- ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்
- திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்
- ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்
- வெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்
- ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
- பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
- எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
- கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.
- ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
- வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றா
- ரெண்கணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிவையதற்கென்
- றெண்சொன் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
- வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றார்
- எண்க ணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிதற்கென்றார்
- அண்கொ ளணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
- தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
- ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
- உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
- பெண்மை304 இடங்கொண்டீர் வாரீர். வாரீர்