- ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
- சுத்தமணியே அரியநல்
- துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
- துலங்குமணி யேஉயர்ந்த
- ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
- தானந்த மானமணியே
- சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
- சமரச சுபாவமணியே
- நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
- நினைவிலமர் கடவுண்மணியே
- நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
- நித்யஆ னந்தமணியே
- ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
- கன்புதவும் இன்பமணியே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
- மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
- ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
- ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
- ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
- ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
- வீதிஉண் டாச்சுத டி - அம்மா
- வீதிஉண் டாச்சுத டி. ஆணி
- ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
- ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
- ஜோதி ஜோதி ஜோதி யருட்
- ஜோதி ஜோதி ஜோதி சிவம்.