- நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற
- மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே - விண்ணினிடை
- நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத்
- தண்பனையூர் மேவுஞ் சடாதரனே - பண்புடனே
- நண்ணியுனைப் போற்றுகின்ற நல்லோர்க் கினியசிவ
- புண்ணியமென் றாலெனக்குப் போராட்டம் - அண்ணலுனை
- நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்
- எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் - எண்ணுகின்ற
- நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்
- புண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம்
- நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
- மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
- அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
- அம்மையார் போனடந்தார் ஆர்.
- நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
- நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
- எண்ணும் என்மொழி குருமொழி ஆக
- எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
- பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
- உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
- எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
- கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
- பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
- நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
- கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி
- உண்ணேனோ ஆனந்தக் கண்ர்கொண் டாடிஉனக் குகப்பாத் தொண்டு
- பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே.
- நண்ணாத வஞ்சர் இடம்நாடி நெஞ்சம் நனிநொந்து நைந்து நவையாம்
- புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம்பொன் அடியை
- எண்ணாத பாவி இவன்என்று தள்ளின் என்செய்வ துய்வ தறியேன்
- தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு தணிகா சலத்தி றைவனே.
- நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
- புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா.
- நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
- பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
- நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது
- நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
- எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை
- யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
- பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்
- பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
- தண்புடைநன் மொழித்திரளும்354 சுவைப்பொருளும் அவைக்கே
- தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.
- நண்ணிய மதவெறி பலபல அவையே
- நன்றற நின்றன சென்றன சிலவே
- அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
- அலைதரு கின்றனர் அலைவற மகனே
- புண்ணியம் உறுதிரு வருள்நெறி இதுவே
- பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
- தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.