- எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க உரைக்கும் இன்சொலினார்
- தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
- மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் வழியே பழிசெல் வழிஅன்றோ
- தெட்டிற் பொலியும் விழியாய்நான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
- அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
- பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
- எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா
- தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே
- எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
- பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
- ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
- இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
- எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
- சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
- சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
- மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
- மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
- தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே
- எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே
- துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே
- தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
- எட்டும் படிசெய்தீர் வாரீர்
- எட்டுரு வாயினீர் வாரீர்.301 வாரீர்
- எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே
- அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே.