நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்
- கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
- ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
- தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
- கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
- அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
- படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
- கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
- மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
- நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
- ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
- கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
- நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
- எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
- வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
- சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
- யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
- தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
- ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
- இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
- ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்
- பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே
- ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை
- மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து
- படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண
- நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
- பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
- கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
- பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை
- விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து
- படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்
- கல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி
- பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண
- அடையா மகிழ்வி னொடும்வந்தால் அம்மா நமது விடயமெலாம்
- படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
- ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
- மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
- வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
- நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
- நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
- வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
- விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
- சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
- செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
- உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
- உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
- இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
- சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
- துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.
- குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
- குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
- என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
- எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
- பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
- பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
- அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
- ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
- அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
- வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
- மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
- என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
- டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
- முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
- முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.
- என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
- என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
- அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
- தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
- நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
- நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
- இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
- என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.
- பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
- பருவத்தே அணிந்தணிந்தது பாடும்வகை புரிந்து
- நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
- நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
- நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
- நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
- கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
- குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- சுற்றதுமற் றவ்வழியா சூததுஎன் றெண்ணாத்
- தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
- எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
- கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
- கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
- பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
- பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே.
- ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
- இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
- வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
- மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
- தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
- தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
- ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
- உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
- தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
- தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
- இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
- இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
- பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
- பெற்றிஅறித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
- ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
- உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
- நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
- நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
- தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
- தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
- தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
- சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
- வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
- மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.
- ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
- ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
- வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
- மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
- ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
- ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
- நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
- நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
- இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
- எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
- உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
- உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
- மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
- வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
- குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
- கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.
- ஏதும்அறி யாதிருளில் இருந்தசிற யேனை
- எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
- ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
- உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
- தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
- திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
- போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
- போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.
- முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
- முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
- பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
- பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
- தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
- தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
- இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
- எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.
- ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
- தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
- மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
- விரும்பிஅருள் நெறிநடகக விடுத்தனைநீ யன்றோ
- பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
- புரிந்தவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
- துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
- சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
- பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
- போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
- வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
- வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
- போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
- பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
- ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
- உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
- உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
- இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
- இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
- கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
- ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
- ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
- உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
- அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
- அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
- கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
- தௌவிண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
- தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.
- திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
- தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
- வருமாலை மண்ணுறத்தப் பெயர்த்துநடந் தருளி
- வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
- தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
- செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
- குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
- குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
- அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கவந் திறப்பித்
- தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
- மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
- வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
- ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
- இன்றதுதான் அனுபவித்துக் கிசைந்ததுநா யடியேன்
- என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.
- இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
- தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
- சுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
- களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
- உரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
- உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
- அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
- ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
- கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
- கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
- மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
- மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
- புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
- பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
- ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
- உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
- வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
- தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
- வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
- மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
- அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
- அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
- வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
- மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
- துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
- தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
- என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
- என்உயிருக் குயிராகி இலங்கிசற் குருவே.
- ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
- நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
- காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
- கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
- சிலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
- சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
- ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
- அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
- கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
- தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
- துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
- வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
- மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
- தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
- தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
- ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
- ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
- பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
- ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
- அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
- அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
- அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
- கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
- உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
- பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
- காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
- கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
- ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
- உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
- ஏரணவி உறைகமகிழ்த் தெனஉரைத்தாய் நின்சீர்
- யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
- பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
- பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.
- துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
- சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
- பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
- உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
- உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
- பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
- பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
- நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
- நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
- ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
- அணிக்கதவந் திறப்பித்துள் என்பொடெனை அழைத்து
- வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
- வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
- கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
- கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
- சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
- தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
- சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
- மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
- மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
- சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
- சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
- பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
- பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
- சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
- அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
- அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
- விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
- விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
- செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
- திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
- துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
- உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
- மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
- மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
- ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
- அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
- உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
- உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
- நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
- நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
- எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
- என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
- அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிறர்ந் தாட
- அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.
- வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
- விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
- பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
- போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
- நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
- ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
- தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
- கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
- கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
- இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த
- என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
- திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.
- மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
- வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
- ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
- தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
- தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
- கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
- கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
- படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
- பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
- நடைப்புலையேன் பொருட்டாக நடத்திரவிற் கதவம்
- நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
- இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
- இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
- தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
- முழுதிரவில் நடந்தெளியேன் முயங்கமிடத் தடைந்து
- அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
- என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
- டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
- வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
- மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
- மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
- சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
- செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
- மாதானத் தவர்சூ‘ வாழ்கஎன உரைத்தாய்
- மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
- ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
- ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.
- ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
- ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
- அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
- அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
- பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
- பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
- கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
- கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
- விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
- விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
- வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
- இந்துநிலை முடிமுதராந் திருஉருவங் காட்டி
- என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
- முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
- முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.
- கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
- கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
- மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
- பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
- பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
- அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
- னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
- அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
- அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
- தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
- சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
- மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
- மகிழ்ந்துதிரு அருள்வழியே வார்கஎன உரைத்தாய்
- இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
- எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
- முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
- முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
- கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
- கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
- பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
- பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
- தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
- தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
- சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
- சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
- கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
- கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
- காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
- ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
- ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே .
- ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
- உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
- அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
- அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
- நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
- நண்ணநீ எண்ணியவா நடத்துகஎன் றரைத்தாய்
- இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
- என்புகல்வேன் மணிமன்றில் இலங்கிசற் குருவே .
- சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
- தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
- பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
- பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
- புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
- பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
- உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே .
- உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
- உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
- கள்ளமனத் தேனிருக்கும் இந்தேடி அடைந்து
- கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
- நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
- நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
- தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
- செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே .
- தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
- தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
- பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
- தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
- என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
- என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
- அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
- கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
- கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தொண்டனென் எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
- துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
- உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
- அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
- தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
- பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
- செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
- திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
- பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
- பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.
- விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
- விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
- கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
- இடையின்அது நான்மறுப்பு மறுக்கேல்என் மகனே
- என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்
- உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே.
- அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
- பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
- போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
- தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
- சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
- மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
- மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
- பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
- பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
- மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
- வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
- தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
- செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
- திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
- திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
- என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
- என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
- தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
- தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
- முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
- முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
- மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
- வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
- பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
- பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
- வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
- வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
- செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
- உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
- இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
- தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
- தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
- கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
- உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.
- இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
- எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
- எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்
- இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
- செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
- அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
- றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
- என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
- எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
- துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
- தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
- முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
- முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
- மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
- மோகனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
- யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
- உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
- போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
- புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
- நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
- நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.
- உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
- உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
- சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
- பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
- பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
- நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
- நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
- நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
- நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
- தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
- தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
- தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
- தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
- வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
- உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
- ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
- என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
- வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
- வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
- மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
- முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.
- மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
- மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
- மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
- மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
- தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
- தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
- அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
- இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
- எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
- உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
- உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
- திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
- தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
- குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
- குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
- உம்பருக்குங் கிடைப்பரிநாம் மணிமன்றில் பூத
- உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
- செம்பருக்கைக் கல்லுறத்தத் தெருவில்நடந் திரவில்
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
- வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
- மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
- இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
- இறைவநின் தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.
- உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
- உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
- துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
- சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
- தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
- மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
- பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
- பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
- பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
- போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
- மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
- வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
- றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
- உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
- உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
- அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
- அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
- களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
- விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
- விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
- இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
- தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
- சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
- இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
- எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
- அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
- அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
- மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
- வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
- ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
- றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
- தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
- திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
- வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
- பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
- அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
- அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
- வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
- மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
- விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
- விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
- ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
- அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
- சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
- துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
- பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
- படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
- ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
- உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
- தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
- தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
- வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
- வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
- எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
- விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
- மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
- மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
- வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
- பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
- போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
- தாவிநடந் திரவின்மனைக் கதவுதிப் பித்தே
- தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
- நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
- மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
- மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
- கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
- கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
- உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
- உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
- தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
- மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
- துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
- துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
- உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
- உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
- வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
- உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
- உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
- திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
- திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
- இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
- இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
- புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
- திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
- தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
- தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
- மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
- மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
- குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
- குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.
- என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
- என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
- தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
- தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
- மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
- வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
- உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
- ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
- அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே
- அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
- கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
- களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
- குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
- கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
- மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
- மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.
- உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி
- உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்பு
- மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை
- மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்
- அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்
- அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
- கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
- கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
- சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
- உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
- உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
- கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
- கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
- கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
- கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
- மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
- வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப்
- பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
- பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.
- உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்
- ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
- முன்னதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்
- முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்
- துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்
- துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன்
- பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்
- பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே.
- திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
- சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
- தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
- போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
- பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே
- பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.
- சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
- தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
- செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
- எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
- எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
- பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
- செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
- களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
- நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
- நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.
- அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
- அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
- திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
- புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
- புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
- உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
- ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
- தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
- கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
- எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
- இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.
- பார்பூத்த பசுங்கொடிபொற் பாலைவயர்கள் அரசி
- பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
- சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
- கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து
- கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.
- பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
- பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
- தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
- இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
- தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
- தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
- தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
- தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
- சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
- வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
- உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
- உடையானே நின்னருளின் அ€டாளம் இதுவே.
- அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
- என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாளுடையேன்188 தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
- ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
- அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
- வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
- இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்
- ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
- இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- இனிதனித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்
- துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா
- எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
- மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
- வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
- எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
- இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
- வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
- மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
- அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
- ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
- துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
- தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
- சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
- சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
- நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
- நாய்க்டையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
- பவயோக இந்தியமும் இன்பமய மான
- படிஎன்றால் மெய்யறிவிற் தவர்க்கிருந்த வண்ணம்
- தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.
- சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
- சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
- முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
- மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
- புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
- போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
- பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
- படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
- தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
- சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
- சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்
- தான்நினைத்த போதெனையே நான்நினைத்த நிலையேல்
- ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த
- அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
- உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்
- உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
- ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
- பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
- பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
- சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
- சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
- ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
- உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
- பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
- பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
- சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
- தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
- சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
- தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
- நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
- நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
- அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
- வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
- எந்தேஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
- எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
- இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
- எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
- தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
- ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
- உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
- தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
- சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
- சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
- கண்ணர நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
- கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
- எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
- எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
- தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப்
- பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப்
- புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன்
- செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன்
- செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே
- சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
- மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்
- வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
- பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
- புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
- சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
- இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
- உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
- உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
- கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
- கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
- சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
- உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
- பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
- பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
- கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
- குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
- தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
- பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
- புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
- கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
- கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
- விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.
- கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
- பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
- ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
- அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
- மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
- வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.
- திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
- தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
- புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
- உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
- உண்மையறி வானந்த உருவுடைய குருவே
- சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
- திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.
- உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும் உற்றிலாச் சிறியஓர் பருவத்
- திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்
- விலகுறங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
- திலகநன் காழி ஞானசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.
- உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
- செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய்
- பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
- பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே.
- தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
- ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
- றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
- சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே.
- தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
- பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
- இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
- றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
- உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
- நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
- விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
- றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே.
- பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும் பொருள்அரு ளனுபவம் அதற்குப்
- பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப் பற்றறப் பற்றுதி இதுவே
- சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன்
- முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின் முதலர சியற்றிய துரையே.
- வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே
- ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
- பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான
- உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே.
- சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
- தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
- காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
- கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
- ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
- இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
- பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
- பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
- சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
- உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
- ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
- பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
- புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
- கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
- கடலேநின் கழல்கருதக் கருது வாயே.
- கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
- கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
- பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்
- பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
- விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்
- விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
- ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற
- உத்தமனே191 சித்தமகிழ்ந் துதவு வோனே.
- ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
- ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
- ஆங்காரப் பெருமதமால் யானை போல
- அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
- பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்
- பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ
- தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன
- செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே.
- செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்
- சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ
- பொய்வகையே புரிகின்றேன் புண்ணி யாநின்
- பொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான்
- உய்வகைஎவ் வகையாது செய்வேன் நீயே
- உறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை
- மெய்வகையிற் செலுத்தநினைத் திடுதி யோசொல்
- வேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே.
- விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
- மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
- களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
- கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
- துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
- துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
- வளங்கெழும்ஆ கநநெறியை வளர்க்க வந்த
- வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.
- அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
- அவதரித்த மணியெசொல் லரசே ஞானத்
- தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
- செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
- இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
- இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
- மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
- வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.
- தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
- செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
- சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
- தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
- கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
- குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
- தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
- செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.
- 191. எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோஎம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்கண்ணிலேன் மற்றோர்களைகண் இல்லேன்கழலடியே கைதொழுது காணின்அல்லால்ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணியனே.- 7215 (6-99-1) திருநாவுக்கரசர். திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.
- இலைக்குளநீ ரழைத்தனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
- தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
- கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
- மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.
- வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
- ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
- பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
- மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.
- ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
- தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
- ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
- தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
- தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
- ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
- தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
- இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
- உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
- றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
- அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.
- பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
- உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
- வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
- தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே.
- கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
- பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
- குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி
- உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.
- உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
- திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
- குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
- இருஎன்ற தனிஅகவல்194 எண்ணம்எனக் கியம்புதியே.
- சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
- மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
- காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
- ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
- வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
- நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
- தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
- ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
- வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
- ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
- தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
- குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.
- 194 `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம், திருவண்டப்பகுதியில் `என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை.வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பியஅற்புத மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்குஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமுது ஆக்கினன்பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.
- உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
- இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
- திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
- விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
- கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
- வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
- விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
- நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
- பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
- வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- மருள்உறு மனமும் கொடியவெங் குணமும் மதித்தறி யாததுன் மதியும்
- இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை எந்தநாள் அடைகுவன் எளியேன்
- அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே அமர்ந்தசிற் பரஒளி நிறைவே
- வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- கேவலசகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி
- ஓவற மயங்கி உழலும்இச் சிறியேன் உன்அருள் அடையும்நாள் உளதோ
- பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரமசிற் சுகபரம் பரனே
- மேவுறும் அடியார்க் கருளிய சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்
- ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
- ஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
- வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
- களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
- அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
- வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.
- சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
- பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
- ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
- வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.
- முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய
- இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
- என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே
- மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே.
- துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
- விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
- நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
- மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே.
- தடக்கைமா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப்புயங் களும்கை
- இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும் இறைப்பொழு தேனும்யான் மறவேன்
- விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிகமகிழ்ந் திடஅருட் பேறே
- மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
- உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
- குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
- வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- மண்ணில் ஆசைம யக்கற வேண்டிய மாத வர்க்கும்ம திப்பரி யாய்உனை
- எண்ணி லாச்சிறி யேனையும் முன்நின்றே ஏன்று கொண்டனை இன்றுவி டுத்தியோ
- உண்ணி லாவிய நின்திரு வுள்ளமும் உவகை167 யோடுவர்ப் பும்கொள ஒண்ணுமோ
- வெண்ணி லாமுடிப் புண்ணியமூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- ஆணி லேஅன்றி ஆருயிர்ப் பெண்ணிலே அலியி லேஇவ்வ டியனைப் போலவே
- காணி லேன்ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்க டையனை மாயையாம்
- ஏணி லேஇடர் எய்தவி டுத்தியேல் என்செய் கேன்இனி இவ்வுல கத்திலே
- வீணி லே உழைப் பேன்அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- வாளி லேவிழி மங்கையர் கொங்கையாம் மலையி லேமுக மாயத்தி லேஅவர்
- தோளி லே இடைச் சூழலி லேஉந்திச் சுழியி லேநிதம் சுற்றும்என் நெஞ்சம்நின்
- தாளி லேநின்த னித்தபு கழிலே தங்கும் வண்ணம் தரஉளம் செய்தியோ
- வேளி லேஅழ கானசெவ் வேளின்முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நாவி னால்உனை நாள்தொறும் பாடுவார் நாடு வார் தமை நண்ணிப்பு கழவும்
- ஓவி லாதுனைப் பாடவும் துன்பெலாம் ஓடவும்மகிழ் ஓங்கவும் செய்குவாய்
- காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக் கடவுளேநற்க ருங்குழி என்னும்ஊர்
- மேவி அன்பர்க்க ருள்கண நாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
- கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
- திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
- இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே.
- அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
- கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
- பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
- அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே.
- கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
- நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
- விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
- அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே.
- மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
- ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
- தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
- பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.
- மணியே தினைப்புன வல்லியை வேண்டி வளர்மறைவான்
- கணியே எனநின்ற கண்ணே என்உள்ளக் களிநறவே
- பணியேன் எனினும் எனைவலிந் தாண்டுன் பதந்தரவே
- நணியே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே.
- கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
- துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
- கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
- தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
- குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
- வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
- தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
- கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.
- உனக்கே விழைவுகொண் டோலமிட் டோங்கி உலறுகின்றேன்
- எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
- புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
- மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.
- செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
- வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
- அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
- மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.
- நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
- அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
- சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
- இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.
- இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
- பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
- கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
- திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
- தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
- கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
- என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
- துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.
- என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல்
- வன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க
- மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்
- தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே.
- சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
- சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
- ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
- வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.
- மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
- தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
- கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
- தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
- தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
- பணியாத பாவிக் கருளும்உண் டோபசு பாசம்அற்றோர்க்
- கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
- அணிஆ தவன்முத லாம்அட்ட மூர்த்தம் அடைந்தவனே.
- அடையாத வஞ்சகர் பால்சென் றிரந்திங் கலைந்தலைந்தே
- கடையான நாய்க்குள் கருணைஉண் டோதணி கைக்குள்நின்றே
- உடையாத நல்நெஞ்சர்க் குண்மையைக் காண்பிக்கும் உத்தமனே
- படையாத தேவர் சிறைமீட் டளித்தருள் பண்ணவனே.
- பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்
- கண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே
- விண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்
- புண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே.
- பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
- என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
- மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
- இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.
- அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
- பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
- தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
- துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.
- களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
- ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
- தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
- தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே.
- இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
- கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
- விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
- தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.
- யாரை யுந்துணை கொண்டிலேன் நின்அடி இணைதுணை அல்லால்நின்
- பேரை உன்னிவாழ்ந் திடும்படி செய்வையோ பேதுறச் செய்வாயோ
- பாரை யும்உயிர்ப் பரப்பையும் படைத்தருள் பகவனே உலகேத்தும்
- சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே.
- உளங்கொள் வஞ்சக நெஞ்சர்தம் இடம்இடர் உழந்தகம் உலைவுற்றேன்
- வளங்கொள் நின்பத மலர்களை நாள்தொறும் வாழ்த்திலேன் என்செய்கேன்
- குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்கரும் பெருவாழ்வே
- தளங்கொள் பொய்கைசூழ் தணிகைஅம் பதியில்வாழ் தனிப்பெரும் புகழ்த்தேவே.
- கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை
- கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித்
- தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ
- அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே
- ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
- வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
- காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
- சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
- ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
- யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
- சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
- கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
- பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
- தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- உண்டால் குறையும் எனப்பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தைஎதிர்
- கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
- கொண்டார் அடியர் நின்அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
- திண்டார் அணிவேல் தணிகைமலைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
- எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
- பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
- செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
- செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
- கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
- குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
- பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
- பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
- பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
- பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.
- தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
- செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
- களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
- கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
- சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
- தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
- அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
- அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ.
- உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
- ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
- கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
- காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
- தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
- தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
- விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
- வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே.
- கையாத அன்புடையார் அங்கை மேவும்
- கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
- பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
- பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
- உய்யாத குறைஉண்டோ துயர்சொல் லாமல்
- ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
- ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
- கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.
- வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
- வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
- நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
- நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
- தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
- என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
- து‘ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
- சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.
- ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
- ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
- கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
- கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
- நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
- நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
- தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
- சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.
- அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
- ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
- புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
- புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
- பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
- படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
- எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
- இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.
- பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
- பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
- கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
- குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
- கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்தாய்
- கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
- தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே
- புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
- வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
- மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ
- இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ்
- வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே
- தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கல்அளவாம் நெஞ்சம்என வஞ்ச மாதர்
- கண்மாயம் எனும்கயிற்றால் கட்டு வித்துச்
- சொல்அளவாத் துன்பம்எனும் கடலில் வீழ்த்தச்
- சோர்கின்றேன் அந்தோநல் துணைஓன் றில்லேன்
- மல்அளவாய்ப் பவம்மாய்க்கும் மருந்தாம் உன்றன்
- மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கேன் எந்தாய்
- சல்லம்5 உலாத் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னரும்வன் துயரால்நெஞ் சழிந்து நாளும்
- பதைத்துருகி நின்அருட்பால் பருகக் கிட்டா
- துன்னரும்பொய் வாழ்க்கைஎனும் கானத் திந்த
- ஊர்நகைக்கப் பாவிஅழல் உணர்ந்தி லாயோ
- என்னருமை அப்பாஎன் ஐயா என்றன்
- இன்னுயிர்க்குத் தலைவாஇங் கெவர்க்கும் தேவா
- தன்னியல்சீர் வளர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
- கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
- சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
- தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
- சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
- செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
- தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
- வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
- எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
- ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
- அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
- காரமுதே அருட்கடலே அமரர் கோவே
- தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
- மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
- என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
- இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
- இன்செல்அடி யவர்மகிழும் இன்ப மேஉள்
- இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
- தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
- வருந்திஉறு கண்வெயிலால் மாழாந் தந்தோ
- தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
- தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
- செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
- தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
- சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
- வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
- பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
- பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
- ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
- இன்பமே என்அரசே இறையே சற்றும்
- தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
- றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
- இளந்தளிர்போல் நலிந்திரந்திங் குழலும் இந்த
- ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
- வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
- மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலூர் மன்னே
- தளந்தரும்பூம் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
- கரைந்துருகி எந்தாய்நின் கருணை காணா
- தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
- கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
- பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
- பூரணமே புண்ணியமே புனித வைப்பே
- தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
- பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
- மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
- மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
- தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
- தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
- தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
- வஞ்சகன்என் றேமறுத்து வன்க ணாநீ
- போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
- பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
- கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
- குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
- தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
- வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
- தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோஎன்
- சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
- பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
- பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
- சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
- பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
- பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
- புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
- பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
- பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
- தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
- இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
- கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
- கருதி டாதுழல் கபட னேற்கருள்
- நண்ணி வந்திவன் ஏழை யாம்என
- நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
- தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- பொய்யர் தம்மனம் புகுதல் இன்றெனப்
- புனித நு‘லெலாம் புகல்வ தாதலால்
- ஐய நின்திரு அருட்கி ரப்பஇங்
- கஞ்சி நின்றென்இவ் விஞ்சு வஞ்சனேன்
- மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே
- வித்தி லாதவான் விளைந்த இன்பமே
- தைய லார்இரு வோரும் மேவுதோள்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம்
- மறந்து ழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
- பாலின் நீர்என நின்அ டிக்கணே
- பற்றி வாழ்ந்திடப் பண்ணு வாய்கொலோ
- சேலின் வாட்கணார் தீய மாயையில்
- தியங்கி நின்றிடச் செய்கு வாய்கொலோ
- சால நின்உளம் தான்எவ் வண்ணமோ
- சாற்றி டாய்திருத் தணிகை நாதனே.
- நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
- ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்
- தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
- வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே.
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
- ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
- அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
- தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
- வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
- தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
- ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
- ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.
- தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
- யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
- வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
- கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
- குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
- இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
- என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
- நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.
- தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
- மூவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
- ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
- தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.
- வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
- மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
- சால நின்றவன் தணிகை நாயகன்
- வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.
- அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
- செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
- துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
- தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.
- வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்
- உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்
- எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்
- தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.
- சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
- ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
- டூறில் கண்களால் உண்ண எண்ணினேன்
- ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.
- உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
- நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
- தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
- வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.
- செய்வ தன்றவன் சிறிய னேன்றனை
- வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
- உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே
- சைவ நாதனே தணிகை மன்னனே.
- கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின் றேன்நின் திருக்கருணை
- அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவில்லேன்
- விடையே றீசன் புயம்படும்உன் விரைத்தாள் கமலம் பெறுவேனோ
- கொடைஏர் அருளைத் தருமுகிலே கோவே தணிகைக் குலமணியே.
- தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குன் அருள்தந்தால்
- வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
- ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
- போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.
- அரைசே அடியர்க் கருள்குகனே அண்ணா தணிகை ஐயாவே
- விரைசேர் கடம்ப மலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே
- புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
- தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.
- குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
- நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
- என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
- இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.
- போதா நந்த அருட்கனியே புகலற் கரிய பொருளேஎன்
- நாதா தணிகை மலைஅரசே நல்லோர் புகழும் நாயகனே
- ஓதா தவமே வருந்துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்
- ஏதாம் உனதின் அருள்ஈயா திருந்தால் அந்தோ எளியேற்கே.
- எளியேன் நினது திருவருளுக் கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
- களியேன் எனைநீ கைவிட்டால் கருணைக் கியல்போ கற்பகமே
- அளியே தணிகை அருட்சுடரே அடியர் உறவே அருள்ஞானத்
- துளியே அமையும் எனக்கெந்தாய் வாஎன் றொருசொல் சொல்லாயே.
- மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
- விரைமலர்த் துணைதமை விரும்பாப்
- பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
- அளித்திடும் தெள்ளிய அமுதே
- தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நன்மைய எல்லாம் அளித்திடும் உனது
- நளினமா மலர்அடி வழுத்தாப்
- புன்மையர் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன்
- சேர்ந்திடத் திருவருள் புரியாய்
- தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
- மனமுற நினைந்தகத் தன்பாம்
- பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அருள்எலாம் திரண்ட ஆனந்த உருவே
- அன்பர்பால் இருந்திட அருளாய்
- தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
- தணிகைவாழ் சரவண பவனே.
- வல்இருள் பவம்தீர் மருந்தெனும் நினது
- மலர்அடி மனம்உற வழுத்தாப்
- புல்லர்தம் இடம்இப் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஒல்லையின் எனைமீட் டுன்அடி யவர்பால்
- உற்றுவாழ்ந் திடச்செயின் உய்வேன்
- சல்லமற் றவர்கட் கருள்தரும் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின்
- கருணைஅம் கழல்அடிக் கன்பாம்
- பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அற்பிலேன் எனினும் என்பிழை பொறுத்துன்
- அடியர்பால் சேர்த்திடில் உய்வேன்
- தற்பரா பரமே சற்குண மலையே
- தணிகைவாழ் சரவண பவனே.
- பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
- பரஞ்சுடர் நின்அடி பணியும்
- புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- நித்திய அடியர் தம்முடன் கூட்ட
- நினைந்திடில் உய்குவன் அரசே
- சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
- நின்அடிக் கமலங்கள் நினைந்தே
- போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
- ஆச்செயில் உய்குவன் அமுதே
- சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
- பாததா மரைகளுக் கன்பு
- புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
- திருவுளம் அறிகிலன் தேனே
- சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
- தணிகைவாழ் சரவண பவனே.
- எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை
- ஏத்திடா தழிதரும் செல்வப்
- புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- கண்உறு மணியாம் நின்அடி யவர்பால்
- கலந்திடில் உய்குவன் கரும்பே
- தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே.
- தணிகைவாழ் சரவண பவனே.
- மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
- அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
- பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
- என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.
- இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
- அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
- உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
- வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
- வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்
- கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருது வாயோ அன்றிஅருள்
- உருவாய் வந்து தருவாயோ தணிகா சலத்துள் உற்றமர்ந்த
- ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே.
- உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோ உரைக்கடங்காப்
- பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
- எய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்
- செய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே.
- தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
- பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
- தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
- உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.
- செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
- வைவ துன்னை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்
- உய்வ துனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
- எய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.
- எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
- அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
- ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
- வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.
- பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
- அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
- ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
- எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே
- செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
- உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
- அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
- உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.
- துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
- அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
- உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
- சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
- யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
- ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.
- சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
- வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
- ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.
- அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே
- கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
- ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே.
- பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
- கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
- உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- துதிஏர் நினது பதந்தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.
- தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயஞ்சுடரே
- ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஈன்றாள் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.
- கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
- நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
- சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
- அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே.
- என்செய் கேன்இனும் திருவருள் காண்கிலேன் எடுக்கரும் துயர்உண்டேன்
- கன்செய் பேய்மனக் கடையனேன் என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
- பொன்செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள்வைப்பே
- மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ் வள்ளலே மயிலோனே.
- மண்ணில் நண்ணிய வஞ்சகர் பால்கொடு வயிற்றினால் அலைப்பட்டேன்
- கண்ணில் நண்ணரும் காட்சியே நின்திருக் கடைக்கண்ணோக் கருள்நோக்கி
- எண்ணி எண்ணிநெஞ் சழிந்துகண்ணீர்கொளும் ஏழையேன் தனக்கின்னும்
- புண்ணில் நண்ணிய வேல்எனத் துயர்உறில் புலையன்என் செய்கேனே.
- வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
- தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
- கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
- வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
- நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
- கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி
- உண்ணேனோ ஆனந்தக் கண்ர்கொண் டாடிஉனக் குகப்பாத் தொண்டு
- பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே.
- கொள்ளேனோ நீஅமர்ந்த தணிகைமலைக் குறஎண்ணம் கோவே வந்தே
- அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே ஆனந்தத் தழுந்தி ஆடித்
- துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ துதித்துலகத் தொடர்பை எல்லாம்
- தள்ளேனோ நின்அடிக்கீழ்ச் சாரேனோ துணைஇல்லாத் தனிய னேனே.
- இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும் தேவைஎன திருகண் ஆய
- செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந் தானந்தத் தெளிதேன்உண்டே
- எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ அவன்பணிகள் இயற்றி டேனோ
- தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல் உழல்தருமிச் சிறிய னேனே.
- சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
- குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
- அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
- முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
- முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
- மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
- உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
- என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும்அவர்க் கிதங்கூ றேனோ.
- தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே
- நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக்
- கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
- பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.
- காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
- போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
- பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
- நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- தன்னால் உலகை நடத்தும்அருட் சாமி தணிகை சாராமல்
- பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல்நெஞ்சே
- உன்னால் என்றன் உயர்விழந்தேன் உற்றார் இழந்தேன் உன்செயலைச்
- சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே.
- நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
- மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
- நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
- உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
- வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
- மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
- நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
- நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
- கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
- கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
- தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
- தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
- பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
- பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
- கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
- குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
- மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
- வேல னேதணி காசல மேலனே
- தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
- தெய்வ யானை திருமண வாளனே.
- கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
- கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்
- உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்
- உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
- புரத்தைக் காட்டு நகையின்எ ரித்ததோர்
- புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
- வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே
- வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
- ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
- குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
- கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
- மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
- வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
- சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
- சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
- கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
- கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
- மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
- மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
- பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
- பத்திக் காட்டிமுத் திப்—‘ருள் ஈதென
- விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
- வேல னேஉமை யாள்அருள் பாலனே.
- படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
- பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
- குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
- கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
- கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
- கள்ள மாதரைக் கண்டும யங்கினேன்
- ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
- ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே.
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
- உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
- பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
- மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
- உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
- அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
- வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
- ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
- தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
- வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.
- எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
- அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
- களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
- தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே.
- செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
- கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
- மெய்கொள் புளகம் மூடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ
- பொய்கொள் உலகோ டூடேனோ புவிமீ திருகால் மாடேனே.
- நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
- கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள்நீர் உண்ணேனோ
- சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ
- காட்டும் அவர்தாள் கண்ணேனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.
- காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ
- பாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ
- ஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
- தாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே.
- வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னாரோ
- இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
- பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
- செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.
- தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ
- பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ
- திணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ
- பிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே.
- தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
- கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
- தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
- நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமோ.
- நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
- சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
- நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
- வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.
- மணியே கலாப மலைமேல் அமர்ந்த மதியே நினைச்சொல் மலரால்
- அணியேன் நல்அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
- பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்த படியே
- எணியே நினைக்கில் அவமாம்இவ் வேழை எதுபற்றி உய்வ தரசே.
- உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
- பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்
- மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
- கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.
- இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கி இழுதென்ன நெஞ்சம் இளகேன்
- மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட் டலங்கல் அணியேன்
- குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
- நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே.
- அவம்நாள் கழிக்க அறிவேன் அலாதுன் அடிபேணி நிற்க அறியேன்
- தவம்நாடும் அன்ப ரொடுசேர வந்து தணிகா சலத்தை அடையேன்
- எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும் இடம்ஈயில் உன்றன் அடியார்
- இவன்ஆர் இவன்றன் இயல்பென்ன என்னில் எவன்என் றுரைப்பை எனையே.
- எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய்
- நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன்
- தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே
- வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்ந்த அமுதே.
- முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
- மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
- விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
- இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.
- காமாந்த காரியாய் மாதர் அல்குல்
- கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
- நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
- நாயகமா மணியேநல் நலமே உன்றன்
- பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
- பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
- ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
- ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
- செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
- தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
- கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
- கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
- எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
- அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
- செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
- திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
- நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
- நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
- எம்பாத கத்தைஎடுத் தியார்க்குச் சொல்வேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
- பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
- கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
- கைகுவியேன் மெய்குளிரேன் கண்ர் பாயேன்
- உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
- உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
- எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
- திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
- தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
- கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
- எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
- சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்
- கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
- திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
- அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
- கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
- சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
- ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
- காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
- நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
- கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
- காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்
- சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே
- எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்
- கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
- தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
- திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
- கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
- வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
- உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
- கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
- விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
- நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
- கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
- ஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ
- தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
- மருங்கமர்ந் தன்பருள் மன்னும் வாழ்வையே.
- வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
- வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
- தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
- திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
- ஊன்பிறந்த உடல்ஓம்பி அவமே வாழ்நாள்
- ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
- ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
- மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
- உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
- ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
- பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
- புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
- ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
- யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
- பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்
- புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
- கல்லாத பாவிஎன்று கைவிட் டாயோ
- கருணைஉரு வாகியசெங் கரும்மே மேரு
- வில்லான்தன் செல்வமே தணிகை மேவும்
- மெய்ஞ்ஞான ஒளியேஇவ் வினையேன் துன்பம்
- எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
- திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே.
- விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
- வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
- தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
- சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
- படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
- பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
- இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
- வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
- பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
- பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
- பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
- போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
- என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வஞ்சமட மாதரார் போகம் என்னும்
- மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
- கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
- காணாத செங்கனியில் கனிந்த தேனே
- தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
- தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
- எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மக்கட் பிறவி எடுத்தும்உனை வழுத்தாக் கொடிய மரம்அனையேன்
- துக்கக் கடலில் வீழ்ந்துமனம் சோர்கின் றேன்ஓர் துணைகாணேன்
- செக்கர்ப் பொருவு வடிவேற்கைத் தேவே தெவிட்டாத் தெள்ளமுதே
- முக்கட் கரும்பின் முழுமுத்தே முறையோ முறையோ முறையேயோ.
- அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
- துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
- என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
- முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
- அருகா மலத்தின் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
- உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
- பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
- முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
- பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
- கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
- மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
- முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
- அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
- எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
- முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- ஈனத் திவறும் மனக்கொடியோர் இடம்போய் மெலிந்து நாள்தோறும்
- ஞானத் திருத்தாள் துணைசிறிதும் நாடேன் இனிஓர் துணைகாணேன்
- தானத் தறுகண் மலைஉரியின் சட்டை புனைந்தோன் தரும்பேறே
- மோனத் தவர்த்ம் அகவிளக்கே முறையோ முறையோ முறையேயோ.
- தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
- கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
- மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
- மூவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.
- வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
- கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
- அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
- முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கனையேன்
- மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
- பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- கஞ்சன் மால்புகழ் கருணையங் கடலே
- கண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே
- அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
- அண்ண லேதணி காசலத் தரசே
- மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய
- வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
- பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
- மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
- செய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த
- செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
- துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
- துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
- பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- நட்டம் ஆடிய நாயகன் அளித்த
- நல்ல மாணிக்க நாயக மணியே
- மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
- வள்ள லேமயில் வாகனத் தேவே
- தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
- தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
- பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்
- சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே
- ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த
- உண்மை யேஎனக் குற்றிடும் துணையே.
- மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
- மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
- பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பித்த நாயகன் அருள்திருப் பேறே
- பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
- தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
- சலத்தின் மேவிய தற்பர ஒளியே.
- தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
- மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
- யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
- தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.
- தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
- நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
- பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
- சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே.
- மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
- மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
- சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
- பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
- அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
- மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
- சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
- முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.
- சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமும்ஓர்
- நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
- இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
- கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.
- போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
- புண்ணிய நின்திரு அடிக்கே
- யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
- யாதுநின் திருஉளம் அறியேன்
- தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
- செய்திடா திருப்பையோ சிறியோன்
- ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
- ஈவையோ தணிகைவாழ் இறையே.
- கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
- திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
- விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
- தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.
- எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
- அப்பாஉன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
- வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
- திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே.
- குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
- கோதையர் பால்விரைந் தோடிச்
- சென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்
- திருவடிக் காக்கும்நாள் உளதோ
- என்தனி உயிரே என்னுடைப் பொருளே
- என்உளத் திணிதெழும் இன்பே
- மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
- வந்தமர்ந் தருள்செயும் மணியே.
- மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
- வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
- கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
- கழலடிக் காக்கும்நாள் உளதோ
- குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
- குறிகுணங் கடந்ததோர் நெறியே
- எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
- எந்தையே தணிகைஎம் இறையே.
- இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்
- இலைநெடு வேற்கணார் அளகச்
- சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்
- திருவடிக் காக்கும்நாள் உளதோ
- மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
- வள்ளலே உள்ளகப் பொருளே
- அறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
- அணிதிருத் தணிகைவாழ் அரைசே.
- அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
- அலர்முலை அணங்கனார் அல்குல்
- புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
- பாலனே வேலுடை யவனே
- விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
- வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
- விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
- விம்முறும் இளமுலை மடவார்
- களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
- கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
- அளக்கருங் கருணை வாரியே ஞான
- அமுதமே ஆனந்தப் பெருக்கே
- கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
- கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
- திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
- கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
- கழல்வழி நடத்தும்நாள் உளதோ
- மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
- வண்புனத் தடைந்திட்ட மணியே
- வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
- மாமலை அமர்ந்தருள் மருந்தே.
- மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
- வாணுதல் மங்கையர் இடத்தில்
- பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
- ஆனந்தத் தேறலே அமுதே
- இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
- இனிதமர்ந் தருளிய இன்பே.
- இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
- ஏந்திழை யவர்புழுக் குழியில்
- துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
- துணையடிக் காக்கும்நாள் உளதோ
- அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
- அரிஅயன் பணிபெரி யவனே
- வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
- மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
- வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
- வலித்திடும் மங்கையர் தம்பால்
- தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
- தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
- சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
- தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
- ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
- உதவுசீர் அருட்பெருங் குன்றே.
- கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
- கடையனேன் முடிமிசை அமர்த்தி
- உற்றஇவ் வுலக மயக்கற மெய்மை
- உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
- நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
- நல்அருட் சோதியே நவைதீர்
- கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
- நாயினும் கடையஇந் நாய்க்குன்
- சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
- தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
- ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
- அருள்பழுத் தளிந்தசெங் கனியே
- கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
- மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
- ஒருவரும் நினது திருவடிப் புகழை
- உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
- அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
- அரும்பெறல் செல்வமே அமுதே
- குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
- றலைந்திடும் பாவியேன் இயற்றும்
- பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
- பாதுகாத் தளிப்பதுன் பரமே
- மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
- முத்தமே முக்தியின் முதலே
- கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
- வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
- துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
- துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
- அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
- அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
- கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
- சடையார் விடையார் தனிஆனார்
- உகமா ருடையார் உமைஓர் புடையார்
- உதவும் உரிமைத் திருமகனார்
- முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
- எனவே எனது முன்வந்தார்
- அகமா ருடையேன் பதியா தென்றேன்
- அலைவாய் என்றார் அஃதென்னே.
- விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
- விதிமால் அறியா விமலனார்
- மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
- மகனார் குகனார் மயில்ஊர்வார்
- முதுவாழ் வடையா தவமே அலைவேன்
- முன்வந் திடயான் அறியாதே
- புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
- நின்றேன் அந்தோ பொல்லேனே.
- கல்லால் அடியார் கல்லடி உண்டார்
- கண்டார் உலகங் களைவேதம்
- செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- எல்லாம் உடையார் தணிகா சலனார்
- என்நா யகனார் இயல்வேலார்
- நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின்
- நண்ணார் மயில்மேல் நடந்தாரே.
- காரூர் சடையார் கனலார் மழுவார்
- கலவார் புரமூன் றெரிசெய்தார்
- ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
- அரனார் அருமைத் திருமகனார்
- போரூர் உறைவார் தணிகா சலனார்
- புதியார் எனஎன் முனம்வந்தார்
- ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
- எளியேன் ஏமாந் திருந்தேனே.
- மழுவார் தருகைப் பெருமான் மகனார்
- மயில்வா கனனார் அயில்வேலார்
- தழுவார் வினையைத் தணியார் அணியார்
- தணிகா சலனார் தம்பாதம்
- தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
- துதியா நிற்பார் அவர்நிற்கப்
- புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
- தருள்தந் தருளிப் போனாரே.
- வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
- மெய்யனை ஐயனை உலக
- மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
- மாணிக்க மணியினை மயில்மேல்
- கால்கொளும் குகனை எந்தையை எனது
- கருத்தனை அயன்அரி அறியாச்
- சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- கண்ணனை அயனை விண்ணவர் கோனைக்
- காக்கவைத் திட்டவேற் கரனைப்
- பண்ணனை அடியர் பாடலுக் கருளும்
- பதியினை மதிகொள்தண் அருளாம்
- வண்ணனை எல்லா வண்ணமும் உடைய
- வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத்
- தண்ணனை எனது கண்ணனை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
- என்னுடைப் பொருளினை எளியேன்
- மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
- மணியினை அணியினை வரத்தை
- மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
- மிளிர்அருள் தருவினை அடியேன்
- தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
- பராபரஞ் சுடரினை எளியேற்
- கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
- எண்ணுதற் கரியபேர் இன்பை
- உரங்கிளர் வானோர்க் கொருதனி முதலை
- ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
- தரங்கிளர் அருண கிரிக்கருள் பவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
- அன்பினுக் கெளிவரும் அரசை
- விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
- விளக்கினை அளக்கரும் பொருளைக்
- கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
- முனிந்திடா தருள்அருட் கடலைத்
- தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
- விமலனை அமலனை அற்பர்
- போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
- பூதனை மாதவர் புகழும்
- பாதனை உமையாள் பாலனை எங்கள்
- பரமனை மகிழ்விக்கும் பரனைத்
- தாதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- முத்தனை முத்திக் கொருதனி வித்தை
- முதல்வனை முருகனை முக்கண்
- பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
- பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
- சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
- துரியனைத் துரியமும் கடந்த
- சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்
- வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
- கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்
- கருத்தனைக் கருதும்ஆ னந்த
- வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
- விருப்புறு பொருப்பனை வினையைத்
- தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
- மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
- துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
- மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே.
- கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
- ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
- மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
- ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
- எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
- ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
- வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
- அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- கல்லை ஒத்தஎன் நெஞ்சினை உருக்கேன்
- கடவுள் நின்அடி கண்டிட விழையேன்
- அல்லை ஒத்தகோ தையர்க்குளங் குழைவேன்
- அன்பி லாரொடும் அமர்ந்தவம் உழல்வேன்
- தில்லை அப்பன்என் றுலகெடுத் தேத்தும்
- சிவபி ரான்தருஞ் செல்வநின் தணிகை
- எல்லை உற்றுனை ஏத்திநின் றாடேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
- மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
- ஐய நின்திரு அடித்துணை மறவா
- அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
- உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
- உடைய நாயகன் உதவிய பேறே
- எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- நச்சி லேபழ கியகருங் கண்ணார்
- நலத்தை வேட்டுநற் புலத்தினை இழந்தேன்
- பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன்
- பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன்
- சச்சி12 லேசிவன் அளித்திடும் மணியே
- தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
- எச்சி லேவிழைந் திடர்உறு கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பட்டி மாடெனத் திரிதரும் மடவார்
- பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
- தட்டி லார்புகழ் தணிகையை அடையேன்
- சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே
- ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்
- உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்
- எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்
- உவர்ப்புக் கேணியில் உழைத்தகம் இளைத்தேன்
- வீங்கி நீண்டதோர் ஓதிஎன நின்றேன்
- விழலுக் கேஇறைத் தலைந்தனன் வீணே
- தாங்கி னேன்உடற் சுமைதனைச் சிவனார்
- தனய நின்திருத் தணிகையை அடையேன்
- ஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
- மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
- நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற
- தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.
- வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
- ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
- நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
- நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.
- ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
- என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
- நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
- கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.
- மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்
- நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே
- மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்
- ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே.
- செங்கண்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார்
- எங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார்
- அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்
- இங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
- கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
- புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
- புத்தமுதே ஆனந்த போக மேஉள்
- எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
- என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
- திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
- கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
- காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
- ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
- உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
- இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
- ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
- செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
- என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
- மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
- மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
- இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
- எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
- சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
- கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
- பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
- புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
- உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
- உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
- சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
- நாயகனே வடிவேற்கை நாத னேநான்
- கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
- குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
- சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
- சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
- சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
- கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
- சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
- துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
- அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
- ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
- சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
- கலகம் தருசூர்க் கிளைகளைந்த கதிர்வேல் அரசே கவின்தருசீர்த்
- திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல்அதனால்
- இலகும் கலப மயிற்பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே.
- புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
- மிகுவான் முதலாம் பூதம்எலாம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
- தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
- நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.
- ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
- காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
- நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
- போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.
- வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
- நலத்தால்உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
- தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
- மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.
- இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே
- அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே
- வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன்
- துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே.
- சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
- அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
- இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
- முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
- ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
- வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
- சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
- நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே.
- அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
- அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
- கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
- கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
- படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
- பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்
- தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
- நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
- சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
- செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
- பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
- போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
- தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
- பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
- மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
- வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
- அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
- ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
- சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
- மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
- அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
- அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
- துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
- தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
- தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
- மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
- ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
- அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
- வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
- வேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
- சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
- அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
- இலகுசிற் பரகுக என்று நீறிடில்
- கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே.
- மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
- இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
- தெருளுறு நீற்றினைச் சிவஎன் றுட்கொளில்
- அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.
- மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
- வெறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
- நெறிசிவ சண்முக என்று நீறிடில்
- முறிகொளீஇ நின்றஉன் மூடம் தீருமே.
- சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
- மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
- நிதிசிவ சண்முக என்று நீறிடில்
- வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே.
- பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
- வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
- இசைசிவ சண்முக என்று நீறிடில்
- திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே.
- யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
- தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
- காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
- தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்தசை அறும்என்பைக்
- கறிக்கும் நாயினும் கடையநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
- தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
- கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
- தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- தேடுங் கிளிநீ நின்னை விளம்பித் திருஅன்னார்
- அடுந் தணிகையில் என்உயிர் அன்னார் அருகேபோய்க்
- கூடும் தனமிசை என்பெயர் வைத்தக் கோதைக்கே
- ஈடும் கெடஇன் றென்னையும் ஈந்தருள் என்பாயே.
- தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
- பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
- மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
- அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
- பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி
- கையனேன் தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
- மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி
- ஐயனே அப்ப னேஎம் அரசனே போற்றி போற்றி
- முருகா சரணம் சரணம்என் றுன்பதம் முன்னிஉள்ளம்
- உருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ
- அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்றன்
- மருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே.
- உலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத்
- திலகம் திகழிடத்துத் தேவே-இலகுதிருப்
- புள்ளிருக்கு வேளுர்ப் புனிதா அடியேன்றன்
- உள்ளிருக்கும் துன்பை ஒழி.
- திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
- பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்
- வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்
- குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- பெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்
- நாயேன்றன் பிழைகள் எல்லாம்
- எண்குணப்பொற் குன்றேநின் திருஉளத்தில்
- சிறிதேனும் எண்ணேல் கண்டாய்
- பண்குணத்தில் சிறந்திடும்நின் பத்தர்தமைப்
- புரப்பதுபோல் பாவி யேனை
- வண்குணத்தில் புரத்தியிலை யேனும்எனைக்
- கைவிடேல் வடிவே லோனே.
- தேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்
- கோனே குருவே குலமே குணமே குகனேயோ
- வானே வளியே அனலே புனலே மலையேஎன்
- ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
- வன்குலஞ் சேர்கடன் மாமுதல் வேர்அற மாட்டிவண்மை
- நன்குலஞ் சேர்விண் நகர்அளித் தோய்அன்று நண்ணிஎன்னை
- நின்குலஞ் சேர்த்தனை இன்றுவி டேல்உளம் நேர்ந்துகொண்டு
- பின்குலம் பேசுகின் றாரும்உண் டோஇப் பெருநிலத்தே.
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- சிந்தைக் கும்வழி இல்லைஉன் தன்மையைத்
- தெரிதற் கென்னும் திருத்தணி கேசனே
- உந்தைக் கும்வழி இல்லைஎன் றால்இந்த
- உலகில் யாவர் உனைஅன்றி நீர்மொள்ள
- மொந்தைக் கும்வழி இல்லை வரத்திரு
- முண்டைக் கும்வழி இல்லை அரையில்சாண்
- கந்தைக் கும்வழி இல்லை அரகர
- கஞ்சிக் கும்வழி இல்லைஇங் கையனே.
- ஓரிரண்டா நற்றணிகை உத்தமன்றன் ஓங்கற்றோள்
- தாரிரண்டார் போனின்ற தையன்மீர்-வாரிரண்டாத்
- தொய்யி லழிக்குந் துணைமுலையா ளுள்ளகத்தா
- மைய லழிக்கு மருந்து.
- திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
- திறலோங்கு செல்வம்ஓங்கச்
- செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
- திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
- மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
- வளர்கருணை மயம்ஓங்கிஓர்
- வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
- வடிவாகி ஓங்கிஞான
- உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
- ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
- உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
- உய்கின்ற நாள்எந்தநாள்
- தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
- பசுஏது பாசம்ஏது
- பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
- பாவபுண் யங்கள்ஏது
- வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
- மனம்விரும் புணவுண்டுநல்
- வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
- மலர்சூடி விளையாடிமேல்
- கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
- கலந்துமகிழ் கின்றசுகமே
- கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
- கயவரைக் கூடாதருள்
- தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
- துணைஎனும் பிணையல்அளகம்
- சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
- சுழிஎன்ன மொழிசெய்உந்தி
- வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
- மங்கையர்தம் அங்கம்உற்றே
- மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
- மாழ்கநான் வாழ்கஇந்தப்
- படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
- படிஎன்ன அறியாதுநின்
- படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
- படிஎன்னும் என்செய்குவேன்
- தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
- மதித்திடுவ தன்றிமற்றை
- வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
- மாட்டினும் மறந்தும்மதியேன்
- கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
- கடவுளர் பதத்தைஅவர்என்
- கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
- கடுஎன வெறுத்துநிற்பேன்
- எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
- என்னை ஆண் டருள்புரிகுவாய்
- என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
- என்றன்அறி வேஎன்அன்பே
- தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
- பசுகரணம் ஈங்கசுத்த
- பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
- பதியோக நிலைமைஅதனான்
- மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
- மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
- வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
- வந்துணர்வு தந்தகுருவே
- துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
- துரிசறு சுயஞ்சோதியே
- தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
- சொல்லரிய நல்லதுணையே
- ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
- உத்தமர்தம் உறவுவேண்டும்
- உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
- உறவுகல வாமைவேண்டும்
- பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
- பேசா திருக்க்வேண்டும்
- பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
- பிடியா திருக்கவேண்டும்
- மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
- மறவா திருக்கவேண்டும்
- மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
- வாழ்வில்நான் வாழவேண்டும்
- தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
- இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
- திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
- இடுகின்ற திறமும்இறையாம்
- நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
- நினைவிடா நெறியும்அயலார்
- நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
- நெகிழாத திடமும்உலகில்
- சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
- தீங்குசொல் லாததெளிவும்
- திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
- திருவடிக் காளாக்குவாய்
- தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
- கதறுவார் கள்ளுண்டதீக்
- கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
- கடும்பொய்இரு காதம்நாற
- வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
- மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
- மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
- வழக்குநல் வழக்கெனினும்நான்
- உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
- ரோடுறவு பெறஅருளுவாய்
- உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
- உவப்புறு குணக்குன்றமே
- தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
- நன்மைதீ மைகளும் இல்லை
- நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
- நடுநின்ற தென்றுவீணாள்
- போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
- போதிப்பர் சாதிப்பர்தாம்
- புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
- போந்திடில் போகவிடுவார்
- சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
- தாம்புபாம் பெனும்அறிவுகாண்
- சத்துவ அகண்டபரிபுரண காரஉப
- சாந்தசிவ சிற்பிரம நீ
- தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
- பார்முகம் பார்த்திரங்கும்
- பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
- பதியும்நல் நிதியும்உணர்வும்
- சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
- தீமைஒரு சற்றும்அணுகாத்
- திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
- செப்புகின் றோர்அடைவர்காண்
- கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
- þக்‘ழியங் கொடியும்விண்ணோர்
- கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
- கொண்டநின் கோலமறவேன்
- தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
- வானைஒரு மான்தாவுமோ
- வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
- மலையைஓர் ஈச்சிறகினால்
- துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
- துரும்பினால் துண்டமாமோ
- சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
- தோயுமோ இல்லைஅதுபோல்
- அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
- அடிமலர் முடிக்கணிந்தோர்க்
- கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
- தற்பமும்வி கற்பம்உறுமோ
- தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
- காண்உறு கயிற்றில் அறவும்
- கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
- கதித்தபித் தளையின்இடையும்
- மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
- மாயையில் கண்டுவிணே
- மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
- வாள்வென்றும் மானம்என்றும்
- ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
- உள்என்றும் வெளிஎன்றும்வான்
- உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
- உண்மைஅறி வித்தகுருவே
- தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
- கன்மவுட லில்பருவம்நேர்
- கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
- கடல்நீர்கொ லோகபடமோ
- உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
- ஒருவிலோ நீர்க்குமிழியோ
- உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
- உன்றும்அறி யேன் இதனைநான்
- பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
- பட்டுமதி கெட்டுழன்றே
- பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
- பற்றணுவும் உற்றறிகிலேன்
- சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
- உற்றசும் பொழுகும்உடலை
- உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
- உற்றிழியும் அருவிஎன்றும்
- வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
- மின்என்றும் வீசுகாற்றின்
- மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
- வெறுமாய வேடம்என்றும்
- கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
- கனவென்றும் நீரில்எழுதும்
- கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
- கைவிடேன் என்செய்குவேன்
- தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
- ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
- எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
- இகழ்விற கெடுக்கும்தலை
- கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
- கலநீர் சொரிந்தஅழுகண்
- கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
- கைத்திழவு கேட்கும்செவி
- பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
- பகீர்என நடுங்கும்நெஞ்சம்
- பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
- பலிஏற்க நீள்கொடுங்கை
- சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
- அழுதுண் டுவந்ததிருவாய்
- அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
- அணிந்தோங்கி வாழுந்தலை
- மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
- மிக்கஒளி மேவுகண்கள்
- வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
- விழாச்சுபம் கேட்கும்செவி
- துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
- சுகரூப மானநெஞ்சம்
- தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
- சுவர்ன்னமிடு கின்றகைகள்
- சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
- ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
- உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
- ஒதிபோல் வளர்த்துநாளும்
- விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
- வெய்யஉடல் பொய்என்கிலேன்
- வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
- விதிமயக் கோஅறிகிலேன்
- கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
- கருணையை விழைந்துகொண்டெம்
- களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
- கண்ணேஎ னப்புகழ்கிலேன்
- தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
- வாழ்க்கைஅபி மானம்எங்கே
- மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
- மன்னன்அர சாட்சிஎங்கே
- ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
- நான்முகன் செய்கைஎங்கே
- நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
- நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
- ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
- இலக்கம்உறு சிங்கமுகனை
- எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
- ஈந்துபணி கொண்டிலைஎனில்
- தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
- மதித்திடான் நின் அடிச்சீர்
- மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
- மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
- சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
- சிறுகுகையி னூடுபுகுவான்
- செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
- செய்குன்றில் ஏறிவிழுவான்
- இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
- இறங்குவான் சிறிதும்அந்தோ
- என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
- கேழையேன் என்செய்குவேன்
- தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
- வள்ளல்உன் சேவடிக்கண்
- மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
- வாய்ந்துழலும் எனதுமனது
- பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
- பித்துண்ட வன்குரங்கோ
- பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
- பேதைவிளை யாடுபந்தோ
- காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
- காற்றினாற் சுழல்கறங்கோ
- காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
- கர்மவடி வோஅறிகிலேன்
- தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
- கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
- கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
- கருதிலேன் நல்லன்அல்லேன்
- குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
- குற்றம்எல் லாம்குணம்எனக்
- கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
- குறைதவிர்த் தருள்புரிகுவாய்
- பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
- பெற்றெழுந் தோங்குசுடரே
- பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
- பேதமில் பரப்பிரமமே
- தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
- தேவரைச் சிந்தைசெய்வோர்
- செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
- சிறுகருங் காக்கைநிகர்வார்
- நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
- நற்புகழ் வழுத்தாதபேர்
- நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
- நவையுடைப் பேயர் ஆவார்
- நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
- நின்றுமற் றேவல்புரிவோர்
- நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
- நெடியவெறு வீணராவார்
- தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
- பெய்சிறையில் இன்னும்ஒருகால்
- பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
- பெறுந்துயர் மறந்துவிடுமோ
- இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
- இறப்பிக்க எண்ணம்உறுமோ
- எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
- இருந்தவடு எண்ணுறானோ
- கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
- காசுக்கும் மதியேன்எலாம்
- கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
- கலந்திடப் பெற்றுநின்றேன்
- தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
- நிலன்உண்டு பலனும்உண்டு
- நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
- நெறிஉண்டு நிலையும் உண்டு
- ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
- உடைஉண்டு கொடையும்உண்டு
- உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
- உளம்உண்டு வளமும்உண்டு
- தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
- செல்வங்கள் யாவும்உண்டு
- தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
- தியானமுண் டாயில்அரசே
- தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
- ஒல்லைவிட் டிடவுமில்லை
- உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
- உனைஅன்றி வேறும்இல்லை
- இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
- இசைக்கின்ற பேரும்இல்லை
- ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
- றியம்புகின் றோரும்இல்லை
- வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
- மற்றொரு வழக்கும்இல்லை
- வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
- வன்மனத் தவனும்அல்லை
- தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
- நாடாமை ஆகும்இந்த
- நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
- நாய்வந்து கவ்விஅந்தோ
- தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
- தளராமை என்னும்ஒருகைத்
- தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
- தன்முகம் பார்த்தருளுவாய்
- வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
- மழையே மழைக்கொண்டலே
- வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
- மயில்ஏறு மாணிக்கமே
- தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பண்ணேர் மறையின் பயனே சரணம்
- பதியே பரமே சரணம் சரணம்
- விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
- வெளியின் விளைவே சரணம் சரணம்
- உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
- உருவே அருவே உறவே சரணம்
- கண்ணே மணியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- நங்கட் கிளியாய் சரணம் சரணம்
- நந்தா உயர்சம் பந்தா சரணம்
- திங்கட் சடையான் மகனே சரணம்
- சிவைதந் தருளும் புதல்வா சரணம்
- துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
- சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
- கங்கைக் கொருமா மதலாய் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தே னந்தோ காலமெலாம்
- அல்ல லகற்றிப் பெரியோரை யடுத்து மறியேன் அரும்பாவி
- செல்லத் தணிகைத் திருமலைவாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
- வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே.
- பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும்
- பாவிகள் தம்மை அடையாண்டி
- என்னிரு கண்கள் அனையாண்டி - அவன்
- ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.
- சச்சிதா னந்த உருவாண்டி - பர
- தற்பர போகந் தருவாண்டி
- உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
- உத்தம தேவனைப் பாடுங்கடி.
- சைவந் தழைக்கத் தழைத்தாண்டி -ஞான
- சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
- பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
- புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.
- வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
- வாசியில் இங்கே வருவாண்டி
- ஆசில் கருணை உருவாண்டி - அவன்
- அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.
- இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
- இன்ப உளங்கொள் நடத்தாண்டி
- அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த
- அண்ணலைப் பாடி அடியுங்கடி.
- ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
- ஒன்றிரண் டாகா அளவாண்டி
- மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
- மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.
- சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
- சண்முக நாதரே வாரும்
- உண்மை வினோதரே வாரும்.
- அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
- ஆறுமுகத் தோரே வாரும்
- மாறில்அகத் தோரே வாரும்.
- மன்றாடும் மாமணியே நின்பொற் பாத
- மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு
- ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்
- ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்
- இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்
- இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்
- என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்
- எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.
- சோறு வேண்டினும் துகிலணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர்
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார்
- அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றேன்
- எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன்
- உட்டா வகற்று மந்தணர்க ளுறையூர் மாதே யுணரென்றார்
- அட்டார் புரங்க ளென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
- உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ ருருவு மன்றங் கருவென்றார்
- அளஞ்சேர் வடிவா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
- முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
- சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றார்
- அகஞ்சேர் விழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- துய்ய வதன்மேற் றலைவைத்துச் சொன்னாற் சொல்வே மிரண்டென்றார்
- உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே னுலகி லெவர்க்கு மாமென்றார்
- ஐய விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வண்மை தருவீ ரொற்றிநின்று வருவீ ரென்னை மருவீர்நீர்
- உண்மை யுடையீ ரென்றேனா முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார்
- கண்மை யுடையீ ரென்றேனீ களமை யுடையேம் யாமென்றார்
- தண்மை யருளீ ரென்றேனாந் தகையே யருள்வ தென்றாரே.
- கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்
- கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
- மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்
- மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
- தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்
- தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
- நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்
- நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.
- பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
- போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
- என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
- என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
- பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
- பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
- உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
- ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
- கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
- கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
- எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
- இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
- பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
- புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
- அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
- ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
- மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
- மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
- ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
- அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
- பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
- புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
- மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
- வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.
- கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்
- குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்
- ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ
- அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்
- ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்
- ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்
- சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்
- திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.
- மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
- கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
- ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
- வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.
- இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
- களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
- துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
- விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்தம் கடைதொறும்ஓடி
- அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன் அகமலர்ந் தருளுதல் வேண்டும்
- நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே நலந்தரு நசைமணிக் கோவை
- இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- விருந்தினர் தம்மை உபசரித் திடவும் விரவுறும் உறவினர் மகிழத்
- திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும் சிறியனேற் கருளுதல் வேண்டும்
- வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை வாரியே வடிவுறு மயிலே
- இருந்திசை புகழும் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- மனமெலி யாமல் பிணியடை யாமல் வஞ்சகர் தமைமரு வாமல்
- சினநிலை யாமல் உடல்சலி யாமல் சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
- அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
- இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
- உந்தியே வைகுந்தம்மேல்
- ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
- ஊறலே அமுதம்அவர்தம்
- பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
- பார்வையே கருணைநோக்கம்
- பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
- பரமசுக மாகும்இந்த
- யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
- உறுசுவைப் பழம்எறிந்தே
- உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
- லோரைநிந் திப்பர்அவர்தம்
- வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
- உற்றறிய மாட்டார்களாய்
- உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
- டுறுபிறவி உண்டுதுன்பத்
- தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
- சொர்க்கமுண் டிவையும்அன்றித்
- தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
- துர்ப்புத்தி யால்உலகிலே
- கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
- கொங்கையும் வெறுத்துக்கையில்
- கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
- கொள்ளுவீர் என்பர்அந்த
- வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
- உரைத்தவாய் மைகளைநாடி
- ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
- ஒதிபோல நிற்பதுமலால்
- கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
- காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
- கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
- கலங்கொள்ள வேண்டும்என்பர்
- இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
- இவர்க்கேது தெரியும்என்பர்
- இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
- இட்டகட் டென்பர்அந்த
- வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
- தியங்குவீர் அழியாச்சுகம்
- சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
- சேரவா ருங்கள்என்றால்
- இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
- இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
- இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
- இறுகப்பி டித்தணைக்கப்
- பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
- பெண்ணகப் படுமாகிலோ
- பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
- பிறகிதோ வருவம்என்பார்
- வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
- பேச்சிவை எலாம்வேதனாம்
- பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
- பெரும்புரட் டாகும்அல்லால்
- ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
- ஒருசிறிதும் இல்லைஇல்லை
- உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
- உலர்ந்தீர்கள் இனியாகினும்
- மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
- விரைமலர்த் தொடைஆதியா
- வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
- விளையாடு வீர்கள்என்பார்
- வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
- எண்ணிநல் லோர்கள்ஒருபால்
- இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ர்
- இறைப்பஅது கண்டுநின்று
- ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
- நம்உலகில் ஒருவர்அலவே
- ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
- நகைப்பர்சும் மாஅழுகிலோ
- ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
- உயர்பெண்டு சாக்கொடுத்த
- ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
- உளறுவார் வாய்அடங்க
- மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
- காண்பதே அருமைஅருமை
- கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
- கருணையால் அவர்வலியவந்
- திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
- தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
- கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
- ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
- பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
- புல்லாதி உணும்உயிர்களும்
- போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
- புறச்சுவர் எனப்புகலலாம்
- வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
- விளம்பஎனில் இவ்வுலகிலோ
- மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
- மேவுமண் ணெனினும்உதவக்
- கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
- களவுகட் காமம்முதலாக்
- கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
- கனவிலும் கண்டறிகிலார்
- ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
- அங்கைதாங் கங்கைஎன்னும்
- ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
- வசுத்தநீங் காதுகண்டாய்
- மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
- இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
- ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
- இலங்குமர மியஅணையுமாய்த்
- தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
- தழைத்திடு நிலாக்காலமாய்த்
- தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
- தன்னிசைப் பாடல்இடமாய்
- களவேக லந்தகற் புடையமட வரல்புடை
- கலந்தநய வார்த்தைஉடனாய்க்
- களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
- கழல்நிழற் சுகநிகருமே
- வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.
- வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத்
- தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
- ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
- ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே.
- இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை
- வளைத்த மதின்மூன் றெரித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத்
- திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழுந் துரியா தீதமட்டுங்
- கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே.
- என்னார் உயிரிற் கலந்துகலந் தினிக்கும் கரும்பின் கட்டிதனைப்
- பொன்னார் வேணிக் கொழுங்கனியைப் புனிதர்உளத்தில் புகுங் களிப்பைக்
- கன்னார் உரித்துப் பணிகொண்ட கருணைப் பெருக்கைக் கலைத்தெளிவைப்
- பன்னா கப்பூண் அணிமலையைப் பழைய மலையிற் கண்டேனே.
- ஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை
- ஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்
- பாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
- சோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.
- சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
- சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
- தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
- சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
- ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
- அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
- பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
- பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
- ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
- மின்திரண்டு நின்றசடை மேல்.
- உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
- துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
- பிரிய நாயகி பேரருள் நாயகி
- பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம்.
- உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க
- உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
- திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே
- சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
- வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன
- வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
- அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்
- ஒளிபெற விளங்குசுடரே
- உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ
- யோகநிலை அருளுமலையே
- உனதுசெயல் எனதுசெயல் உனதுடைமை எனதுடைமை
- உணர்என உணர்த்துநிறைவே
- உளஎனவும் இலஎனவும் உரைஉபய வசனம்அற
- ஒருமொழியை உதவுநிதியே
- உன்னல்அற உன்னுநிலை இன்னதென என்னுடைய
- உள்உணர உள்ளுமதியே
- உன்நிலையும் என்நிலையும் அன்னியம்இ லைச்சிறிதும்
- உற்றறிதி என்றபொருளே
- உண்மைநெறி அண்மைதனில் உண்டுளம்ஒ ருங்கில்என
- ஓதுமெய்ப் போதநெறியே
- அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
- அறிவித்த சுத்தஅறிவே
- யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தென்னோடு
- இருத்திஎன உரைசெய்அரைசே
- என்களைக ணேஎனது கண்ணேஎன் இருகண்
- இலங்குமணி யேஎன்உயிரே
- என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
- இருந்தசிவ மேஎன் அன்பே
- என்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று
- எடுத்ததா யேஎன்உறவே
- கலகமனம் உடையஎன் பிழைபொறுத் தாட்கொண்ட
- கருணையங் கடல்அமுதமே
- கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
- களித்துமெய்ப் போதம்உண்டு
- கவினுற விளங்குநற் பணிகள்சிவ புண்ணியக்
- கதிஉல கறிந்துய்யவே
- நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே
- நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
- அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி
- அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
- இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே
- இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே
- தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
- ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
- இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
- என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
- நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
- நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
- திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு
- கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட் புறங்கண்டு களிக்கின் றோய்நின்
- உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடிதெண்டனிட்டே உரைக்கின்றேன்உன்
- கருத்தறியேன் எனினு(முனைக்) கொடு(முயல்வேன் றனை)யன்பால் காக்க அன்றே.
- * அடைப்புக்குள் உள்ளவை மூலத்தில் எழுத்து விளங்கா இடங்களில் ஆ. பா. ஊகித்து அமைத்தசொற்கள்.
- பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
- நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
- மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
- பொய்யகலப் போற்றுவம்இப் போது.
- சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
- ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
- வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
- தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
- தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
- நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
- திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
- கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
- மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
- திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
- கஜமுக குணபதி சரணஞ் சரணம்
- தலைவநின் இணையடி சரணஞ் சரணம்
- சரவண பவகுக சரணஞ் சரணம்
- சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்
- சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
- உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
- உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்.
- ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
- சுத்தமணியே அரியநல்
- துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
- துலங்குமணி யேஉயர்ந்த
- ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
- தானந்த மானமணியே
- சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
- சமரச சுபாவமணியே
- நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
- நினைவிலமர் கடவுண்மணியே
- நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
- நித்யஆ னந்தமணியே
- ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
- கன்புதவும் இன்பமணியே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
- அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
- இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
- என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
- உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
- ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
- திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
- சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே.
- தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே
- இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே
- மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்
- அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே.
- திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
- உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
- குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
- மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே.
- தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட
- குருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப
- உருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்
- திருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே.
- உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
- இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
- கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
- பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்.
- களங்க அக்குணம் கடந்திருத் தலில்குணா தீதன்
- வளங்கொ ளத்தகும் உலகெலாம் மருவிநிற் றலினால்
- விளங்கு விச்சுவ வியாபிஇவ் விசுவத்தை யாண்டு
- துளங்கு றாநலந் தோற்றலின் விச்சுவ கருத்தன்.
- வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
- பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
- ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
- செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர்.
- உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
- சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
- நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
- தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.
- இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்
- இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்
- இரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே
- இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
- உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை
- உள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை
- உன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
- எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை
- உள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
- நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை
- உறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை
- உண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா.
- கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்
- உடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
- பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்
- உத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
- புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
- உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா.
- புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை
- உரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா.
- உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
- மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
- அன்பெனும் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
- அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
- அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
- அன்புரு வாம்பர சிவமே.
- உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
- அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
- உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
- அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
- அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
- உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
- அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
- உபரச வேதியி னுபயமும் பரமும்
- அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- உருவமு மருவமு முபயமு மாகிய
- அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
- அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
- உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
- அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
- உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
- அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
- அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
- அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உறவினி லுறவும் உறவினிற் பகையும்
- அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
- அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- உருவதி லருவும் மருவதி லுருவும்
- அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- உனற்கரு முயிருள வுடலுள வுலகுள
- வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை
- அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- உயிருறு முடலையு முடலுறு முயிரையும்
- அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
- அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்
- அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
- உயலுற விளங்கு மொருதனிப் பொருளே
- அருவினு ளருவா யருவரு வருவாய்
- உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே
- அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
- உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே
- பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
- உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே
- உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
- செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
- பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
- உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
- உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
- உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
- இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
- உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
- உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்
- வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே
- உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
- குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
- செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
- உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
- உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
- பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
- தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
- உளந்தெளி வித்த வொருமைநற் றாயே
- இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
- உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
- மற்றுள வமுத வகையெலா மெனக்கே
- உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
- உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
- யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
- உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
- டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
- துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
- உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
- உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
- இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே
- உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
- வணமுறு மின்ப மயமே யதுவாய்க்
- உள்ளதா யென்று முள்ளதா யென்னுள்
- உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
- அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
- உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
- உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
- அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே
- உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
- மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
- நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
- உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
- உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
- வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
- உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
- துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
- பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
- உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே
- உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
- கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
- உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி
- மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே
- இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
- உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
- இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
- உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
- மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
- உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
- உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
- கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட
- உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
- அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
- கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
- உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
- உய்தர வமுத முதவியென் னுளத்தே
- செய்தவம் பலித்த திருவளர் மதியே
- உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
- வயங்கிய கருணை மழைபொழி மழையே
- உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
- வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
- அலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ
- உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே
- உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
- வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
- உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
- அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
- உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
- இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
- உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
- விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
- சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
- உத்தம னாகுக வோங்குக வென்றனை
- அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
- தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
- அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
- அருட்பெருந் திருவிலே அமர்ந்த
- அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
- அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
- அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
- கருவினால் பகுதியின் கருவால்
- எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
- இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
- விண்முதல் பரையால் பராபர அறிவால்
- விளங்குவ தரிதென உணர்ந்தோர்
- அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
- நண்ணியும் கண்ணுறா தந்தோ
- திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
- திரும்பின எனில்அதன் இயலை
- இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
- இசைத்திடு வேம்என நாவை
- அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- சுத்தவே தாந்த மவுனமோ அலது
- சுத்தசித் தாந்தரா சியமோ
- நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
- நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
- புத்தமு தனைய சமரசத் ததுவோ
- பொருள்இயல் அறிந்திலம் எனவே
- அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
- இயற்கையோ செயற்கையோ சித்தோ
- தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
- திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
- யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
- உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
- ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
- அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
- பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
- பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
- இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
- எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
- சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
- வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
- எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
- இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
- அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
- அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
- திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
- அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
- மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
- மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
- துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
- துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
- உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
- ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
- கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
- கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
- கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
- கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
- ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
- பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
- ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
- இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
- நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
- நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
- ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
- இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
- பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
- பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
- விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
- விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
- உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
- வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
- புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
- புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
- மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
- விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
- உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
- ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
- செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
- திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
- வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
- மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
- உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
- உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
- அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
- ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
- என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
- யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
- ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே
- விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே
- கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே
- பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே.
- ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
- வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே
- வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே
- அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே.
- திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
- உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
- கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
- குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.
- நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
- இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
- திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
- கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.
- அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
- விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
- மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
- பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.
- கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் கலகர்தம் உறவினிற் களித்தேன்
- உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியற் போகமே உவந்தேன்
- செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
- குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கண்மனக் குரங்கனேன் கடையேன்
- நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
- நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
- கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் அறக்கடை யவரினுங் கடையேன்
- இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் இயலுறு நாசியுட் கிளைத்த
- சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
- குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
- கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
- ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
- கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் கறிக்குழல் நாயினும் கடையேன்
- விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்தப்
- புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
- கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
- அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
- குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
- கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
- செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
- சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
- எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
- இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.
- இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
- இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
- அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
- அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
- பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
- பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
- தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
- தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
- ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
- ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
- சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
- செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
- மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
- வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
- வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.
- அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
- டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
- புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
- புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
- பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
- பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
- விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
- பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
- பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
- மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
- வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
- வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
- வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
- தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
- தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
- தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
- பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
- பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
- அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
- ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
- நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.
- இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
- இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
- பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
- புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
- நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
- நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
- கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
- காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
- களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
- நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
- நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
- ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
- அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
- கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
- போக மாதியை விழைந்தனன் வீணில்
- பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
- தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
- சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
- காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
- காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
- ஆக மாதிசொல் அறிவறி வேனோ
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
- விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
- குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
- கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
- வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
- மாய மேபுரி பேயரில் பெரியேன்
- பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
- பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
- மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
- வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
- இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
- ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
- குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
- கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
- சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
- தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
- சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
- ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
- இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
- வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
- வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
- ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
- வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
- வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
- பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
- பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
- கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
- கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
- பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
- புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
- காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
- மான மேலிடச் சாதியே மதமே
- வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
- ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
- இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
- ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
- நாய காஎனை நயந்துகொண் டருளே.
- இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
- இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
- மருளை யேதரு மனக்குரங் கோடும்
- வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
- பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
- பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
- அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
- அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
- நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
- நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
- மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
- சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
- யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
- உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
- ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
- அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
- ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
- கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
- கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
- கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
- மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
- சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
- ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
- ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
- நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
- நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
- ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
- தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
- ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
- அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
- மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
- மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
- திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
- தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
- உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
- ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
- இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
- ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
- மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
- ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.
- முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
- உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
- மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
- கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
- தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
- வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
- சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
- ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
- பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
- கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
- திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
- எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.
- வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
- பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
- நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
- துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
- படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
- கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
- பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
- அடிமேல் அசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.
- நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
- ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
- தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
- மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
- நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
- உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
- வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
- பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.
- இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
- வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
- அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
- துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
- எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
- அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
- இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்
- பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.
- எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
- எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
- வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
- நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.
- போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
- ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக்
- காகமேஎனப்போய்ப்பிறர் தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன்
- மோகமேஉடையேன் என்னினும்எந்தாய் முனிந்திடேல்காத்தருள் எனையே.
- பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
- பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
- ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்அன்பினால்அடுத்தவர்கரங்கள்
- கூப்பினுங்கூப்பாக் கொடுங்கையேன் எனினும் கோபியேல் காத்தருள் எனையே.
- விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
- வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணைஎனமதித்துக்
- கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் கொக்கனேன் செக்கினைப் பலகால்
- இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
- புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
- தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
- உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
- இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் என்னினும் காத்தருள் எனையே.
- கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
- கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
- அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அறவுண்டு குப்பைமேற் போட்ட
- நெட்டிலை அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே.
- நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
- போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில்
- ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
- ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே.
- அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்அசடனேன் அறிவிலேன்உலகில்
- குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் குழியிலே குளித்தவெங் கொடியேன்
- வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனங்கொணட சிறியேனன் மாயைக்
- களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்தருள் எனையே.
- தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
- கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் கலந்துணக் கருதிய கருத்தேன்
- பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும்
- எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
- வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
- சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் தயவிலேன் சூதெலாம் அடைத்த
- பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம்வெறுக் கச்செய்
- எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் என்னினும் காத்தருள் எனையே.
- உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் தோதிய வறிஞருக் கேதும்
- கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் குணம்பெரி துடையநல் லோரை
- அடுத்திலேன் அடுத்தற்காசையும் இல்லேன் அவனிமேல் நல்லவன் எனப்பேர்
- எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் றிருக்கின்றேன் காத்தருள் எனையே.
- சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
- ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
- போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
- சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவிலா தூண்எலாம் மறுத்த
- கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் கருத்துவந் துண்ணுதற் கமையேன்
- நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
- பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.
- உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ
- குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
- கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை
- வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.
- கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்
- நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்
- ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்
- பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
- உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பலகால்
- கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் கட்டிநல் தயிரிலே கலந்த
- தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்
- திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
- சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
- இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
- குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
- வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டிவைத்தலே துவட்டலில்சுவைகள்
- உறுத்தலே முதலா உற்றபல் உணவை ஒருமல வயிற்றுப்பை உள்ளே
- துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் துணிந்தரைக்கணத்தும்வன் பசியைப்
- பொறுத்தலேஅறியேன் மலப்புலைக்கூட்டைப்பொறுத்தனன்என்செய்வேன்எந்தாய்.
- பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்
- உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
- கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
- துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே
- அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே
- தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்
- கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
- செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையும் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
- அச்சமும் அவலமும் உடையேன்
- செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
- திருவுளத் தெனைநினை யாயேல்
- எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
- பிழைபொறுத் தருள்வதுன் கடனே.
- உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
- உடல்பொருள் ஆவியும் உனக்கே
- பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
- பின்னும்நான் தளருதல் அழகோ
- என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
- முறிதல்ஓர் கணம்தரி யேனே.
- தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
- சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
- தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததெந் தாயே
- ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
- அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
- நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
- நடம்புரி ஞானநா டகனே.
- ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
- நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
- ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
- இந்தநாள் அடியனேன் இங்கே
- ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
- உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
- ஏனென வினவா திருத்தலும் அழகோ
- இறையும்நான் தரிக்கலன் இனியே.
- இனியநற் றாயின் இனியஎன் அரசே
- என்னிரு கண்ணினுண் மணியே
- கனிஎன இனிக்கும் கருணையா ரமுதே
- கனகஅம் பலத்துறும் களிப்பே
- துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்
- சோர்வுறு முகமும்கொண் டடியேன்
- தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்
- தந்தநற் றந்தைநீ அலையோ.
- தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
- சாமியும் பூமியும் பொருளும்
- சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
- சுற்றமும் முற்றும்நீ என்றே
- சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததே எந்தாய்
- நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
- நீதியோ நின்அருட் கழகோ.
- அழகனே ஞான அமுதனே என்றன்
- அப்பனே அம்பலத் தரசே
- குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
- கொழுநனே சுத்தசன் மார்க்கக்
- கழகநேர் நின்ற கருணைமா நிதியே
- கடவுளே கடவுளே எனநான்
- பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
- பழங்கணால் அழுங்குதல் அழகோ.
- பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
- பத்தரும் பித்தரும் பிதற்றும்
- கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
- கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
- வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
- மற்றொரு பற்றும்இங் கறியேன்
- சழங்குடை உலகில் தளருதல் அழகோ
- தந்தையுந் தாயும்நீ அலையோ.
- சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
- சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
- நீதியே நிறைநின் திருவருள் அறிய
- நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
- ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
- உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
- ஆதியே நடுவே அந்தமே ஆதி
- நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
- இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
- இயற்கையின் நிறைந்தபே ரின்பே
- அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
- அம்பலத் தாடல்செய் அமுதே
- வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
- வழங்குக நின்அருள் வழங்கல்
- நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
- நான்உயிர் தரிக்கலன் அரசே.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
- புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
- சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
- தூயர்கள் மனம்அது துளங்கித்
- தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
- தனிஅருட் சோதியால் அந்த
- வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
- வழங்குவித் தருளுக விரைந்தே.
- விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
- விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
- கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
- கரைஎலாம் கடந்தது கண்டாய்
- வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
- வல்லவா அம்பல வாணா
- திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
- திகழ்வித்த சித்தனே சிவனே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
- றிருள்இர வொழிந்தது முழுதும்
- மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
- மங்கல முழங்குகின் றனசீர்ப்
- பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
- பூவையர் புணர்ந்திடப் போந்தார்
- சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
- துலங்கவந் தருளுக விரைந்தே.
- சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
- இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
- வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
- அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
- தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
- துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
- வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
- உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
- தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
- அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
- வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
- நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
- தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
- காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
- வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
- ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
- தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.
- கரண வாதனை யால்மிக மயங்கிக்
- கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
- மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
- இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
- சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
- சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
- மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
- எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
- தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
- சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
- வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
- கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
- தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
- பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
- மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
- ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
- சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
- கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
- மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
- உயிர் தரித்திடா துன்அடி ஆணை
- தயவு செய்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- 250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம்.
- 251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா.
- யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
- என்பிழை பொறுப்பவர் யாரே
- பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
- பாவியேன் பிழைபொறுத் திலையேல்
- ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
- உடம்பைவைத் துலாவவும் படுமோ
- சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
- தெய்வத்துக் கடாதவன் என்றே.
- அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
- அப்பநீ அடியனேன் தன்னை
- விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
- விடுதியோ விட்டிடு வாயேல்
- உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
- உன்னருள் அடையநான் இங்கே
- படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
- பாடெலாம் நீஅறி யாயோ.
- அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
- அழைத்தனன் அப்பனே என்னை
- எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
- எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
- பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
- பெருந்திறல் சித்திகள் எல்லாம்
- சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
- சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
- களித்தென துடம்பில் புகுந்தனை எனது
- கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
- தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
- சிறப்பினால் கலந்தனை உள்ளம்
- தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
- தடைபடாச் சித்திகள் எல்லாம்
- அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
- அடியன்மேல் வைத்தவா றென்னே.
- என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்
- ஏற்றினை யாவரும் வியப்பப்
- பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்
- பூரண ஞானமும் பொருளும்
- உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்
- உவகையும் உதவினை எனக்கே
- தன்னிகர் இல்லாத் தலைவனே நினது
- தயவைஎன் என்றுசாற் றுவனே.
- சாற்றுவேன் எனது தந்தையே தாயே
- சற்குரு நாதனே என்றே
- போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
- பூரணா எனஉல கெல்லாம்
- தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
- தூயபேர் உதவிக்கு நான்என்
- ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
- அப்பநின் சுதந்தரம் அன்றோ.
- சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
- தூயநல் உடம்பினில் புகுந்தேம்
- இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
- இன்புறக் கலந்தனம் அழியாப்
- பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
- பரிசுபெற் றிடுகபொற் சபையும்
- சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
- தெய்வமே வாழ்கநின் சீரே.
- இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
- எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும்
- துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ
- அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே.
- பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
- கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
- ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
- ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் னவும்நாணம் உறுவ தெந்தாய்
- தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
- எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு பவஉருவாய் என்னுள் ஓங்கி
- அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி
- நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி
- ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே
- ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.
- இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம் தனித்தலைமைஇறைவா உன்றன்
- நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும்
- தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால்இங்கே
- அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
- திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே
- உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்
- அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
- ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
- போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
- புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
- வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
- வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
- பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
- பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
- களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
- கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
- விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
- வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
- கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
- குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
- துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
- ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
- திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
- சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
- கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
- காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
- விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
- விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
- தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
- தடைபடுமோ திருவுளந்தான் சற்றும்அறிந் திலனே.
- ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
- அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
- கானந்த மதத்தாலே காரமறை படுமோ
- கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
- ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
- உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
- நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
- நல்லதிரு வுளம்எதுவோ வல்லதறிந் திலனே.
- தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
- செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
- காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
- கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
- மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
- விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
- ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
- எப்படியோ திருவுளந்தான் ஏதும்அறிந் திலனே.
- ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
- நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
- ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
- உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
- ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
- இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
- ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
- ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே.
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
- உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
- அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
- அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
- என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
- என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
- தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
- கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
- நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
- நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
- ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
- இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
- தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
- விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
- ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
- உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
- ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
- எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
- தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
- திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
- கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
- கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
- உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
- தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
- திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு
- நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே
- கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
- செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
- இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் எய்துவித் திடுதியேல் அதுவுன்
- தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் சம்மதம் அன்றுநான் இதனைப்
- பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் பால்உணும் காலையே உளதால்
- மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.
- இன்சுவை உணவு பலபல எனக்கிங் கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
- நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் நீ தரு வித்திடில் அதுநின்
- தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் சம்மதம் இல்லைநான் தானே
- என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடிய தும்இலை ஈண்டே.
- கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் கிளைத்திலேன் பசிஅற உணவு
- திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
- தளைத்திடு முடைஊன்உடம்பொருசிறிதும்தடித்திடநினைத்திலேன் இன்றும்
- இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் இயம்பல்என்நீ அறிந்ததுவே.
- சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
- புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
- பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
- உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.
- இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் இருக்கவும் ஆசைஇன் றினிநான்
- பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
- சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் செய்யவும் ஆசைஒன் றில்லை
- துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து தூங்கவும் ஆசைஒன் றிலையே.
- சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்
- நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
- சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்
- தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்.
- உருமலி உலகில் உன்னைநான் கலந்தே ஊழிதோ றூழியும் பிரியா
- தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னையே பாடி நின்றாடி
- இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
- திருமணிப் பொதுவில் அன்புடையவராச் செய்யவும் இச்சைகாண்எந்தாய்.
- உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி உன்அறி வடையும்நாள் வரையில்
- இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
- விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே
- அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.
- திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில்
- உருவளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
- மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும்
- கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய்.
- கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
- தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்
- ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
- மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.
- மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
- கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
- எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
- நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
- தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே
- கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
- இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே
- இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை.
- திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
- பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
- பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
- உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
- தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
- வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
- ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
- ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
- கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
- வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
- தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
- தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
- என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற்றம் பலத்தே
- என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே
- என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபே ரொளியே
- என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள்திருச்செவிக்கிதுவே.
- இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
- விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
- கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
- அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
- விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
- தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
- கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
- கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
- ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
- வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
- பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
- தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
- நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
- உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
- அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
- பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
- தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
- சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
- உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
- விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
- ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
- கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
- காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
- மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
- ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
- பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே
- ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
- ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும்
- தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
- கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண்ணுதற் கடவுளே என்னைப்
- பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கமிக் குடையோர்
- மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
- உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
- என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
- நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
- அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
- இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
- நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
- கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
- உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
- துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
- ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
- மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
- காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
- ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
- உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
- தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
- இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
- பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
- ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
- இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
- சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
- மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
- வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
- வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
- சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
- கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும்211 ஆடவர் மடவார்
- ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
- நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
- உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
- பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
- நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
- மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
- இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
- தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
- பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
- வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
- மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
- நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
- மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
- களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்டகா லத்தும்
- நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
- அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க அவர்களுக் கன்பினோ டாங்கே
- ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
- இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
- துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
- அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ213 தெய்வமே இவற்றால்
- வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
- உற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
- பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்
- உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
- மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.
- தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும்
- அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில்
- விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
- எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே.
- உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
- கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிதுறும் கனவில்
- இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
- நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
- இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
- உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
- நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில்
- சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம்
- வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
- மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ.
- ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
- அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
- பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
- வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.
- கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
- சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
- பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
- தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
- காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
- நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
- சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
- ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
- கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
- வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
- நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
- பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
- புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
- என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
- வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
- என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
- இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
- வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
- சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே
- நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.
- முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
- தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
- குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
- பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
- பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில்
- ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
- மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்வள்ளல்உன்அருளினால்அறிந்தே
- விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே.
- அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
- பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
- மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
- இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
- பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
- மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
- வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
- ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
- தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
- நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
- உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
- பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
- சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே
- நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்நண்ணியும் பிறவிடத்தலைந்தும்
- பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே
- மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே.
- உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
- ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
- கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
- திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
- நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
- பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
- வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
- அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
- எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
- தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
- களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
- அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
- இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
- கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்
- விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
- உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.
- உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
- கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
- புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
- தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
- பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
- அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
- பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
- முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
- வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
- வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
- நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
- ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
- கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
- மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
- எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம்223 அறியும்.
- நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
- கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
- படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
- விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
- ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத்
- தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால்
- நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
- தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
- பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
- நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே
- நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.
- தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
- கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
- புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
- கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
- இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி
- நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
- எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும்
- செவ்வணத் தருணம் இது தலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.
- தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
- கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
- இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால்
- உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.
- இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ
- துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
- உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது
- மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.
- எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
- கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
- வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
- உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
- என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன்
- தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும்
- வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும்
- இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.
- அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் அப்பனே நினைமறந் தறியேன்
- செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
- பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும்என்னைக்
- குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் குணப்பெருங் குன்றினுக் கழகோ.
- ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா
- பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே
- மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்
- துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே.
- தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
- சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
- பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
- ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
- பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
- செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
- நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் நேயமும் நீஎனப் பெற்றே
- குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே.
- பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை பணிபுரிந் தாங்கிது வரையில்
- புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
- விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே
- தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த செய்கைஎன் செப்புக நீயே.
- மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்227 வள்ளலே நின்னைஅன் பாலும்
- வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
- உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் உன்அருள் அறியநான் வேறு
- செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் திருவுளத் தடைத்திடல் அழகோ.
- ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
- காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
- நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
- தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
- பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
- ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
- சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
- வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
- சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும்
- சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
- சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா
- பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
- நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே நடத்தும்ஓர் ஞானநா யகனே
- தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன்நான் பயத்தினால் துயரால்
- அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.
- ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
- சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
- நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
- ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
- உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால்
- குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
- இற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
- மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி யாயோ.
- குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
- உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன228 மற்றென தலவே
- தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி
- மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.
- கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால்
- இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ
- மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம்
- அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
- வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
- வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
- உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம்
- ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை.
- தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும்என் உளமும்
- மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக வழக்கிலே உயிர்இரக் கத்தால்
- இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே
- நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் நீங்கும்நின் திருவுளம் அறியும்.
- ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்
- காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
- போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே
- ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.
- என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில்
- மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம்
- பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
- இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங்கிலையே.
- உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
- சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும்
- மறுகிநின் றாடிஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச்
- சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச்
- சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும்
- எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு
- தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்.
- அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே
- வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே
- இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
- வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.
- மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
- குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் கொடியதீ நெறியிலே மக்கள்
- புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின்பணி விடுத்தே
- உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ உண்பதத் தாணைநான் அறியேன்.
- தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும்
- இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட் கேற்கவே பயிற்றிடுந் தோறும்
- பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார் பண்பனே என்னைநீ பயிற்றத்
- தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
- தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் தந்தையர் தங்களை அழைத்தே
- சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் சூழலே போகின்றார் அடியேன்
- என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
- பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோபெரியநின் ஆணைநான் அறியேன்.
- குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப்
- பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
- மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும்
- எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
- இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே என்னுயிர்த் தந்தையே இந்தச்
- சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
- அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் ஐயவோ வஞ்சம்நின் அளவில்
- முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வநின் ஆணைநான் அறியேன்.
- ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் உற்றிடு மக்கள்தந் தையரை
- வைப்பில்வே றொருவர் வைதிடக்கேட்டு மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
- தப்பிலாய்230 நினைவே றுரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி
- வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.
- இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தைநின் திருப்பணி விடுத்தே
- சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் தெரிந்தநாள் முதல்இது வரையும்
- அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத் தாடும்
- சித்தனே சிவனே என்றென துளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.
- அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் றம்பலத் தமுதனே எனநான்
- உன்னையே கருதி உன்பணி புரிந்திங் குலகிலே கருணைஎன் பதுதான்
- என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி இருக்கின்றேன் என்உள மெலிவும்
- மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் புண்ணியா கண்ணினுள் மணியே
- கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்பருங் கருணையங் கடலே
- தெய்வமே எனநான் நின்னையே கருதித் திருப்பணி புரிந்திருக் கின்றேன்
- மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- தன்னிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்குநற் றுணையே
- என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே என்னுடை எய்ப்பினில் வைப்பே
- உன்னுதற் கினிய வொருவனே எனநான் உன்னையே நினைத்திருக் கின்றேன்
- மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
- உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
- கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
- மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி
- நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
- பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
- சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.
- கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் காதிலே கிடைத்தபோ தெல்லாம்
- மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் மரபினர் உறவினர் தமக்குள்
- உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
- எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த ஏக்கமுந் திருவுளம் அறியும்.
- இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
- தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
- அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
- சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
- நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
- படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
- செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
- பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
- உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும்
- என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
- மன்னிய சோதி யாவும்நீ அறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே.
- என்னள விலையே என்னினும் பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய்
- உன்னுறு பயமும் இடருமென் தன்னை உயிரொடும் தின்கின்ற தந்தோ
- இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் இருந்திடில்231 என்உயிர் தரியா
- தன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்தருள் எனையே.
- பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும்
- கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும்
- வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும்
- உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
- வெய்யதீ மூட்டிவிடுதல்232 ஒப் பதுநான் மிகஇவற் றால்இளைத் திட்டேன்
- வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
- உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
- நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம்
- வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே
- வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.
- என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
- உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
- நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
- மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.
- பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
- தரிக்கிலேன் சிறிதும்தரிக்கிலேன் உள்ளம்தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
- புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை
- வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234 வள்ளலே சிற்சபை வாழ்வே.
- 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 207. தொலைபுரிந்து, 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. பதிப்புகள்.
- 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. பதிப்புகள்.
- 210. விடத்தின் - ச. மு. க. பதிப்பு.
- 211. செறும் - பி. இரா. பதிப்பு.
- 212. துயர்களை - ச. மு. க.
- 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
- 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
- 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
- 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
- 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
- 220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
- 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
- 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
- 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
- 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
- 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க.'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க.அடிக்குறிப்பிடுகிறார்.
- 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
- 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
- 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
- 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
- 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.
- ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
- பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
- புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
- எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
- இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
- நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
- நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
- அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
- கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
- காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
- பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
- பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
- உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
- உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
- அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
- செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
- திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
- ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
- ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
- எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
- எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
- அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
- வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
- மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
- புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
- பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
- உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
- இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
- இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
- எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
- ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
- தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
- சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
- அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
- எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
- எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
- இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
- எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
- உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
- உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
- அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
- மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
- மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
- இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
- திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
- பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
- புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
- அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
- எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
- எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
- கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
- காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
- விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
- விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
- திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
- திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
- உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
- உளஎலாம் ஆங்கவன் தனக்கே
- தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
- செயலிலேன் எனநினைத் திருந்தேன்
- அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
- நினைப்பற நின்றபோ தெல்லாம்
- எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
- என்செயல் என்னஓர் செயலும்
- தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
- சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
- அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
- களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
- துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
- துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
- தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
- தெளித்தனன் செய்கைவே றறியேன்
- ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
- உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
- கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
- கற்றதும் கரைந்ததும் காதல்
- கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
- குறிப்பினில் குறித்ததொன் றிலையே
- ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- களவிலே களித்த காலத்தும் நீயே
- களித்தனை நான்களித் தறியேன்
- உளவிலே உவந்த போதும்நீ தானே
- உவந்தனை நான்உவந் தறியேன்
- கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும்
- குறித்தனை கொண்டனை நீயே
- அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும்
- சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
- உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும்
- உவப்பிலேன் உலகுறு மாயைக்
- கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ
- கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
- அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான்
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
- சாத்திரக் குப்பையும் தணந்தேன்
- நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
- நித்திய வாழ்க்கையும் சுகமும்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
- ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
- பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
- சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க
- சங்கம்என் றோங்குமோ தலைமைச்
- சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ
- தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
- ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
- ஊழிதோ றுழிசென் றிடினும்
- என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
- இயல்அருட் சித்திகள் எனைவந்
- தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
- உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
- உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- கள்ளாவா தனையைக் களைந்தருள் நெறியைக்
- காதலித் தொருமையில் கலந்தே
- உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
- றோங்குதல் என்றுவந் துறுமோ
- வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம்
- மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
- ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
- உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
- உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
- அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
- அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
- மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
- வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
- சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
- தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
- நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
- நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
- அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
- ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
- வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
- மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.
- துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
- சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
- பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
- பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
- கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
- கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
- அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
- அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.
- மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
- மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
- இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்
- என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
- சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
- சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
- பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
- பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.
- முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
- முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
- தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
- தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
- என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
- யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
- பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
- பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.
- விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
- விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
- மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
- முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
- செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
- சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
- பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
- பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.
- பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
- பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
- ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
- ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
- கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
- குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
- தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
- தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
- கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
- கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
- சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
- திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
- விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
- விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
- தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
- சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.
- காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
- கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
- கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
- கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
- சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
- சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
- பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
- பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.
- சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
- செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
- இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
- கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
- சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
- சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
- நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே
- அழுது விழிகள் நீர்துளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன்
- பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும்
- உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
- உடையாய் திருஅம் பலத்தாடல் ஒருவா ஒருவா உலவாத
- கொடையாய் எனநான் நின்றனையே கூவிக் கூவி அயர்கின்றேன்
- தடையா யினதீர்த் தருளாதே தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
- கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் மதமோ கருணைக் கருத்தினுக்கே.
- திகைப்பார் திகைக்க நான்சிறிதும் திகையேன் எனநின் திருவடிக்கே
- வகைப்பா மாலை சூட்டுகின்றேன் மற்றொன் றறியேன் சிறியேற்குத்
- தகைப்பா ரிடைஇத் தருணத்தே தாராய் எனிலோ பிறரெல்லாம்
- நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் திருத்தல் அழகோ நாயகனே.
- வேண்டார் உளரோ நின்னருளை மேலோ ரன்றிக் கீழோரும்
- ஈண்டார் வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான்வேண்டல்
- தூண்டா விளக்கே திருப்பொதுவிற் சோதி மணியே ஆறொடுமூன்
- றாண்டா வதிலே முன்னென்னை ஆண்டாய் கருணை அளித்தருளே.
- திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
- புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய்உரைத்தே
- இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
- அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
- பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் பாவி மனத்தால் பட்டதுயர்
- தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
- சேர்த்தார்238 உலகில் இந்நாளில் சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
- ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ கருணைக் கழகிங் கெந்தாயே.
- வருவாய் என்கண் மணிநீஎன் மனத்திற் குறித்த வண்ணமெலாம்
- தருவாய் தருணம் இதுவேமெய்த் தலைவா ஞான சபாபதியே
- உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
- இருவாய் அலநின் திருவடிப்பாட் டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.
- தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
- வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
- ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
- தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
- அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
- குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
- நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
- பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
- இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை
- எண்ணினும் ஐயவோ மயங்கிப்
- பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்
- பரதவிப் பதைஅறிந் திலையோ
- தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
- தனிநடம் புரிதனித் தலைவா
- கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
- தென்னைஆட் கொண்டெனை உவந்தே
- ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
- ஒருவனே என்னுயிர்த் துணைவா
- வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
- விளங்கிய விமலனே ஞான
- போதகம் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
- கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
- நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
- நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
- உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
- உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
- வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
- நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
- ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
- ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
- வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
- வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
- வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
- நல்லதிருக் கூத்தாட வல்லதிரு வடிகள்
- கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
- கள்ளமற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
- பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
- பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
- மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
- தாய்கையில் கொடுத்தனை அவளோ
- வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
- மாயமே புரிந்திருக் கின்றாள்
- கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
- கேட்பதற் கடைந்திலன் அந்தோ
- உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
- உற்றிலை பெற்றவர்க் கழகோ.
- தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- தாயவள் நான்தனித் துணர்ந்து
- தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
- சூதையே நினைத்திருக் கின்றாள்
- ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
- உளந்தளர் வுற்றனன் நீயும்
- ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
- எந்தைநின் திருவருட் கழகோ.
- வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
- மகள்கையில் கொடுத்தனன் எனைத்தான்
- ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
- என்செய்வேன் என்னையே உணர்ந்து
- தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
- தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
- ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
- ஈன்றவர் அறிவரே எந்தாய்.
- வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
- மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
- மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
- வந்தெனை எடுத்திலார் அவரும்
- இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
- என்செய்வேன் என்னுடை அருமை
- நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
- நீயும்இங் கறிந்திலை யேயோ.
- ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
- நாயகி யுடன்எழுந் தருளி
- ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
- இன்னமு தனைத்தையும் அருத்தி
- ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
- உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
- வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
- மாமணி மன்றில்எந் தாயே.
- ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
- ஆண்டுகொண் டருளி பொருளே
- வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
- மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
- வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
- தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
- நாடகக் கருணை நாதனே உன்னை
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
- புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
- சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
- சொப்பனத் தாயினும் நினையேன்
- கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
- கனகமா மன்றிலே நடிக்கும்
- நல்லவா எல்லாம் வல்லவா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- புண்படா உடம்பும் புரைபடா மனமும்
- பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
- கண்படா திரவும் பகலும்நின் தனையே
- கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
- உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
- உலகரை நம்பிலேன் எனது
- நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
- புகுந்தெனைக் கலக்கிய போதும்
- கண்ணிலே எனது கருத்திலே கலந்த
- கருத்தனே நின்றனை அல்லால்
- மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
- மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
- நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
- ஊக்கமும் உண்மையும் என்னைத்
- தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
- தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
- வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
- மக்களும் மனைவியும் உறவும்
- நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
- வடிவமும் வண்ணமும் உயிரும்
- தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
- தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
- ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
- ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
- நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
- லாமையால் அழுங்குவார் எனஉண்
- மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
- விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
- தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
- சித்தனே சத்திய சபைக்கு
- நாயகா உயிர்க்கு நயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
- ஆடிய சிறுபரு வத்தே
- குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
- குணப்பெருங் குன்றமே குருவே
- செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
- சிந்தையில் இனிக்கின்ற தேனே
- நற்றக வுடைய நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய
- பாவியிற் பாவியேன் தீமைக்
- கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்
- என்னினும் துணைஎந்த விதத்தும்
- திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே
- சிந்தனை செய்திருக் கின்றேன்
- நடம்புரி கருணை நாயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
- படித்தவர் தங்களைப் பார்த்து
- நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
- நோக்கினேன் பொய்யர்தம் உறவு
- பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
- பெரியரில் பெரியர்போல் பேசி
- நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த
- பாவியேன் சாவியே போன
- புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்
- பொய்யெலாம் பூரித்த வஞ்ச
- நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்
- நெடியனேன் கொடியனேன் காம
- நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
- கடியனேன் காமமே கலந்து
- வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
- வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
- மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
- மக்களை ஒக்கலை மதித்தே
- நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
- ஊர்தொறும் உண்டியே உடையே
- தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
- தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
- வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
- வஞ்சமே பொருளென மதித்து
- நாடினேன் எனினும் பாடினேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்
- கைவழக் கத்தினால் ஒடிந்த
- ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்
- உலுத்தனேன் ஒருசிறு துரும்பும்
- ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்
- எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
- நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
- துறவியின் கடுகடுத் திருந்தேன்
- தனித்திர வதிலே வந்தபோ தோடித்
- தழுவினேன் தடமுலை விழைந்தேன்
- இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
- இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
- நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
- தலத்திலே வந்தபோ தவரைப்
- பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
- பாதகப் பூனைபோல் இருந்தேன்
- பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
- பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
- நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
- பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
- குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
- டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
- தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
- சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
- நண்மையே அடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
- வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
- அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
- அடிக்கடி வாங்கிய கொடியேன்
- இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
- எனைவிடக் கொடியருக் கீந்தேன்
- நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
- காசிலே ஆசையில் லவன்போல்
- பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
- பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
- இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
- இழுதையிற் றூங்கினேன் களித்து
- நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
- காட்டிடா தம்பெலாம் அடங்கும்
- தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்
- சுகத்தினால் சோம்பினேன் உதவா
- ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்
- ஈந்திலேன் ஈந்தவன் எனவே
- நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
- அடிக்கடி பொய்களே புனைந்தே
- எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
- றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
- கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
- கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
- நடுத்தய வறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
- எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
- களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
- காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
- துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
- சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
- நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
- எட்டியே எனமிகத் தழைத்தேன்
- பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
- பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
- காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
- கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
- நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
- ஊத்தையேன் நாத்தழும் புறவே
- வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
- வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
- பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
- பகடெனத் திரிகின்ற படிறேன்
- நன்றியே அறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
- கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
- சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
- துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
- இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
- இந்தநாள் இறைவநின் அருளால்
- நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
- வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
- ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
- சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன்கண்டாயே.
- செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
- சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
- புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
- வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
- பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
- சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
- மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
- பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
- கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
- மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
- மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
- பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
- சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
- நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
- ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
- அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
- அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
- இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
- எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
- தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
- தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
- துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
- சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
- பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
- உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
- உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
- வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
- மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
- நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
- நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
- வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
- மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
- ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
- இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
- மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
- மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
- கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
- முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
- இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
- எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
- அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
- ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
- என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
- என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
- உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
- உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
- என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
- என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
- அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
- அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
- இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
- இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
- நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
- நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
- வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
- மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
- ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
- உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
- பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
- பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
- தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
- சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
- உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
- ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
- கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
- கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
- வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
- விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
- பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
- பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
- துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
- துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
- அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
- அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
- உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
- உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
- பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
- இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
- இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
- உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
- உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
- திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
- பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
- பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
- கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
- கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
- மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
- மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
- மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
- விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
- முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
- என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
- என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
- பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
- பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
- கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
- அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
- தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
- சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
- நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
- நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
- அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
- அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
- கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
- கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
- பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
- புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
- இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
- றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
- தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
- சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
- ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
- உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
- சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
- சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
- அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
- பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி
- நிதிசார நான் இந்த நீள்உல கத்தே
- நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து
- திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற
- சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த
- அதிகார வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
- மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
- வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
- தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருளான வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
- வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
- ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
- கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளுமாறே.
- விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி
- எஞ்சு றாதபே ரின்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி
- அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும்
- துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளுமாறே.
- ஓங்கு பொன்னணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
- பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
- தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறுமாறே.
- இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
- துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல்
- கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
- அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறுமாறே.
- விளங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை
- உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
- களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
- துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறுமாறே.
- வாய்ந்த பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
- ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
- சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
- ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறுமாறே.
- மாற்றி லாதபொன் னம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
- பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
- சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
- காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறுமாறே.
- படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
- பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
- விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
- கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
- கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
- நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
- நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.
- சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
- தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
- மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
- வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
- போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
- புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
- நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
- பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
- ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
- அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
- வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
- மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
- சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
- திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
- ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
- உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
- வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
- வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
- கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
- கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
- நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
- நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
- உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
- உலவா ஒருபே ரருளா ரமுதம்
- தருவாய் இதுவே தருணம் தருணம்
- தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
- வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
- மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
- குருவாய் முனமே மனமே இடமாக்
- குடிகொண் டவனே அபயம் அபயம்.
- மலவா தனைநீர் கலவா அபயம்
- வலவா திருஅம் பலவா அபயம்
- உலவா நெறிநீ சொலவா அபயம்
- உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
- பலஆ குலம்நான் தரியேன் அபயம்
- பலவா பகவா பனவா அபயம்
- நலவா அடியேன் அலவா அபயம்
- நடநா யகனே அபயம் அபயம்.
- இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
- இனிநான் தரியேன் தரியேன் அபயம்
- விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
- விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
- உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
- குனவே எனவே அலவே அபயம்
- சுடர்மா மணியே அபயம் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
- குணமே கொளும்என் குருவே அபயம்
- பற்றம் பலமே அலதோர் நெறியும்
- பதியே அறியேன் அடியேன் அபயம்
- சுற்றம் பலவும் உனவே எனவோ
- துணைவே றிலைநின் துணையே அபயம்
- சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
- சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
- தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
- தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
- பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
- பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
- இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
- இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
- அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
- பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
- உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
- உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
- மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
- காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
- விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
- மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
- துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
- தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
- அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
- தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
- தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
- தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
- விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
- வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
- அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
- காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
- நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
- நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
- ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
- இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
- ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
- ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
- இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
- என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
- வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
- சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
- இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
- இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
- வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
- வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
- அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
- கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
- உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
- உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
- வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
- வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
- அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
- மாலையும் காலையும் மத்தியா னத்தும்
- கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
- காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
- எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
- இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
- அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
- குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
- ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
- உகந்ததண் ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
- மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
- மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
- ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
- எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
- மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
- திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
- விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
- துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
- கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
- மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
- மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
- நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
- நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
- பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
- மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
- விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
- கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
- நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
- உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
- பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
- பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
- மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
- மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
- திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
- சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
- நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
- ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
- ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
- தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
- வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
- எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
- சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
- சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
- மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
- மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
- தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
- அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
- படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
- பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
- பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
- பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
- அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
- பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
- ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
- இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
- வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
- மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
- தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
- படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
- உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
- உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
- சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
- முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
- ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
- அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
- கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
- காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
- செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
- செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
- வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
- விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
- தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
- தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
- மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
- விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
- துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
- தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
- உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
- துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
- பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
- நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
- ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
- இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
- கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
- குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
- பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
- பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
- வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
- பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
- பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
- துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
- சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
- உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
- விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
- களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
- காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
- உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
- ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
- வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
- மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
- வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
- மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
- ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
- சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
- விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
- சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
- விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
- மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
- பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
- படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
- உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
- கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
- சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
- தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
- பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
- படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
- ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
- ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
- தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
- திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
- ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
- உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
- பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
- பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
- பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
- உயர்ந்தஓட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
- தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
- தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
- தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
- சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
- ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
- தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
- பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
- பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
- இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
- இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
- கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
- கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
- உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
- பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
- பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
- திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
- செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
- கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
- காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
- இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
- பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
- போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
- மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
- மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
- அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
- நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
- கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
- படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
- பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
- கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
- ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
- இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
- தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
- தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
- எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
- இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
- முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
- முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சாகாத கல்வியிலே தலையான நிலையே
- சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
- ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
- ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
- கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
- குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
- மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
- நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
- தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
- தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
- வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
- வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
- தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
- திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
- இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
- தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
- தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
- மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
- மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
- மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
- வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
- பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
- பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
- உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
- ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
- மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
- நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
- புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
- பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
- தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
- தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
- இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
- கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
- மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
- மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
- புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
- பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
- விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
- விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
- எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
- தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
- தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
- ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
- புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
- தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
- தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
- முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
- முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
- என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
- இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
- என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
- இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
- பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
- பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
- விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
- மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
- உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
- ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
- கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
- கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
- உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
- பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
- பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
- நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
- நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
- மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
- மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
- அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
- அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
- இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
- ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
- துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
- நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
- நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
- உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
- ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
- மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
- வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
- குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
- புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
- செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
- செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
- அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
- ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
- நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
- நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
- என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
- செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
- திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
- அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
- அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
- ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
- நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
- வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
- வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
- தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
- சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
- தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
- ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
- மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
- வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
- சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
- துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
- சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
- சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
- எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
- அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
- அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
- திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
- திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
- பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
- தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
- உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
- ஒருதனிப் பெரும்பதி உவந்தே
- புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
- பொறுத்தருட் பூரண வடிவாய்
- என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
- எந்தையைத் தடுப்பவர் யாரே.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
- வருபர உணர்ச்சியும் மாட்டாப்
- பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
- பராபர உணர்ச்சியும் பற்றா
- உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
- உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
- கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
- பரம்பர ஒளிஎலாம் அணுவில்
- கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
- கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
- அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
- அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
- கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
- உளவுயிர் முழுவதும் ஒருங்கே
- கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
- குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
- கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
- கருத்தெலாம் இனிதுதந் தருளித்
- தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
- தந்தையைத் தடுப்பவர் யாரே.
- கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
- கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
- குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
- கொள்கையாய்க் கொள்கையோ டளவா
- அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
- அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
- மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
- வண்மையைத் தடுப்பவர் யாரே.
- வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
- திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
- நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
- ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
- உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
- காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
- ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
- உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
- மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
- மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
- குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- 273. உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
- 274. பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
- விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
- விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்
- தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
- சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
- தரித்தானைத் தானேநா னாகி என்றும்
- தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
- எரித்தானை என்உயிருக் கின்பா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
- நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
- தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
- துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
- ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
- உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
- எட்டானை என்னளவில் எட்டி னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்
- துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
- காற்றானை வெளியானைக் கனலா னானைக்
- கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
- தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
- சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
- ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
- போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
- செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
- திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
- அயலானை உறவானை அன்பு ளானை
- அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
- இயலானை எழிலானைப் பொழிலா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
- சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
- மேயானைக் கண்காண விளங்கி னானை
- மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
- வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
- வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
- ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உடையானை அருட்ஜோதி உருவி னானை
- ஓவானை மூவானை உலவா இன்பக்
- கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
- கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
- அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
- அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
- இடையானை என்னாசை எல்லாந் தந்த
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- 270. சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.
- உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
- உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
- கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
- கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
- தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
- தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
- எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
- உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
- மறவானை அறவாழி வழங்கி னானை
- வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
- திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
- சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
- இறவானைப் பிறவானை இயற்கை யானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
- மந்திரங்க ளானானை வான நாட்டு
- விருந்தானை உறவானை நண்பி னானை
- மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
- பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
- பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
- இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
- நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
- நின்றானைப் பொன்றாத நிலையி னானை
- நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
- ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
- ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
- என்றானை என்றும்உள இயற்கை யானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
- திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
- ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
- உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
- நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
- நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
- கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
- பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
- தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
- செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
- ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
- ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
- காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
- சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
- அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
- அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
- பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
- பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
- கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
- கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
- ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
- உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
- தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
- தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
- காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
- நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
- ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
- ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
- வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
- வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
- காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
- வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
- தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
- தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
- பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
- புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
- கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
- துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
- என்பொலா மணியை என்சிகா மணியை
- என்னிரு கண்ணுள்மா மணியை
- அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
- என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
- எந்தையைக் கண்டுகொண் டேனே.
- உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
- ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
- புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
- பொருளைஎன் புண்ணியப் பயனைக்
- கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
- குருவைஎண் குணப்பெருங் குன்றை
- மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
- பதியுமாம் ஒருபசு பதியை
- நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
- நல்கிய கருணைநா யகனை
- எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
- இறைவனை மறைமுடி இலங்கும்
- தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
- பிறங்கிய பொதுமையைப் பெரிய
- தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
- சாமியைத் தயாநிதி தன்னை
- வண்மையை அழியா வரத்தினை ஞான
- வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
- உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
- ஒருவனைக் கண்டுகொண் டேனே.
- ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
- அறிவித்த அறிவைஎன் அன்பைச்
- சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
- சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
- நீதியை எல்லா நிலைகளும் கடந்த
- நிலையிலே நிறைந்தமா நிதியை
- ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
- என்னைவாழ் விக்கின்ற பதியைப்
- பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
- பொருந்திய மருந்தையென் பொருளை
- வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
- வைத்தசன் மார்க்கசற் குருவைக்
- கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
- தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
- ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
- உடையஎன் ஒருபெரும் பதியைப்
- பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
- பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
- தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
- தலைவனைக் கண்டுகொண் டேனே.
- துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
- சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
- அன்புளே கலந்த தந்தையை என்றன்
- ஆவியைப் பாவியேன் உளத்தை
- இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
- இனிதமர்ந் தருளிய இறையை
- வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- நனவிலும் எனது கனவிலும் எனக்கே
- நண்ணிய தண்ணிய அமுதை
- மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
- வழங்கிய பெருந்தயா நிதியைச்
- சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
- சிவகுரு பதியைஎன் சிறப்பை
- உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
- கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
- அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
- ஆவியை ஆவியுட் கலந்த
- பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
- பேசுதற் கரும்பெரும் பேற்றை
- விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
- விளக்கினைக் கண்டுகொண் டேனே.
- களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
- களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
- உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
- துள்ளகத் தூறும்இன் னமுதை
- வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
- மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
- குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
- குருவையான் கண்டுகொண் டேனே.
- சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
- சிதம்பர நடம்புரி சிவத்தைப்
- பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
- பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
- இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
- யாவுமாய் அல்லவாம் பொருளைச்
- சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
- சாமியைக் கண்டுகொண் டேனே.
- அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதியை உலகக்
- களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
- காட்சியைக் கருணையங் கடலை
- உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
- ஒளியையும் உதவிய ஒளியைக்
- குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
- பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
- நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
- நல்கிய நண்பைநன் னாத
- இயமுற வெனது குளநடு நடஞ்செய்
- எந்தையை என்னுயிர்க் குயிரைப்
- புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
- பொற்புறக் கண்டுகொண் டேனே.
- கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
- ககனத்தைக் காற்றினை அமுதை
- நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
- நின்மல நிற்குண நிறைவை
- மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
- வரவுபோக் கற்றசின் மயத்தை
- அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
- அன்பினிற் கண்டுகொண் டேனே.
- மும்மையை எல்லாம் உடையபே ரரசை
- முழுதொருங் குணர்த்திய உணர்வை
- வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
- வியப்புற அளித்தமெய் விளைவைச்
- செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
- சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
- அம்மையைக் கருணை அப்பனை என்பே
- ரன்பனைக் கண்டுகொண் டேனே.
- கருத்தனை எனது கண்அனை யவனைக்
- கருணையா ரமுதெனக் களித்த
- ஒருத்தனை என்னை உடையநா யகனை
- உண்மைவே தாகம முடியின்
- அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
- றம்பலத் தருள்நடம் புரியும்
- நிருத்தனை எனது நேயனை ஞான
- நிலையனைக் கண்டுகொண் டேனே.
- உத்தர ஞான சித்திமா புரத்தின்
- ஓங்கிய ஒருபெரும் பதியை
- உத்தர ஞான சிதம்பர ஒளியை
- உண்மையை ஒருதனி உணர்வை
- உத்தர ஞான நடம்புரி கின்ற
- ஒருவனை உலகெலாம் வழுத்தும்
- உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
- ஓதியைக் கண்டுகொண் டேனே.
- புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
- புணர்த்திய புனிதனை எல்லா
- நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
- நிறுத்திய நிமலனை எனக்கு
- மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
- வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
- தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
- பரமனை என்னுளே பழுத்த
- கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
- கடவுளைக் கண்ணினுள் மணியைப்
- புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
- பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
- தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
- உவப்பிலா அண்டத்தின் பகுதி
- அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
- அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
- விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
- றிருந்தென விருந்தன மிடைந்தே
- இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
- தென்பர்வான் திருவடி நிலையே.
- தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
- யேச்சுரன் சதாசிவன் விந்து
- நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
- நவில்பர சிவம்எனும் இவர்கள்
- இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
- இடதுகாற் கடைவிரல் நகத்தின்
- கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
- கண்டனன் திருவடி நிலையே.
- இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
- பிரமன்ஈ சானனே முதலாம்
- மகத்துழல் சமய வானவர் மன்றின்
- மலரடிப் பாதுகைப் புறத்தும்
- புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
- புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
- செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
- தெரிந்தனன் திருவடி நிலையே.
- மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
- மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
- அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
- அமைந்தன சத்திகள் அவற்றின்
- கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
- கருதுரு முதலிய விளங்க
- நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
- நவின்றனர் திருவடி நிலையே.
- தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
- தொல்லையின் எல்லையும் அவற்றின்
- வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
- மன்னிஎங் கணும்இரு பாற்குத்
- தகையுறு முதலா வணங்கடை யாகத்
- தயங்கமற் றதுவது கருவிச்
- சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
- என்பரால் திருவடி நிலையே.
- மன்றஓங் கியமா மாயையின் பேத
- வகைதொகை விரிஎன மலிந்த
- ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
- உற்றன மற்றவை எல்லாம்
- நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
- நின்றசத் திகளொடு சத்தர்
- சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
- என்பரால் திருவடி நிலையே.
- பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
- பெரியஓங் காரமே முதலா
- ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
- என்றவற் றவண்அவண் இசைந்த
- மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
- மன்அதி காரம்ஐந் தியற்றத்
- தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
- என்பரால் திருவடி நிலையே.
- பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
- பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
- உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
- வெறுவெளி எனஉல குணர்ந்த
- புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
- திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
- திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
- என்பரால் திருவடி நிலையே.
- கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
- பெருங்கருணைக் கடலை வேதத்
- திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
- தெள்ளமுதத் தெளிவை வானில்
- ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
- உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
- அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
- பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
- செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
- பெருங்களிப்புச் செய்தான் தன்னை
- முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
- கொடுத்தெனக்கு முன்னின் றானை
- அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
- பெரும்பொருளைப் புனிதந் தன்னை
- என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
- பெருங்கருணை இயற்கை தன்னை
- இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
- பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
- அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
- உடையானை எல்லாம் வல்ல
- சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம்
- விரித்தடக்கும் தெய்வந் தன்னை
- எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
- பெருந்தாயை என்னை ஈன்ற
- அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
- தருகின்றோம்324 இன்னே என்றென்
- கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
- திருக்கின்ற கருத்தன் தன்னைப்
- புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
- மெய்இன்பப் பொருளை என்றன்
- அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
- நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
- நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
- பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
- பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
- திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
- சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
- மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
- மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
- ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
- எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
- தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- ஆனந்த போகமே அமுதே
- மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- மன்னும்என் ஆருயிர்த் துணையே
- துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
- தூயவே தாந்தத்தின் பயனே
- பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
- உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
- ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
- உவந்தர சளிக்கின்ற அரசே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- சோதியுட் சோதியே எனது
- மதிவளர் மருந்தே மந்திர மணியே
- மன்னிய பெருங்குண மலையே
- கதிதரு துரியத் தனிவெளி நடுவே
- கலந்தர சாள்கின்ற களிப்பே
- பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
- செல்வமே என்பெருஞ் சிறப்பே
- நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
- நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
- ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
- திருந்தர சளிக்கின்ற பதியே
- பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- ஒள்ளிய தெள்ளிய ஒளியே
- வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
- மந்திரத் தாற்பெற்ற மணியே
- நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
- நிறைந்தர சாள்கின்ற நிதியே
- பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மெய்யறி வானந்த விளக்கே
- கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
- கதிர்நடு வளர்கின்ற கலையே
- ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
- பால்அர சாள்கின்ற அரசே
- பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- இன்பமே என்னுடை அன்பே
- திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
- திகழுறத் திகழ்கின்ற சிவமே
- மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
- வெளிஅர சாள்கின்ற பதியே
- பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
- நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
- நண்புகொண் டருளிய நண்பே
- வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
- வயங்கிய தனிநிலை வாழ்வே
- பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அம்மையே என்கோ அப்பனே என்கோ
- அருட்பெருஞ் சோதியே என்கோ
- செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
- திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
- தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
- தமியனேன் தனித்துணை என்கோ
- இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
- சர்க்கரைக் கட்டியே என்கோ
- அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
- அம்பலத் தாணிப்பொன் என்கோ
- உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
- உள்ளொளிக் குள்ளொளி என்கோ
- இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
- என்னைஆண் டருளிய நினையே.
- மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
- மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
- குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
- குணப்பெருங் குன்றமே என்கோ
- பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
- பெரியஅம் பலத்தர சென்கோ
- இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- என்உளம் பிரியாப் பேரொளி என்கோ
- என்உயிர்த் தந்தையே என்கோ
- என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
- என்உயிர்த் தலைவனே என்கோ
- என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
- என்னுடை நண்பனே என்கோ
- என்ஒரு275 வாழ்வின் தனிமுதல் என்கோ
- என்னைஆண் டருளிய நினையே.
- ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
- ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
- வெட்டியே என்கோ வெட்டியில்276 எனக்கு
- விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
- பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
- பெரியவர் வைத்ததோர் தங்கக்
- கட்டியே என்கோ அம்பலத் தாடும்
- கருணையங் கடவுள்நின் றனையே.
- துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
- அம்மையே அப்பனே என்கோ
- இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
- என்உயிர்க் கின்னமு தென்கோ
- என்பொலா மணியே என்கணே என்கோ
- என்னுயிர் நாதநின் றனையே.
- கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
- கணவனே கணவனே என்கோ
- ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
- ஒருதனிப் பெரியனே என்கோ
- திருத்தனே எனது செல்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே என்கோ
- நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
- நிறைஅருட் சோதிநின் றனையே.
- அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
- ஆனந்தத் தனிமலர் என்கோ
- கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
- கடையனேன் உடையநெஞ் சகமாம்
- இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
- இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
- துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
- சர்க்கரை அமுதமே என்கோ
- மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
- முகநகைக் கணவனே என்கோ
- போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
- புணர்ந்தஓர் பூவையே என்கோ
- ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
- அம்பலத் தாடிநின் றனையே.
- தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
- தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
- சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
- தனில்உறும் அனுபவம் என்கோ
- ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
- ஓங்கிய ஒருமையே என்கோ
- சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலத்தவ நினையே.
- பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
- பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான
- நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப
- நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே
- கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது
- கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே
- துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
- அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
- காரணமே காரியமே காரணகா ரியங்கள்
- கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
- பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
- புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
- தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
- ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
- அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
- அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
- புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
- பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
- துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
- இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
- ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
- உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
- வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
- மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
- சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
- அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
- முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
- முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
- சகவடிவில் தானாகி நானாகி நானும்
- தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
- சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
- உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
- படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
- பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
- அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
- அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
- தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
- அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
- போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
- பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
- ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
- இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
- தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
- பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித்
- தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச்
- சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி
- மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
- வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த
- துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
- தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
- ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
- உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
- நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
- நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
- ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
- உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
- ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
- ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
- சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
- சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
- அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
- சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
- உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
- உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
- இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
- எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
- ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
- பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
- படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
- தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
- சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
- ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
- என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
- பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
- பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
- காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
- கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
- தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
- சத்திய சாத்தியக் கனலே
- ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
- உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
- நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
- நல்கிய ஞானபோ னகமே
- புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தத்துவ பதியே தத்துவம் கடந்த
- தனித்ததோர் சத்திய பதியே
- சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
- தமக்குளே சார்ந்தநற் சார்பே
- பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
- பெறல்அரி தாகிய260 பேறே
- புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
- அரும்பெருஞ் சோதியே சுடரே
- மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
- மருந்தெலாம் பொருந்திய மணியே
- உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
- உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
- புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
- விளம்பிய அனுபவ விளைவும்
- போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
- போனது மாய்ஒளிர் புலமே
- ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
- விருநிலத் தியல்அருள் ஒளியால்
- பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- காரண அருவே காரிய உருவே
- காரண காரியம் காட்டி
- ஆரண முடியும் ஆகம முடியும்
- அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
- நாரண தலமே263 நாரண வலமே
- நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
- பூரண ஒளிசெய் பூரண சிவமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணினுள் மணியே
- இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
- இணையிலா என்னுடை அன்பே
- சொந்தநல் உறவே அம்பலத் தரசே
- சோதியே சோதியே விரைந்து
- வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- கோஎன எனது குருஎன ஞான
- குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
- பூஎன அதிலே மணம்என வணத்தின்
- பொலிவென வயங்கிய பொற்பே
- தேவெனத் தேவ தேவென ஒருமைச்
- சிவம்என விளங்கிய பதியே
- வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
- ஒருவனே உலகெலாம் அறியத்
- தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
- சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
- கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
- கடவுளே கனகஅம் பலத்தென்
- வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- திண்மையே முதலைங் குணக்கரு வாய
- செல்வமே நல்வழி காட்டும்
- கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
- கண்ணுற இயைந்தநற் கருத்தே
- உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
- ஒருதனித் தெய்வமே உலவா
- வண்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
- கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
- பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
- அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
- தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
- கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
- அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
- குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
- செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பே
- ரறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
- மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
- பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
- அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
- வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
- தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
- அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
- தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
- பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
- அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
- விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
- தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
- உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
- வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
- அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
- ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
- இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
- உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
- அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
- இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
- உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
- அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
- ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
- நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
- மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
- ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
- கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
- மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
- உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
- அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
- கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
- உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
- அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
- எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
- உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
- பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
- என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
- உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
- தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
- ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
- உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
- வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
- வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
- நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
- நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
- கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
- காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
- எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
- ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
- இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
- இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ராய்
- அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
- அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
- திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்
- பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்
- படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
- விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்
- வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே
- கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்
- கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
- வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
- கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
- முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.
- கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
- வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
- நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
- ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருளா ரமுதம்
- தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
- நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.
- இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
- மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
- பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
- உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
- போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
- தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
- ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
- மாதுதான் இடங்கொண் டோங்க வயங்குமா மன்று ளானே.
- பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
- ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
- தாயினும் இனிய உன்றன் தண்ணருட் பெருமை தன்னை
- நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
- துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
- பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
- அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
- கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
- வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
- திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
- கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
- உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
- இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
- பெருமைஎன் னென்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி
- உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
- ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.
- உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
- புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
- வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
- தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
- விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
- நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
- கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
- உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
- உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
- புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
- குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
- தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
- தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
- சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
- ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
- தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
- துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
- சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
- இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
- கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
- மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
- தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.
- கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
- சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
- மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
- யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
- ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
- சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
- தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
- பரமான சிதம்பர ஞான சபாபதியே
- வரமான எல்லாம் எனக்கீந்தநல் வள்ளலேஎன்
- தரமானது சற்றும் குறித்திலை சாமிநின்னை
- உரமானஉள் அன்பர்கள் ஏசுவர் உண்மைஈதே.
- பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
- மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
- எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
- நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.
- ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
- திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
- ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
- தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
- நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
- தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
- தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
- சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
- ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
- தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
- தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
- சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
- தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
- ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
- ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
- நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
- ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே.
- பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
- சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
- அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2
- புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
- கரைசேர்த் தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
- உரைசேர் மறையின் முடிவிளங்கும் ஒளிமா மணியே உடையானே
- அரைசே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- எம்மே தகவும் உடையவர்தம் இதயத் தமர்ந்த இறையவனே
- இம்மே தினியில் எனைவருவித் திட்ட கருணை எம்மானே
- நம்மே லவர்க்கும் அறிவரிய நாதா என்னை நயந்தீன்ற
- அம்மே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
- திப்பா ரிடைநின் புகழ்பாடு கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
- டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- துப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
- வைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
- ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
- திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
- ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
- பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
- தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
- சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
- முழுதும்ஆ னான்என ஆகம வேத
- முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
- எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
- என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
- தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
- சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
- சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
- நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
- நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
- எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
- ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
- பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
- பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
- அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
- அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
- இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
- வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
- கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
- கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
- பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
- பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
- இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
- இரவு விடிந்தது இணையடி வாய்த்த
- பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
- பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
- தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
- தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
- ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
- இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
- துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
- இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
- எண்ணம் பலித்ததென்று உந்தீபற.
- ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
- தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
- சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.
- திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
- பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
- பலித்தது பூசையென்று உந்தீபற.
- உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
- தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
- தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
- எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
- சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
- தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
- சிந்தை களித்தேன்என்று உந்தீபற
- சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
- முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
- சித்தியை உற்றேன்என்று உந்தீபற
- சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.
- எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
- தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
- கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
- அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
- பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
- கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
- அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
- ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
- வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
- லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
- புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
- தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
- இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
- முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
- சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
- அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
- வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
- பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
- ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
- கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
- நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
- ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
- மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
- எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
- அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
- தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
- கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
- அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
- பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
- நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
- எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
- அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
- மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
- தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
- அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
- தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
- உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
- உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
- இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
- ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
- எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
- நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
- நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
- கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
- கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
- ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
- சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
- தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
- உகத்தென325 துடல்பொருள் ஆவியை நுமக்கே
- ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
- இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
- சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
- செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
- தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
- இப்படி வான்முதல் எங்கணும் அறிய
- என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
- எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்
- திருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்
- எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி
- என்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்
- சித்திக்கு மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே
- திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே
- இத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
- வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
- முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
- மூவகை யாம்உடல் ஆதியை நுமது
- பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
- பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
- என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- 325. உகத்து - உகந்து என்பதன் வலித்தல் விகாரம் - முதற்பதிப்பு.
- 326. சமுகம் - ச. மு. க. பதிப்பு.
- சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
- பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே352 எனைஈன்ற
- ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
- நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
- வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
- மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
- செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
- குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- தேடிய துண்டு நினதுரு வுண்மை
- தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
- ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
- உரைத்ததும் உவந்ததும் உண்டோ
- ஆடிய பாதம் அறியநான் அறியேன்
- அம்பலத் தரும்பெருஞ் சோதி
- கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
- கூறவுங் கூசும்என் நாவே.
- ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
- என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
- ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
- அன்றிவே றெண்ணிய துண்டோ
- ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் காற்றலேன் சிறிதும்
- தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
- நன்றருள் புரிவதுன் கடனே.
- மாயையாற் கலங்கி வருந்திய போதும்
- வள்ளல்உன் தன்னையே மதித்துன்
- சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
- தலைவவே245 றெண்ணிய துண்டோ
- தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
- துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
- நன்றருள் புரிவதுன் கடனே.
- வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
- மன்னிய உண்மை ஒன்றென்றே
- எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
- திறையும்வே றெண்ணிய துண்டோ
- அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
- அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
- தெளிவித்துக் காப்பதுன் கடனே.
- ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
- உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
- வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
- மன்றினை மறந்ததிங் குண்டோ
- ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
- ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
- பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
- பரிந்தருள் புரிவதுன் கடனே.
- உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
- ஒருசிவ மயமென உணர்ந்தேன்
- கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
- கருத்தயல் கருதிய துண்டோ
- வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
- மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
- தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
- தெளிவித்தல் நின்கடன் சிவனே.
- அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
- அடுத்திடும் புறப்புறம் நான்கில்
- இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
- இறையும்இங் கெண்ணிய துண்டோ
- உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் கினிச்சிறி துந்தான்
- இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
- கென்னைஆண் டருள்வ துன்கடனே.
- கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
- வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
- காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற
- வாணா நினக்கடிமை வாய்த்து.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
- அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
- அழியாச்சிற் றம்பலத்தே யான்.
- பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
- போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
- றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
- நாடுகின்றேன் சிற்சபையை நான்.
- எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
- உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
- சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
- குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் அழியா உரம்266 பெற்றேன் - பண்டே
- எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
- தனைஉவந்து கொண்டான் தனை.
- தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
- மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
- குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
- மணவாளன் பாத மலர்.
- என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
- தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
- சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
- மாலைஇட்டான் பாதமலர்.
- மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
- வாழ்விலே வரவிலே மலஞ்சார்
- தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
- தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
- காலிலே ஆசை வைத்தனன் நீயும்
- கனவினும் நனவினும் எனைநின்
- பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- மதத்திலே சமய வழக்கிலே மாயை
- மருட்டிலே இருட்டிலே மறவாக்
- கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
- கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
- பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
- பரிந்தெனை அழிவிலா நல்ல
- பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- குலத்திலே சமயக் குழியிலே நரகக்
- குழியிலே குமைந்துவீண் பொழுது
- நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
- நிற்கின்றார் நிற்கநான் உவந்து
- வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
- மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
- பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
- கொழுநரும் மகளிரும் நாண
- நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
- நீங்கிடா திருந்துநீ என்னோ
- டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
- றறிவுரு வாகிநான் உனையே
- பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
- வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
- நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
- நாட்டமும் கற்பகோ டியினும்
- வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
- வழங்கிடப் பெற்றனன் மரண
- பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
- நாதனை என்உளே கண்டு
- கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
- கூடிடக் குலவிஇன் புருவாய்
- ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
- அம்பலம் தன்னையே குறித்துப்
- பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
- புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
- கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
- கருத்தொடு வாழவும் கருத்தில்
- துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
- துலங்கவும் திருவருட் சோதிப்
- பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
- வெம்மையே நீங்கிட விமல
- வாதமே வழங்க வானமே முழங்க
- வையமே உய்யஓர் பரம
- நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
- நன்மணி மன்றிலே நடிக்கும்
- பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
- கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
- சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
- சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
- சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
- செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
- பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
- ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
- சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள்
- சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில்
- உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத்
- துள்ளல் ஒழிக தொலைந்து.
- அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
- விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
- ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
- நீதிக் கொடிவிளங்க நீண்டு.
- புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
- நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
- செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
- ஒத்தாராய் வாழ்க உவந்து.
- நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
- சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
- பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
- யார்உளர்நீ சற்றே அறை.
- சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
- சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
- நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
- பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
- மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
- நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
- சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
- கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
- உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
- பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
- பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
- தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்
- சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்
- காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்
- தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.
- தொம்பத உருவொடு தத்பத வெளியில்
- தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
- எம்பதமாகி இசைவாயோ தோழி
- இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.
- வகார வெளியில் சிகார உருவாய்
- மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
- விகார உலகை வெறுப்பாயோ தோழி
- வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.
- காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
- கண்டுகொள் கணவனே என்றாள்
- ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
- உவந்திலேன் உண்மையீ தென்றாள்
- பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
- பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
- மாதய வுடைய வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
- மறப்பனோ கனவினும் என்றாள்
- உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
- உயிர்தரி யாதெனக் கென்றாள்
- கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
- கடலமு தளித்தருள் என்றாள்
- வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
- அன்பினால் அணைத்தருள் என்றாள்
- பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
- படமுடி யாதெனக் கென்றாள்
- செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
- திருவுளம் அறியுமே என்றாள்
- வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
- புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
- காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
- கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
- சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
- சற்றுநான் தரித்திடேன் என்றாள்
- மாமிகு கருணை வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
- பொங்கிய தாசைமேல் என்றாள்
- என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
- என்னள வன்றுகாண் என்றாள்
- கொன்செயும் உலகர் என்னையும் உனது
- குறிப்பையும் குறித்திலார் என்றாள்
- வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
- மேவிலை என்னையோ என்றாள்
- நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
- நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
- மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
- வைத்தல்உன் மரபல என்றாள்
- வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
- அன்பினால் கூடினன் என்றாள்
- கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
- கூடுதல் கூடுமோ என்றாள்
- பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
- பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
- வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
- புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
- கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
- கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
- நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
- நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
- வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
- தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
- எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாரான்
- இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
- ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
- ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
- சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
- கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
- இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
- இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
- வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
- மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
- விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
- உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
- பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
- பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
- நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
- நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
- நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
- நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
- என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
- இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
- தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
- தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
- அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
- அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
- மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
- அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
- தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
- சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
- எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
- இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
- செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
- சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
- அன்னப்பார்ப் பால்365அழ காம்நிலை யூடே
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
- சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
- உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
- ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
- என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
- அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
- உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
- உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
- புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
- பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
- இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
- சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
- ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
- உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
- அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
- அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
- இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
- எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
- பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
- மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
- எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
- நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
- அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
- அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
- அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
- அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
- என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
- துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
- நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
- கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
- எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
- உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
- துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
- கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
- ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
- கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
- நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
- கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
- எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
- நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
- பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
- பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.
- மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
- வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
- இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
- முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
- ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
- ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
- கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
- ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
- நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
- தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
- திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
- உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
- அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
- அதிசயம் அதிசயம் என்றாள்
- துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
- தொட்டனன் பிடித்தனன் என்றாள்
- புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
- பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.
- சத்திய ஞான சபாபதி எனக்கே
- தனிப்பதி ஆயினான் என்றாள்
- நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
- நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
- பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
- பேறெலாம் என்வசத் தென்றாள்
- எத்திசை யீரும் ஒத்திவண் வருக
- என்றனள் எனதுமெல் லியலே.
- வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
- மாலையோ காலையோ என்றாள்
- எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
- ஏவல்செய் கின்றன என்றாள்
- தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
- சித்தியும் பெற்றனன் என்றாள்
- துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
- சோர்விலாள் நான்பெற்ற சுதையே.
- கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
- கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
- கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
- கடிமணம் புரிந்தனன் என்றாள்
- ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
- ஒளிஎனக் களித்தனன் என்றாள்
- இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
- என்தவத் தியன்றமெல் லியலே.
- வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
- மாலைவந் தணிந்தனன் என்றாள்
- ஊழிதோ றூழி உலவினும் அழியா
- உடம்பெனக் களித்தனன் என்றாள்
- ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
- அளிக்கஎன் றருளினான் என்றாள்
- ஏழியன் மாட மிசையுற வைத்தான்
- என்றனள் எனதுமெல் லியலே.
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
- அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
- அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
- எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
- சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
- தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
- சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
- மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
- முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
- அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
- அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
- திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
- உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
- துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
- பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
- பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
- ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
- இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
- வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
- மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
- காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
- காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
- தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
- தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.
- சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
- திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
- பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
- படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
- இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
- இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
- நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
- நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
- நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
- ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
- இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
- ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
- அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
- ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
- உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
- தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
- தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
- சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
- தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
- ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
- இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
- ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
- சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
- ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
- அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
- ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
- கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
- ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
- ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.
- ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
- ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
- இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
- இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
- பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
- பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
- அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
- அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.
- சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
- சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
- வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
- மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
- தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
- திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
- அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
- அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
- நாரணர்கள் மற்றவரின்361 நாடின்மிகப் பெரியர்
- வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
- மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
- மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
- மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
- ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
- ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
- மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
- வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
- எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
- எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
- விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
- விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
- அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
- மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
- வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
- கண்ணென்னும் உணர்ச்சிசெலாக் காட்சியவாய்க் நிற்பக்
- கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
- நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
- நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
- அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
- அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
- பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
- உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
- உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
- துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
- தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
- அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
- அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.
- பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
- பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
- தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
- தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
- மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
- வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
- மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
- மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
- ஏற்றமுறும் ஐங்கருவுக் காதார கரணம்
- எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
- தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை
- துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
- ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்
- அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
- சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில்
- விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
- வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்
- மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
- தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
- உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
- தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
- தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
- தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
- திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி364 வெளியில்
- பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
- பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
- விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
- விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
- பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
- பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
- தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
- செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
- எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
- எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
- தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
- துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
- ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
- அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம்
- ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
- இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
- ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
- உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி.
- உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
- உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
- நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
- நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
- குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
- குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
- மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
- வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
- சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
- தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
- தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
- வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
- மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
- ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
- அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.
- வளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்
- வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
- தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
- தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
- உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
- ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
- அளந்தறியும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
- அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.
- பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
- பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
- விரவியதத் துவஅணுக்கள் ஒன்றோடொன் றாய்ஒன்றி
- விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
- உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
- ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
- தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
- தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.
- சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
- சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
- ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
- உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
- ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
- அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
- வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
- விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
- வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்
- விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்
- மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
- வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
- மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
- மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
- வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
- வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத
- வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
- கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
- நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
- நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
- ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
- உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
- நடுங்குடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.
- மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
- மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
- இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
- எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
- மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
- வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
- அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.
- அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
- அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
- உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
- உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
- மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
- மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
- இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
- இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.
- சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
- தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
- தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
- தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
- இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
- இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
- நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
- நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
- ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி
- ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும்
- வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
- விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
- உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
- உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
- தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
- தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.
- ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம்
- என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில்
- சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்
- சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத்
- தேற்றமிகு தண்ரைச் சீவர்கள்பற் பலரைச்
- செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும்
- ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ
- உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி.
- பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
- பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
- பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
- பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
- உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
- உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
- தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
- தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
- பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
- பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
- தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
- சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
- திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
- திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
- சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
- திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
- இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்
- றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
- துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ
- சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
- விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த
- மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி
- வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்
- மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
- சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
- சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
- நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
- உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
- வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
- குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
- மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
- கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
- கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
- தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
- உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.
- உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
- நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
- இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
- மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
- மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
- இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
- பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
- சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
- தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
- சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
- நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
- இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
- நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
- மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
- குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
- தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
- வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
- ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
- டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
- வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
- மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
- உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
- தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
- துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே.
- அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
- பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
- எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
- அச்சோ எனக்கவன்போல் ஆர்.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
- றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாவல்ல
- செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
- இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும்
- நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு
- மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என்
- தாயைமகிழ் அம்பலவன் தான்.
- மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
- தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
- தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
- தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
- தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
- ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
- றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
- எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
- உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
- இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
- கலகமி லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
- திலகமெ னாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
- தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
- உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
- சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
- சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
- தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
- செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
- குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
- பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
- கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
- திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
- சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
- கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
- செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
- சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
- பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க
- வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே
- எந்தாய்நின் உள்ளமறி யேன்.
- உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
- தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
- தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
- ஆக்கமுற வைத்தாய் அது.
- அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார்
- பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு
- வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
- தந்தாய்என் நான்செய் தவம்.
- நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன்
- தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே
- ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான்
- அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்.
- கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையாள் கால்மலர்க்குக்
- கைத்தலைமே லிட்டலையிற் கண்ர்கொண் - டுய்த்தலைமேல்
- காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
- காணாயே நெஞ்சே களித்து.
- மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
- உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
- திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
- குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
- திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
- தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
- கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
- அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
- உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
- கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற
- புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
- தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
- கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
- எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
- திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
- கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்
- வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
- மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
- கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது
- நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச்
- சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
- காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- இன்னுரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திடுக
- என்னுரையும் பொன்னுரைஎன் றேஅணிந்தான் - தன்னுரைக்கு
- நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
- ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
- பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
- தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
- இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
- மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
- எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
- நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
- உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
- தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
- படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
- உடைத்தனிப்பே ரருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
- கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
- திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய்
- உயர்வுறுபே ரருட்சோதித் திருவமுதம் உவந்தளித்தாய்
- மயர்வறுநின் அடியவர்தம் சபைநடுவே வைத்தருளிச்
- செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய்
- புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய்
- சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச்
- சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்
- வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே
- எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்
- செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
- தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
- மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
- இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
- இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
- தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
- பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
- கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
- கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
- தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
- உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.
- ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
- கழித்தேன் மரணக் களைப்பற்றேன் களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
- பழித்தேன் சிற்றம் பலம்என்னாப் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
- விழித்தேன் கருத்தின் படிஎல்லாம் விளையா டுதற்கு விரைந்தேனே.
- விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
- கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ர் பெருகக் கருத்தலர்ந்தே
- வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
- திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
- தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
- ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
- வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
- நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
- அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
- சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
- இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
- உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
- பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
- உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
- எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
- துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
- விதித்தனை என்னைநின் தன்மக னாக விதித்துளத்தே
- பதித்தனை என்னுட் பதிந்தனை சிற்றம் பலநடமும்
- உதித்தொளிர் பொன்னம் பலநட மும்ஒருங் கேஎனக்கே
- கதித்தழி யாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே.
- கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை
- ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு
- நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல்
- ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே.
- ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
- தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
- நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
- வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
- நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
- வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
- ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
- கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
- ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற
- நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல்
- இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள
- மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.
- உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
- உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
- இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
- இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
- விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
- விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
- அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
- அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.
- அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
- அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
- வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
- மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
- தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
- தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
- உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
- உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
- நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது
- நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
- எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை
- யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
- பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்
- பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
- தண்புடைநன் மொழித்திரளும்354 சுவைப்பொருளும் அவைக்கே
- தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.
- பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
- பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
- கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
- கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
- துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
- சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
- றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
- அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
- விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
- மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
- மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
- மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
- துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
- சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
- குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
- குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
- வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
- போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
- போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
- நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
- நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
- ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
- எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
- என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
- எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
- நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
- நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
- தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
- சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
- பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
- பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.
- மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
- பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
- நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
- சிவனே கதவைத் திற.
- ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
- வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
- ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
- தேவா கதவைத் திற.
- ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
- ஞான அமுதமது நானருந்த - ஞான
- உருவே உணர்வே ஒளியே வெளியே
- திருவே கதவைத் திற.
- திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
- வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
- வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
- தேனே கதவைத் திற.
- விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
- களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
- விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
- உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
- நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
- மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
- இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
- ஒன்றே எனினும் பொறேன்அரு ளாணை உரைத்தனனே.
- திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
- கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
- உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
- வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
- மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
- தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
- எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
- இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
- வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
- சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
- போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
- சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
- ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
- வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
- ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
- ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
- ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
- சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
- பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
- தாடிக் களிக்க அருள்.
- இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
- சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற
- தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்
- பொன்னேர் பதத்தைப் புகழ்.
- உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
- வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
- கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
- பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
- ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
- ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
- பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதி அது.
- எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன்
- நல்லான் எனக்குமிக நன்களித்தான் - எல்லாரும்
- கண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம்
- உண்டுவியக் கின்றேன் உவந்து.
- ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
- தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
- கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
- ஈசனத்தன் அம்பலவ னே.
- ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
- சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
- ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
- வெந்தொழில்போய் நீங்க விரைந்து.
- ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
- செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி
- விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக
- நிரந்தொன்றாய்330 நின்றான் நிலத்து.
- துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
- அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்
- தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
- ஓங்கினேன் உண்மை உரை.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
- உள்ளனஎ லாங்கலந்தே
- ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
- உதயாத்த மானம்இன்றி
- இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
- ஏகமாய் ஏகபோக
- இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
- இலங்நிறை கின்றசுடரே
- கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
- ககன்எலாம் கண்டபரமே
- காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
- கண்காண வந்தபொருளே
- தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
- துணையாய் விளங்கும்அறிவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
- நிலையிலே நுண்மைதனிலே
- நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
- நெகிழிலே தண்மைதனிலே
- ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
- ஒண்சுவையி லேதிரையிலே
- உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே
- உற்றியல் உறுத்தும்ஒளியே
- காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
- கருணைமழை பொழிமேகமே
- கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
- கண்ணோங்கும் ஒருதெய்வமே
- தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
- சுகசொருப மானதருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
- ஒளியிலே சுடரிலேமேல்
- ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
- உறும்ஆதி அந்தத்திலே
- தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
- செயவல்ல செய்கைதனிலே
- சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
- சிறக்கவளர் கின்றஒளியே
- வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
- வானமே ஞானமயமே
- மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
- வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
- துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
- சுகம்எனக் கீந்ததுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
- ஆதிநடு அந்தத்திலே
- ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
- ஆடும்அதன் ஆட்டத்திலே
- உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
- உற்றபல பெற்றிதனிலே
- ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
- குபகரித் தருளும்ஒளியே
- குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
- கோடிகிர ணங்கள்வீசிக்
- குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
- குலாவும்ஒரு தண்மதியமே
- துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
- சொருபமே துரியபதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
- இயல்உருவி லேஅருவிலே
- ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
- எறிஆத பத்திரளிலே
- ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
- ஒளிஒளியின் ஒளிநடுவிலே
- ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
- ஒளியேஎன் உற்றதுணையே
- அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
- அய்யனே அரசனேஎன்
- அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
- அப்பனே அருளாளனே
- துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
- தூயனே என்நேயனே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
- கடையிலே கடல்இடையிலே
- கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
- கடல்ஓசை அதன்நடுவிலே
- வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
- வடிவிலே வண்ணம்அதிலே
- மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
- வயங்கிஅவை காக்கும் ஒளியே
- புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
- புகுந்தறி வளித்தபொருளே
- பொய்யாத செல்வமே நையாத கல்வியே
- புடம்வைத் திடாதபொன்னே
- மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
- மறுப்பிலா தருள்வள்ளலே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
- வாழ்க்கைமுத லாஎனக்கு
- வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
- வயங்கிஒளிர் கின்றஒளியே
- இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
- ரின்பமே அன்பின்விளைவே
- என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
- என்னாசை யேஎன் அறிவே
- கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
- கருணைஅமு தேகரும்பே
- கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
- கடவுளே கலைகள்எல்லாம்
- விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
- மெய்ம்மையே சன்மார்க்கமா
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
- ஏதாக முடியுமோஎன்
- றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
- றேங்கிய இராவில்ஒருநாள்
- மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
- வெளிநின் றணைத்தென்உள்ளே
- மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
- வீற்றிருக் கின்றகுருவே
- நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
- நல்குரவி னோன்அடைந்த
- நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
- நான்கண்டு கொண்டமகிழ்வே
- வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
- வலியவந் தாண்டபரமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
- பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
- பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
- பேதமுற் றங்கும்இங்கும்
- போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
- போகாத படிவிரைந்தே
- புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
- பொருளினை உணர்த்திஎல்லாம்
- ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
- என்பிள்ளை ஆதலாலே
- இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
- றெண்ணற்க என்றகுருவே
- நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
- நிறைந்திருள் அகற்றும்ஒளியே
- நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
- நீதிநட ராஜபதியே.
- நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
- நின்வார்த்தை யாவும்நமது
- நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
- நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
- ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
- அழியாத நிலையின்நின்றே
- அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
- ஆடிவாழ் கென்றகுருவே
- நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
- நான்இளங் காலைஅடைய
- நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
- நண்பனே துணைவனேஎன்
- ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
- ஒருவனே அருவனேஉள்
- ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
- ஓங்குநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
- மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
- கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
- கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
- வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
- விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
- சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
- உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
- கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
- கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
- திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
- சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
- தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
- அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
- கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
- கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
- பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
- பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
- சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சாகாத தலைஇது வேகாத காலாம்
- தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
- போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
- பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
- ஆகாத பேர்களுக் காகாத நினைவே
- ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
- தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
- இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
- விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
- மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
- பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
- புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
- சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
- இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
- முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
- முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
- இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
- இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
- தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
- அடிநடு முடியிலா ததுஇது மகனே
- படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
- பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
- செடியற உலகினில் அருள்நெறி இதுவே
- செயலுற முயலுக என்றசிற் பரமே
- தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நண்ணிய மதவெறி பலபல அவையே
- நன்றற நின்றன சென்றன சிலவே
- அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
- அலைதரு கின்றனர் அலைவற மகனே
- புண்ணியம் உறுதிரு வருள்நெறி இதுவே
- பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
- தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
- அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
- துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
- சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
- விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
- விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
- தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
- மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
- நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
- நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
- ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
- ஏற்றிய கருணைஎன் இன்னுயிர்த் துணையே
- தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
- அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
- ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
- உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
- சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
- சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
- சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே
- கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே
- அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா
- அருள்நிலை தனில்உற அருளிய அமுதே
- பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே
- பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே
- தற்பர பரம்பர சிதம்பர நிதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பவநெறி செலுமவர் கனவிலும் அறியாப்
- பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
- நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே
- நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
- சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
- சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
- தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
- அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
- செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
- திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
- பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
- பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
- தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
- எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
- ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
- ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
- ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
- இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
- சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
- உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
- ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
- பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
- பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
- இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
- ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.
- மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
- மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
- இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
- இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
- தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
- சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
- நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
- ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
- பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
- பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
- சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
- தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
- ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
- அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
- பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
- பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
- மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே
- வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்
- உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்
- உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ
- வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்
- மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
- இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
- கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
- நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
- நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
- அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
- அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
- அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
- ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.
- மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
- வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
- ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
- ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
- கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
- கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
- ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
- இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.
- மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
- மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
- சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
- தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
- பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
- பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
- ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
- பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
- ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
- உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
- அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
- அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
- தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
- சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
- பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
- பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
- தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
- தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
- செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
- தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
- அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
- அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
- கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
- கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
- தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
- தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
- தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
- சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
- சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
- தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.
- பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
- படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
- வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
- வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
- நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
- நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
- கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
- கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.
- மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
- வரையுள தாதலால் மகனே
- எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
- தெழில்உறு மங்கலம் புனைந்தே
- குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
- கோலத்தால் காட்டுக எனவே
- வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
- வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
- எம்பொருள் எனும்என் அன்புடை மகனே
- இரண்டரைக் கடிகையில் உனக்கே
- அம்புவி வானம் அறியமெய் அருளாம்
- அனங்கனை333 தனைமணம் புரிவித்
- தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும்
- உண்மைஈ தாதலால் உலகில்
- வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார்
- மெய்ப்பொது நடத்திறை யவரே.
- அன்புடை மகனே மெய்யருள் திருவை
- அண்டர்கள் வியப்புற நினக்கே
- இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
- இரண்டரைக் கடிகையில் விரைந்தே
- துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
- தூய்மைசேர் நன்மணக் கோலம்
- பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
- பொதுநடம் புரிகின்றார் தாமே.
- ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
- இரண்டரைக் கடிகையில் நினக்கே
- ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
- உண்மைஈ தாதலால் இனிவீண்
- போதுபோக் காமல் மங்கலக் கோலம்
- புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
- தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
- தெருட்டிய சிற்சபை யவரே.
- விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
- மெய்யருள் திருவினை நினக்கே
- வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
- வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
- இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
- எல்லையுள் எழில்மணக் கோலம்
- நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
- நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
- களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
- கடிகைஓர் இரண்டரை அதனில்
- ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
- உனக்குநன் மணம்புரி விப்பாம்
- அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
- அணிபெறப் புனைகநீ விரைந்தே
- வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
- விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
- தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே
- தூயநீர் ஆடுக துணிந்தே
- பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
- பண்பொடு புனைந்துகொள் கடிகை
- ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை
- எழில்உற மணம்புரி விப்பாம்
- ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார்
- இயன்மணி மன்றிறை யவரே.
- வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
- ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
- வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
- ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
- துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
- பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
- அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
- உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
- ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
- பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
- மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
- யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
- சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
- அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
- தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
- அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
- அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
- பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
- மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
- தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
- அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
- அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
- கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
- எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
- இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
- எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
- செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
- செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
- இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ
- எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
- நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
- நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
- முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
- மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
- பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
- பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.
- என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
- எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
- தன்னருள்தெள் ளமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
- சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
- மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
- வகுத்துரைத்துத் தெரித்திடுக வருநாள்உன் வசத்தால்
- உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
- உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
- எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
- எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
- நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
- நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
- பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
- பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
- எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
- இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
- கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
- கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
- தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
- சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
- திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
- திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
- வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
- வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
- உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
- துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
- வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
- வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
- கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
- குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
- நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
- நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
- இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
- ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
- உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
- தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
- திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
- ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
- எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
- தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
- சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
- கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
- கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
- இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
- இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
- பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
- பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.
- தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
- தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
- எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
- என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
- வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
- மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
- சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
- யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
- உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
- உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
- துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
- தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
- தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
- எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
- இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
- இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
- மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
- மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
- தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
- யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
- பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
- புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
- மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
- மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
- தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
- அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
- மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்
- வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
- நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
- நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
- ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
- ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
- மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
- மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
- காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
- கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
- கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
- அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
- பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
- பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
- பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
- பின்படு தீமையின் முன்படு கின்றீர்
- இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
- சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
- ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
- அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
- நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
- நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
- வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
- மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
- காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
- கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
- கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
- குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
- பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
- பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
- ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
- எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
- ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
- அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
- கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
- கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
- வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
- வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
- சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
- எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
- எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
- கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
- கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
- ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
- அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
- உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
- உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
- உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
- மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
- வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
- இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
- எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
- நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.
- நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
- நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
- வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
- வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
- புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
- புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
- உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
- வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
- வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
- மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
- வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
- மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
- மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
- செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
- சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
- கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
- கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
- மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
- மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
- திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
- சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
- சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
- தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.
- 356. பாடுபட்டுப் - ச. மு. க. பதிப்பு.
- 357. எவ்வகைசார் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
- 358. முதற்பதிப்பிலும், பொ. சு. பதிப்பிலும் 'கனமுடையேம்' என்பது ஒன்பதாம்பாடலாகவும் 'வையகத்தீர்' என்பது எட்டாம் பாடலாகவும் உள்ளன.
- கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
- எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
- கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
- கலந்தான் கருணை கலந்து.
- எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
- எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
- நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
- ஒன்றாகி நின்றான் உவந்து.
- எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
- பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
- தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
- வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
- சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
- நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
- தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
- சந்தோட மாய்இருமின் சார்ந்து.
- அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
- சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
- உடையான் உளத்தே உவந்து.
- தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
- தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
- ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
- மேகத்திற் குண்டோ விளம்பு.
- வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
- செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
- ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
- தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
- நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
- தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
- புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
- புகுந்தான் கருணை புரிந்து.
- ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
- நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
- சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
- பத்திஎலாம் பெற்ற பலன்.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
- நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
- நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
- ஊன்நாடி நில்லா உழி.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்
- கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்
- துண்டேன் அமுதம் உவந்து.
- பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
- சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
- தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
- கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
- நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
- ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
- பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
- நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
- சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
- நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
- சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
- உற்றிங் கறிந்தேன் உவந்து.
- வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
- வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
- சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
- என்ன பயனோ இவை.
- சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
- வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
- தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
- நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.
- பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
- மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்
- சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
- இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.
- என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான்
- தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே
- தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
- வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து.
- இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்
- எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்
- சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்
- உற்றவரை உற்றவர்கள் உற்று.
- யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
- ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
- அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
- கம்பலத்தால் ஆகும் களித்து.
- என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
- அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
- திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்
- குருவம் பலத்தேஎன் றுன்.
- ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
- நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
- கென்மார்க்க மும்ஒன்றா மே.
- வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை
- நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்
- தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட
- உள்ளியநாள் ஈதறிமின் உற்று.
- போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்
- நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்
- அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்
- றிப்புவியில் இத்தருணம் இங்கு.
- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
- புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
- புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
- உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
- உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
- மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
- மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
- தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
- சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.
- பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
- பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
- துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
- துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
- தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
- சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
- கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
- காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
- நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
- சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
- தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
- சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
- சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
- ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
- உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
- விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
- மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
- திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
- செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
- வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
- வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
- கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
- கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
- களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
- களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
- தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
- செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
- ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
- ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
- அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
- ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
- அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
- கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
- காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
- இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
- யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
- உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
- ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
- திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
- சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
- வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
- வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
- பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
- பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
- கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
- கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.
- உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
- உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
- எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
- என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
- தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
- சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
- கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
- கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
- தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
- நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
- நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
- அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
- ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
- சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
- சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
- நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
- நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
- எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
- என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
- சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
- செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
- முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
- முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
- சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
- இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
- தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
- அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
- அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
- முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
- முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
- கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
- வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
- மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
- பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
- புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
- செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
- சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
- சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
- திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
- ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
- உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
- வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
- மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
- சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
- தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
- இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
- இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
- மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
- மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
- சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
- சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
- பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
- பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
- உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
- உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
- கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
- கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
- சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
- தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
- இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
- என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
- சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
- தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
- நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
- நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
- புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
- பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
- அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
- அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
- தருணம்இதே அறிமின் என்றே
- வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
- கின்றார்இம் மனிதர்அந்தோ
- தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
- உளங்கலந்த தலைவா இங்கே
- நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
- இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
- இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
- தருணம்இதே என்று வாய்மை
- அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
- வார்த்தைகள்என் றறைகின் றாரால்
- மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
- எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
- சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
- மனிதர்மதித் திறமை என்னே.
- தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
- உலகாளச் சூழ்ந்த காமப்
- பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
- நும்முயிரைப் பிடிக்க நாளைச்
- சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
- ஞானசபைத் தலைவன் உம்மைக்
- கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
- இவ்வுலகில் குலாவு வீரே.
- குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
- டால்அதுதான் கொலையாம் என்றே
- வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
- சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
- பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
- சம்மதிக்கும் பேய ரேநீர்
- எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
- கஞ்சுவரே இழுதை யீரே.
- பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
- ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
- சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
- பற்பலரும் சித்த சாமி
- உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
- தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
- வரனளிக்கப் புதைத்தநிலை காரோ
- கண்கெட்ட மாட்டி னீரே.
- புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
- கருங்கடலில் போக விட்டீர்
- கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
- சுடுகின்ற கொடுமை நோக்கிக்
- கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
- கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
- தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
- புரிகுவதித் தருணம் தானே.
- இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
- துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
- அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
- என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
- மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
- திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
- நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
- மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
- பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
- இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
- ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
- ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
- வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
- எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
- கரிக்கின்றார் யாவர் அந்தச்
- செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
- செயல்எனவே தெரிந்தேன் இங்கே
- கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
- தமக்கேவல் களிப்பால் செய்ய
- ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
- வாய்மிகவும் ஊர்வ தாலோ.
- எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
- தம்உயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
- யாவர்அவர் உளந்தான் சுத்த
- சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
- இடம்எனநான் தெரிந்தேன் அந்த
- வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
- சிந்தைமிக விழைந்த தாலோ.
- கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
- தம்உயிர்போல் கண்டு ஞானத்
- தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
- பெருநீதி செலுத்தா நின்ற
- பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
- திருவாயால் புகன்ற வார்த்தை
- அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
- வார்த்தைகள்என் றறைவ ராலோ.
- மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
- உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
- அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
- கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
- எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
- செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
- திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
- சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.
- ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
- திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
- வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
- கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
- மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
- ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
- பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
- தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
- போற்றி நின்அருள் போற்றி நின்பொது
- போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
- போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
- போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
- போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
- போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
- போற்றி நின்முடி போற்றி நின்நடு
- போற்றி நின்அடி போற்றி போற்றியே.
- போற்று கின்றஎன் புன்மை யாவையும்
- பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
- ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
- கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
- காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
- காணக் காட்டிய கருத்த போற்றிவன்
- கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
- கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
- கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
- தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
- செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
- அள்ளக் குறையா வள்ளற் பொருளை
- அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
- பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
- ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
- பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- அபயம் பதியே அபயம் பரமே
- அபயம் சிவமே அபயம் - உபய
- பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
- விதத்தில் கருணை விளை.
- கருணா நிதியே அபயம் கனிந்த
- அருணா டகனே அபயம் - மருணாடும்
- உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்
- பொள்ளற் பிழைகள் பொறுத்து.
- உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
- ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
- கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
- கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
- வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
- வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
- குழக்கறியே349 பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
- குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
- உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
- துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்
- பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
- பணிக்கும் வேலைசெய் துண்டுடுத் தம்பலம் பரவுதற் கிசையீரே.
- மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி இருபிடிஊண் வழங்கில் இங்கே
- உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங் கவற்றைஎலாம் ஓகோ பேயின்
- விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
- இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் கொடுத்திழப்பர் என்னே என்னே.
- மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
- விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு கிடந்தழுது விளைவிற் கேற்பக்
- கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ
- துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா மணித்தேவைத் துதியார் அன்றே.
- சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
- சிறியவர் சிந்தைமாத் திரமோ
- பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
- புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
- கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
- கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
- எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
- இனிப்பிலே புகுகின்ற திலையே.
- நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
- நான்செயத் தக்கதே தென்பாள்
- செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
- தெய்வமே தெய்வமே என்பாள்
- வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
- விருப்பிலர் என்மிசை என்பாள்
- வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
- வருந்துவாள் நான்பெற்ற மகளே.
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
- என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
- பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
- உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
- முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
- இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் இலைஅதனால் எல்லாம் வல்லோய்
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் அருட்சோதி அளித்துக் காத்தல்
- உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா டுண்டோநீ உரைப்பாய் அப்பா.
- உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ
- என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும்
- அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை
- முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே.
- சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
- உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
- தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
- பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
- அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
- இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல்
- எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன்
- செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ.
- உடைய நாயகன் பிள்ளைநான் ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
- அடைய நான்அருட் சோதிபெற் றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
- மிடைய அற்புதப் பெருஞ்செயல் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
- தடைய தற்றநல் தருணம்இத் தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
- கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம் காணக் காட்டும்
- என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் வல்லவனே இலங்குஞ் சோதி
- மன்றுடைய மணவாளா மன்னவனே என்னிருகண் மணியே நின்னை
- அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா.
- திருநி லைத்துநல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க
- உருநி லைத்திவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
- இருநி லத்தவர் இன்புறத் திருவருள் இயல்வடி வொடுமன்றில்
- குருநி லைத்தசற் குருஎனும் இறைவநின் குரைகழற் பதம்போற்றி.
- குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
- சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
- தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
- இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
- கலக்கம் அற்றுநான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள்எந்நாள்
- இலக்கம் உற்றறிந் திடஅருள் புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண்
- துலக்க முற்றசிற் றம்பலத் தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே
- அலக்கண் அற்றிடத் திருவருள் புரியும்என் அப்பனே அடியேற்கே.
- அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
- அன்றுவந் தாண்டனை அதனால்
- துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
- சொல்லினேன் சொல்லிய நானே
- இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
- எனைஉல கவமதித் திடில்என்
- என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
- எய்துக விரைந்தென திடத்தே.
- செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
- தேவரும் முனிவரும் பிறரும்
- இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
- எந்தைநின் திருவருள் திறத்தை
- எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
- என்தரத் தியலுவ தேயோ
- ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
- உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.
- உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா
- உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே
- திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும்
- சிவபதத் தலைவநின் இயலைப்
- புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து
- புகன்றிடும் தரஞ்சிறி துளனோ
- கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த
- குருஎனக் கூறல்என் குறிப்பே.
- அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
- அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
- டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
- ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
- மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
- மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
- செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
- திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
- கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
- கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
- தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
- தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
- எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
- என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
- அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
- அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.
- என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
- எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
- நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
- நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
- தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
- சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
- பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
- பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
- தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
- தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
- ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
- உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
- இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
- இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
- அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
- அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.
- வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
- மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
- எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
- தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
- செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
- நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே
- பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த
- சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன்
- அன்னியனே அல்லேன் அறிந்து.
- ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
- நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
- ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
- சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே.
- ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
- சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
- நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
- ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை.
- அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும்
- ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே
- வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும்
- இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே.
- ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம்
- கூடியதென் றாரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும்வார்த்தை
- ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பற்பலவாய் உன்னேல் இன்னே
- பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் இன்புகலப் படிகண் டாயே.
- உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்
- உறுபசி உழந்துவெந் துயரால்
- வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
- மற்றிதை நினைத்திடுந் தோறும்
- எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
- எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
- கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
- குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்.
- ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அதுகொண் டிந்நாள்
- செய்வகை தெரிவித் தென்னைச் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்
- பொய்வகை அறியேன் வேறு புகலிலேன் பொதுவே நின்று
- மெய்வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே.
- உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
- ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
- இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
- எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.
- சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
- தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
- காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
- நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.
- வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
- வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
- கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
- கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
- பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
- பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
- விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
- வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான்
- வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு
- சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம்
- இத்தருணம் சத்தியமே என்று.
- உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
- இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
- நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
- தானே எனக்குத் தனித்து.
- தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன்
- மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம்
- இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி
- தன்னையுந்தந் துட்கலந்தான் றான்.
- சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக்
- கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க
- இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான்
- இனியான் மயங்கேன் இருந்து.
- உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
- என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
- வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
- குண்மைஇன்பம் செய்தும் உவந்து.
- அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய்
- துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே
- வெப்பூறு நீக்கிய வெண்று பூத்தபொன் மேனியனே
- உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே.
- அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
- அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
- அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
- ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
- சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
- மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
- மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.
- வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
- தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
- தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
- யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
- என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
- முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய்
- நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்350 மேவுபசும்
- பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய்.
- என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான்
- நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால்
- பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என்
- தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே.
- ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
- தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள்
- வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும்
- பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே.
- எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
- வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி
- நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன்
- கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.
- முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
- இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
- றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
- என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
- கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
- கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
- துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
- விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.
- செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
- ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
- சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
- இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
- வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து
- மலத்திலே கிடந்துழைத் திட்ட
- நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்
- நன்றுறச் சூட்டினை அந்தோ
- தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்
- சோதியே நின்பெருந் தயவைத்
- தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்
- தயவும்உன் தனிப்பெருந் தயவே.
- பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த
- பெருமநின் தன்னைஎன் றனக்கே
- சாருறு தாயே என்றுரைப் பேனோ
- தந்தையே என்றுரைப் பேனோ
- சீருறு குருவே என்றுரைப் பேனோ
- தெய்வமே என்றுரைப் பேனோ
- யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்
- யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த
- பொய்ம்மன மாயையைக் கணத்தே
- மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும்
- வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
- சொல்லிய பதியே மிகுதயா நிதியே
- தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே
- என்உயிர்க் கமுதமே என்தன்
- அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே
- அருள்நடம் புரியும்என் அரசே
- வன்பிலே விளைந்த மாயையும் வினையும்
- மடிந்தன விடிந்ததால் இரவும்
- துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்
- சூழலில் துலங்குகின் றேனே.
- உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
- ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
- செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
- சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
- மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
- மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
- பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
- பாடுகின் றேன்பொதுப் பாட்டே.
- படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
- பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
- பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
- பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
- வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
- வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
- நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
- நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.
- தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
- தனிமுதல் பேரருட் சோதிப்
- பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
- பராபர நிராமய நிமல
- உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
- உளத்ததி சயித்திட எனக்கே
- வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
- மாகடற் கெல்லைகண் டிலனே.
- யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
- என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
- ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
- ஒளிஉருக் காட்டிய தலைவா
- ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
- என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
- ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப்
- பரம்பரம் தருகின்ற தென்றோர்
- தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான்
- தமியனேன் உண்டனன் அதன்தன்
- இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ
- என்னுயிர் இனித்ததென் கரணம்
- சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம்
- தனித்தனி இனித்தன தழைத்தே.
- விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
- விளைந்தது விளைந்தது மனனே
- கண்ணெலாம் களிக்கக் காணலாம்
- பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
- எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
- ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
- உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
- ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
- வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
- வாரியைக் கண்டனம் மனமே
- அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
- ஆடலாம் அடிக்கடி வியந்தே
- உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
- ஓங்கலாம் உதவலாம் உறலாம்
- கள்எலாம் உண்டவண்டென இன்பம்
- காணலாம் களிக்கலாம் இனியே.
- சனிதொ லைந்தது தடைத விர்ந்தது தயைமி குந்தது சலமொடே
- துனிதொ லைந்தது சுமைத விர்ந்தது சுபமி குந்தது சுகமொடே
- கனிஎ திர்ந்தது களைத விர்ந்தது களிமி குந்தது கனிவொடே
- புனித மன்றிறை நடம லிந்தது புகழ்உ யர்ந்தது புவியிலே.
- உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
- பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
- புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
- திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.
- அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
- ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
- உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
- ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
- எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
- என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
- செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
- சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.
- அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்
- அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
- துடிவிளங்கக் கரத்தேந்தும் சோதிமலை மருந்தே
- சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
- பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்
- போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
- படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்
- பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.
- அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
- வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
- வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
- இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
- இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
- என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
- எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.
- கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
- கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
- துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
- தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
- விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
- வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
- அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
- அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
- துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
- வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
- விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
- செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
- தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
- ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
- உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
- தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
- என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
- எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும்
- இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான்
- மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம்
- வல்ல நாயகன் நல்லசீர் உடையான்
- அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
- அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.
- என்உடலும் என்உயிரும் என்பொருளும்
- நின்னஎன இசைந்தஞ் ஞான்றே
- உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே
- றொன்றும்இலை உடையாய் இங்கே
- புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும்
- போதாமல் புணர்ந்து கொண்டே
- தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென்
- கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ.
