- நஞ்சைக் களத்துவைத்த நாதவெனத் தொண்டர்தொழ
 - அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே - நெஞ்சடக்கி
 - நஞ்சமெலாங் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத
 - வஞ்சமெலா மென்கை வசங்கண்டாய் - அஞ்சவரும்
 - நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
 - பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
 - மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
 - பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே.
 - நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
 - நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
 - தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
 - சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.