- ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே மயக்குகின்ற
- வசியர் மிகநீ ரென்றேனெம் மகன்கா ணென்றார் வளர்காமப்
- பசிய தொடையுற் றேனென்றேன் பட்ட மவிழ்த்துக் காட்டுதியே
- லிசையக் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே வுருக்குகின்ற
- வசியர் மிகநீ ரென்றேனென் மகனே யென்றார் வளர்காமப்
- பசிய துடையே னென்றேனுட் பணியல் குலுமப் படியென்றார்
- நிசிய மிடற்றீ ராமென்றேன் நீகண் டதுவே யென்றாரே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.