- கீயென்பா ரன்றியன்னை யென்பயத்தா னின்சோற்றில்
- ஈயென்ப தற்கு மிசையாள்காண் - ஈயென்பார்க்
- கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்
- பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்
- கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
- தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
- வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
- ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.
- கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது
- கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமா ரே.
- கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்
- கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமா ரே.
- கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்
- கேயடிமை கொண்டாரன்று பாங்கிமா ரே.
- கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்
- நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்
- ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்
- பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.