- ஏக வுருவா மருந்து - மிக்க
- ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து
- சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்
- சோதியென் றன்பர் துதிக்கு மருந்து. - நல்ல
- ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
- ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
- ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- ஏகா தசநிலை யாததி னடுவே
- ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே
- ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
- இயற்கையோ செயற்கையோ சித்தோ
- தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
- திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
- யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
- உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
- ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
- மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
- மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
- தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
- ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
- எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
- ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
- ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
- ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
- இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
- சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஏக பராபர யோக வெளிக்கப்பால்
- ஏக வெளிநின்றீர் வாரீர்
- ஏகர் அனேகரே வாரீர். வாரீர்
- ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
- றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
- தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
- ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
- றேகாத லாற்சொன்னீர் வாரீர்
- வேகாத காலினீர் வாரீர். வாரீர்
- ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள்
- என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
- சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத்
- தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி. சிவசிவ
- ஏகாந்த சர்வேத சமோதம
- யோகாந்த நடேச நமோநம.
- ஏக சதாசிவமே யோக சுகாகரமே
- ஏம பராநலமே காம விமோசனமே
- நாக விகாசனமே நாத சுகோடணமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.