- நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்தகடு
- வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே - வாய்த்த
- நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
- போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி
- நோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை
- ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்
- நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
- தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
- ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
- நோய்கள் கொண்டிடும்
- பேய்கள் பற்பலர்
- தூய்தன் ஒற்றியூர்க்
- கேய்தல் இல்லையே.
- நோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன்
- தாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச்
- சேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம்
- தூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே.
- நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
- சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
- பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
- யார்உளர்நீ சற்றே அறை.