- சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்
- விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் - மெச்சுகின்ற
- சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்
- பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட
- மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி
- உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே.
- சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
- தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
- சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
- பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
- அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
- மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சச்சிதா னந்த உருவாண்டி - பர
- தற்பர போகந் தருவாண்டி
- உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
- உத்தம தேவனைப் பாடுங்கடி.
- சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
- அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
- மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே