- நல்வாயி லெங்கு நவமணிக்குன் றோங்குதிரு
- நெல்வாயி னின்றொளிரு நீளொளியே - செல்வாய்த்
- நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
- நெல்வேலி உண்மை நிலயமே - வல்வேலை
- நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற
- நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே - சொல்வண்ணம்
- நல்லறிவே என்னைநெடு நாட்பகைத்த தன்றிமற்றைப்
- புல்லறிவே என்னுட் பொருள்கண்டாய் - சொல்லவொணா
- நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்
- செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த
- நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
- இல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி
- நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்
- செல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம்
- நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்
- சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த
- நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
- சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
- இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
- சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே.
- நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ
- ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன்
- வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்
- றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங்
- குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ
- லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
- கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய
- வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ
- செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக
- ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்ல நீறிடா நாய்களின் தேகம்
- நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
- வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
- வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
- சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
- சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
- அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்அமு தனையார் நின்திரு வடிக்கே நண்புவைத் துருகுகின் றனரால்
- புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பதொன் றறியேன்
- சொல்அமு தனைய தோகைஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக்
- கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ கடையனேன் கழறுவ தென்னே.
- நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன்
- நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண்
- சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ
- தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன்
- வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே
- மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண்
- செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன்
- பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
- எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
- தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.
- நல்ல மருந்திம் மருந்து - சுகம்
- நல்கும் வைத்திய நாத மருந்து.
- நல்ல மருந்திம் மருந்து - சுகம்
- நல்கும் வைத்திய நாத மருந்து.
- நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார்
- வலத்திற் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
- நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித் தையோ எனைத்தமது
- குலத்திற் சேரார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல்
- மல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே
- பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே
- அல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே.
- நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
- சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
- நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
- வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.
- நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
- அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
- சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
- வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே.
- நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
- அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே
- மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
- நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
- வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
- நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
- வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
- வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
- இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
- இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
- எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.
- நல்லவா அளித்த நல்லவா எனையும்
- நயந்தவா நாயினேன் நவின்ற
- சொல்லவா எனக்குத் துணையவா ஞான
- சுகத்தவா சோதிஅம் பலவா
- அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
- ஆண்டவா தாண்டவா எல்லாம்
- வல்லவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
- வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும்
- நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற
- சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து.
- நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
- நான்செயத் தக்கதே தென்பாள்
- செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
- தெய்வமே தெய்வமே என்பாள்
- வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
- விருப்பிலர் என்மிசை என்பாள்
- வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
- வருந்துவாள் நான்பெற்ற மகளே.
- நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
- நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
- வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
- மந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய
- நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
- நல்வரம் ஈயும் தயாநிதி யே.
- நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம்
- பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்.