- என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி
- சயந்தன்னை எம்ம னோர்காள்
- பொன்னுரைக்கும் மணிமன்றில் திருநடனம்
- புரிகின்ற புனிதன் என்னுள்
- மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல்
- விளங்குகின்றான் மெய்ம்மை யான
- தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய்
- தருள்கின்றான் சகத்தின் மீதே.
- தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்
- தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
- பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
- புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
- என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
- இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
- நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்
- நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.
- கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
- கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
- அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
- அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
- உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
- உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
- இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
- இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
- காற்றாலே புவியாலே ககனமத னாலே
- கனலாலே புனலாலே கதிராதி யாலே
- கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
- கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
- வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
- மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
- ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
- எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
- எல்லா உலகமும் என்வசம் ஆயின
- எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
- எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
- எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
- எல்லா போகமும் என்போகம் ஆயின
- எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
- எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
- எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.
- சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
- தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
- என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
- எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
- புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
- புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
- தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
- தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- நீதியில் கலந்து நிறைந்தது நானும்
- நித்தியன் ஆயினேன் உலகீர்
- சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
- சத்தியச் சுத்தசன் மார்க்க
- வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
- விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
- தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
- தொலைந்தன தொலைந்தன எனைவிட்
- டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
- இரிந்தன ஒழிந்தன முழுதும்
- ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
- அழிவுறா உடம்பும்மெய் இன்ப
- ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
- உண்மைஇவ் வாசகம் உணர்மின்.
- பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
- இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
- அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
- நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.
- 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
- 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
- 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
- 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
- 351. தாழைப்பழம் - தேங்காய்.
- கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
- பையுள்292 உனக்கென்னை யோ - நெஞ்சே
- பையுள் உனக்கென்னை யோ.
- என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
- உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
- உன்னுவ தென்னைகண் டாய்.
- ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
- விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
- விக்கல் வராதுகண் டாய்.
- எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
- இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
- தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே
- தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே
- கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே
- கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே.
- எனக்கும் உனக்கும்
- இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
- ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
- அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
- அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
- யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
- விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
- விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே
- மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே
- ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ
- எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ.
- எனக்கும் உனக்கும்
- என்ன துடலும் உயிரும்336 பொருளும் நின்ன தல்ல வோ
- எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
- சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
- சிந்தை நினைக்கக் கண்ர் பெருக்கி337 உடம்பை நனைக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே
- அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே
- எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே
- எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
- அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
- விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
- மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
- எனக்கும் உனக்கும்
- தனிஎன்338 மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே
- தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே
- வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே
- மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
- என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
- உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
- உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
- அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
- அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
- நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
- எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
- எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ
- உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ
- என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ
- எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் இன்று வருதி யோ.
- எனக்கும் உனக்கும்
- நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
- நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
- நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
- நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
- எனக்கும் உனக்கும்
- நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே
- ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே
- சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே
- சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே.
- எனக்கும் உனக்கும்
- யாது கருதி என்னை ஆண்ட தைய ஐய வோ
- யானுன் அடிப்பொற் றுணைகட் குவந்து தொழும்பு செய்ய வோ
- ஓது கடவுட் கூட்டம் அனைத்தும் அடிமை அல்ல வோ
- உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்ல வோ.
- எனக்கும் உனக்கும்
- தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே
- தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே
- புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே
- புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே.
- எனக்கும் உனக்கும்
- தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
- தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
- நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
- நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே.
- எனக்கும் உனக்கும்
- ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
- இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
- மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
- மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே
- எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே
- நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே
- நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே
- விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே
- அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே
- அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே
- இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே
- அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே
- அன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
- அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
- பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
- பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
- எனக்கும் உனக்கும்
- கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
- காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
- ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
- எனக்கும் உனக்கும்
- அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
- அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
- பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
- பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே
- இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே
- தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே
- சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே.
- எனக்கும் உனக்கும்
- கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
- கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே
- தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
- தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே.
- எனக்கும் உனக்கும்
- என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
- என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
- பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
- புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே.
- எனக்கும் உனக்கும்
- என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
- என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
- புன்கண் ஒழித்துத் தெள்ளா ரமுதம் புகட்டி என்னை யே
- பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
- அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
- செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
- செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
- எனக்கும் உனக்கும்
- ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
- யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
- திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
- சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
- எனக்கும் உனக்கும்
- அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே
- ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே
- பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே
- பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
- விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
- பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
- பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
- எனக்கும் உனக்கும்
- வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே
- வஞ்ச வினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே
- எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே
- எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ
- எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ
- மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே
- வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.
- எனக்கும் உனக்கும்
- தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
- தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
- அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
- அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
- எனக்கும் உனக்கும்
- உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே
- உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே
- தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே
- சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே
- மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே
- உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே
- உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே
- எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே
- சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே
- தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
- கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
- உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
- உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்ல னோ
- எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்ல னோ
- முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டி யே
- மூவர்க் கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
- துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
- ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
- ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே.
- எனக்கும் உனக்கும்
- ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
- ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
- வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
- மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
- எனக்கும் உனக்கும்
- இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே
- என்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே
- அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே
- அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
- அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
- ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
- ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
- எனக்கும் உனக்கும்
- பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
- பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
- ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
- இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
- அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
- மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
- வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
- எனக்கும் உனக்கும்
- பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
- போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
- நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
- நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
- எனக்கும் உனக்கும்
- எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே
- எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே
- துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே
- தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
- அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
- பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
- போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
- எனக்கும் உனக்கும்
- உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே
- உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே
- மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே
- மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே.
- எனக்கும் உனக்கும்
- அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
- அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
- பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
- புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
- எனக்கும் உனக்கும்
- சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே
- சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே
- அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே
- அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.
- எனக்கும் உனக்கும்
- அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே
- ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே
- இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே
- ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே
- இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே
- முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே
- முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே.
- எனக்கும் உனக்கும்
- எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
- இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
- கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
- கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
- எனக்கும் உனக்கும்
- விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
- மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
- அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
- அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ
- எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ
- குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே
- கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே
- நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே
- புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலையே.
- எனக்கும் உனக்கும்
- சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
- தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
- ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
- உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
- எனக்கும் உனக்கும்
- அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
- அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
- இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
- என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
- எனக்கும் உனக்கும்
- காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன்
- கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன்
- சேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன்
- சிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே
- சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே
- ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன்
- எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே
- ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே
- மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன்
- மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- உன்னைக்கண்டு கொண்டேன் கண்ட வுடன்இங் கென்னை யே
- உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே
- என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே
- யாரும் கண்டு கொண்டார் இல்லை யாங்க தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன்
- வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன்
- குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன்
- கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன்
- கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன்
- விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன்
- விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
- அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
- மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
- வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே
- பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே
- பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே.
- எனக்கும் உனக்கும்
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
- செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
- தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
- திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே
- அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே
- படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே
- பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே
- அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே
- தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே
- தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
- வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
- நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே
- நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
- எனக்கும் உனக்கும்
- புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
- பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
- தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
- தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
- எனக்கும் உனக்கும்
- கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே
- கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே
- உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே
- உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே.
- எனக்கும் உனக்கும்
- அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
- அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
- எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
- எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
- துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே
- துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
- ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
- இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே
- பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே
- நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயி லோ
- நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ.
- எனக்கும் உனக்கும்
- சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
- சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
- என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
- எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
- எனக்கும் உனக்கும்
- அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
- அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
- இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
- என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே.
- எனக்கும் உனக்கும்
- உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே
- ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே
- தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே
- செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே.
- எனக்கும் உனக்கும்
- இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே
- எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே
- கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே
- களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே.
- எனக்கும் உனக்கும்
- சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே
- தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே
- முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே
- முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே.
- எனக்கும் உனக்கும்
- நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே
- நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே
- ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே
- உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே.
- எனக்கும் உனக்கும்
- பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே
- பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே
- என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே
- எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே.
- எனக்கும் உனக்கும்
- மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே
- மனிதர் கண்ணிற் பட்ட புல்லும் மரமும் தேவ ரே
- அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவ ரே
- அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவ ரே.
- எனக்கும் உனக்கும்
- வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ
- மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ
- ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ
- எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
- தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
- தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
- தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
- எனக்கும் உனக்கும்
- ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
- ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
- பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
- பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே
- இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே
- பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே
- புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
- அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
- பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
- பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே
- சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே
- குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே
- கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
- துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
- சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
- சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே
- அதன்பின் பிள்ளை ஆக்கிஅருள்இங் களித்த சோதி யே
- நன்றே மீட்டும் நேயன் ஆக்கிநயந்த சோதி யே
- நானும் நீயும் ஒன்றென் றுரைத்துநல்கு சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே
- நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே
- தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே
- தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே
- தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே
- ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே
- எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சோதி எவையும் விளங்க விளங்கும் சோதியே வாழி யே
- துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே
- சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே
- துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே.
- எனக்கும் உனக்கும்
- எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
- இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
- 336. உயிரும் உடலும் - ச. மு. க.
- 337. பெருகி - ச. மு. க.
- 338. தனியன் - பி. இரா., ச. மு. க.
- அன்புரு வானவர் இன்புற உள்ளே
- அறிவுரு வாயினீர் வாரீர்
- அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
- அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
- அடிக்கம லத்தீரே வாரீர்
- நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- அம்பர மானசி தம்பர நாடகம்
- ஆடவல் லீர்இங்கு வாரீர்
- பாடல்உ வந்தீரே298 வாரீர். வாரீர்
- ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
- இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
- உதயச் சுடரினீர் வாரீர். வாரீர்
- ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
- றீடணை யீர்இங்கு வாரீர்
- ஆடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
- ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
- ஆண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
- குள்ள துரைசெய்தீர் வாரீர்
- வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
- உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
- ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
- என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- உறவும் பகையும் உடைய நடையில்
- உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
- பிறவுநண் ணேன்இங்கு வாரீர். வாரீர்
- உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
- உள்ளத் திருந்தீரே வாரீர்
- விள்ளற் கரியீரே வாரீர். வாரீர்
- உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
- உய்யவல் லேன்இங்கு வாரீர்
- செய்யவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- உடையவ ரார்இக் கடையவ னேனுக்
- குடையவ ரேஇங்கு வாரீர்
- சடையவ ரே300 இங்கு வாரீர். வாரீர்
- உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
- உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
- இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
- உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
- துண்டி விரும்பினேன் வாரீர்
- உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
- உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற
- உத்தம ரேஇங்கு வாரீர்
- உற்ற துணையானீர் வாரீர். வாரீர்
- உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
- குற்றவர் மற்றிலை வாரீர்
- உற்றறிந் தீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
- ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
- தேற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
- ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
- ஓதிய நாதரே வாரீர்
- ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்
- என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
- இன்னுயிர் ஆயினீர் வாரீர்
- என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்
- எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
- எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்
- சொல்லா நிலையினீர் வாரீர். வாரீர்
- எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
- திச்சைகண் டீர்இங்கு வாரீர்
- அச்சம்த விர்த்தீரே வாரீர். வாரீர்
- எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
- எண்ணம் எனக்கில்லை வாரீர்
- வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். வாரீர்
- ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
- ஏதது சொல்லுவீர் வாரீர்
- ஈதல் உடையீரே வாரீர். வாரீர்
- ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
- தையர் தொழநின்றீர் வாரீர்
- துய்யர் உளநின்றீர் வாரீர். வாரீர்
- ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
- ஒப்பாரி அல்லகாண் வாரீர்
- முப்பாழ் கடந்தீரே வாரீர். வாரீர்
- ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
- உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
- பெண்மை304 இடங்கொண்டீர் வாரீர். வாரீர்
- ஓசையின் உள்ளேஓர் ஆசை306 உதிக்கமெல்
- ஓசைசெய் வித்தீரே வாரீர்
- பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்
- கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
- கடல்பொங்கு கின்றது வாரீர்
- உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்
- கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
- கண்மணி யீர்இங்கு வாரீர்
- உண்மணி யீர்இங்கு வாரீர். வாரீர்
- 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
- 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
- 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,N' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
- 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
- 305. பாங்காரச் - பி. இரா.
- 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
- 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
- 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
- இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
- இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
- எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
- இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
- இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
- இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்
- உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர்
- கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்
- கண்ணனைய காதலரே அணையவா ரீர்
- அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்
- அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர்
- இலகுசபா பதியவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்
- சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர்
- உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்
- உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர்
- பொறுமைமிக உடையவரே அணையவா ரீர்
- பொய்யாத வாசகரே அணையவா ரீர்
- இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
- ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
- ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
- ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
- உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
- ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
- ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
- புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
- பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
- வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
- மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
- திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
- ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
- அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
- ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
- என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
- ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
- திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
- பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
- பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
- உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
- உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
- இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
- வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
- மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
- மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
- கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
- கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
- ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
- ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
- ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
- உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
- காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
- கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
- ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
- சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
- கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
- கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
- சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
- சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
- என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
- ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
- உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
- கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
- உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
- உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
- தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
- எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
- என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
- என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
- என்னுடையஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
- என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
- எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
- என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
- வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
- மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
- சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
- தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
- ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
- உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
- ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
- திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
- துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
- சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
- அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
- சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
- விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
- வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
- பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
- பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
- அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
- விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
- எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
- என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
- இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
- ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
- அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
- சூழலில் உண்டது சொல்லள வன்றே
- எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
- இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
- விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
- வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
- அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
- என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
- காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
- கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
- ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
- ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
- ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
- சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
- பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
- பாரிடை வானிடைப் பற்பல காலம்
- விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
- மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
- அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஆடேடி பந்து ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
- ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்
- கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து
- ஊறந்த மில்லா மருந்து - எனக்
- குள்ளே கலந்த உறவா மருந்து. ஞான
- உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
- உயிருக் கனாதி உறவா மருந்து
- தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
- சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து. ஞான
- வானடு வான மருந்து - என்னை
- மாமணி மேடைமேல் வைத்த மருந்து
- ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
- துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. ஞான
- உன்னற் கரிதா மருந்து - எனக்
- குள்ளும் புறத்தும் உலாவு மருந்து
- தன்னந் தனித்த மருந்து - சுத்தச்
- சாக்கிரா தீதச் சபேச மருந்து. ஞான
- வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
- வெளியும் கடந்து விளங்கு மருந்து
- ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
- ஒளியும்தா னாகிய உண்மை மருந்து. ஞான
- ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்
- ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி
- ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா
- உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
- தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
- பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்
- பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. சிவசிவ
- மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை
- வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி
- இனமான உள்ளக ஜோதி - சற்றும்
- ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி. சிவசிவ
- ஒன்றான பூரண ஜோதி - அன்பில்
- ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
- என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்
- என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி. சிவசிவ
- சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
- சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
- உவமையில் லாப்பெருஞ் சோதி - என
- துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
- செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
- புத்தமு தாகிய ஜோதி - சுக
- பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. சிவசிவ
- சுகமய மாகிய ஜோதி - எல்லா
- ஜோதியு மான சொரூபஉட் ஜோதி
- அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி
- தானந்த ஜோதி சதானந்த ஜோதி. சிவசிவ
- கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்
- கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி
- எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான்
- எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி. சிவசிவ
- அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
- ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
- இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
- கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. சிவசிவ
- ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
- அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
- தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தற்பர மேவடி வாகி - அது
- தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
- சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பாடல் மறைகளோர் கோடி - அருட்
- பாத உருவ சொரூபங்கள் பாடி
- தேட இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
- சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
- திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
- எல்லா உலகும் இயம்புதல் சும்மா
- செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
- உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
- செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
- உளமும் எனக்கே உதவிய தன்றித்
- திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
- அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
- அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
- அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
- பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
- போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
- அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
- ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
- பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
- பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
- ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
- அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
- எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
- எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
- மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
- மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
- ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
- ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
- ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
- டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன
- ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
- ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
- காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
- காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன
- பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
- பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
- வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
- வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
- இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
- இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
- ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
- உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
- 313. உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
- அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
- இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
- இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். இவர்க்கும்
- ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
- அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
- நாரா யணன்விழி நண்ணிய பாதம்
- நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய
- தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
- தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
- மூவரும் காணா முழுமுதற் பாதம்
- முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய
- துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
- சுகமய மாகிய சுந்தரப் பாதம்
- பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
- பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய
- தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
- தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
- ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
- உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய
- எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
- இறவா நிலையில் இருத்திய பாதம்
- புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
- பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய
- உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
- சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே296 அபயம்
- ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
- என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே அபயம்
- உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
- சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம்
- சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
- புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
- செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
- சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
- இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
- இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
- ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
- அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
- ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
- என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
- சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
- சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
- நித்திய ஞான நிறையமு துண்டனன்
- நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
- சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
- சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
- மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
- மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
- ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
- வீதிஉண் டாச்சுத டி - அம்மா
- வீதிஉண் டாச்சுத டி. ஆணி
- மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
- மணிவாயில் உற்றேன டி - அம்மா
- மணிவாயில் உற்றேன டி. ஆணி
- அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
- அமுதமும் உண்டேன டி - அம்மா
- அமுதமும் உண்டேன டி. ஆணி
- என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
- இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
- பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
- பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
- தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
- சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
- உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
- உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.
- எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
- எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
- எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
- எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.
- கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி
- கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
- அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
- அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.
- வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
- வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
- சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
- சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.
- கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
- கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
- ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
- ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.
- மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
- மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
- சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
- செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.
- துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
- தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
- தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
- செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
- சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
- தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
- எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
- இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.
- என்னுயிர் உடம்பொடு சித்தம தே
- இனிப்பது நடராஜ புத்தமு தே.
- உத்தர ஞான சிதம்பர மே
- சித்திஎ லாந்தரும் அம்பரமே.
- சகள உபகள நிட்கள நாதா
- உகள சததள மங்கள பாதா.
- உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
- தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
- சிற்சபை அப்பனை உற்றே னே
- சித்திஎ லாம்செயப் பெற்றே னே.
- கனக சபாபதி பசுபதி நவபதி
- அனக உமாபதி அதிபதி சிவபதி.
- உபல சிரதல சுபகண வங்கண
- சுபல கரதல கணபண கங்கண.
- அபயவ ரதகர தலபுரி காரண
- உபயப ரதபத பரபரி பூரண.
- அகரஉ கரசுப கரவர சினகர
- தகரவ கரநவ புரசிர தினகர.
- ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
- தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே.
- நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
- நடராஜ நடராஜ நடராஜ குருவே.
- நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம்
- பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்.
- அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே
- வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே.
- தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே
- அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே.
- சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
- ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.
- வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
- ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.
- உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
- பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
- அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே
- அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே.
- அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே
- அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.
- உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
- உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.
- ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
- உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.
- அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே
- அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.
- எறிவில்உலகில்342 உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே
- எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.
- வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
- மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.
- களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே
- களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே.
- 342. இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
- உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
- அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.
- ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது
- ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
- சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது
- ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
- அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி
- மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி.
- அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
- எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.
- பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது
- பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது
- அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம்
- அரஅர அரஅர அரஅர அரஅர.
- கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்
- கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
- சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்
- சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.
- விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
- விகிர்தா விபவா விமலா அமலா
- வெஞ்சேர்343 பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.
- உருவே உயிரே உணர்வே உறவே
- உரையே பொருளே ஒளியே வெளியே
- ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர344 நம்பர னே.
- 343. வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு.
- 344. உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு.
- பசியாத அமுதே பகையாத பதியே
- பகராத நிலையே பறையாத சுகமே
- நசியாத பொருளே நலியாத உறவே
- நடராஜ மணியே நடராஜ மணியே.
- சிவஞான நிலையே சிவயோக நிறைவே
- சிவபோக உருவே சிவமான உணர்வே
- நவநீத மதியே நவநாத கதியே
- நடராஜ பதியே நடராஜ பதியே.
- துதிவேத உறவே சுகபோத நறவே
- துனிதீரும் இடமே தனிஞான நடமே
- நதியார நிதியே அதிகார பதியே
- நடராஜ குருவே நடராஜ குருவே.
- வயமான வரமே வியமான பரமே
- மனமோன நிலையே கனஞான மலையே
- நயமான உரையே நடுவான வரையே
- நடராஜ துரையே நடராஜ துரையே.
- தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
- தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
- திருவளர் உருவே உருவளர் உயிரே
- திருநட மணியே திருநட மணியே.
- உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே
- ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
- செயிரறு பதியே சிவநிறை நிதியே
- திருநட மணியே திருநட மணியே.
- மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே
- விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே
- திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே
- திருநட மணியே திருநட மணியே.
- தூய சதாகதியே நேய சதாசிவமே
- சோம சிகாமணியே வாம உமாபதியே
- ஞாய பராகரமே காய புராதரமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
- தீன சகாநிதியே சேகர மாநிதியே
- நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
- எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
- என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
- வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
- மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
- நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
- நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
- கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
- எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
- இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
- மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
- மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
- பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
- பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
- மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
- எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
- எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
- அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
- ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
- பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
- பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
- மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
- ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
- என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
- தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
- தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
- ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
- தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
- மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
- என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
- என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
- மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
- விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
- அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
- அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
- கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே
- கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
- எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே
- என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
- உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
- உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
- அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்
- அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.
- கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
- கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
- எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
- தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
- பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
- பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
- உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
- உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
- மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
- மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
- தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
- சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
- தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
- திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
- உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
- துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
- மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
- குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
- குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
- தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
- சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
- அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
- அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்
- மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
- நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்
- நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
- இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி
- எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
- இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்
- என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.
- என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
- என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
- பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
- புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
- அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
- அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
- மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
- மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.
- வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
- நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
- நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
- கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
- கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
- தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
- தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
- என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
- எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
- பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
- புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
- புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
- புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
- உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
- உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
- ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
- என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
- ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
- உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
- தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
- செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
- ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
- இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
- என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
- அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
- அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
- எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
- இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
- நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
- நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
- திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
- சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
- பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
- துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
- பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
- படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
- எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
- சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
- தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
- தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
- மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
- முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
- கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
- அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
- திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
- பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
- பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
- உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
- ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே
- கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
- பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்
- படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
- அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ
- என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
- பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
- சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
- திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
- ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
- ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
- ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
- உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
- நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
- நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
- போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
- புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
- வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
- விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
- வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
- மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
- புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
- பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
- எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
- இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
- பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
- பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
- அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
- ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
- குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
- புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
- புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
- அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
- அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
- விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
- மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
- இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
- எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
- அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
- அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
- என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
- சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
- துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
- சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
- பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
- பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
- இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
- ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
- அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
- ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
- முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
- முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
- விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
- வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
- பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
- பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
- மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
- விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
- கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
- களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
- மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
- மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.
- தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
- சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
- இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
- இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
- எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
- என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
- சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
- சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
- காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
- கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
- கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
- குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
- ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
- அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
- தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
- தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
- துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
- ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
- ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
- என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
- ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.
- ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
- ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
- வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
- விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
- தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
- சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
- உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
- வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
- துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
- துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
- இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
- இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
- ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்
- கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ
- வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ
- விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்
- சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே
- ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
- வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
- ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே
- ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
- திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
- உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
- வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
- காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
- கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
- ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
- உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
- சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
- இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
- இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
- கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
- கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
- துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
- சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
- உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
- உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.
- என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்
- எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
- தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்
- தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
- பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்
- பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
- மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய
- மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.
- நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
- நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
- வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
- வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
- தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
- திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
- தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
- சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
- ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
- இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
- யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
- செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
- தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
- பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
- படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
- தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும்
- துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே
- அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே
- அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே
- கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம்
- குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ
- எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ்
- இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே.
- நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
- நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
- வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
- மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
- தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
- தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
- ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
- ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
- வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
- வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
- தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
- தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
- தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
- திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
- யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
- என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
- உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
- உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
- துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
- சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
- பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
- பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
- அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
- ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.
- மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
- மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
- சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
- சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
- பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
- பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
- சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
- தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
- இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
- மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
- விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
- இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
- இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
- பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
- பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
- காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
- கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
- கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
- குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
- நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
- நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
- மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
- வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
- சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
- சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
- ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
- அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
- ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
- உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
- சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
- சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
- நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
- ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
- உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
- வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
- மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
- தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
- சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- 367. இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர்படியில் உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி ஜீவசாட்சி மாலையில்அவர்கள் எழுதி உள்ளது 'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.
- 368. இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
- 369. ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.
- 370. பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.
- 371. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 372. புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.
- தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
- இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
- இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
- மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
- மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
- கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
- களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
- சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
- சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
- இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
- இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
- சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
- தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
- செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
- திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
- என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
- இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
- பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
- பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
- தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
- சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
- மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
- வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.
- 374. இத்திருப்பாட்டின் கீழ் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகளால்எழுதப்பெற்றுள்ளது.
- 375. இத்திருப்பாட்டின் கீழ் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துளேன்"என அடிகளால் எழுதப்பெற்றுள்ளது.