- எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்
- றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன
- எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற
- அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் - செவ்வேளை
- மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும்
- எக்களித்து வாழ்கின்றேன் யான்.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
- இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
- தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
- சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
- இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
- எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
- அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
- அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
- எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ
- அவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே.
- எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
- அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
- அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
- அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
- அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
- அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே
- எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
- அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே
- எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும்
- அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும்
- செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி
- ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.
- எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
- என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
- செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
- திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
- அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
- அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
- ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
- எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
- அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
- அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
- ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
- ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
- செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
- இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
- சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
- என்மார்க்கம் காண்பேன் இனி.
- எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
- கரிக்கின்றார் யாவர் அந்தச்
- செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
- செயல்எனவே தெரிந்தேன் இங்கே
- கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
- தமக்கேவல் களிப்பால் செய்ய
- ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
- வாய்மிகவும் ஊர்வ தாலோ.
- எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
- இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.