- ஏச்சிரா மங்கலத்தோ டின்பந் தரும்பாச்சி
- லாச்சிரா மஞ்சேர் அருள்நிலையே - நீச்சறியா
- ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்
- பேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக்
- ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக்
- காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த
- விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக்
- கண்டுஞ் சிரங்குவியாக் கை.
- ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந்
- தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான்
- கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்
- கெல்லா நலமுமுள தே.
- ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
- தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
- கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
- ஈசனத்தன் அம்பலவ னே.
- ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
- ஈசான மேலென்றீர் வாரீர்
- ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்