- கெண்ணுஞ் சிலர்மண் ணிடுவா ரெனக்கந்த
- மண்ணுங் கொடுக்கமனம் வாராது - அண்ணுறுமென்
- கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்
- எண்ணப் படுமோவென் றெண்ணிலையோ - எண்ணத்தில்
- கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம
- இவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில்
- கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
- கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
- அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனைநீ
- அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
- தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
- தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
- மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
- வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே.