- பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்
- அள்ளியிடுந் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும்
- பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
- எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
- கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
- உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே.
- பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
- வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
- உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
- கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
- வளமெலா நிறைந்த மாணிக்க மலையே
- பளித தீபக சோபித பாதா
- லளித ரூபக ஸ்தாபித நாதா.