- தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
- தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
- தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
- தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
- தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
- தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
- சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
- தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
- தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
- தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
- சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
- தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
- மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
- மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
- வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
- வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந் தருளும்பதம்
- மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
- வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
- மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
- மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
- என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
- என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
- என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
- என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்
- என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
- என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
- என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
- என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
- சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்
- சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
- கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதரு
- நல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே - சொல்லுந்
- சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
- பல்லவ னீச்சரத்தெம் பாவனமே - நல்லவர்கள்
- அஞ்சனூர்51 செய்ததவத் தாலப் பெயர்கொண்ட
- கஞ்சனூர் வாழுமென்றன் கண்மணியே - அஞ்சுகங்கள்
- கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத்தொண்டர்
- எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே - மண்ணுலகில்
- கரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டங் கொள்ளும்
- பெரும்புலியூர் வாழ்கருணைப் பேறே - விரும்பிநிதம்
- நற்குடியு மோங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
- கற்குடியிற் சந்தான கற்பகமே - சிற்சுகத்தார்
- பிற்சநந மில்லாப் பெருமை தருமுறையூர்ச்
- சற்சனர்சேர் மூக்கீச் சரத்தணியே - மற்செய்
- அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும்
- கருகாவூர் இன்பக் கதியே - முருகார்ந்த
- தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
- ஓங்குபழை யாறையிலென் னுள்ளுவப்பே - பாங்குபெற
- துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
- மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்
- காணு மருந்துறையிக் காமர்தல மென்றெவரும்
- பேணு பெருந்துறையிற் பெம்மானே - ஏணுடன்கா
- ஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி
- நாட்டும் பெருநறையூர் நம்பனே - காட்டும்
- பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும்
- அரிசிற் கரைப்புத்தூ61 ரானே - தரிசனத்தெக்
- திந்நிலத்தும் வானாதி யெந்நிலத்து மோங்குபெரு
- நன்னிலத்து வாழ்ஞான நாடகனே - மன்னுமலர்
- காமனதீ சங்கெடவே கண்பார்த் தருள்செய்த
- ராமனதீ சம்பெறுநி ராமயனே - தோமுண்
- வருவேளூர் மாவெல்லா மாவேறுஞ் சோலைப்
- பெருவேளூர் இன்பப் பெருக்கே - கருமை
- பாலூர் நிலவிற் பணிலங்கள் தண்கதிர்செய்
- நாலூரில் அன்பர்பெறு நன்னயமே - மேலூரும்
- பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும்
- இரும்பூளை மேவி யிருந்தோய் - விரும்பும்
- விரதப் பெரும்பாழி விண்ணவர்க ளேத்தும்
- அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் - சரதத்தால்
- நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
- நெல்வேலி உண்மை நிலயமே - வல்வேலை
- வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
- பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே - தீண்டரிய
- நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக்
- கோவலூர் வீரட்டங் கொள்பரிசே - ஆவலர்மா
- பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும்
- முண்டீச் சுரத்தின் முழுமுதலே - பெண்தகையார்
- ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோங்குபுகழ்
- ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன
- கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோற்கொடுத்த
- வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே - பண்பார்க்கு
- போற்றுந் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
- சாற்றும் புகழ்வேத சாரமே - ஊற்றுறுமெய்
- எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும்
- முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே - மல்லல்பெறு
- ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
- கீர்த்திபெற்ற நல்வேத கீதமே - கார்த்திரண்டு
- வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
- திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம்
- கன்றுமுகங் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதல்லால்
- என்று முகமலர்ச்சி யேற்றதிலை - நன்றுபெறு
- கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டிற்
- கொள்ளிவாய்ப் பேய்போற் குதித்ததுண்டு - ஒள்ளியரால்
- வாம்பலன்கொண் டோர்கள் மறந்தும் பெறாக்கொடிய
- சோம்பலென்ப தென்னுடைய சொந்தங்காண் - ஏம்பலுடன்
- எண்ணென்றால் அன்றி யிடர்செய் திடுங்கொடிய
- பெண்ணென்றால் தூக்கம் பிடியாது - பெண்களுடன்
- பேர்க்கும்விருப் பெய்தாத பெண்பேய்கள் வெய்யசிறு
- நீர்க்குழியே யான்குளிக்கு நீர்ப்பொய்கை - சீர்க்கரையின்
- ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
- ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத
- நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்
- சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான்
- கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட
- ஆண்மைக்கு நானென்றா லாகாது - வாண்மைபெறும்
- வேய்த்தவள வெற்பெடுத்த வெய்யஅரக் கன்தனக்கும்
- வாய்த்தவர மெல்லாம் வழங்கினையே - சாய்த்தமன
- வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
- பாம்பையெல் லாந்தோளிற் பரித்தனையே - நாம்பெரியர்
- தொன்மைபெருஞ் சுந்தரர்க்குத் தோழனென்று பெண்பரவை
- நன்மனைக்குத் தூது நடந்தனையே - நன்மைபெற
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்
- பேர்சான்ற இன்பம் பெரிது.
- ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
- பேறு மிகத்தான் பெரிது.
- பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்
- பெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் - திருந்தாத
- பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
- அரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய
- காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்
- சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச்
- வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்
- தேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும்
- பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்
- சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக
- ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
- சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்
- பேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்
- சேடாகச் செய்யவல்ல சித்தனெவன் - சேடாய
- வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்
- திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா
- கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்
- செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா
- பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்
- கண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது
- கன்பர்க் கருளும் அரசே அமுதேபே
- ரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று
- மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்
- நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய்
- தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
- மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற
- அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த
- கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில்
- ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்
- தாயாகி வந்த தயாளனெவன் - சேயாக
- முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு
- முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு
- எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்
- திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற
- தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்
- சேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது
- ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை
- ஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே
- காதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய
- ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா
- வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை
- நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில்
- மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்
- நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
- சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்
- சார்வரத வொண்கைத் தலத்தழகும் - பேரரவப்
- வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்
- அன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே
- செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா
- தஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற
- அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்
- நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்
- தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
- ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்
- ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்
- நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும்
- வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்
- கொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம்
- வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
- ஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற
- வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்
- றென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ
- பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்
- சேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் - சார்ந்தாங்கு
- பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்
- எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு
- பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்
- நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்
- வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
- வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்
- பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்
- பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக்
- செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்
- கெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே - செவ்வைபெறும்
- செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி100யது
- துப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்10
- அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்
- செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார்
- முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்
- துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்
- ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது
- கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்
- ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்
- கேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ - நாடிலவர்
- கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்110கல்லணைத்துக்
- கொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார்
- நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்
- சென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை
- பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
- மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால்
- நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே
- பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை
- பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
- ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்
- ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் - என்னிலுன்றன்
- ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத
- செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
- இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே114 - மல்லல்பெறத்
- நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற
- தாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை
- பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்
- கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த
- பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்
- அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்
- மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்
- பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ
- தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்
- என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்
- இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்
- கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்
- சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ
- அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்
- சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்
- சோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந்
- காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்
- ஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்
- இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்
- துன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய
- ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
- வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்
- நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய
- தன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம்
- சைவமெங்கே வெண்ற்றின் சார்பெங்கே மெய்யான
- தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே
- மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்
- பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால்
- தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்
- கோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள்
- நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்
- சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த
- நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து
- மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்
- அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்
- அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே
- விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்
- செஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய்
- நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
- ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்
- தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்
- நேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு
- வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்
- தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு
- சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த
- சாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத்
- தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்
- பேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின்
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
- யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள்
- வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
- ஒளியாகி நின்ற உனை.
- அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
- பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
- வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
- எம்பெருமான் நீவாழ் இடம்.
- மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
- பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
- விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
- பட்டால் வருமே பதம்.
- ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக்
- காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த
- விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக்
- கண்டுஞ் சிரங்குவியாக் கை.
- பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
- பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
- சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
- தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
- எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
- அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின்
- தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந்
- நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்.
- எம்பரவை134 யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
- தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வெம்பணையாய்
- வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
- மாயப்பெயர் நீண்ட மால்.
- ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
- பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
- நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
- வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
- பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
- மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
- பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
- பொற்றாள் பொறாஎம் புலம்பு.
- எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
- பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
- நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
- அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
- என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
- உன்னார் உயிர்க்குறுதி உண்டோதான் - பொன்னாகத்
- தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த138வர்க்குமற்றை
- யார்க்கும் புகலுன் அருள்.
- வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான்
- பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப்
- பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான்
- வெறுத்தால் இனிஎன்செய் வேன்.
- என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே
- நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும
- யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப்
- போதோ அருள்வாய் புகல்.
- இண்டைச் சடையோய் எனக்கருள எண்ணுதியேல்
- தொண்டைப் பெறுமென் துயரெல்லாம் - சண்டைக்கிங்
- குய்ஞ்சே139 மெனஓடும் ஓட்டத்திற் கென்னுடைய
- நெஞ்சே பிறகிடுங்காண் நின்று.
- அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
- அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
- களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
- கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
- உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
- ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
- பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
- பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
- வாயாகி வாயிறந்த மவுன மாகி
- மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
- காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
- கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
- தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
- தானாகி நானாகிச் சகல மாகி
- ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
- ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.
- அரிதாகி அரியதினும் அரிய தாகி
- அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
- பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
- பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
- கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
- கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
- தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
- செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.
- விதியாகி அரியாகிக் கிரீச னாகி
- விளங்குமகேச் சுரனாகி விமல மான
- நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி
- நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
- பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
- பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
- கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்
- கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே.
- மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
- மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
- பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
- புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
- ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
- அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
- தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
- சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
- தத்துவமே தத்துவா தீத மேசிற்
- சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
- சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
- தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
- சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
- தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
- சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
- சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
- மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
- வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
- குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
- கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
- பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
- பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
- இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
- இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
- மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற
- என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்
- இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற
- அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்
- ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
- இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி
- எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே.
- தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்
- தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
- எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்
- இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
- பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்
- பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோடக்
- கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்
- கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.
- சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
- தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
- ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்
- கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
- விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்
- விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
- வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த
- மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே.
- வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப
- வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
- சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்
- சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
- பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்
- பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
- திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே
- தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.
- அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
- கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
- விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
- வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
- கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
- சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
- சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
- பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
- பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
- சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
- சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
- ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
- டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
- சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
- செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
- சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
- தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
- பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
- பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
- தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
- ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
- சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
- சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
- தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
- பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
- பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
- கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்
- கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
- விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
- வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
- மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல
- வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
- இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
- கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
- கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ
- காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
- பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற
- பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே.
- பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற
- பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
- மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்
- வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
- இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா
- இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
- விதுவென்ற141 தண்ணளியால் கலந்து கொண்டு
- விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே.
- அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
- அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
- கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
- கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
- திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
- திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
- பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
- பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற
- செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
- மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி
- வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
- அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம்
- அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி
- நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந்
- நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே.
- அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
- ஆரமுதே என்னுறவே அரசே இந்த
- மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
- வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
- பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
- போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
- என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.
- படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே
- படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
- ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்
- உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
- பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
- பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
- நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே
- நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.
- என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற
- என்தாயே என்குருவே எளியேன் இங்கே
- தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற
- சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
- மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்
- வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
- கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே
- குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே.
- உய்குவித்து143 மெய்யடியார் தம்மை எல்லாம்
- உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
- மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து
- வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
- கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்
- கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ
- செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன்
- கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே
- எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும்
- இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ
- பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்
- பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி
- இற்றவளைக்144 கேள்விடல்போல் விடுதி யேல்யான்
- என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே.
- எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட
- என்னரசே என்குருவே இறையே இன்று
- மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல
- மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
- தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்
- தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
- அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே
- அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ.
- எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்
- ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே
- செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச்
- சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ
- கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக்
- கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
- வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம்
- மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்.
- கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்
- காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்
- தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு
- சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்
- பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என்
- பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப்
- புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ
- புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே.
- வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
- மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
- அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
- கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
- இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
- இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
- ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
- உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே
- அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட
- அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்
- கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே
- கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ
- நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம்
- நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
- ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல்
- எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே.
- கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்
- கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
- உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்
- ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
- மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ
- மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
- வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே
- மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே.
- நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோம் இந்த
- நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே
- பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில்
- பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே
- உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே
- உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்
- பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்
- பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.
- எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்
- எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே
- நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி
- நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
- தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்
- தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
- புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்
- பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ.
- புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு
- பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
- உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை
- உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
- மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும்
- வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான்
- கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும்
- கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய்மதி மேவுசடைக்
- கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை யாய்அருட் கண்ணுடையாய்
- பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருட்
- பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே.
- விடையுடை யாய்மறை மேலுடை யாய்நதி மேவியசெஞ்
- சடையுடை யாய்கொன்றைத் தாருடை யாய்கரம் தாங்குமழுப்
- படையுடை யாய்அருட் பண்புடை யாய்பெண் பரவையின்பால்
- நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குகவே.
- மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
- பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
- தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
- நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே.
- என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
- பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன்
- துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன்
- முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே.
- அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
- கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
- மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
- தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே.
- அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
- பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
- வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
- தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
- சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
- துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
- குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
- இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே.
- வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
- தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
- ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
- நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே.
- நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
- தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
- நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
- சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.
- பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
- அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
- கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
- மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே.
- நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
- குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
- முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
- வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே.
- பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்145முடித்த
- நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
- மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
- குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே.
- ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
- வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
- கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
- திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.
- முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
- அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
- கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
- என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.
- நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள்
- நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய்
- பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல்
- தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே.
- வருஞ்செல்லுள்148 நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள்
- பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே
- தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால்
- அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே.
- நறையுள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நற்சடைமேல்
- பிறையுள தேகங்கைப் பெண்ணுள தேபிறங் குங்கழுத்தில்
- கறையுள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன்
- குறையுள தேஎன் றரற்றவும் சற்றுங் குறித்திலதே.
- பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
- கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
- மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
- குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே.
- கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
- பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
- எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
- புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே.
- படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே
- மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால்
- அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ
- பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே.
- சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால்
- மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற்
- கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப்
- பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே.
- கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
- துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
- பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
- குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே.
- பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச்
- சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த்
- துற்றாள் கிலைஎனின் மற்றார் துணைஎனக் குன்கமலப்
- பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருளே.
- பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல்
- சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள்
- அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ
- கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே.
- நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
- ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
- வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
- தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.
- உற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற
- நற்றா யினும்இனி யானேநின் நல்லருள் நல்கில்என்னை
- விற்றா யினுங்கொள வேண்டுகின் றேன்என் விருப்பறிந்தும்
- சற்றா யினும்இரங் காதோநின் சித்தம் தயாநிதியே.
- வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
- கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல்
- தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப்
- பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே.
- முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
- பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
- நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
- பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.
- காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
- சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
- தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
- சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.
- பொன்வச மோபெண்க ளின்வச மோகடற் பூவசமோ
- மின்வச மோஎனும் மெய்வச மோஎன் விதிவசமோ
- தன்வச மோமலந் தன்வச மோஎன் சவலைநெஞ்சம்
- என்வச மோஇல்லை நின்வசம் நான்எனை ஏன்றுகொள்ளே.
- குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
- வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
- பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
- திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.
- பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட
- விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல்
- கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத்
- திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே.
- கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும்
- பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால்
- புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால்
- ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே.
- என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென்
- சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
- தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க
- நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே.
- நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
- சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
- இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
- சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
- உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
- தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
- வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே.
- நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
- குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
- பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
- உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.
- ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
- பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
- மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
- திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே.
- விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
- கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
- தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
- மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே.
- தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திருத்
- துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே
- எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி
- பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே.
- மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட
- பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால்
- கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம்
- திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே.
- சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த
- நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே
- கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப்
- பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே.
- சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
- காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
- பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
- போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே.
- நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
- புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
- கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
- முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
- தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
- வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
- ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
- பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.
- வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத்
- தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
- பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே
- கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே.
- மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
- பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
- கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
- பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே.
- கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக்
- குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார்
- உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு
- மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே.
- ஏற்றிலிட் டார்கொடி கொண்டோய் விளக்கினை ஏற்றபெருங்
- காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
- ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
- சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே.
- கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
- பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
- இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
- சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
- வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
- எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
- தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
- செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே.
- என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
- என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
- என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
- என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.
- போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
- போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
- போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
- போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
- தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
- இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
- முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
- வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே.
- மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
- நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற
- செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத்
- தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே.
- மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
- இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
- செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
- ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.
- மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத்
- துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப்
- பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக்
- கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே.
- அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
- குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
- பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
- மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
- திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
- தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
- பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
- மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
- விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
- பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
- மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
- சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
- அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
- வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
- நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
- பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
- வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
- நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
- போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
- பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
- மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
- இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
- தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய்
- நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
- மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
- சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
- நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
- வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
- நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
- பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும்
- தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத
- வாயேர் சவுந்தர35 மானே வடிவுடை மாணிக்கமே.
- முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
- ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
- எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
- மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
- வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
- பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
- காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
- மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
- முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
- கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால்
- வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
- அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
- கயிலேந்39 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
- குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த
- மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
- செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான்
- மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர்
- கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
- வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
- மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ
- அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம்
- முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
- வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த
- பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே
- சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
- மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
- தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
- சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
- மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
- உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
- நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
- படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
- மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
- துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
- கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
- வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
- பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
- வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
- காக்கக் கடனுனக்கே காண்.
- கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
- திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
- மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
- னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
- லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
- பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
- னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்
- வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே
- னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே
- லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
- ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லீரென் னுழையென்றேன்
- பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென் றடைந்ததுநா
- மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
- வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
- தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
- லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
- கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே
- யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள
- திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
- னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
- ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
- லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா னீரன்றோ
- திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந் தீரென் றேனின் னடுநோக்காக்
- குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார் குடம்யா தென்றே னஃதறிதற்
- கிடங்கர் நடுநீக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்
- பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
- நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட
- தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
- மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே
- னெண்ணி யறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
- னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
- கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
- யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த
- கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்
- தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்
- லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
- விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
- வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
- ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
- ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
- னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
- யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு
- மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார்
- மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
- யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே
- னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே
- யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேரா ரொற்றி யீரும்பைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
- மேரார் பெயரின் முன்பினிரண் டிரண்டா மெழுத்தா ரென்றாரென்
- னேரா யுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென்
- றேரா யுரைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
- லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
- யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் மனத்தி லகாத முண்டென்றே
- னிருத்தந் தொழுநம் மடியவரை நினைக்கின் றோரைக் காணினது
- வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க முற்றே மற்ற வெல்லையகன்
- றிருத்த லறியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நாம மியாதென்றேன்
- மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் வந்த விளைய நாமமென்றார்
- செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
- கியலா ரயலா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருடையீர் யார்க்கு முணர்வரியீ
- ரென்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றேன்யான்
- றுன்றும் விசும்பே காணென்றார் சூதா முமது சொல்லென்றே
- னின்றுன் முலைதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருமை யளவும் பொழிலொற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கமறப்
- பெருமை நடத்தி னீரென்றேன் பிள்ளை நடத்தி னானென்றார்
- தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்பா
- லிருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
- ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
- பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேசுங் கமலப் பெண்புகழும் பெண்மை யுடைய பெண்களெலாங்
- கூசும் படியிப் படியொற்றிக் கோவே வந்த தென்னென்றேன்
- மாசுந் தரிநீ யிப்படிக்கு மயங்கும் படிக்கு மாதருனை
- யேசும் படிக்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ ரூர்தான் வேறுண் டோவென்றே
- னோரூர் வழக்கிற் கரியையிறை யுன்னி வினவு மூரொன்றோ
- பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
- வேரூ ரனந்த மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விஞ்சு நெறியீ ரொற்றியுளீர் வியந்தீர் வியப்பென் னிவணென்றேன்
- கஞ்ச மிரண்டு நமையங்கே கண்டு குவிந்த விரிந்திங்கே
- வஞ்ச விருதா மரைமுகையை மறைக்கின் றனநின் பால்வியந்தா
- மெஞ்ச லறநா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா னீர்முன்னம்
- பிச்சைப் பெருமா னின்றுமணப் பிள்ளைப் பெருமா னாமென்றே
- னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ணாகி யிடையி லையங்கொள்
- ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கூம்பா வொற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
- னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
- பாம்பா வதுவே கொடும்பாம்பெம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
- றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மதிலொற் றியினீர் நும்மனையாண் மலையின் குலநும் மைந்தருளோர்
- புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் புதல்வர்க் கிசையம் புலிக்குலமா
- மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் கெதுவோ வென்றேன் மனைவியருள்
- ளிதுமற் றொருத்திக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
- கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
- பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற
- தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ ரென்ன சாதி யினரென்றேன்
- தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் சாதி நீபெண் சாதியென்றார்
- விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் வியப்பா மென்றே னயப்பானின்
- னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா னீரிருக்கு
- நன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுரைத்தேன்
- முன்னா ளொற்றி யெனினுமது மொழித லழகோ தாழ்தலுயர்
- விந்நா னிலத்துண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
- யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
- வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
- மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடுக்கும் புகழா ரொற்றியுளா ருடைதா வென்றார் திகையெட்டு
- முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
- முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்மூடி
- யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கந்த வனஞ்சூ ழொற்றியுளீர் கண்மூன் றுடையீர் வியப்பென்றேன்
- வந்த வெமைத்தான் பிரிபோது மற்றை யவரைக் காண்போதுஞ்
- சந்த மிகுங்கண் ணிருமூன்றுந் தகுநான் கொன்றுந் தானடைந்தா
- யிந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
- கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
- மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
- லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
- வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
- மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
- தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர்
- பெரும்பை யணியீர் திருவொற்றிப் பெரியீ ரெதுநும் பெயரென்றே
- னரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ
- ரிரும்பொ னிலையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன
- மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன்
- வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ
- திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புனித ரேநீர் போர்க்களிற்றை
- யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ ருள்ளத் திரக்க மென்னென்றேன்
- கரக்கு மிடையாய் நீகளிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்
- னிரக்க மிதுவோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
- மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
- தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
- யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
- னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
- நன்றப் படியேற் கோளிலியா நகரு முடையே நங்காய்நீ
- யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
- சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
- றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
- வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
- பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
- அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
- நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
- ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
- தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
- ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
- உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
- அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
- வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
- இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பொன்உ லாவிய புயம் உடை யானும்
- புகழ்உ லாவிய பூஉடை யானும்
- உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
- புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
- என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
- தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
- ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
- நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
- காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
- கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
- குழக வோஎனக் கூவிநம் துயராம்
- ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
- கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
- இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
- பரவு சண்முக சிவசிவ சிவஓம்
- பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
- அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
- இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
- சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
- வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
- வரசு யம்புசங் கரசம்பு எனவே
- ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
- இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
- பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
- ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
- ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
- ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
- காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
- இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
- எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
- இறைவ சங்கர அரகர எனவே
- அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
- உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
- குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
- நிறைந்த சண்முக குருநம சிவஓம்
- நிமல சிற்பர அரகர எனவே
- அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
- சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
- உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
- உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
- மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
- விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
- நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
- பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
- உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
- உயிரை மேவிய உடல்மறந் தாலும்
- கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
- கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
- நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
- மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
- புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
- பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
- தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
- சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
- நன்மை என்பன யாவையும் அளிக்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
- இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
- அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
- அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
- விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
- விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
- நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
- கணைகன் ஏவினும் காலனே வரினும்
- பூவின் மன்னவன் சீறினும் திருமால்
- போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
- ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
- ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
- நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
- நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
- வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
- வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான்
- கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
- கொடிய காமனைக் கொளுவிய நுதல்தீ
- நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
- ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
- அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
- ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்ச்
- செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
- சென்று சோறிரந் தளித்தருள் செய்தோன்
- நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
- ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
- வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
- வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
- வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
- மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
- நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
- மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
- கலங்கு றேல்அருள் திருவெண் றெனது
- கரத்தி ருந்தது கண்டிலை போலும்
- விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
- விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
- நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
- மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
- ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே
- எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே
- கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்
- குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
- நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
- மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
- சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
- செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
- ஊர னாருடன் சேரனார் துரங்கம்
- ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
- நார மார்மதிச் சடையவன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- தலங்கள் தோறும்சென் றவ்விடை அமர்ந்த
- தம்பி ரான்திருத் தாளினை வணங்கி
- வலங்கொ ளும்படி என்னையும் கூட
- வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே
- இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
- என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
- நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
- கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
- வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
- காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.
- நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
- பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
- ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
- காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
- 17. இரக்கமில்லீர் எம்பிரான் என நாவுக்கரசர் பாடியதாவதுஅரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரேசுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோசரக்க விக்கத வந்திறப் பிம்மினே.
- போற்றி நீறிடாப் புலையரைக் கண்டால்
- போக போகநீர் புலமிழந் தவமே
- நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
- நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க
- சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்
- தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
- காற்றி நின்றநம் கண்நுதற் கரும்பைக்
- கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
- தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
- சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
- தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
- தழுவி யேஅதை முழுவதும் கேட்க
- சேய நன்னெறி அணித்தது செவிகாள்
- சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
- ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- ஒற்றி ஊரனைப்
- பற்றி நெஞ்சமே
- நிற்றி நீஅருள்
- பெற்றி சேரவே.-
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
- காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
- செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
- செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
- எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
- ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
- செய்த வத்திரு மடந்தையர் நடனம்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- புன்னு னிப்படும் துளியினும் சிறிய
- போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
- என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
- என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
- மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
- வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
- தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல்
- வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம்
- தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய்
- கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக்
- கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே
- தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும்
- நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த
- நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய்
- மலம்இ லாதநல் வழியிடை நடப்போர்
- மனத்துள் மேவிய மாமணிச் சுடரே
- சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும்
- மூடன் என்னநின் மொய்கழல் பதமேத்
- துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ
- நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே
- நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே
- சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்
- மலரடி வழுத்திடச் சிறிதும்
- எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
- விடையில்வந் தருள்விழி விருந்தே
- கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே
- காட்சியே ஒற்றியங் கரும்பே.
- பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
- பத்தர்கட் கருள்செயும் பரமே
- மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
- பெருமநின் அருள்பெற லாம்என்
- றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
- முக்கணா மூவர்க்கும் முதல்வா
- மன்னிய கருணை வாரியே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
- அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
- என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
- கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
- வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
- ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.
- திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
- தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
- வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
- யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
- உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.
- சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
- சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
- வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
- என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
- உந்தி வந்தவ னோடரி ஏத்த
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
- வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
- மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
- அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
- வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
- சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.
- கட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன் கடும்பிழை கருதிடேல் நின்னை
- விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- சுட்டிலாப் பொருளே சுகப்பெருங் கடலே தூய்த்திரு ஒற்றியூர்த் துணையே
- தட்டிலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்தருள் தருந்தயா நிதியே.
- அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
- படிவ மாகும்ப டம்பக்க நாதரே
- நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
- மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.
- சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
- முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
- நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
- எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
- பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
- முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
- எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
- நன்னெறிசேர் அன்பர்தமை நாடிடவும் நின்புகழின்
- சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
- முன்அறியேன் பின்அறியேன் மூடனேன் கைம்மாறிங்
- கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மைப்படியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
- கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
- இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
- எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
- பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
- சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
- எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
- தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
- வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
- சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
- யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
- கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
- ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
- ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
- புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
- கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
- எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
- வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
- கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
- என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
- கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய் கோதைஒரு
- பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
- எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
- வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
- கன்றின் அயர்ந்தழும்என் கண்ர் துடைத்தருள
- என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.
- மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
- தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
- சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
- என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
- மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
- தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
- பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
- என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
- பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
- தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
- காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்மூடி
- ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
- துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
- புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
- என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.
- வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
- தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
- பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
- ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.
- பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
- துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
- நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
- இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.
- கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
- புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
- ஒல்லைபடு கின்ற ஒறுவே தனைதனக்கோர்
- எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.
- பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
- கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
- இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
- என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.
- மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
- ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
- கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்
- ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
- சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
- நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லஎன்றே
- யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
- ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்
- தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
- ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
- ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
- பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
- ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
- ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
- பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய
- தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
- ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
- கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
- தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
- எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
- கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
- உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
- றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
- பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
- நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
- உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
- எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
- வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
- கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
- இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.
- ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
- அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
- சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
- இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
- மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
- இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
- எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- தம்ப லம்பெறும் தைய லார்கணால்
- வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
- அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
- செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.
- செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
- உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
- மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
- பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கண்ண னோடயன் காண்பரும் சுடரே
- கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
- எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
- இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
- அண்ண லேதிரு ஆலங்காட் டுறையும்
- அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
- திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- விடங்க லந்தருள் மிடறுடை யவனே
- வேதன் மால்புகழ் விடையுடை யவனே
- கடங்க லந்தமா உரியுடை யவனே
- கந்த னைத்தரும் கனிவுடை யவனே
- இடங்க லந்தபெண் கூறுடை யவனே
- எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே
- திடங்க லந்தகூர் மழுவுடை யவனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
- காமன் வெந்திடக் கண்விழித் தவனே
- தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
- சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
- நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
- நாத னேசிவ ஞானிகட் கரசே
- செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
- அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
- ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
- எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
- வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
- வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
- தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
- மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
- ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
- யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
- நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
- நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
- சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
- மயிலின் மேல்வரு மகவுடை யவனே
- ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
- அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
- காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
- கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
- சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
- நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
- வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
- வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
- கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
- குற்ற முங்குண மாக்குறிப் பவனே
- தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- அம்ப லத்துள்நின் றாடவல் லானே
- ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
- சம்பு சங்கர சிவசிவ என்போர்
- தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
- தும்பை வன்னியம் சடைமுடி யவனே
- தூய னேபரஞ் சோதியே எங்கள்
- செம்பொ னேசெழும் பவளமா மலையே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
- கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்
- பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்
- பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே
- நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ
- எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
- பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
- கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
- கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
- ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
- உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
- இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- காரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற
- ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல்
- நீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான்
- பேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- தண்ணார் நீபத் தாரா னொடும்எம் தாயோ டும்தான் அமர்கின்ற
- கண்ணார் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
- பண்ணார் இன்சொல் பதிகம் கொண்டு படிக்கா சளித்த பரமன்ஓர்
- பெண்ணார் பாகன் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- பத்தர்க் கருளும் பாவையொ டும்வேல் பாலனொ டும்தான் அமர்கின்ற
- நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கொன் றருளானேல்
- சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான்
- பித்தப் பெருமான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- மன்னும் கதிர்வேல் மகனா ரோடும் மலையா ளொடும்தான் வதிகின்ற
- துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கொன் றருளானேல்
- மின்னும் சூலப் படையான் விடையான் வெள்ளிமலையொன் றதுஉடையான்
- பின்னும் சடையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
- தணியாக் கோலம்கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
- மணிசேர் கண்டன் எண்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
- பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- சூத மெறிவேல் தோன்ற லொடும்தன் துணைவி யொடும்தான் அமர்கின்ற
- காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
- ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன்மாற் கிறையானான்
- பேதம் இல்லான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளொடும்தான் அமர்கின்ற
- மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல்
- கற்றைச் சடையான் கண்மூன் றுடையான் கரியோன் அயனும் காணாதான்
- பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- வரமன் றலினார் குழலா ளொடும்வேல் மகனா ரொடும்தான் அமர்கின்ற
- திரமன் றவுநின் றெழில்கண் டிடுவான் சிறக்க எமக்கொன் றருளானேல்
- பரமன் தனிமால் விடைஒன் றுடையான் பணியே பணியாப் பரிவுற்றான்
- பிரமன் தலையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம் ஐய னொடுந்தான் அமர்கின்ற
- திறங்கொள் கோலம் கண்டுக ளிப்பான் சிறக்க எமக்கொன் றருளானேல்
- மறங்கொள் எயில்மூன் றெரித்தான் கனக மலையான் அடியார் மயல்தீர்ப்பான்
- பிறங்கும் சடையான்ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- தேசார் அயில்வேல் மகனா ரொடும்தன் தேவி யொடும்தான் அமர்கோலம்
- ஈசா எனநின் றேத்திக் காண எண்ணும் எமக்கொன் றருளானேல்
- காசார் அரவக் கச்சேர் இடையான் கண்ணார் நுதலான் கனிவுற்றுப்
- பேசார்க்கருளான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
- கடுகின் எல்லைதான் கலந்திடு மானால்
- விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
- வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால்
- மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
- மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே
- அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
- உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
- திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
- திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
- வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
- மாயு மோஎன மயங்குவேன் தன்னை
- அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா
- நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
- வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்
- கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்
- தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள்
- மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
- துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச்
- சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ
- வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற
- வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம்
- செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- இருக்க வாவுற உலகெலாம் உய்ய
- எடுத்த சேவடிக் கெள்ளள வேனும்
- உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்
- ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே
- தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்
- தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்
- திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
- எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
- நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
- நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
- வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
- வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
- திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
- பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம்
- தாதை நீஅவை எண்ணலை எளியேன்
- தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய்
- கோதை நீக்கிய முனிவர்கள் காணக்
- கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே
- தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
- வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி
- விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல்
- விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே
- தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில்
- சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ
- செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
- விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
- நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
- நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
- பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
- புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
- செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
- காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
- மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
- ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே.
- உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
- செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
- பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
- எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
- வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர்
- செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக்
- கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
- இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து
- தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால்
- ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும்
- சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக்
- கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே
- யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
- தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
- கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
- எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
- தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
- காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
- யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்
- சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்
- பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்
- இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
- செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
- கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
- எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான்
- தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்
- எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த
- தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்
- பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
- என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன்
- சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக்
- கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை
- என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை
- ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர்
- அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச்
- செவ்வண்ணத் தானைத் தெரிந்து.
- பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத்
- தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள்
- உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப்
- பெற்றமர்தி நெஞ்சே பெரிது.
- பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
- அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
- தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
- மேலானை நெஞ்சே விரும்பு.
- ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி
- வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த
- கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்
- தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
- கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
- அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
- செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
- கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
- பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ
- பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே.
- பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
- வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
- மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
- சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.
- உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும்
- எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
- அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
- வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ.
- மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
- உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
- கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
- பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
- ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
- அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
- தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
- செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
- மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை
- முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
- ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
- அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
- தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
- சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
- கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
- கண்ணுத லானைஎம் கண்ணக லானை
- எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்
- பெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்
- கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்
- கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்
- பண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்
- பார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை
- எண்அம ராதஎ ழிலுடை யானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
- கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
- மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
- வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
- பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
- பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
- எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
- கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
- கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
- கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
- பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
- பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
- திணிகொள் சங்கர சிவசிவ என்று
- சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
- செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
- திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
- பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
- பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
- வைத போதினும் வாழ்த்தென நினைத்து
- மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
- கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
- கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
- இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
- எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
- கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
- கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
- தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
- தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
- புலையி னார்கள்பால் போதியோ வீணில்
- போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
- அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
- ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
- கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
- கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
- மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
- முன்னு றாவகை என்னுறும் உன்னால்
- இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
- என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
- பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
- பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
- இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
- இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
- மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
- மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
- துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
- சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
- அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
- அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
- ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
- உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
- முன்றில் காத்தனை அவ்வள வேனும்
- முயன்று காத்திலை முன்னவன் கோயில்
- துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
- தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
- தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
- சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
- காய மாயமாம் கான்செறிந் துலவும்
- கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
- பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
- பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
- ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
- காய சோதிகண் டமருதல் அணியே.
- கரிய மாலன்று கரியமா வாகிக்
- கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
- பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
- பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
- உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
- உம்பர் நாயகர் தம்புயம் புனைய
- வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
- திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
- கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
- காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
- உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
- ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
- மருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- வதன நான்குடை மலரவன் சிரத்தை
- வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்
- நிதன24 நெஞ்சகர்க் கருள்தரும் கருணா
- நிதிய மாகிய நின்மலப் பெருமான்
- சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்
- தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு
- மதன இன்தமிழ் மாலையோ டணுபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
- தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
- போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
- பூத நாதர்நற் பூரணா னந்தர்
- தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
- தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
- வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
- மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
- கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
- கருதி வேண்டிய தியாதது கேண்மோ
- சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
- சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
- அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
- அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
- வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
- வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே.
- மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
- மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
- அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
- அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
- என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
- இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
- வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
- வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.
- மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்
- வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்
- இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்
- யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
- பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்
- பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே
- வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து
- வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே.
- சென்று நீபுகும் வழியெலாம் உன்னைத்
- தேட என்வசம் அல்லஎன் நெஞ்சே
- இன்ற ரைக்கணம் எங்கும்நேர்ந் தோடா
- தியல்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- அன்று வானவர் உயிர்பெற நஞ்சம்
- அருந்தி நின்றஎம் அண்ணலார் இடத்தே
- நின்று வேண்டிய யாவையும் உனக்கு
- நிகழ வாங்கிநான் ஈகுவன் அன்றே.
- என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
- இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
- மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
- வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
- உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
- உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
- இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
- சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
- வன்ப தாகிய நீயும்என் னுடனே
- வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
- ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
- ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
- இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
- வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
- நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
- நானும் அங்கதை நயப்பது நன்றோ
- தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
- தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
- எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
- நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும்
- நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
- நன்று நின்செயல் நின்றிடு மனனே
- ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே
- ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
- கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
- மாறு மாயையால் மயங்கிய மனனே
- வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
- ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
- ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
- அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
- போது போக்கினை யேஇனி மனனே
- போதி போதிநீ போம்வழி எல்லாம்
- கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
- குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
- ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- விச்சை வேண்டினை வினையுடை மனனே
- மேலை நாள்பட்ட வேதனை அறியாய்
- துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
- சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ
- பிச்சை எம்பெரு மான்என நினையேல்
- பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால்
- இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
- மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
- பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
- பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
- ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
- இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
- ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
- முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
- போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
- போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
- சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
- சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
- ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ
- வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா
- சிதமெ னும்பரன் செயலினை அறியாய்
- தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
- இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார்
- யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க்
- குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கருமை யாம்அகங் காரமர்க் கடவா
- கடைய னேஉனைக் கலந்தத னாலே
- அருமை யாகநாம் பாடினோம் கல்வி
- அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
- இருமை இன்பமும் பெற்றனம் என்றே
- எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
- ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
- தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்
- பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்
- கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி யப்பாநான்
- சிறியேன் எனினும் நினைஅன்றித் தெளியேன் மற்றோர் தேவர்தமை
- வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய்வேன்அடியேன்
- நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே.
- தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
- யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
- தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்
- ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.
- ஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
- வெப்பில் ஆழ்ந்தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற
- இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள்கிடைக்கும்
- துப்புர வொழிந்தோர் உள்ளகத்தோங்கும் சோதியே ஒற்றியூர்த்துணையே.
- செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
- உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
- நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
- வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக வாழ்க்கையில் வரும்பொலாஅணங்கே.
- தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அ€டையாப்
- பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் ப€தைப€தைத் துருகுகின் றனன்காண்
- கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வ€கை அறியேன்
- வாவிஏர் பெறப்பூஞ் சோ€லைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
- கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கணமிருந் ததுதான்
- வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்
- பெருங்கணம் சூழ வடவனத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்
- மருங்கண வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.
- பசிக்குண வுழன்றுன் பாததா ம€ரை€யைப் பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல்
- நசிக்கும்இவ்வுட€லை நம்பினேன் என்€னை நமன்தமர் வருத்தில்என்செய்கேன்
- விசிக்கும்நல் அரவக்கச்சினோய் நினது மெய்அருள் அலதொன்றும் விரும்பேன்
- வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செயஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
- கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை
- விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய
- பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்
- துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே.
- என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்பம் எனவே எனக்கவர்நோய்
- தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
- பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
- இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக் கிவண்நிற் கின்றேனே.
- அரியது நினது திருவருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
- பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம்கூட்டிச்
- சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
- பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே.
- பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
- கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
- தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
- துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
- உண்டுநஞ் சமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னைக்
- கண்டுநெஞ் சுருகிக் கண்கள்நீர் சோரக் கைகுவித் திணையடி இறைஞ்சேன்
- வண்டுநின் றலைக்கும் குழல்பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கிக்
- குண்டுநீர் ஞாலத் திடைஅலை கின்றேன்கொடியனேன் அடியனேன் அன்றே.
- இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக்
- குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்
- பொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி
- நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.
- நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
- கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
- உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
- மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
- சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
- மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
- உய்வைத்த உத்தமனே ஒற்றியப்பா உன்னுடைய
- தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ.
- பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
- தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
- ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
- ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ.
- பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
- கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
- ஒண்மணியே தேனேஎன் றொற்றியப்பா உன்தனைநான்
- பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.
- பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது
- பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ
- மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற
- மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல்
- உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார்
- உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண்
- புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்தினை மறந்துபாழ் வயிற்றை
- மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி மலம்பெற வந்தனன் அதனால்
- எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே இறைவனே நீஅமர்ந் தருளும்
- தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- நின்முனம் நீல கண்டம்என் றோதும் நெறிமறந் துணவுகொண் டந்தோ
- பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று
- மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே விரிகடல் தானைசூழ் உலகம்
- தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும்
- சீல மென்பதுன் திருமொழி அன்றே
- வறிய னேன்பிழை யாவையும் உனது
- மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ
- இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை
- ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும்
- செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
- மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்
- சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
- வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே
- பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
- உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல்
- செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
- பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன்
- பொய்யி தல்லஎம் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- தத்து மத்திடைத் தயிரென வினையால்
- தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே
- செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே
- துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன்
- புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் கருணை
- சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் எனமலம் துய்த்தேன்
- விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகிலா வெறியேன்
- அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.
- பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
- பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
- இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
- ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
- அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
- அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
- உந்த மட்டினால் தருதியோ உரையாய்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன்
- நரகில் ஏகென நவிலினும் அமைவேன்
- ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன்
- அல்லல் ஆம்பவம் அடைஎனில் அடைவேன்
- தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர்
- தருதல் இல்எனச் சாற்றிடில் தரியேன்
- ஓகை நாட்டிய யோகியர் பரவும்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன்
- ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் எவ்வணம் உய்குவ தறியேன்
- வானநா டவரும் பெறற்கரு நினது மலரடித் தொழும்புசெய் வேனோ
- கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே நன்கறிந் துன்திரு அருளாம்
- சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவ தேயோ
- நீலமா மிடற்றுப் பவளமா மலையே நின்மல ஆனந்த நிலையே
- காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
- இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
- கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
- பிரமன் ஆதியர் பேசரும் திறனே
- தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
- துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
- கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
- அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
- செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- மாலை ஒன்றுதோள் சுந்தரப் பெருமான்
- மணத்தில் சென்றவண் வழக்கிட்ட தெனவே
- ஓலை ஒன்றுநீர் காட்டுதல் வேண்டாம்
- உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை
- வேலை ஒன்றல மிகப்பல எனினும்
- வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண்
- சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன்
- புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன்
- பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும்
- பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன்
- ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன்
- என்று கொள்விரேல் எனக்கது சாலும்
- சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- என்ன நான்அடி யேன்பல பலகால்
- இயம்பி நிற்பதிங் கெம்பெரு மானீர்
- இன்னும் என்னைஓர் தொண்டன்என் றுளத்தில்
- ஏன்று கொள்ளிரேல் இருங்கடற் புவியோர்
- பன்ன என்உயிர் நும்பொருட் டாகப்
- பாற்றி நும்மிசைப் பழிசுமத் துவல்காண்
- துன்னு மாதவர் புகழ்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- உள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர்
- உலகு ளோர்இந்த உறுதிகொண் டடியேன்
- கள்ளம் ஓதிலேன் நும்மடி அறியக்
- காம வேட்கையில் கடலினும் பெரியேன்
- வள்ள லேஉம தருள்பெறச் சிறிது
- வைத்த சிந்தையேன் மயக்கற அருள்வீர்
- நள்ளல் உற்றவர் வாழ்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப்
- பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ
- மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல்
- வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ
- உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை
- ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர்
- நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர்
- கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண்
- செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன்
- சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ
- பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப்
- பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே
- நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
- ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
- அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
- கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
- என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
- முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
- மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
- அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
- அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
- வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே
- கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்
- சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்
- சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
- ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்
- இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்
- வாம மாதராள் மருவொற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்
- என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன்
- துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச்
- சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன்
- அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர்
- அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ
- வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- ஊழ்வி னைப்படி எப்படி அறியேன்
- உஞற்று கின்றனன் உமதருள் பெறவே
- தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த்
- தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண்
- பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும்
- பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால்
- வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார்
- நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி மூட
- நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு
- நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம்
- அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
- புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார்
- நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
- செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
- சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
- ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை
- வந்தனைசெய் தானந்த வயத்தே நின்றார்
- பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
- பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
- ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
- தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க
- அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
- மருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
- அருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
- தெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.
- எளியேன் இழைத்த பெறும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
- களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
- ஒளியே முக்கட் செழுங்கரும்பே ஒன்றே அன்பர் உறவேநல்
- அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.
- கண்ணார் நுதலோய் பெருங்கருணைக் கடலோய் கங்கை மதிச்சடையோய்
- பெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்
- அண்ணா எனநின் றேத்தெடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடிமலரை
- எண்ணா துழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே.
- வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்
- அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
- மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
- பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
- நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
- எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
- கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
- பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
- தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
- இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
- அவ்வண்ண மான அரசே அமுதேநின்
- செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
- அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்
- சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல்
- வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய
- செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே.
- பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங்
- குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே
- மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே
- பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.
- வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
- கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
- நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
- தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
- மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த
- சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச்
- செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும்
- அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி
- இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின்
- சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்
- துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக்
- குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்
- கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே
- உமைக்கு நல்வரம் உதவிய தேவே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
- சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
- நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
- நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
- என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
- எந்தை யேஎனை எழுமையும் காத்த
- உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
- முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்
- என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
- இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்
- பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
- பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
- உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கண்ணி லான்சுடர் காணிய விழைந்த
- கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
- பண்ணி லாவிய பாடலந் தொடைநின்
- பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்
- உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்
- உண்மை அன்றென உணர்த்தியும் எனது
- பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்
- பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்
- வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ
- வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ
- ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- நையு மாறெனைக் காமமா திகள்தாம்
- நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்
- செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
- திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே
- வையு மாறிலா வண்கையர் உளத்தின்
- மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
- உய்யு மாறருள் அம்பலத் தமுதே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- ஊழை யேமிக நொந்திடு வேனோ
- உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
- பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
- பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
- மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
- மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
- தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
- அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
- இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
- றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
- செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
- செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
- எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
- தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
- நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
- நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
- தீய ராதியில் தீயன்என் றெனைநின்
- திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
- ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
- போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
- இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
- ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
- தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
- தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
- எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
- சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
- இட்ட நல்வழி அல்வழி எனவே
- எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
- விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
- வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
- சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- நாடுந் தாயினும் நல்லவன் நமது
- நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே
- வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை
- வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண்
- பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப்
- பண்பென் மட்டும்நின் பால்இலை போலும்
- தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- தாயி னும்பெருந் தயவுடை யவன்நந்
- தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன்
- நாயி னும்கடை யேன்படும் இடரை
- நாளும் கண்டனை நல்அருள் செய்யாய்
- ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும்
- அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம்
- தேயி னும்மிக நன்றெனக் கருள்உன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- வானும் வையமும் அளிக்கினும் உன்பால்
- மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார்
- நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில்
- நாடி நின்னருள் நலம்பெற விழைதல்
- கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில்
- குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்
- தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
- சுயம்பிர காசமே அமுதில்
- கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
- கடவுளே கண்ணுதற் கரும்பே
- குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
- கொடுந்துய ரால்அலைந் தையா
- முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
- மூடன்என் றிகழ்வது முறையோ.
- பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
- புத்தமு தேகுணப் பொருப்பே
- இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
- இன்பமே என்பெருந் துணையே
- அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
- அண்ணலே நின்அடிக் கபயம்
- மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
- மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
- பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
- அருமையில் பிரமன் ஆதிய தேவர்
- அடைந்தநற் செல்வமே அமுதே
- இருமையிற் பயனும் நின்திரு அருளே
- என்றுநின் அடைக்கலம் ஆனேன்
- கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
- களைகளைந் தெனைவிளைத் தருளே.
- அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
- அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
- மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
- வானமும் தேடினும் இன்றே
- இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
- இணைதுணை எனநினைந் துற்றேன்
- மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
- வாழிய அருட்பெருந் துறையே.
- அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
- துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
- இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
- செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே.
- தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
- பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
- பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
- பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே.
- எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
- அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
- பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
- கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே.
- பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்
- செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்
- எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்
- அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே.
- முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
- கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
- வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
- றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே.
- மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால்
- வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம்
- எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற்
- றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன்
- அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால்
- அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன்
- உண்ண நல்அமு தனையஎம் பெருமான்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன்
- இறைவ நின்றனை இறைப்பொழு தேனும்
- உன்என் றால்என துரைமறுத் தெதிராய்
- உலக மாயையில் திலகமென் றுரைக்கும்
- மின்என் றால்இடை மடவியர் மயக்கில்
- வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால்
- உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்
- குளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்
- தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்
- உளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே.
- தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருஅரு ணாபுரித் தேவே
- ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே எந்தையே எம்பெரு மானே
- பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
- நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்கிவண் அருளே.
- அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த
- தெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே
- மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி
- இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே.
- கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா
- அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே
- இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே
- பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே.
- ஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும் என்உயிர்க் கொருபெருந் துணையே
- தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயல்எனக் களித்தஎன் தேவே
- வாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன் வருந்துறா வண்ணம்எற் கருளித்
- தாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில் சந்நிதிக் கியான்வர அருளே.
- பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி
- உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப்
- பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது
- நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ.
- அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
- பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
- இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
- மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
- நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
- தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
- கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
- வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையகத்தே.
- விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
- பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
- அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
- புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.
- பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
- உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
- அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
- என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
- கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
- நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
- அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
- எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே.
- நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
- வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
- பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
- ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.
- பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்
- கோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
- தேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
- காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
- இடைவிடா துழலஒளிஓர்
- எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
- இருண்டுயிர் மருண்டுமாழ்க
- நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
- ஞானஅருள் நாட்டைஅடையும்
- நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
- நாயினேற் கருள்செய்கண்டாய்
- விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
- வெளிக்குள்வளர் கின்றசுடரே
- வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
- விஞ்ஞான மழைசெய்முகிலே
- கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
- கருணைநடம் இடுதெய்வமே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
- போற்றிநின் பூம்பதம் போற்றி
- ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
- அமலநின் அடிமலர் போற்றி
- ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
- இறைவநின் இருங்கழல் போற்றி
- சாற்றுமா றரிய பெருமையே போற்றி
- தலைவநின் தாட்டுணை போற்றி.
- துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
- துணைவநின் துணையடி போற்றி
- புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
- புனிதநின் பொன்னடி போற்றி
- இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
- இறைவநின் இணையடி போற்றி
- கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
- கண்ணநின் கழலடி போற்றி.
- அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி
- அயல்எனை விட்டிடேல் போற்றி
- கொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி
- குணப்பெருங் குன்றமே போற்றி
- நெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி
- நினைஅலால் பிறிதிலேன் போற்றி
- படிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்
- பரமநின் அடைக்கலம் நானே.
- தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
- கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
- பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
- எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே.
- தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
- பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
- துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ தூயஅருள்
- புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே.
- உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
- வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
- கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
- தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
- தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார்
- வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக்
- கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
- ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
- வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
- மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
- இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்
- இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ
- குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்
- நன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே.
- பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
- போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
- வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
- ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
- உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
- நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
- விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
- திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.
- வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
- பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
- ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
- ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே.
- எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
- களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
- அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
- தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே.
- சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
- எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
- அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
- பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே.
- சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
- வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
- தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
- வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே.
- வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட
- பனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ
- நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ
- அனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே.
- ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
- தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
- ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
- வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
- தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
- பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
- தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
- அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ.
- அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
- தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
- மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
- பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்றே.
- சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
- விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
- தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
- தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.
- அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
- பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
- உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
- கரிய பெருமால் உடையேற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.
- சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
- மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
- புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
- அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.
- ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
- அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
- வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
- வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
- நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
- நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
- கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
- கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.
- என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
- என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
- தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
- தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
- உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
- உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
- முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
- முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே.
- வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
- மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
- தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
- தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
- மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
- மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
- பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
- பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே.
- இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
- எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
- மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
- வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
- துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
- சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
- விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
- வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே.
- நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
- நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
- இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
- எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
- கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
- கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
- அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
- அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.
- தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
- பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
- கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
- ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
- ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
- தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
- பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே.
- பொய்விரிப் பார்க்குப் பொருள்விரிப் பார்நற் பொருட்பயனாம்
- மெய்விரிப் பார்க்கிரு கைவிரிப் பார்பெட்டி மேவுபணப்
- பைவிரிப் பார்அல்குற் பைவிரிப் பார்க்கவர் பாற்பரவி
- மைவிரிப் பாய்மன மேஎன்கொ லோநின் மதியின்மையே.
- வாழைக் கனிஉண மாட்டாது வானின் வளர்ந்துயர்ந்த
- தாழைக் கனிஉணத் தாவுகின் றோரில் சயிலம்பெற்ற
- மாழைக் கனிதிகழ் வாமத்தெம் மான்தொண்டர் மாட்டகன்றே
- ஏழைக் கனிகர் உளத்தினர் பாற்சென்ற தென்னைநெஞ்சே.
- பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளாம் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
- துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
- அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
- உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே.
- மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
- புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
- சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
- உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
- நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
- தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
- அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
- எங்ஙனம்என் றுள்ளம் எழும்.
- உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
- பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
- விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
- கொடாதே எனைஏன்று கொள்.
- கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
- பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
- கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
- பெரிதார ஓர்மொழியைப் பேசு.
- 173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
- 174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
- 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.
- ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை
- ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
- பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
- சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர்
- சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
- காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ.
- ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
- நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
- சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
- சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
- தாவி நான்பெரும் பாவி ஆயினன்
- ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
- அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை
- ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்
- நண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்
- பெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப்
- பேய னேன்கொடும் பேதை யேன்பிழை
- கண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ.
- திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
- செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
- மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
- எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
- ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
- பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
- அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
- இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
- விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
- விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
- நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
- நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
- எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
- இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
- பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
- அருண்மருந் தொளிர்குணக் குன்றே
- அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
- அருட்கிர ணங்கொளும் சுடரே
- அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
- அருட்சுவை கனிந்தசெம் பாகே
- அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
- அருண்மய மாம்பர சிவமே.
- ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
- சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
- நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
- தாய்இரங் காள்என்ப துண்டோதன் பிள்ளை தளர்ச்சிகண்டே.
- எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
- இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
- விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
- விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
- பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
- பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
- கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
- கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே.
- கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
- மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
- நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
- உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
- அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
- கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
- தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே.
- பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
- பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
- கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
- எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
- மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
- நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
- பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
- கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே.
- நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
- பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
- சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
- ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே.
- பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை
- வாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்
- நாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்
- காய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே.
- எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
- புழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்
- வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
- குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கலி விருத்தம்
- என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
- முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
- நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
- பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே.
- சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
- காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
- ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
- பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ.
- இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
- அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
- தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
- பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ.
- பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
- மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்
- என்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்
- முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி.
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
- புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
- பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
- பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
- மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
- மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
- கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
- கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.
- கட்டளைக் கலிப்பா
- இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்
- அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ
- பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்
- விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே.
- கலி விருத்தம்
- 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
- இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
- next page
- மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
- உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
- கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
- குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.
- 184. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில்பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார்.
- 185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ரால் விளக்கெரிந்த அற்புதத்தைக்குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும்காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப்பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப்பதிப்பித்துள்ளார்.
- பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
- கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
- அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
- தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
- திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
- பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
- பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
- ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
- உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
- தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.
- வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
- மனம டங்குசிற் கனந டந்தரும்
- உரமு றும்பதம் பெறவ ழங்குபே
- ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
- பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
- பரம மாகியே பரவு மாமறைச்
- சிரமு றும்பரம் பரசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக்
- கரிசற உணர்ந்து கேட்டுக்
- காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து
- கருநெறி அகன்ற பெரியோர்
- பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு
- புரிபவை எலாம்பு ரிந்துன்
- புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும்
- போதவை எலாம்அ ருளுவாய்
- நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய
- நிறைபவை எலாஞ்செய் நிலையே
- நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும்
- நித்தியா னந்த வடிவே
- அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
- குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
- பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
- கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே.
- சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி தன்னை அன்பர்
- துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத்
- திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
- தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்.
- பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்
- பேசப் படாத பெரிய மருந்து
- இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
- என்று மதுரித் தினிக்கு மருந்து. - நல்ல
- சேதப்ப டாத மருந்து - உண்டால்
- தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
- பேதப்ப டாத மருந்து - மலைப்
- பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து. - நல்ல
- பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
- பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
- மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
- வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து. - நல்ல
- கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
- கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.
- பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு
- பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி
- நண்ணி நமக்கரு ளத்த னடி - மிக
- நல்லன டியெல்லாம் வல்ல னடி.. - கொம்மி
- கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
- கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.
- தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
- தான்கொண்ட நாயக ராரே டி
- அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
- ஐய ரமுத ரழக ரடி.
- தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
- சேர்ந்து கலந்தவ ராரே டி
- தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
- தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.
- அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
- அன்பிற் புணர்ந்தவ ராரே டி
- துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
- தூய திருநட ராய ரடி.
- காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
- கற்பை யழித்தவ ராரே டி
- பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
- பித்தர் பரானந்த நித்த ரடி.
- ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
- ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
- மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
- நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே.
- ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
- தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
- பாடுவாள்பதைப்பாள் பதறுவாள்நான்பெண்பாவிகாண்பாவிகாண்என்பாள்
- வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே.
- கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்
- பெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்
- ஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்
- தருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே.
- திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
- பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
- மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
- குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே.
- நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
- எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
- வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
- அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- விண்படைத்த பொழிற்றில்லை183 அம்பலத்தான் எவர்க்கும்
- மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
- பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
- பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
- பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
- பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
- கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
- சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
- வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
- மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
- ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
- ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
- காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
- என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
- தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
- தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
- பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
- பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
- கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
- செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
- அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
- அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
- மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
- மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
- இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
- இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ.
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
- என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
- பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
- பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
- வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
- வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
- வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
- விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ.
- பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
- புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
- கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
- குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
- செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
- திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
- நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
- நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ.
- கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
- கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
- தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
- தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
- பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
- பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
- உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
- உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ.
- 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
- மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
- தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
- துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
- பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
- பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
- வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே.
- என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
- என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
- பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
- பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
- அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
- அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
- மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
- மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.
- குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
- குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
- சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
- சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
- பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
- பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
- இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
- என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.
- சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
- ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
- வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
- ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்
- தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண்
- ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
- வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
- போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
- ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
- பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
- மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
- என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் தியாகப் பெருமான் பவனிஇராக்
- காலத் தடைந்து கண்டேன்என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
- ஞாலத் தவர்கள் அலர்தூற்ற நற்று‘ சிடையில் நழுவிவிழ
- ஏலக் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்
- தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்
- தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
- ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
- அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
- தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
- எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்
- கூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்
- வீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே
- ஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
- தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
- வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
- ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
- பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்
- இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.
- வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
- நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
- நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
- பாடல் கமழும் பதம்உடையார் பணைசேர் ஒற்றிப் பதிஉடையார்
- வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
- ஆடல் அளிசூழ் குழலாய்உன் ஆணை ஒன்றும் அறியனடி
- கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ற் றழகர்அவர்
- கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
- கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மின்னோ டொக்கும் வேணியினார் விமலர் ஒற்றி வாணர்எனைத்
- தென்னோ டொக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்தறியார்
- என்னோ டொத்த பெண்களெலாம் ஏசி நகைக்க இடருழந்தேன்
- கொன்னோ டொத்த கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உழைஒன் றணிகைத் தலம்உடையார் ஒற்றி உடையார் என்றனக்கு
- மழைஒன் றலர்பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
- பிழைஒன் றறியேன் பெண்களெலாம் பேசி நகைக்கப் பெற்றேன்காண்
- குழைஒன் றியகண் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர்
- பீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன்
- வாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி
- கோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால்அயனும்
- எய்தற் கரியார் மாலையிட்டார் எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால்
- உய்தற் கடியேன் மனையின்கண் ஒருநா ளேனும் உற்றறியார்
- கொய்தற் கரிதாங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- காண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை
- ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார்
- மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான்
- நாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே.
- செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார்நான்
- எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் கேகு முன்னர் எனைவிடுத்தே
- அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் தாடி அவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- பின்தாழ் சடையார் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- மன்றார் நடத்தார் ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்நான்
- நன்றாத் துகிலைத் திருத்துமுனம் நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
- மென்தார் வாங்க மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- கண்ணார் நுதலார் மணிகண்டர் கனக வரையாங் கனசிலையார்
- பெண்ணார் பாகர் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் சார்ந்தார் பவனி என்றனர்நான்
- நண்ணா முன்னம் என்மனந்தான் நாடி அவர்முன் சென்றதுவே.
- ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார்
- சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான்
- காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே.
- சூலப்படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம்
- சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
- சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே.
- காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்
- தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
- வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்
- போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.
- கல்லை வளைக்கும் பெருமானார் கழிசூ ழொற்றிக் கடிநகரார்
- எல்லை வளைக்குந் தில்லையுள்ளா ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார்
- அல்லை வளைக்குங் குழலன்ன மன்பி னுதவா விடிலோபம்
- இல்லை வளைக்கு மென்றார்நா னில்லை வளைக்கு மென்றேனே.
- வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
- பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
- சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
- ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
- விடையார் கொடிமே லுயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
- உடையா ரொற்றி யூரமர்ந்தா ருவந்தென் மனையி லின்றடைந்தார்
- இடையா வைய மென்றார்நா னிடைதா னைய மென்றேனாற்
- கடையா ரளியா ரென்றார்கட் கடையா ரளியா ரென்றேனே.
- தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
- மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார்
- திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
- வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
- வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
- தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
- சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
- பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- வழுத்தார் புரத்தை எரித்தார்நல் வலத்தார் நடன மலரடியார்
- செழுத்தார் மார்பர் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- கழுத்தார் விடத்தார் தமதழகைக் கண்டு கனிந்து பெருங்காமம்
- பழுத்தார் தம்மைக் கலந்திடநற் பதத்தார் என்றும் பார்த்திலரே.
- பாரா திருந்தார் தமதுமுகம் பார்த்து வருந்தும் பாவைதனைச்
- சேரா திருந்தார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாரா திருந்தார் இன்னும்இவள் வருத்தங் கேட்டும் மாலைதனைத்
- தாரா திருந்தார் சலமகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.
- சடையில் தரித்தார் ஒருத்திதனைத் தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
- புடையில் தரித்தார் மகளேநீ போனால் எங்கே தரிப்பாரோ
- கடையில் தரித்த விடம்அதனைக் களத்தில் தரித்தார் கரித்தோலை
- இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என்னுளத்தே.
- வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
- தருந்தேன் அமுதம் உண்டென்றும் சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
- திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
- மருந்தேன் மையற் பெருநோயை மறந்தேன் அவரை மறந்திலனே.
- உரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
- கரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
- வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
- இரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி
- தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
- கானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.
- திருமால் வணங்கும் ஒற்றிநகர் செழிக்கும் செல்வத் தியாகர்அவர்
- கருமால் அகற்றுந் தொண்டர்குழாம் கண்டு களிக்க வரும்பவனி
- மருமாண் புடைய மனமகிழ்ந்து மலர்க்கை கூப்பிக் கண்டலது
- பெருமான் வடுக்கண் பெண்ணேநான் பெற்றா ளோடும் பேசேனே.
- சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் அழகு ததும்ப வரும்பவனி
- நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டலது
- பால்ஆர் குதலைப் பெண்ணேநான் பாயிற் படுக்கை பொருந்தேனே.
- செல்வந் துறழும் பொழில்ஒற்றித் தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்
- வில்வந் திகழும் செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும்பவனி
- சொல்வந் தோங்கக் கண்டுநின்று தொழுது துதித்த பின்அலது
- அல்வந் தளகப் பெண்ணேநான் அவிழ்ந்த குழலும் முடியேனே.
- சேவார் கொடியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- பூவார் கொன்றைப் புயங்கள்மனம் புணரப் புணர வரும்பவனி
- ஓவாக் களிப்போ டகங்குளிர உடலங் குளிரக் கண்டலது
- பாவார் குதலைப் பெண்ணேநான் பரிந்து நீரும் பருகேனே.
- சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- உற்றங் குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும்பவனி
- சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின்அலது
- முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் முடிக்கோர் மலரும் முடியேனே.
- சிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- சந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி
- முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது
- கந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான் கண்ர் ஒழியக் காணேனே.
- தென்னஞ் சோலை வளர்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் பிறங்கா நிற்க வரும்பவனி
- மன்னுங் கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்திக் கண்டலது
- துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் சோறெள் ளளவும் உண்ணேனே.
- சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- வந்தார் கண்டார் அவர்மனத்தை வாங்கிப் போக வரும்பவனி
- நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டலது
- பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் பாடல் ஆடல் பயிலேனே.
- செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- மிக்கற் புதவாண் முகத்தினகை விளங்க விரும்பி வரும்பவனி
- மக்கட் பிறவி எடுத்தபயன் வசிக்க வணங்கிக் கண்டலது
- நக்கற் கியைந்த பெண்ணேநான் ஞாலத் தெவையும் நயவேனே.
- என்னா ருயிர்போல் மகளேநீ என்ன தவந்தான் இயற்றினையோ
- பொன்னார் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொற்பதத்தார்
- தென்னார் ஒற்றித் திருநகரார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொன்னார் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
- சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
- காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
- கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
- வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே
- எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித்
- தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாணி உயிர்காத் தந்தகனை மறுத்தார் ஒற்றி மாநகரார்
- காணி உடையார் உலகுடையார் கனிவாய் இன்னுங் கலந்திலரே
- பேணி வாழாப் பெண்எனவே பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
- சேணின் றிழிந்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார்
- உரமன் னியசீர் ஒற்றிநகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
- அரமன் னியவேற் படையன்றோ அம்மா அயலார் அலர்மொழிதான்
- திரமன் னுகிலேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
- உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- எற்றென் றுரைப்பேன் செவிலி அவள் ஏறாமட்டும் ஏறுகின்றாள்
- செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
- யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
- தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- கமலன் திருமால் ஆதியர்கள் கனவி னிடத்துங் காண்பரியார்
- விமலர் திருவாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
- அமலர் அவர்தாம் என்மனைக்கின் றணைகு வாரோ அணையாரோ
- தமல மகன்ற குறப்பாவாய் தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
- கற்றைச் சடைமேல் கங்கைதனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
- பொற்றைப் பெருவிற் படைஉடையார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்து வாரோ எய்தாரோ
- சுற்றுங் கருங்கட் குறமடவாய் சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.
- ஆயும் படிவத் தந்தணனாய் ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
- தோயும் கமலத் திருவடிகள் சூட்டும் அதிகைத் தொன்னகரார்
- ஏயும் பெருமை ஒற்றியுளார் இன்னும் அணையார் எனைஅளித்த
- தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனிநான் சகியேனே.
- புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்
- மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற
- என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
- புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
- தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
- ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
- அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
- உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
- இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்
- திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்
- பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ
- இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
- கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
- இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
- தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
- படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
- இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே.
- திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
- எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
- உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
- இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
- மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
- ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
- ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
- ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
- ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
- உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
- தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
- எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்
- ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ
- நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ
- ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
- வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
- கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
- எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
- அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
- ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
- கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண
- இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து
- பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆகின்ற அரசே
- ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
- கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
- வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
- வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
- பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
- பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.
- நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
- நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
- கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
- கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
- பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
- பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
- குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
- குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
- ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
- ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
- மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
- வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
- நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
- நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
- வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
- விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
- கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
- கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
- விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
- விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
- பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
- பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
- எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
- என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே.
- திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்
- செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
- கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்
- கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
- பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்
- பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
- வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே
- மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.
- குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
- குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
- என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
- எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
- பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
- பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
- அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
- ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
- பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
- பருவத்தே அணிந்தணிந்தது பாடும்வகை புரிந்து
- நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
- நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
- நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
- நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
- கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
- குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- சுற்றதுமற் றவ்வழியா சூததுஎன் றெண்ணாத்
- தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
- எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
- கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
- கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
- பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
- பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே.
- ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
- இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
- வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
- மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
- தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
- தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
- ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
- உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
- தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
- தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
- இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
- இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
- பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
- பெற்றிஅறித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
- ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
- உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
- நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
- நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
- தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
- தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
- தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
- சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
- வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
- மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.
- அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
- தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
- செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
- மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
- மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
- இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
- போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
- வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
- வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
- போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
- பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
- ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
- செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
- திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
- இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
- என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
- அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
- ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
- எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
- உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
- இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
- இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
- கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
- ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
- திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
- தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
- வருமாலை மண்ணுறத்தப் பெயர்த்துநடந் தருளி
- வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
- தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
- செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
- குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
- குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
- இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
- தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
- சுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
- களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
- உரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
- உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
- அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
- ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
- உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
- வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
- தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
- வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
- மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
- மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
- மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
- குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
- கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
- கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
- கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
- பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
- பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.
- ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
- நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
- காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
- கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
- சிலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
- சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
- ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
- அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
- பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
- கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
- கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
- சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
- தாங்குஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
- மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
- மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
- அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
- அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
- கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
- உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
- பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
- துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
- சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
- பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
- உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
- உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
- பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
- பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
- விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
- விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
- துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
- தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
- களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
- களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
- குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
- குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.
- வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
- விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
- பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
- போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
- நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
- ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
- வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
- ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
- தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
- தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
- கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
- கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
- படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
- பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
- நடைப்புலையேன் பொருட்டாக நடத்திரவிற் கதவம்
- நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
- இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
- இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
- தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
- விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
- நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
- நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
- போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
- புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
- சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
- துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.
- ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
- ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
- அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
- அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
- பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
- பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
- கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
- கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
- விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
- விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
- வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
- இந்துநிலை முடிமுதராந் திருஉருவங் காட்டி
- என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
- முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
- முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.
- புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
- பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
- நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
- எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
- எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
- தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
- தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
- கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
- மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
- நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
- அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
- அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
- கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
- கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
- மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
- பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
- பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
- அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
- னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
- முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
- முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
- கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
- கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
- பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
- பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
- தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
- தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
- கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
- கரையாது நிறைந்திருக் கழலடிகள் வருந்த
- வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
- விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
- அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
- நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
- நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே .
- எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
- என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
- பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
- போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
- தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
- இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
- இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே .
- சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
- தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
- பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
- பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
- புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
- பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
- உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே .
- தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
- தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
- பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
- தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
- என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
- என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
- அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
- கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
- கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தொண்டனென் எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
- துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
- உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
- அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
- தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
- பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
- செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
- திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
- பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
- பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.
- அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
- பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
- போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
- தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
- சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
- மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
- மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
- பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
- பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
- மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
- வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
- தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
- செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
- திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
- திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
- எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
- இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
- தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
- தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
- கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
- உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.
- அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
- றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
- என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
- எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
- துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
- தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
- முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
- முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
- மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
- மோகனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
- யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
- உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
- போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
- புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
- நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
- நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.
- காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
- காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
- பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
- குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
- மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
- மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.
- ஆறறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
- அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
- வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
- விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
- பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
- பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
- சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
- சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.
- கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
- காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
- ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
- றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
- துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
- துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
- வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
- வித்தகிநின் திருவருளை வியக்கமுடி யாதே.
- இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
- எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
- பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
- பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
- மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
- வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
- அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
- ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.
- ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
- அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
- தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
- திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
- கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
- தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.
- அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
- ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
- இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
- யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
- மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
- மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
- தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
- சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
- மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
- மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
- மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
- மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
- தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
- தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
- அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
- தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
- சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
- எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த
- இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- கம்மடியா185க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து
- கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
- நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே.
- உம்பருக்குங் கிடைப்பரிநாம் மணிமன்றில் பூத
- உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
- செம்பருக்கைக் கல்லுறத்தத் தெருவில்நடந் திரவில்
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
- வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
- மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
- இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
- இறைவநின் தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.
- உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
- உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
- துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
- சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
- தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
- மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
- பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
- பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
- பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
- போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
- மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
- வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
- றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
- பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
- பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
- அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
- அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
- வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
- மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
- விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
- விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
- ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
- அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
- சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
- துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
- பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
- படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
- ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
- உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
- எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
- எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
- அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
- அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
- இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
- எழிற்கதவந் திறப்பித்தங் கொனைஅழைத்தென் கரத்தே
- சம்மபதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
- தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.
- வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
- வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
- தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
- தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
- மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
- ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
- அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
- புன்றனை தலையெனநான் அறியாமல் ஒருநாள்
- பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
- இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
- இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
- மன்றலின்அங் கெனைஅழைத்தேன் கையில்ஒன்று கொடுத்தாய்
- மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
- பொன்றவிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
- புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.
- தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
- தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
- வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
- வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
- எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
- விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
- மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
- எழுத்தினொடு பதமாகி மந்திரமாய் புவனம்
- எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
- வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
- வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
- அழுத்துறமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
- ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
- இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.
- சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
- சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
- செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
- பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து
- பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
- பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
- என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
- தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
- தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
- மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
- வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
- உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
- ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
- விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
- வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்
- கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்
- கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
- அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்
- அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
- மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
- மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே.
- பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த
- பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்
- மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக
- வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
- விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்
- விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்
- குழைஅசையக் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே
- கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
- சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
- உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
- உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
- கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
- கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
- கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
- கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
- மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
- வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப்
- பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
- பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.
- 187. இருவர் பெரியர் - பதஞ்சலி, வியாக்கிரபாதர். ச.மு.க.
- திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
- சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
- தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
- போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
- பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே
- பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.
- சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
- தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
- செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
- எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
- எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
- பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
- செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
- களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
- நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
- நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.
- அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
- அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
- திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
- புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
- புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
- உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
- ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
- தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
- கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
- எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
- இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.
- பார்பூத்த பசுங்கொடிபொற் பாலைவயர்கள் அரசி
- பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
- சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
- கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து
- கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.
- பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
- பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
- தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
- இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
- தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
- தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
- தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
- தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
- சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
- வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
- உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
- உடையானே நின்னருளின் அ€டாளம் இதுவே.
- அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
- என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாளுடையேன்188 தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
- ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
- அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
- வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
- இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்
- ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
- இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மெய்யாஅன் றெனைஅழைத்து வலியவுமென் கரத்தே
- வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- கையாது கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
- எய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- இனிதனித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்
- துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா
- எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
- மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
- வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
- எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
- இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
- வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
- மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
- அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
- ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
- துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
- தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
- தென்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
- சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
- வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
- மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
- நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
- நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
- நு‘ன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
- நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
- கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
- வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
- வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
- ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
- அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
- ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
- இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.
- அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
- கண்ணர நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
- கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
- எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
- எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
- தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
- மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்
- வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
- பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
- புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
- சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
- இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
- உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
- உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
- கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
- கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
- சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
- உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
- பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
- பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
- கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
- குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
- தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- கரிகபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
- புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
- தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
- தனிப்பொருள்என் க€யிலளித்த தயவுடைய பெருமான்
- கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
- கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.
- உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
- நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
- விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
- றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே.
- பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும் பொருள்அரு ளனுபவம் அதற்குப்
- பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப் பற்றறப் பற்றுதி இதுவே
- சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன்
- முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின் முதலர சியற்றிய துரையே.
- அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ அருட்சிவ மதற்கெனப் பலகால்
- படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம் பார்த்தரு ளால்எழுந் தருளி
- மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள் விளங்குவ அடிமுடி என்றாய்
- வடிவிலாக் கருணை வாரியே மூன்று வயதினில் அருள்பெற்ற மணியே.
- முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னிநின் றுளமயக் குறுங்கால்
- அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே
- என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம்
- இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிர்எனுங் குருவே.
- வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே
- ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
- பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான
- உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே.
- சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
- தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
- காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
- கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
- ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
- இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
- பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
- பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
- சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
- உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
- ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
- பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
- புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
- கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
- கடலேநின் கழல்கருதக் கருது வாயே.
- வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
- வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
- தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
- சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
- சேம்மைவிடா தணிமைவிடத் தாள வந்த
- செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
- ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
- அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.
- தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
- திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
- நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான
- நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
- பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்
- பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
- மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய
- வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே.
- ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
- ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
- ஆங்காரப் பெருமதமால் யானை போல
- அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
- பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்
- பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ
- தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன
- செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே.
- விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
- மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
- களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
- கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
- துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
- துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
- வளங்கெழும்ஆ கநநெறியை வளர்க்க வந்த
- வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.
- தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
- செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
- சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
- தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
- கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
- குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
- தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
- செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.
- 191. எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோஎம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்கண்ணிலேன் மற்றோர்களைகண் இல்லேன்கழலடியே கைதொழுது காணின்அல்லால்ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணியனே.- 7215 (6-99-1) திருநாவுக்கரசர். திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.
- மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
- துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
- விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
- வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.
- நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
- சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்
- ஏற்றலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
- ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே.
- இலைக்குளநீ ரழைத்தனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
- தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
- கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
- மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.
- வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
- ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
- பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
- மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.
- ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
- தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
- ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
- தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
- வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
- தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
- கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
- நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
- தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
- ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
- தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
- இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
- உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
- றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
- அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.
- பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
- உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
- வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
- தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே.
- பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
- ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
- தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
- ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.
- கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
- பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
- குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி
- உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.
- மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
- என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க
- அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
- இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
- உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
- திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
- குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
- இருஎன்ற தனிஅகவல்194 எண்ணம்எனக் கியம்புதியே.
- சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
- மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
- காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
- ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
- பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
- எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
- மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
- புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .
- 194 `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம், திருவண்டப்பகுதியில் `என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை.வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பியஅற்புத மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்குஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமுது ஆக்கினன்பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.
- சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
- சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
- சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
- வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
- அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
- தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
- விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான்
- பெருநெடு மேனி தனிற்படப்165 பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
- கருநெடுங் கடலைக் கடத்து166 நற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
- வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே.
- நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
- களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
- அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
- வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.
- சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
- பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
- ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
- வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.
- விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
- கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
- தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
- வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே.
- கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
- செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
- நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
- வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே.
- முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய
- இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
- என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே
- மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே.
- துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
- விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
- நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
- மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே.
- தடக்கைமா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப்புயங் களும்கை
- இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும் இறைப்பொழு தேனும்யான் மறவேன்
- விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிகமகிழ்ந் திடஅருட் பேறே
- மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
- திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
- மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
- வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.
- திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
- உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
- குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
- வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட்
- டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத்
- தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும்
- வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
- துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
- வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
- வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- ஆணி லேஅன்றி ஆருயிர்ப் பெண்ணிலே அலியி லேஇவ்வ டியனைப் போலவே
- காணி லேன்ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்க டையனை மாயையாம்
- ஏணி லேஇடர் எய்தவி டுத்தியேல் என்செய் கேன்இனி இவ்வுல கத்திலே
- வீணி லே உழைப் பேன்அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நாவி னால்உனை நாள்தொறும் பாடுவார் நாடு வார் தமை நண்ணிப்பு கழவும்
- ஓவி லாதுனைப் பாடவும் துன்பெலாம் ஓடவும்மகிழ் ஓங்கவும் செய்குவாய்
- காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக் கடவுளேநற்க ருங்குழி என்னும்ஊர்
- மேவி அன்பர்க்க ருள்கண நாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
- கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
- திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
- இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே.
- போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
- சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
- ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
- மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.
- செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
- வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
- அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
- மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.
- உளங்கொள் வஞ்சக நெஞ்சர்தம் இடம்இடர் உழந்தகம் உலைவுற்றேன்
- வளங்கொள் நின்பத மலர்களை நாள்தொறும் வாழ்த்திலேன் என்செய்கேன்
- குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்கரும் பெருவாழ்வே
- தளங்கொள் பொய்கைசூழ் தணிகைஅம் பதியில்வாழ் தனிப்பெரும் புகழ்த்தேவே.
- ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
- வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
- காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
- சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- வளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி
- இளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே
- விளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர்
- திளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- கையாத அன்புடையார் அங்கை மேவும்
- கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
- பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
- பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
- உய்யாத குறைஉண்டோ துயர்சொல் லாமல்
- ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
- ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
- கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.
- கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
- குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
- தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
- சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
- பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
- போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
- சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
- செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.
- பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
- பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
- கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
- என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்தாய்
- கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
- கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
- தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
- கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
- சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
- தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
- சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
- செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
- தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
- மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
- கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
- கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
- மாளாத தெண்டர்அக இருளை நேக்கும்
- மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
- தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
- வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
- புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
- பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
- எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
- இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
- தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
- கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
- அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
- அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
- சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
- செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
- தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
- வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
- தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோஎன்
- சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
- பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
- பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
- சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
- மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன்
- என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
- என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்றம்
- அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
- ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
- மூடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
- தந்தைவழி நில்லாத பாவி என்றே
- தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
- எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
- எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
- சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
- பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
- பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
- புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
- பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
- பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
- தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பேயும் அஞ்சுறும் பேதை யார்களைப்
- பேணும் இப்பெரும் பேய னேற்கொரு
- தாயும் அப்பனும் தமரும் நட்பும்ஆய்த்
- தண்அ ருட்கடல் தந்த வள்ளலே
- நீயும் நானும்ஓர் பாலும் நீருமாய்
- நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
- சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
- ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
- அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
- தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
- மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா
- தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
- நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
- தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.
- பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
- கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
- விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
- வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.
- சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
- செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
- மங்க லம்பெற வைத்த வள்ளலே
- தங்க ருள்திருத் தணிகை ஐயனே.
- வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
- மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
- சால நின்றவன் தணிகை நாயகன்
- வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.
- அத்த னேதணி காச லத்தருள்
- வித்த னேமயில் மேற்கொள் வேலனே
- பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
- சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- நேயம் நின்புடை நின்றி டாதஎன்
- மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ
- பேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்
- தாய நின்கடன் தணிகை வாணனே.
- வாணு தல்பெரு மாட்டி மாரொடு
- காணு தற்குனைக் காதல் கொண்டனன்
- ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
- மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.
- கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின் றேன்நின் திருக்கருணை
- அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவில்லேன்
- விடையே றீசன் புயம்படும்உன் விரைத்தாள் கமலம் பெறுவேனோ
- கொடைஏர் அருளைத் தருமுகிலே கோவே தணிகைக் குலமணியே.
- தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குன் அருள்தந்தால்
- வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
- ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
- போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.
- குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
- நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
- என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
- இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.
- மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
- மனமுற நினைந்தகத் தன்பாம்
- பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அருள்எலாம் திரண்ட ஆனந்த உருவே
- அன்பர்பால் இருந்திட அருளாய்
- தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
- தணிகைவாழ் சரவண பவனே.
- நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
- நின்அடிக் கமலங்கள் நினைந்தே
- போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
- ஆச்செயில் உய்குவன் அமுதே
- சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை
- ஏத்திடா தழிதரும் செல்வப்
- புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- கண்உறு மணியாம் நின்அடி யவர்பால்
- கலந்திடில் உய்குவன் கரும்பே
- தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே.
- தணிகைவாழ் சரவண பவனே.
- செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
- விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
- வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
- பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
- பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
- அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
- ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
- அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
- உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
- கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
- நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
- சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
- அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே.
- வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
- தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
- கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
- வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
- முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
- மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
- உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
- என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும்அவர்க் கிதங்கூ றேனோ.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
- கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
- வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
- மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
- கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
- ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
- பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
- பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.
- தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
- கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
- கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
- வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
- உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
- பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
- மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
- நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
- சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
- வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
- உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
- அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
- வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
- ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
- தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
- வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.
- இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கி இழுதென்ன நெஞ்சம் இளகேன்
- மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட் டலங்கல் அணியேன்
- குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
- நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே.
- அவம்நாள் கழிக்க அறிவேன் அலாதுன் அடிபேணி நிற்க அறியேன்
- தவம்நாடும் அன்ப ரொடுசேர வந்து தணிகா சலத்தை அடையேன்
- எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும் இடம்ஈயில் உன்றன் அடியார்
- இவன்ஆர் இவன்றன் இயல்பென்ன என்னில் எவன்என் றுரைப்பை எனையே.
- அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
- அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
- தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
- தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை
- தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித்
- தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
- எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
- திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ர்ப்
- பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல்
- பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
- வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
- மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
- எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
- பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
- பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
- வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
- வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
- ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
- திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
- தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
- கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
- எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
- சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்
- கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
- நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
- கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
- காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
- விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
- நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
- கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
- மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
- சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
- நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
- நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
- கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
- குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
- அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
- துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
- என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
- முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
- அருகா மலத்தின் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
- உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
- பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
- முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
- வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
- கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
- அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
- முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
- ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
- பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
- அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
- தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
- தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
- கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
- கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்
- பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
- வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
- புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
- பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.
- பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில்
- வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
- என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே
- அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே.
- தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
- மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
- யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
- தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.
- தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
- மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
- வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
- ஆறாக்கரப்10 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
- மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
- மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
- சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
- பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
- சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமும்ஓர்
- நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
- இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
- கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.
- கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
- திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
- விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
- தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.
- மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
- வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
- கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
- கழலடிக் காக்கும்நாள் உளதோ
- குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
- குறிகுணங் கடந்ததோர் நெறியே
- எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
- எந்தையே தணிகைஎம் இறையே.
- விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
- விம்முறும் இளமுலை மடவார்
- களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
- கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
- அளக்கருங் கருணை வாரியே ஞான
- அமுதமே ஆனந்தப் பெருக்கே
- கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
- கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
- இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
- ஏந்திழை யவர்புழுக் குழியில்
- துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
- துணையடிக் காக்கும்நாள் உளதோ
- அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
- அரிஅயன் பணிபெரி யவனே
- வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
- மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
- வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
- வலித்திடும் மங்கையர் தம்பால்
- தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
- தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
- சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
- தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
- ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
- உதவுசீர் அருட்பெருங் குன்றே.
- வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
- மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
- ஒருவரும் நினது திருவடிப் புகழை
- உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
- அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
- அரும்பெறல் செல்வமே அமுதே
- குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
- பதகர்பால் நாள்தொறும் சென்றே
- வாடிநின் றேங்கும் ஏழையேன் நெஞ்ச
- வாட்டம்இங் கறிந்திலை என்னே
- ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
- அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
- கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
- வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
- துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
- துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
- அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
- அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
- கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
- காடே இடமாக் கணங்கொண்ட
- பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
- பித்தப் பெருமான் திருமகனார்
- தாயோ டுறழும் தணிகா சலனார்
- தகைசேர் மயிலார் தனிவேலார்
- வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
- வெள்வளை கொண்டார் வினவாமே.
- கண்ணார் நுதலார் விடமார் களனார்
- கரமார் மழுவார் களைகண்ணார்
- பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
- பெரியார் கைலைப் பெருமானார்
- தண்ணார் சடையார் தருமா மகனார்
- தணிகா சலனார் தனிவேலார்
- எண்ணார் எளியாள் இவள்என் றெனையான்
- என்செய் கேனோ இடர்கொண்டே.
- மழுவார் தருகைப் பெருமான் மகனார்
- மயில்வா கனனார் அயில்வேலார்
- தழுவார் வினையைத் தணியார் அணியார்
- தணிகா சலனார் தம்பாதம்
- தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
- துதியா நிற்பார் அவர்நிற்கப்
- புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
- தருள்தந் தருளிப் போனாரே.
- நிருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
- நினைவார் தங்கள் நெறிக்கேற்க
- அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
- அறுமா முகனார் அயில்வேலார்
- திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
- திருமா மலையார் ஒருமாதின்
- வருத்தம் பாரார் வளையும் தாரார்
- வாரார் அவர்தம் மனம்என்னே.
- பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
- பெயரும் பிச்சைப் பெருமானார்
- திரமன் றினிலே நடனம் புரிவார்
- சிவனார் மகனார் திறல்வேலார்
- தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
- தணிகா சலனார் தமியேன்முன்
- வரமன் றவும்மால் கொளநின் றனனால்
- மடவார் அலரால் மனநொந்தே.
- என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
- என்னுடைப் பொருளினை எளியேன்
- மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
- மணியினை அணியினை வரத்தை
- மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
- மிளிர்அருள் தருவினை அடியேன்
- தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
- அன்பினுக் கெளிவரும் அரசை
- விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
- விளக்கினை அளக்கரும் பொருளைக்
- கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
- முனிந்திடா தருள்அருட் கடலைத்
- தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- முத்தனை முத்திக் கொருதனி வித்தை
- முதல்வனை முருகனை முக்கண்
- பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
- பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
- சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
- துரியனைத் துரியமும் கடந்த
- சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
- மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
- துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
- மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே.
- ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
- மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
- து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
- ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
- ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
- துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
- வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
- செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே.
- பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரல் விடுத்துய்யக்
- கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
- ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
- வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.
- தொண்ட னேன்இன்னும் எத்தனை நாள்செலும் துயர்க்கடல் விடுத்தேற
- அண்ட னேஅண்டர்க் கருள்தரும் பரசிவன் அருளிய பெருவாழ்வே
- கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக் களைந்தருள் களைகண்ணே
- விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில் விளங்கிய வேலோனே.
- வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீந்தக்
- காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே
- தூண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும்
- ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
- மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
- சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
- தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே.
- மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
- வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
- தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
- சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
- அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
- இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்
- உவர்ப்புக் கேணியில் உழைத்தகம் இளைத்தேன்
- வீங்கி நீண்டதோர் ஓதிஎன நின்றேன்
- விழலுக் கேஇறைத் தலைந்தனன் வீணே
- தாங்கி னேன்உடற் சுமைதனைச் சிவனார்
- தனய நின்திருத் தணிகையை அடையேன்
- ஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பண்அ ளாவிய மொழியினால் மயக்கும்
- படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
- தண்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்
- தடத்த ளாவிய தருமநல் தேவே
- பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்
- பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே
- எண்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ
- டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
- கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
- பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
- புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
- உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
- உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
- சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
- காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
- நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
- போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.
- வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
- நலத்தால்உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
- தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
- மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.
- இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே
- அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே
- வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன்
- துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே.
- சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
- அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
- இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
- முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
- நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
- சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
- செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
- பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
- போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
- தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
- பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
- மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
- வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
- அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
- ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
- சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
- மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
- அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
- அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
- துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
- தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
- தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
- எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
- வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
- வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
- போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
- பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
- சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
- மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
- நேயமாம் சண்முக என்று நீறிடில்
- தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.
- பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
- வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
- இசைசிவ சண்முக என்று நீறிடில்
- திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே.
- பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
- கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
- தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
- பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
- ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால்
- வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயல்அம்மா.
- காமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ
- தேமலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல்
- ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே
- ஓமலர் அடிகேள் ஒன்றினை ஒன்றென் றுரையாயே.
- தேடுங் கிளிநீ நின்னை விளம்பித் திருஅன்னார்
- அடுந் தணிகையில் என்உயிர் அன்னார் அருகேபோய்க்
- கூடும் தனமிசை என்பெயர் வைத்தக் கோதைக்கே
- ஈடும் கெடஇன் றென்னையும் ஈந்தருள் என்பாயே.
- வதியும் தணிகையில் வாழ்வுறும் என்கண் மணி அன்னார்
- மதியுந் தழல்கெட மாமயின் மீதிவண் வருவாரேல்
- திதியும் புவிபுகல் நின்பெயர் நெறியைத் தெரிவிப்பான்
- நதியுந் துணவுத வுவனங் கொடிநீ நடவாயே.
- கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி
- அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி
- பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி
- சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.
- பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
- இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
- துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
- தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
- மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி
- தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி
- கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி
- குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.
- தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
- பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி
- நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
- சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.
- முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
- மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
- பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
- தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.
- மதிவளர் சடைமுடி மணிதரு சுரர்முடி மணிஎன்கோ
- பதிவளர் சரவண பவநவ சிவகுரு பதிஎன்கோ
- துதிவளர் துணைஅடி தொழும்அடி யவர்பெறு துணைஎன்கோ
- நிதிவளர் பரசுக நிலைபெறும் நெறிதரு நினையானே.
- திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
- பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்
- வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்
- குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- தோடேந்து கடப்பமலர்த் தொடையொடு செங்குவளை மலர்த்தொடையும் வேய்ந்து
- பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்றுப்
- பீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங் கவர்கண்முலைப் பெரிய யானைக்
- கோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- நீர்வேய்ந்த சடைமுடித்துத் தோலுடுத்து நீறணிந்து நிலவுங் கொன்றைத்
- தார்வேய்ந்து விடங்கலந்த களங்காட்டி நுதலிடைஓர் தழற்கண் காட்டிப்
- பேர்வேய்ந்த மணிமன்றில் ஆடுகின்ற பெரும்பித்தப் பெருமான் ஈன்ற
- கூர்வேய்ந்த வேல்அணிதோள் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- பெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்
- நாயேன்றன் பிழைகள் எல்லாம்
- எண்குணப்பொற் குன்றேநின் திருஉளத்தில்
- சிறிதேனும் எண்ணேல் கண்டாய்
- பண்குணத்தில் சிறந்திடும்நின் பத்தர்தமைப்
- புரப்பதுபோல் பாவி யேனை
- வண்குணத்தில் புரத்தியிலை யேனும்எனைக்
- கைவிடேல் வடிவே லோனே.
- வன்குலஞ் சேர்கடன் மாமுதல் வேர்அற மாட்டிவண்மை
- நன்குலஞ் சேர்விண் நகர்அளித் தோய்அன்று நண்ணிஎன்னை
- நின்குலஞ் சேர்த்தனை இன்றுவி டேல்உளம் நேர்ந்துகொண்டு
- பின்குலம் பேசுகின் றாரும்உண் டோஇப் பெருநிலத்தே.
- பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
- பசுகரணம் ஈங்கசுத்த
- பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
- பதியோக நிலைமைஅதனான்
- மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
- மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
- வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
- வந்துணர்வு தந்தகுருவே
- துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
- துரிசறு சுயஞ்சோதியே
- தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
- சொல்லரிய நல்லதுணையே
- ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
- உத்தமர்தம் உறவுவேண்டும்
- உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
- உறவுகல வாமைவேண்டும்
- பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
- பேசா திருக்க்வேண்டும்
- பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
- பிடியா திருக்கவேண்டும்
- மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
- மறவா திருக்கவேண்டும்
- மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
- வாழ்வில்நான் வாழவேண்டும்
- தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
- கதறுவார் கள்ளுண்டதீக்
- கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
- கடும்பொய்இரு காதம்நாற
- வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
- மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
- மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
- வழக்குநல் வழக்கெனினும்நான்
- உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
- ரோடுறவு பெறஅருளுவாய்
- உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
- உவப்புறு குணக்குன்றமே
- தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
- நன்மைதீ மைகளும் இல்லை
- நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
- நடுநின்ற தென்றுவீணாள்
- போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
- போதிப்பர் சாதிப்பர்தாம்
- புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
- போந்திடில் போகவிடுவார்
- சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
- தாம்புபாம் பெனும்அறிவுகாண்
- சத்துவ அகண்டபரிபுரண காரஉப
- சாந்தசிவ சிற்பிரம நீ
- தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
- வானைஒரு மான்தாவுமோ
- வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
- மலையைஓர் ஈச்சிறகினால்
- துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
- துரும்பினால் துண்டமாமோ
- சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
- தோயுமோ இல்லைஅதுபோல்
- அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
- அடிமலர் முடிக்கணிந்தோர்க்
- கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
- தற்பமும்வி கற்பம்உறுமோ
- தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
- காண்உறு கயிற்றில் அறவும்
- கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
- கதித்தபித் தளையின்இடையும்
- மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
- மாயையில் கண்டுவிணே
- மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
- வாள்வென்றும் மானம்என்றும்
- ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
- உள்என்றும் வெளிஎன்றும்வான்
- உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
- உண்மைஅறி வித்தகுருவே
- தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
- கன்மவுட லில்பருவம்நேர்
- கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
- கடல்நீர்கொ லோகபடமோ
- உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
- ஒருவிலோ நீர்க்குமிழியோ
- உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
- உன்றும்அறி யேன் இதனைநான்
- பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
- பட்டுமதி கெட்டுழன்றே
- பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
- பற்றணுவும் உற்றறிகிலேன்
- சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
- ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
- எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
- இகழ்விற கெடுக்கும்தலை
- கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
- கலநீர் சொரிந்தஅழுகண்
- கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
- கைத்திழவு கேட்கும்செவி
- பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
- பகீர்என நடுங்கும்நெஞ்சம்
- பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
- பலிஏற்க நீள்கொடுங்கை
- சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
- அழுதுண் டுவந்ததிருவாய்
- அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
- அணிந்தோங்கி வாழுந்தலை
- மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
- மிக்கஒளி மேவுகண்கள்
- வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
- விழாச்சுபம் கேட்கும்செவி
- துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
- சுகரூப மானநெஞ்சம்
- தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
- சுவர்ன்னமிடு கின்றகைகள்
- சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
- வாழ்க்கைஅபி மானம்எங்கே
- மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
- மன்னன்அர சாட்சிஎங்கே
- ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
- நான்முகன் செய்கைஎங்கே
- நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
- நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
- ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
- இலக்கம்உறு சிங்கமுகனை
- எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
- ஈந்துபணி கொண்டிலைஎனில்
- தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
- வள்ளல்உன் சேவடிக்கண்
- மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
- வாய்ந்துழலும் எனதுமனது
- பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
- பித்துண்ட வன்குரங்கோ
- பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
- பேதைவிளை யாடுபந்தோ
- காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
- காற்றினாற் சுழல்கறங்கோ
- காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
- கர்மவடி வோஅறிகிலேன்
- தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
- கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
- கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
- கருதிலேன் நல்லன்அல்லேன்
- குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
- குற்றம்எல் லாம்குணம்எனக்
- கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
- குறைதவிர்த் தருள்புரிகுவாய்
- பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
- பெற்றெழுந் தோங்குசுடரே
- பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
- பேதமில் பரப்பிரமமே
- தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
- பெய்சிறையில் இன்னும்ஒருகால்
- பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
- பெறுந்துயர் மறந்துவிடுமோ
- இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
- இறப்பிக்க எண்ணம்உறுமோ
- எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
- இருந்தவடு எண்ணுறானோ
- கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
- காசுக்கும் மதியேன்எலாம்
- கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
- கலந்திடப் பெற்றுநின்றேன்
- தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- முடியா முதலே சரணம் சரணம்
- முருகா குமரா சரணம் சரணம்
- வடிவேல் அரசே சரணம் சரணம்
- மயிலூர் மணியே சரணம் சரணம்
- அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
- அரியாய் பெரியாய் சரணம் சரணம்
- கடியாக் கதியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வேதப் பொருளே சரணம் சரணம்
- விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
- போதத் திறனே சரணம் சரணம்
- புனைமா மயிலோய் சரணம் சரணம்
- நாதத் தொலியே சரணம் சரணம்
- நவைஇல் லவனே சரணம் சரணம்
- காதுக் கினிதாம் புகழோய் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தே னந்தோ காலமெலாம்
- அல்ல லகற்றிப் பெரியோரை யடுத்து மறியேன் அரும்பாவி
- செல்லத் தணிகைத் திருமலைவாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
- வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே.
- சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
- செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
- கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
- கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
- வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன்
- ஊன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருங்கண் மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
- ஆன்றோய் விடங்க ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- பேரா ரொற்றி யீரும்மைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
- ஏரார் பெயரின் முன்பினிரண் டிரண்ட கத்தா ரென்றாரென்
- நேரா வுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார்
- ஆரார் சடைய ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான்
- என்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றுரைத்தேன்
- துன்றும் விசும்பே யென்றனர்நான் சூதா முமது சொல்லென்றேன்
- குன்றுங் குடமு மிடையுனது கொங்கை யெனவே கூறினரே.
- இருமை யளவும் பொழிலொற்றி யிடத்தீர் முனிவ ரிடரறநீர்
- பெருமை நடத்தீ ரென்றேனென் பிள்ளை நடத்தி னானென்றார்
- தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்றார்
- கரும மெவன்யான் செயவென்றேன் கருதாண் பாலன் றென்றாரே.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார்
- ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார்
- சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே.
- ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே
- யென்னா குலத்தை யோட்டுமென்றே னிடைய ரலநா மென்றுரைத்தார்
- பொன்னாற் சடையீ ரென்றேனென் புதிய தேவி மனைவியென்றார்
- சொன்னாற் கேள்வி வியப்பென்றேன் சுத்த வியப்பொன் றென்றாரே.
- திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
- செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
- தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
- தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
- இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
- தென்அரசே என்அமுதே என்தா யேநின்
- மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
- மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
- கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
- கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
- எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
- இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
- பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
- புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
- அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
- ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
- புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
- நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய்
- விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய்
- எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
- உரைத்தவாய் மைகளைநாடி
- ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
- ஒதிபோல நிற்பதுமலால்
- கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
- காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
- கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
- கலங்கொள்ள வேண்டும்என்பர்
- இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
- இவர்க்கேது தெரியும்என்பர்
- இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
- இட்டகட் டென்பர்அந்த
- வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
- தியங்குவீர் அழியாச்சுகம்
- சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
- சேரவா ருங்கள்என்றால்
- இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
- இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
- இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
- இறுகப்பி டித்தணைக்கப்
- பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
- பெண்ணகப் படுமாகிலோ
- பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
- பிறகிதோ வருவம்என்பார்
- வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
- பேச்சிவை எலாம்வேதனாம்
- பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
- பெரும்புரட் டாகும்அல்லால்
- ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
- ஒருசிறிதும் இல்லைஇல்லை
- உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
- உலர்ந்தீர்கள் இனியாகினும்
- மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
- விரைமலர்த் தொடைஆதியா
- வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
- விளையாடு வீர்கள்என்பார்
- வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
- எண்ணிநல் லோர்கள்ஒருபால்
- இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ர்
- இறைப்பஅது கண்டுநின்று
- ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
- நம்உலகில் ஒருவர்அலவே
- ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
- நகைப்பர்சும் மாஅழுகிலோ
- ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
- உயர்பெண்டு சாக்கொடுத்த
- ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
- உளறுவார் வாய்அடங்க
- மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
- காண்பதே அருமைஅருமை
- கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
- கருணையால் அவர்வலியவந்
- திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
- தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
- கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
- ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
- பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
- புல்லாதி உணும்உயிர்களும்
- போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
- புறச்சுவர் எனப்புகலலாம்
- வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.
- திருமால் கமலத் திருக்கண்மலர் திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தைக்
- கருமா லகற்றுந் தனிமருந்தைக் கனக சபையிற் கலந்தஒன்றை
- அருமா மணியை ஆரமுதை அன்பை அறிவை அருட்பெருக்கைக்
- குருமா மலையைப் பழமலையிற் குலவி யோங்கக் கண்டேனே.
- மடந்தை மலையாண் மனமகிழ மருவும் பதியைப் பசுபதியை
- அடர்ந்த வினையின் தொடக்கைஅறுத் தருளும் அரசை அலைகடன்மேல்
- கிடந்த பச்சைப் பெருமலைக்குக் கேடில் அருள்தந் தகம்புறமும்
- கடந்த மலையைப் பழமலைமேற் கண்கள் களிக்கக் கண்டேனே.
- கருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்
- தருணச் சுவையை அச்சுவையிற் சார்ந்த பயனைத் தனிச்சுகத்தை
- வருணப் பவளப் பெருமலையை மலையிற் பச்சை மருந்தொருபால்
- பொருணச் சுறவே பழமலையிற் பொருந்தி யோங்கக் கண்டேனே.
- என்னார் உயிரிற் கலந்துகலந் தினிக்கும் கரும்பின் கட்டிதனைப்
- பொன்னார் வேணிக் கொழுங்கனியைப் புனிதர்உளத்தில் புகுங் களிப்பைக்
- கன்னார் உரித்துப் பணிகொண்ட கருணைப் பெருக்கைக் கலைத்தெளிவைப்
- பன்னா கப்பூண் அணிமலையைப் பழைய மலையிற் கண்டேனே.
- நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
- அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
- சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
- வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே.
- ஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை
- ஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்
- பாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
- சோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.
- ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
- பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
- ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
- மின்திரண்டு நின்றசடை மேல்.
- உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
- துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
- பிரிய நாயகி பேரருள் நாயகி
- பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம்.
- உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க
- உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
- திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே
- சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
- வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன
- வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
- அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
- சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
- மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
- வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
- பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
- புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
- அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்
- ஒளிபெற விளங்குசுடரே
- உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ
- யோகநிலை அருளுமலையே
- அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன
- தகந்தெளிய அருள்செய்தெருளே
- அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
- அறிவித்த சுத்தஅறிவே
- கருதவரும் ஒருதிருப் பெயர்கொள்மணியேஎமைக்
- காப்பதுன் கடன்என்றுமே.
- அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
- அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
- மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள
- வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
- பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே
- பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
- திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
- தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே.
- தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
- மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
- தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
- தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- துதிபெறு கணபதி இணையடி மலரும்
- பதிதரு சரவண பவன்மல ரடியுங்
- கதிதரு பரசிவன்இயலணி கழலும்
- மதியுற மனனிடை மருவுது மிகவே.
- மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
- ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
- தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
- சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே
- இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே
- மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்
- அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே.
- திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
- உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
- குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
- மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே.
- அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
- பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
- இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
- மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
- இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்
- இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்
- இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
- இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்
- ஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா.
- நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்
- ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே.
- பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
- ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே.
- மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
- அன்பெனும் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
- அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
- அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
- அன்புரு வாம்பர சிவமே.
- அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
- அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
- அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
- அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
- ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
- ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
- அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி
- ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
- ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
- அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
- ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
- ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
- எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
- அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
- ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
- ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
- ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
- யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
- ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
- ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
- அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
- திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
- அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
- சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
- அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
- அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
- தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
- ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
- ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
- அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
- அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
- அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
- அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
- அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
- தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
- அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
- அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
- ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- காரண காரியங் காட்டிடு வெளியெனும்
- ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
- ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
- ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- என்றா தியசுடர்க் கியனிலை யாயது
- வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
- சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
- அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
- முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
- அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
- அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
- அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
- அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
- வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
- அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
- அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
- அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
- ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
- அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
- ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- வாரமு மழியா வரமுந் தருந்திரு
- வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
- அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- கற்பம் பலபல கழியினு மழிவுறா
- அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
- வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
- ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
- அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
- தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
- அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
- எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
- அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி
- வாடுத னீக்கிய மணிமன் றிடையே
- ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
- நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
- ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி
- கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
- அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
- வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
- கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி
- எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா
- தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி
- பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
- னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி
- சாதியு மதமுஞ் சமயமுங் காணா
- ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
- தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்
- அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி
- உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
- அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
- பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
- அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
- உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
- அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
- என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
- தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி
- ஓதியோ தாம லுறவெனக் களித்த
- ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
- படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
- அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி
- பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
- அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
- திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
- அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
- மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்
- அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
- எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
- அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
- அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி
- எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்
- அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
- தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
- றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்
- தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
- அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
- ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி
- பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
- அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
- காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
- ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
- றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
- அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
- நானந்த மில்லா நலம்பெற வெனக்கே
- ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி
- எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
- யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
- மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
- வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
- அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
- சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
- லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்
- அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி
- சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
- அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
- சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
- அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- உபரச வேதியி னுபயமும் பரமும்
- அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- மந்தண மிதுவென மறுவிலா மதியால்
- அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
- எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
- வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி
- செடியறுத் தேதிட தேகமும் போகமும்
- அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
- துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
- அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
- பொதுவது சிறப்பது புதியது பழயதென்
- றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
- சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
- யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
- காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி
- எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
- கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
- எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
- கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
- இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்
- கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
- பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
- ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
- தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
- தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
- அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
- ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
- சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
- ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி
- சத்திய மாஞ்சிவ சத்த்’யை யீந்தெனக்
- கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
- சாவா நிலையிது தந்தன முனக்கே
- ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
- சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
- ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
- மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
- அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
- ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
- ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி
- எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
- றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
- அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
- ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
- எண்டர முடியா திலங்கிய பற்பல
- அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
- யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
- வாழிநீ டூழி வாழியென் றோங்குபே
- ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி
- மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
- யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
- எச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று
- அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
- நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
- றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
- மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
- ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- கருமசித் திகளின் கலைபல கோடியும்
- அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
- ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
- ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
- அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
- அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
- அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
- ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- இன்பசித் தியினிய லேக மனேகம்
- அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
- அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
- அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி
- படிமுடி கடந்தனை பாரிது பாரென
- அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
- ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
- மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
- யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
- ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
- அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
- அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
- கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
- அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
- அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே
- அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
- பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே
- அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
- வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
- தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
- ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
- றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
- பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
- மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
- எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்
- அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
- ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி
- பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
- தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
- அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
- வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
- ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
- எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
- யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி
- நவையிலா வுளத்தி னாடிய நாடிய
- வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி
- கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
- டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
- நன்றறி வறியா நாயினேன் றனையும்
- அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி
- நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
- ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
- தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
- ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
- எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
- அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
- டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி
- தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
- ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
- யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
- உருவமு மருவமு முபயமு மாகிய
- அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
- அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி
- தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள
- அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
- பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய
- அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
- உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
- அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
- வெருள்மன மாயை வினையிருணீக்கியுள்
- அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
- சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே
- அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி
- விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
- அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
- அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட
- அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
- உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
- அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
- விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
- அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி
- விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
- அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி
- காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
- ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி
- காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
- ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- அனலினு ளனலா யனனடு வனலாய்
- அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- அனலுறு மனலா யனனிலை யனலாய்
- அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
- புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
- அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி
- புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
- அனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி
- புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
- அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி
- புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
- அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி
- விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
- அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
- ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
- அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
- யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
- யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
- அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
- அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
- யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
- டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
- அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா
- அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
- றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
- ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
- வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
- ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை
- ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
- ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல
- ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன
- லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
- ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
- ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
- ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
- ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
- ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
- ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்
- ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
- ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
- வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
- ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
- ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
- ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
- ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
- ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
- ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
- ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
- ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
- ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
- ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
- ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
- ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
- ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்
- ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
- ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினி லூறியல் காட்டுறு பலபல
- ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
- ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
- ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
- ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
- ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை யுணரியல் கருதிய லாதிய
- ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
- தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
- அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
- அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
- வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
- அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
- அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
- அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
- அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
- அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
- அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
- அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
- அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
- அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை
- அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
- அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை
- அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகநடு வதனா லகப்புற நடுவை
- அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புற நடுவா லணிபுற நடுவை
- அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- புறநடு வதனாற் புறப்புற நடுவை
- அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புகலரு மகண்ட பூரண நடுவால்
- அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
- அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
- அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
- அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
- அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
- ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
- அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
- ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
- அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
- வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
- அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
- அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
- அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
- அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
- அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பரம்பர வெளியைப் பராபர வெளியில்
- அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
- அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
- அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
- அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
- அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காலமே முதலிய கருவிகள் கலைவெளி
- ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
- அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
- அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
- ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
- அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
- ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
- அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
- அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
- அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
- அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
- அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
- ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
- அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
- ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்
- அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
- அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
- அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
- அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- களவில கடல்வகை கங்கில கரையில
- அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
- அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
- கடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும்
- அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்
- அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்
- அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
- அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி
- பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
- அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
- ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- கோடியி லனந்த கோடிபல் கோடி
- ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்திய லொன்றா விளைவியல் பலவா
- அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
- விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
- அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
- அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்திடை முளையும் முளையிடை விளைவும்
- அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
- அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
- அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- முளையதின் முளையும் முளையினுண் முளையும்
- அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
- அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
- அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும்
- அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய
- அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உறவினி லுறவும் உறவினிற் பகையும்
- அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பகையினிற் பகையும் பகையினி லுறவும்
- அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
- ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
- அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
- அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- அருவினுள் ளருவும் மருவதி லருவும்
- அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி
- கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
- அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உருவதி லருவும் மருவதி லுருவும்
- அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
- அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
- அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்
- அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்
- அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
- அடியினுள் ளடியும் மடியிடை யடியும்
- அடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
- அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- முடியினுண் முடியும் முடியினின் முடியும்
- அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
- அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
- அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட
- அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
- அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
- ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
- ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
- ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
- அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
- அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
- அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி
- சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
- அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
- அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்
- அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உனற்கரு முயிருள வுடலுள வுலகுள
- வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்
- ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்
- ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
- ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
- அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
- அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
- ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை
- அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
- அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- உயிருறு முடலையு முடலுறு முயிரையும்
- அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
- ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
- அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்
- ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித்
- தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
- அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
- அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
- தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- அகப்புற வமுதளித் தைவரா திகளை
- அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- தருமக வமுதாற் சத்திசத் தர்களை
- அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
- ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை
- அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
- ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம்
- அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
- அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
- அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை
- அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
- எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
- கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
- எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
- கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
- ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
- ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
- சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
- அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
- அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
- ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
- அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- அண்டத் துரிசையு மகிலத் துரிசையும்
- அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
- அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
- அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்
- அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
- ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
- அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
- கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
- அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
- அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
- நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்
- ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
- ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
- ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
- ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
- தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
- அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
- சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
- அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
- கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
- அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- பேருறு நீலப் பெருந்திரை யதனால்
- ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- பச்சைத் திரையாற் பரவெளி யதனை
- அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
- அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
- அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
- அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
- அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
- அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
- அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
- அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
- தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
- னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
- சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
- அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
- எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
- அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
- விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
- அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
- அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
- அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
- அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
- அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
- அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
- அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
- படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
- அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
- காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
- ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
- அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை
- அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
- அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
- ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி
- இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
- அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
- செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்
- அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
- இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
- அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
- அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
- அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
- கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
- ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
- அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்
- பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
- வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
- ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
- பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
- பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
- பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே
- தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே
- பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
- பரமமே பரம பதந்தருஞ் சிவமே
- எங்கே கருணை யியற்கையி னுள்ளன
- அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
- அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
- தெருளிது வெனவே செப்பிய சிவமே
- அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
- மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
- அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
- றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
- அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
- பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
- அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
- வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
- அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
- அருளர சியற்றுகென் றருளிய சிவமே
- ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
- கைவரப் புரிந்த கதிசிவ பதியே
- சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
- ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
- அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே
- பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
- சீருற வருளாந் தேசுற வழியாப்
- பேருற வென்னைப் பெற்றநற் றாயே
- பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
- பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
- ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
- ஈன்றமு தளித்த வினியநற் றாயே
- துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
- கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
- துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
- இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
- நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
- தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே
- புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
- தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே
- சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
- றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
- உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
- யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
- துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
- பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
- ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
- பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
- இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
- தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
- வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
- யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
- துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
- உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
- பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
- கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
- உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
- அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே
- நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
- அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே
- விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
- கண்பெற நடத்துங் ககனமா மணியே
- வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
- நான்பெற வளித்த நாதமந் திரமே
- மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
- கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
- நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
- உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
- உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
- வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
- அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
- கற்பனை கடந்த கருணைமா நிதியே
- இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய
- அருட்பெருங் கடலே யானந்தக் கடலே
- பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
- இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
- என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே
- என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே
- என்பெருந் தவமே என்றவப் பலனே
- என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே
- என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே
- என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே
- என்பெரு நலமே யென்பெருங் குலமே
- என்பெரு வலமே யென்பெரும் புலமே
- என்பெரு வரமே யென்பெருந் தரமே
- என்பெரு நெறியே யென்பெரு நிலையே
- என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
- என்பெருந் தயவே யென்பெருங் கதியே
- என்பெரும் பதியே யென்னுயி ரியலே
- என்பெரு நிறைவே யென்றனி யறிவே
- என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
- மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட
- உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
- கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட
- மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
- இனம்பெறு சித்த மியைந்து களித்திட
- பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
- என்னுளங் கலந்த என்றனி யன்பே
- பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
- நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
- வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
- நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
- சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
- அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
- மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
- அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
- வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
- ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
- ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
- சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
- அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
- அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
- வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
- அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
- இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
- யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
- உத்தம னாகுக வோங்குக வென்றனை
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
- அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
- அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
- தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
- அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
- அருட்பெருந் திருவிலே அமர்ந்த
- அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
- அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
- அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
- கோடிகோ டிகளும்ஆங் காங்கே
- நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
- நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
- விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
- மெய்யறி வானந்தம் விளங்க
- அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
- கருவினால் பகுதியின் கருவால்
- எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
- இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
- விண்முதல் பரையால் பராபர அறிவால்
- விளங்குவ தரிதென உணர்ந்தோர்
- அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
- நண்ணியும் கண்ணுறா தந்தோ
- திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
- திரும்பின எனில்அதன் இயலை
- இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
- இசைத்திடு வேம்என நாவை
- அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- சுத்தவே தாந்த மவுனமோ அலது
- சுத்தசித் தாந்தரா சியமோ
- நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
- நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
- புத்தமு தனைய சமரசத் ததுவோ
- பொருள்இயல் அறிந்திலம் எனவே
- அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
- இயற்கையோ செயற்கையோ சித்தோ
- தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
- திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
- யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
- உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
- ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
- வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
- எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
- இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
- அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
- அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
- திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
- தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
- நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
- நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
- பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
- பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
- சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
- பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
- ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
- இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
- நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
- நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
- ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
- உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
- அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
- ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
- என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
- யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
- ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
- பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
- துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
- மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.
- எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
- புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
- வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
- குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
- புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கிவீண் போதுபோக் குறுவேன்
- நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினுங் கடையனேன் நவையேன்
- குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்
- எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்
- மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்
- குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
- குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
- மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
- வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
- நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
- நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
- நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
- விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
- விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
- அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
- அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
- கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
- கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
- களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
- கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.
- இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
- இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
- அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
- அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
- பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
- பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
- தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
- தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
- காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
- களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
- நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
- நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
- ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
- அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
- கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
- போக மாதியை விழைந்தனன் வீணில்
- பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
- தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
- சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
- காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
- காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
- ஆக மாதிசொல் அறிவறி வேனோ
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
- விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
- குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
- கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
- வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
- மாய மேபுரி பேயரில் பெரியேன்
- பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
- பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
- சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
- ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
- இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
- வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
- வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
- ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
- வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
- வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
- பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
- பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
- கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
- கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
- பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
- புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
- இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
- மருளை யேதரு மனக்குரங் கோடும்
- வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
- பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
- பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
- அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
- கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
- நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
- நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
- சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
- திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
- இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
- சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
- ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
- ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
- நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
- நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
- ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
- தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
- ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
- அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
- மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
- மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
- திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
- தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
- உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
- ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
- இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
- வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
- நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
- கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
- பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
- ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
- மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
- ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.
- வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
- பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
- நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
- துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
- நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
- போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில்
- ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
- ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே.
- அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்அசடனேன் அறிவிலேன்உலகில்
- குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் குழியிலே குளித்தவெங் கொடியேன்
- வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனங்கொணட சிறியேனன் மாயைக்
- களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்தருள் எனையே.
- வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
- சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் தயவிலேன் சூதெலாம் அடைத்த
- பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம்வெறுக் கச்செய்
- எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் என்னினும் காத்தருள் எனையே.
- உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் தோதிய வறிஞருக் கேதும்
- கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் குணம்பெரி துடையநல் லோரை
- அடுத்திலேன் அடுத்தற்காசையும் இல்லேன் அவனிமேல் நல்லவன் எனப்பேர்
- எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் றிருக்கின்றேன் காத்தருள் எனையே.
- பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
- சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
- தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
- வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
- உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பலகால்
- கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் கட்டிநல் தயிரிலே கலந்த
- தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்
- திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
- சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
- இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
- குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
- பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்
- உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
- கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
- துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
- பத்தரும் பித்தரும் பிதற்றும்
- கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
- கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
- வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
- மற்றொரு பற்றும்இங் கறியேன்
- சழங்குடை உலகில் தளருதல் அழகோ
- தந்தையுந் தாயும்நீ அலையோ.
- சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
- சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
- நீதியே நிறைநின் திருவருள் அறிய
- நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
- ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
- உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
- ஆதியே நடுவே அந்தமே ஆதி
- நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
- இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
- இயற்கையின் நிறைந்தபே ரின்பே
- அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
- அம்பலத் தாடல்செய் அமுதே
- வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
- வழங்குக நின்அருள் வழங்கல்
- நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
- நான்உயிர் தரிக்கலன் அரசே.
- விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
- விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
- கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
- கரைஎலாம் கடந்தது கண்டாய்
- வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
- வல்லவா அம்பல வாணா
- திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
- திகழ்வித்த சித்தனே சிவனே.
- சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
- தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
- நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
- நன்மையும் நரைதிரை முதலாம்
- துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
- சுகவடி வம்பெறும் பேறும்
- தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
- தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
- றிருள்இர வொழிந்தது முழுதும்
- மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
- மங்கல முழங்குகின் றனசீர்ப்
- பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
- பூவையர் புணர்ந்திடப் போந்தார்
- சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
- துலங்கவந் தருளுக விரைந்தே.
- சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
- இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
- வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
- அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
- தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
- துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
- வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
- உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
- தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
- அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
- வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
- நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
- தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
- காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
- வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
- ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
- தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.
- கரண வாதனை யால்மிக மயங்கிக்
- கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
- மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
- இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
- சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
- சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
- மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
- எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
- தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
- சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
- வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
- கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
- தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
- பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
- மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
- ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
- சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
- கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
- மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
- உயிர் தரித்திடா துன்அடி ஆணை
- தயவு செய்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
- திகழ்தனித் தந்தையே நின்பால்
- சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
- செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
- யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- போரிட முடியா தினித்துய ரொடுநான்
- பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
- யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
- என்பிழை பொறுப்பவர் யாரே
- பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
- பாவியேன் பிழைபொறுத் திலையேல்
- ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
- உடம்பைவைத் துலாவவும் படுமோ
- சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
- தெய்வத்துக் கடாதவன் என்றே.
- அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
- அழைத்தனன் அப்பனே என்னை
- எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
- எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
- பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
- பெருந்திறல் சித்திகள் எல்லாம்
- சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
- சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
- களித்தென துடம்பில் புகுந்தனை எனது
- கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
- தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
- சிறப்பினால் கலந்தனை உள்ளம்
- தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
- தடைபடாச் சித்திகள் எல்லாம்
- அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
- அடியன்மேல் வைத்தவா றென்னே.
- சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
- தூயநல் உடம்பினில் புகுந்தேம்
- இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
- இன்புறக் கலந்தனம் அழியாப்
- பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
- பரிசுபெற் றிடுகபொற் சபையும்
- சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
- தெய்வமே வாழ்கநின் சீரே.
- என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி
- மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
- பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன்
- அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே.
- சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி
- நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி
- ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே
- ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.
- இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம் தனித்தலைமைஇறைவா உன்றன்
- நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும்
- தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால்இங்கே
- அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
- சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
- பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
- பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
- நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
- நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
- மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
- வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
- திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
- சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
- கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
- காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
- விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
- விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
- தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
- தடைபடுமோ திருவுளந்தான் சற்றும்அறிந் திலனே.
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
- மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
- கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
- கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
- தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
- தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
- திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
- மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
- கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்டகொடியனேன்குணங்கள்
- முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென்முனிவுதீர்ந்தருளே.
- வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
- சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே
- இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
- செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
- பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் புணர்ப்பலால்என்புணர்ப்பலவே
- என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே எந்தைவே றியம்புவதென்னோ
- சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
- இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் எய்துவித் திடுதியேல் அதுவுன்
- தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் சம்மதம் அன்றுநான் இதனைப்
- பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் பால்உணும் காலையே உளதால்
- மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.
- செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்தநாள் அன்றி
- அறிவதில் லாத சிறுபரு வத்தும் அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
- எறிவதும் மேட்டில் எறிந்தும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந் ததுவே
- பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவ தென்னே.
- சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
- புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
- பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
- உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.
- இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் இருக்கவும் ஆசைஇன் றினிநான்
- பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
- சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் செய்யவும் ஆசைஒன் றில்லை
- துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து தூங்கவும் ஆசைஒன் றிலையே.
- சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்
- நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
- சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்
- தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்.
- உருமலி உலகில் உன்னைநான் கலந்தே ஊழிதோ றூழியும் பிரியா
- தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னையே பாடி நின்றாடி
- இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
- திருமணிப் பொதுவில் அன்புடையவராச் செய்யவும் இச்சைகாண்எந்தாய்.
- திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில்
- உருவளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
- மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும்
- கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய்.
- தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
- துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
- அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
- இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கிலை இவைஎலாம் என்னுள்
- சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் திருவுளத் தறிந்தது தானே
- தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ தருதலே வேண்டும்இவ் விச்சை
- நவைஇலா இச்சை எனஅறி விக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.
- தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே
- கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
- இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே
- இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை.
- திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
- பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
- பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
- உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
- இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
- விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
- கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
- அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
- சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
- ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
- வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
- பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
- தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
- நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
- உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
- கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண்ணுதற் கடவுளே என்னைப்
- பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கமிக் குடையோர்
- மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
- உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
- ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
- மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
- காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
- ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- உற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
- பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்
- உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
- மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.
- அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
- சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
- வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
- தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
- புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
- என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
- வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
- என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
- எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
- தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
- களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
- அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
- இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
- கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்
- விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
- உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
- கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
- வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
- உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
- அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் அப்பனே நினைமறந் தறியேன்
- செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
- பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும்என்னைக்
- குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் குணப்பெருங் குன்றினுக் கழகோ.
- பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
- செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
- நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் நேயமும் நீஎனப் பெற்றே
- குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே.
- பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை பணிபுரிந் தாங்கிது வரையில்
- புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
- விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே
- தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த செய்கைஎன் செப்புக நீயே.
- ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
- காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
- நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
- தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
- பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
- ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
- சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
- வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
- ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும்
- தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே
- சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா
- பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
- சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
- தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கிஆ னந்த
- ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும்பெருந் தந்தையே இன்பப்
- பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே பிள்ளைநான் பேதுறல் அழகோ.
- சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
- பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
- நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
- பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
- நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
- மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
- தலைவனே எனது தந்தையே நினது தனையன்நான் தளருதல் அழகோ.
- ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
- சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
- நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
- ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
- அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார்
- பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள் புரிதனித் தலைமைச்
- சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
- சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் துயர்ந்துளம் வாடுதல் அழகோ.
- குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
- உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன228 மற்றென தலவே
- தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி
- மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.
- கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்
- மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
- இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
- தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
- தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும்என் உளமும்
- மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக வழக்கிலே உயிர்இரக் கத்தால்
- இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே
- நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் நீங்கும்நின் திருவுளம் அறியும்.
- மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
- குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் கொடியதீ நெறியிலே மக்கள்
- புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின்பணி விடுத்தே
- உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ உண்பதத் தாணைநான் அறியேன்.
- தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும்
- இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட் கேற்கவே பயிற்றிடுந் தோறும்
- பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார் பண்பனே என்னைநீ பயிற்றத்
- தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
- தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் தந்தையர் தங்களை அழைத்தே
- சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் சூழலே போகின்றார் அடியேன்
- என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
- பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோபெரியநின் ஆணைநான் அறியேன்.
- குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப்
- பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
- மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும்
- எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
- உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி
- நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
- பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
- சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.
- இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
- தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
- அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
- சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
- நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
- படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
- செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
- அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
- கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
- காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
- பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
- பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
- உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
- உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
- அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
- செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
- திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
- ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
- ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
- எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
- எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
- அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
- வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
- மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
- புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
- பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
- உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
- துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
- படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
- படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
- ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
- செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
- சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
- எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
- பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
- பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
- சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
- சாத்திரக் குப்பையும் தணந்தேன்
- நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
- நித்திய வாழ்க்கையும் சுகமும்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
- ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
- உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
- உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
- அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
- அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
- மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
- வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
- துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
- சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
- பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
- பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
- கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
- கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
- அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
- அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.
- மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
- மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
- இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்
- என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
- சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
- சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
- பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
- பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.
- முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
- முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
- தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
- தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
- என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
- யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
- பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
- பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.
- விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
- விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
- மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
- முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
- செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
- சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
- பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
- பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.
- காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
- கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
- கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
- கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
- சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
- சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
- பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
- பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.
- சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
- செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
- இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
- கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
- சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
- சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
- நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- நாயிற் கடையேன் கலக்கமெலாம் தவிர்த்து நினது நல்லருளை
- ஈயிற் கருணைப் பெருங்கடலே என்னே கெடுவ தியற்கையிலே
- தாயிற் பெரிதும்237 தயவுடையான் குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர்
- சேயிற் கருதி அணைத்தான்என் றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.
- தெரிந்த பெரியர்க் கருள்புரிதல் சிறப்பென் றுரைத்த தெய்வமறை
- திரிந்த சிறியர்க் கருள்புரிதல் சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே
- புரிந்தம் மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே
- விரிந்த மனத்துச் சிறியேனுக் கிரங்கி அருளல் வேண்டாவோ.
- தாயே எனைத்தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
- பேயேன் செய்த பெருங்குற்றம் பொறுத்தாட் கொண்ட பெரியோனே
- நீயே இந்நாள் முகமறியார் நிலையில் இருந்தால் நீடுலகில்
- நாயே அனையேன் எவர்துணைஎன் றெங்கே புகுவேன் நவிலாயே.
- ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
- பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
- நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
- காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
- அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
- குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
- நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
- பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
- சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
- அகமே விளங்கத் திருஅருளா ரமுதம் அளித்தே அணைத்தருளி
- முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல்
- சகமேல்240 இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.
- தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை
- எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
- சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால்
- வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே.
- 235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
- 236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
- 238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 239. ஒருவா - ச. மு. க.
- 240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.
- துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
- சோதியுட் சோதியே அழியா
- இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
- ஈன்றநல் தந்தையே தாயே
- அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
- அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
- செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
- தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
- இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
- இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
- மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
- கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
- நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
- நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
- உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
- உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
- வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பே
- ரின்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
- சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
- தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
- அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
- ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
- மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
- வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
- கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
- கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
- நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
- நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
- வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
- தாய்கையில் கொடுத்தனை அவளோ
- வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
- மாயமே புரிந்திருக் கின்றாள்
- கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
- கேட்பதற் கடைந்திலன் அந்தோ
- உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
- உற்றிலை பெற்றவர்க் கழகோ.
- வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
- மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
- மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
- வந்தெனை எடுத்திலார் அவரும்
- இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
- என்செய்வேன் என்னுடை அருமை
- நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
- நீயும்இங் கறிந்திலை யேயோ.
- துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்
- தொட்டிலே பலஇருந் திடவும்
- திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி
- சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
- பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற
- பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
- கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்
- கண்டிடில் சகிக்குமோ நினக்கே.
- வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
- வயங்குசிற் சோதியே அடியேன்
- இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
- இன்பமே என்பெரும் பொருளே
- கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
- கடவுளே கனகமன் றகத்தே
- நட்டமே புரியும் பேரரு ளரசே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
- ஊக்கமும் உண்மையும் என்னைத்
- தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
- தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
- வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
- மக்களும் மனைவியும் உறவும்
- நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
- ஆடிய சிறுபரு வத்தே
- குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
- குணப்பெருங் குன்றமே குருவே
- செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
- சிந்தையில் இனிக்கின்ற தேனே
- நற்றக வுடைய நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
- படித்தவர் தங்களைப் பார்த்து
- நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
- நோக்கினேன் பொய்யர்தம் உறவு
- பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
- பெரியரில் பெரியர்போல் பேசி
- நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
- ஊர்தொறும் உண்டியே உடையே
- தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
- தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
- வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
- வஞ்சமே பொருளென மதித்து
- நாடினேன் எனினும் பாடினேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்
- கைவழக் கத்தினால் ஒடிந்த
- ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்
- உலுத்தனேன் ஒருசிறு துரும்பும்
- ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்
- எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
- நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
- தலத்திலே வந்தபோ தவரைப்
- பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
- பாதகப் பூனைபோல் இருந்தேன்
- பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
- பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
- நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
- பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
- குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
- டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
- தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
- சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
- நண்மையே அடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
- காட்டிடா தம்பெலாம் அடங்கும்
- தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்
- சுகத்தினால் சோம்பினேன் உதவா
- ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்
- ஈந்திலேன் ஈந்தவன் எனவே
- நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
- எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
- களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
- காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
- துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
- சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
- நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
- எட்டியே எனமிகத் தழைத்தேன்
- பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
- பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
- காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
- கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
- நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
- தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
- வருணப் படிக மணிமாலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
- பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.
- நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
- ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
- பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
- வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
- பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
- கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
- மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
- மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
- சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
- காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
- நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
- ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.
- பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
- சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
- நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
- ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
- முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
- இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
- எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
- அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
- ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
- என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
- என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
- பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
- பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
- துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
- துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
- அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
- அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
- உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
- உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
- பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
- இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
- இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
- உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
- உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
- திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
- மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
- விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
- முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
- என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
- என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
- பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
- பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
- கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
- கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
- அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
- தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
- சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
- நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
- நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
- இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
- இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
- மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
- வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
- குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
- குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
- பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
- புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
- காரண காரியக் கல்விகள் எல்லாம்
- கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
- நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
- நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
- பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
- புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
- ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
- செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
- போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
- போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
- ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
- இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
- ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
- சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
- தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
- தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
- வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
- வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
- ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
- தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
- பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
- பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
- தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
- சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
- அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
- சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
- ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
- உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
- சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
- சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
- அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
- என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
- சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
- தந்தெனை யாவரும் வந்தனை செயவே
- நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
- நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த
- அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய்
- வகைஇது துறைஇது வழிஇது எனவே
- இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே
- என்னையும் தன்னையும் ஏகம தாக்கிப்
- பொருந்திஎ லாஞ்செய வல்லஓர் சித்திப்
- புண்ணிய வாழ்க்கையில் நண்ணியோ காந்த
- அருந்தவ வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
- பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி
- நிதிசார நான் இந்த நீள்உல கத்தே
- நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து
- திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற
- சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த
- அதிகார வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
- மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
- வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
- தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருளான வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
- இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
- மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
- வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
- தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனித்தோங்கி
- மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
- சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- இன்ன என்னுடைத் தேகம்நல் லொளிபெறும் இயலருக் கொளுமாறே.
- சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
- அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
- மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
- பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.
- விளங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை
- உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
- களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
- துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறுமாறே.
- மாற்றி லாதபொன் னம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
- பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
- சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
- காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறுமாறே.
- சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
- தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
- மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
- வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
- போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
- புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
- நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
- மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
- போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
- பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
- பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
- பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
- நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
- அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே
- ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர்
- இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப்
- பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர்
- பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர்
- நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
- பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
- ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
- அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
- வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
- மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
- சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
- திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
- ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
- உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
- வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
- வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
- கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
- கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
- நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
- நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
- கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது
- கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர்
- எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற
- என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப்
- பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப்
- பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ
- விண்ணுடைய அருட்ஜோதி விளையாடல் புரிய
- வேண்டுமென்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே.
- பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
- புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
- சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
- தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
- எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
- இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
- இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
- என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
- கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
- கண்ணனையிர் கனகசபை கருதியசிற் சபைமுன்
- துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
- துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
- விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
- விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்
- பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
- பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.
- அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
- அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
- முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
- முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
- செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
- சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
- இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
- என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.
- என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
- கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
- மன்னே அயனும் திருமா லவனும்
- மதித்தற் கரிய பெரிய பொருளே
- அன்னே அப்பா ஐயா அரசே
- அன்பே அறிவே அமுதே அழியாப்
- பொன்னே மணியே பொருளே அருளே
- பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
- மருளும் துயரும் தவிரும் படிஎன்
- மனமன் றிடைநீ வருவாய் அபயம்
- இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
- சினன்என் றிகழேல் அபயம் அபயம்
- வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
- விடுமா றருள்வாய் அபயம் அபயம்
- அருளும் பொருளும் தெருளும் தருவாய்
- அபயம் அபயம் அபயம் அபயம்.
- தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
- தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
- பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
- பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
- இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
- இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
- அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
- பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
- உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
- உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
- மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
- காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
- விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
- மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
- துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
- தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
- அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
- தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
- தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
- தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
- விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
- வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
- அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
- காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
- நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
- நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
- ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
- இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
- ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
- ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
- இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
- என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
- வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
- சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
- இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
- இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
- வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
- வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
- அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
- கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
- உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
- உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
- வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
- வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
- அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
- மாலையும் காலையும் மத்தியா னத்தும்
- கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
- காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
- எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
- இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
- அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
- காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன்
- நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
- நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
- செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
- சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
- அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
- கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
- எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
- கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
- காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
- விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
- விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
- தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
- தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
- நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
- ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
- ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
- சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
- சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
- நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
- அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
- அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
- என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
- யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
- கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
- மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
- மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
- நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
- நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
- பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
- சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
- தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
- தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
- இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி
- எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
- அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
- அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.
- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
- மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
- விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
- கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
- நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
- கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
- பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
- பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
- மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
- வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
- பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
- பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.
- உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
- உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
- பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
- பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
- மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
- மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
- திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
- சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
- நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
- ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
- ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
- தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
- வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
- அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
- துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
- தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
- மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
- மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
- இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
- தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
- தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
- மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
- விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
- துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
- வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
- ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
- அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
- தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
- தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
- தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
- நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
- நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
- வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
- விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
- தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
- நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
- ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
- இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
- கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
- குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
- பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
- பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
- வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
- பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
- பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
- துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
- சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
- உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
- திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
- ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
- உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
- பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
- பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
- பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
- ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
- உயர்ந்தஓட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
- தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
- தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
- தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
- சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
- ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
- உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
- பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
- பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
- திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
- செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
- கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
- காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
- நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
- தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
- தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
- வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
- வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
- தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
- திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
- தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
- நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
- நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
- வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
- வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
- பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
- இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
- தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
- தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
- மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
- மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
- மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
- நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
- புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
- பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
- தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
- தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
- இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
- எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
- தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
- தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
- ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
- புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
- கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
- குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
- மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
- வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
- நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
- நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
- புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
- மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
- பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
- செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
- வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
- குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
- கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
- கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
- காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
- பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
- பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
- தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
- நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
- வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
- வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
- தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
- சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
- தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
- சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
- இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
- எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
- தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
- தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
- களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
- மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
- மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
- சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
- சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
- மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
- மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
- அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
- வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
- மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
- சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
- தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
- நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
- நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
- அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
- கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
- கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
- வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
- மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
- படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
- ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
- மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
- வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
- சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
- துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
- சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
- சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
- எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
- அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
- அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
- திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
- திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
- பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
- கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
- மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
- மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
- தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
- தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
- அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
- புகலரும் பெரியஓர் நிலையில்
- இன்புரு வாகி அருளொடும் விளங்கி
- இயற்றலே ஆதிஐந் தொழிலும்
- தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
- தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
- அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
- மன்னுருத் திரர்களே முதலா
- ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
- குறுபெருந் தொழில்பல இயற்றி
- இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
- இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
- அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
- தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
- உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
- ஒருதனிப் பெரும்பதி உவந்தே
- புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
- பொறுத்தருட் பூரண வடிவாய்
- என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
- எந்தையைத் தடுப்பவர் யாரே.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
- வருபர உணர்ச்சியும் மாட்டாப்
- பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
- பராபர உணர்ச்சியும் பற்றா
- உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
- உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
- கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
- பரம்பர ஒளிஎலாம் அணுவில்
- கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
- கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
- அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
- அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
- கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
- அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
- பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
- பேசநின் றோங்கிய பெரியோன்
- களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
- கருணையா ரமுதளித் துளமாம்
- வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
- உளவுயிர் முழுவதும் ஒருங்கே
- கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
- குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
- கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
- கருத்தெலாம் இனிதுதந் தருளித்
- தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
- தந்தையைத் தடுப்பவர் யாரே.
- அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
- தையகோ ஐயகோ அறிவின்
- மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
- வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
- முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
- மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
- செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
- திருவுளம் தடுப்பவர் யாரே.
- கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
- கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
- குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
- கொள்கையாய்க் கொள்கையோ டளவா
- அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
- அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
- மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
- வண்மையைத் தடுப்பவர் யாரே.
- இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
- இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
- மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
- மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
- நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
- நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
- குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
- காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
- தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
- தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
- கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
- குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
- எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
- ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
- அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
- செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
- சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
- பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
- பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
- எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
- அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
- மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
- மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
- சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
- தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
- இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- ஆன்றானை அறிவானை அழிவி லானை
- அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
- மூன்றானை இரண்டானை ஒன்றானானை
- முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
- தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
- சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
- ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
- திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
- ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
- உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
- நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
- நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
- கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
- பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
- தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
- செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
- ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
- ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
- காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
- வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
- ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
- அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
- தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
- சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
- காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
- அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
- வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
- விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
- தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
- சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
- காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
- வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
- தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
- தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
- பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
- புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
- கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அரசே
- மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
- வள்ளலை மாணிக்க மணியைப்
- பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
- புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
- தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
- தீபத்தைக் கண்டுகொண் டேனே.
- துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
- துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
- என்பொலா மணியை என்சிகா மணியை
- என்னிரு கண்ணுள்மா மணியை
- அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
- என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
- எந்தையைக் கண்டுகொண் டேனே.
- சிதத்திலே271 ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
- சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
- பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
- பரம்பர வாழ்வைஎம் பதியை
- மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
- மருந்தைமா மந்திரந் தன்னை
- இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
- ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
- புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
- பொருளைஎன் புண்ணியப் பயனைக்
- கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
- குருவைஎண் குணப்பெருங் குன்றை
- மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
- பிறங்கிய பொதுமையைப் பெரிய
- தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
- சாமியைத் தயாநிதி தன்னை
- வண்மையை அழியா வரத்தினை ஞான
- வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
- உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
- ஒருவனைக் கண்டுகொண் டேனே.
- ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
- தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
- ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
- உடையஎன் ஒருபெரும் பதியைப்
- பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
- பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
- தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
- தலைவனைக் கண்டுகொண் டேனே.
- நனவிலும் எனது கனவிலும் எனக்கே
- நண்ணிய தண்ணிய அமுதை
- மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
- வழங்கிய பெருந்தயா நிதியைச்
- சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
- சிவகுரு பதியைஎன் சிறப்பை
- உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
- கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
- அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
- ஆவியை ஆவியுட் கலந்த
- பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
- பேசுதற் கரும்பெரும் பேற்றை
- விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
- விளக்கினைக் கண்டுகொண் டேனே.
- களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
- களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
- உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
- துள்ளகத் தூறும்இன் னமுதை
- வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
- மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
- குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
- குருவையான் கண்டுகொண் டேனே.
- சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
- சிதம்பர நடம்புரி சிவத்தைப்
- பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
- பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
- இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
- யாவுமாய் அல்லவாம் பொருளைச்
- சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
- சாமியைக் கண்டுகொண் டேனே.
- சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
- சுத்தசித் தாந்தரா சியத்தைத்
- தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
- சமரச சத்தியப் பொருளைச்
- சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
- தெளிந்தபே ரானந்தத் தெளிவை
- வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
- மெய்மையைக் கண்டுகொண் டேனே.
- அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதியை உலகக்
- களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
- காட்சியைக் கருணையங் கடலை
- உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
- ஒளியையும் உதவிய ஒளியைக்
- குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
- சமரச சத்திய வெளியைச்
- சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
- துலங்கிய ஜோதியைச் சோதிப்
- பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
- பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
- சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
- அறிந்திடப் படாதமெய் அறிவைப்
- படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
- பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
- கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
- கடைக்கணித் தருளிய கருணைக்
- கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
- ககனத்தைக் காற்றினை அமுதை
- நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
- நின்மல நிற்குண நிறைவை
- மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
- வரவுபோக் கற்றசின் மயத்தை
- அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
- அன்பினிற் கண்டுகொண் டேனே.
- வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
- விளைவையும் விளைக்கவல் லவனை
- அத்தெலாங்272 காட்டும் அரும்பெறல் மணியை
- ஆனந்தக் கூத்தனை அரசைச்
- சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
- சபைத்தனித் தலைவனைத் தவனைச்
- சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- உத்தர ஞான சித்திமா புரத்தின்
- ஓங்கிய ஒருபெரும் பதியை
- உத்தர ஞான சிதம்பர ஒளியை
- உண்மையை ஒருதனி உணர்வை
- உத்தர ஞான நடம்புரி கின்ற
- ஒருவனை உலகெலாம் வழுத்தும்
- உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
- ஓதியைக் கண்டுகொண் டேனே.
- புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
- புணர்த்திய புனிதனை எல்லா
- நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
- நிறுத்திய நிமலனை எனக்கு
- மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
- வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
- தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
- பரமனை என்னுளே பழுத்த
- கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
- கடவுளைக் கண்ணினுள் மணியைப்
- புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
- பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
- தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
- உவப்பிலா அண்டத்தின் பகுதி
- அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
- அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
- விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
- றிருந்தென விருந்தன மிடைந்தே
- இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
- தென்பர்வான் திருவடி நிலையே.
- பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
- பெரியஓங் காரமே முதலா
- ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
- என்றவற் றவண்அவண் இசைந்த
- மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
- மன்அதி காரம்ஐந் தியற்றத்
- தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
- என்பரால் திருவடி நிலையே.
- கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
- பெருங்கருணைக் கடலை வேதத்
- திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
- தெள்ளமுதத் தெளிவை வானில்
- ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
- உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
- அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
- இதயத்தே விளங்கு கின்ற
- துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
- தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
- செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
- ஒன்றான தெய்வந் தன்னை
- அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
- விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
- செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
- சிவகதியைச் சிவபோ கத்தைத்
- துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
- துணிந்தளித்த துணையை என்றன்
- அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
- பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
- செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
- பெருங்களிப்புச் செய்தான் தன்னை
- முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
- கொடுத்தெனக்கு முன்னின் றானை
- அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
- பெரும்பொருளைப் புனிதந் தன்னை
- என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
- பெருங்கருணை இயற்கை தன்னை
- இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
- பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
- அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
- உடையானை எல்லாம் வல்ல
- சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம்
- விரித்தடக்கும் தெய்வந் தன்னை
- எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
- பெருந்தாயை என்னை ஈன்ற
- அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
- இடங்கொண்ட இறைவன் தன்னை
- இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
- தந்தானை எல்லாம் வல்ல
- செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
- தெள்ளமுதத் திரளை என்றன்
- அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
- தான்கொண்டிங் கென்பால் அன்பால்
- தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
- களித்தளித்த தலைவன் தன்னை
- முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
- இருந்தமுழு முதல்வன் தன்னை
- அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
- தருகின்றோம்324 இன்னே என்றென்
- கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
- திருக்கின்ற கருத்தன் தன்னைப்
- புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
- மெய்இன்பப் பொருளை என்றன்
- அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
- விடுவித்தென் தன்னை ஞான
- நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
- நிலைதனிலே நிறுத்தி னானைப்
- பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
- பராபரனைப் பதிஅ னாதி
- ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
- நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
- நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
- பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
- பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
- திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
- இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
- எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
- பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
- பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
- செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
- துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
- மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
- மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
- ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
- ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
- தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
- எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
- அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
- அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
- ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
- ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
- செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- ஆனந்த போகமே அமுதே
- மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- மன்னும்என் ஆருயிர்த் துணையே
- துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
- தூயவே தாந்தத்தின் பயனே
- பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
- உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
- ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
- உவந்தர சளிக்கின்ற அரசே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- சோதியுட் சோதியே எனது
- மதிவளர் மருந்தே மந்திர மணியே
- மன்னிய பெருங்குண மலையே
- கதிதரு துரியத் தனிவெளி நடுவே
- கலந்தர சாள்கின்ற களிப்பே
- பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
- செல்வமே என்பெருஞ் சிறப்பே
- நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
- நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
- ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
- திருந்தர சளிக்கின்ற பதியே
- பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- ஒள்ளிய தெள்ளிய ஒளியே
- வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
- மந்திரத் தாற்பெற்ற மணியே
- நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
- நிறைந்தர சாள்கின்ற நிதியே
- பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- அரும்பெருஞ் சோதியே எனது
- பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
- புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
- மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
- மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
- நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
- நண்புகொண் டருளிய நண்பே
- வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
- வயங்கிய தனிநிலை வாழ்வே
- பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அம்பலத் தாடும் அமுதமே என்கோ
- அடியனேன் ஆருயிர் என்கோ
- எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
- என்னிரு கண்மணி என்கோ
- நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
- நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
- இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- அம்மையே என்கோ அப்பனே என்கோ
- அருட்பெருஞ் சோதியே என்கோ
- செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
- திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
- தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
- தமியனேன் தனித்துணை என்கோ
- இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
- என்னுயிர்க் கின்பமே என்கோ
- துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
- தனிப்பெருந் தலைவனே என்கோ
- இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
- அம்பலத் தெம்பிரான் என்கோ
- நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
- நீடும்என் நேயனே என்கோ
- பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
- பெரியரிற் பெரியனே என்கோ
- இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
- அன்பிலே நிறைஅமு தென்கோ
- சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
- மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
- மன்னும்என் வாழ்முதல் என்கோ
- இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
- மயக்கநீத் தருள்மருந் தென்கோ
- பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
- பதச்சுவை அனுபவம் என்கோ
- சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
- திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
- இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
- சர்க்கரைக் கட்டியே என்கோ
- அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
- அம்பலத் தாணிப்பொன் என்கோ
- உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
- உள்ளொளிக் குள்ளொளி என்கோ
- இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
- என்னைஆண் டருளிய நினையே.
- மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
- மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
- குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
- குணப்பெருங் குன்றமே என்கோ
- பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
- பெரியஅம் பலத்தர சென்கோ
- இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- 275. என்பெரு - பி. இரா. பதிப்பு.
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
- ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
- வெட்டியே என்கோ வெட்டியில்276 எனக்கு
- விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
- பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
- பெரியவர் வைத்ததோர் தங்கக்
- கட்டியே என்கோ அம்பலத் தாடும்
- கருணையங் கடவுள்நின் றனையே.
- துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
- அம்மையே அப்பனே என்கோ
- இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
- என்உயிர்க் கின்னமு தென்கோ
- என்பொலா மணியே என்கணே என்கோ
- என்னுயிர் நாதநின் றனையே.
- கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
- கணவனே கணவனே என்கோ
- ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
- ஒருதனிப் பெரியனே என்கோ
- திருத்தனே எனது செல்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே என்கோ
- நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
- நிறைஅருட் சோதிநின் றனையே.
- தாயனே எனது தாதையே ஒருமைத்
- தலைவனே தலைவனே என்கோ
- பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
- பெருந்தகைப் பெரும்பதி என்கோ
- சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
- சித்தெலாம் வல்லசித் தென்கோ
- தூயனே எனது நேயனே என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
- ஆனந்தத் தனிமலர் என்கோ
- கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
- கடையனேன் உடையநெஞ் சகமாம்
- இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
- இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
- துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
- அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
- காரணமே காரியமே காரணகா ரியங்கள்
- கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
- பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
- புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
- தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
- ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
- அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
- அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
- புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
- பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
- துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
- தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
- ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
- உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
- நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
- நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
- ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
- கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
- பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
- படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
- சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
- சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
- ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
- உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
- ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
- ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
- சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
- சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- அடுக்கியபே ரண்டமெலாம் அணுக்கள்என விரித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- நடுக்கியஎன் அச்சமெலாம் தவிர்த்தருளி அழியா
- ஞானஅமு தளித்துலகில் நாட்டியபே ரறிவே
- இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக்
- கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே
- முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து
- முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே.
- ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
- ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
- பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
- படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
- தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
- சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
- ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
- என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
- பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
- பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
- காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
- கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
- அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
- மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
- கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
- கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
- மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
- மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
- அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
- அளித்தெனை வளர்த்திட அருளாம்
- தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
- தெய்வமே சத்தியச் சிவமே
- இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
- ஏற்றிய இன்பமே எல்லாப்
- பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
- கற்பங்கள் கணக்கில கடப்ப
- நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
- நித்திய நிற்குண258 நிறைவே
- அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
- அருட்பெருங் கடல்எனும் அரசே
- புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தத்துவ பதியே தத்துவம் கடந்த
- தனித்ததோர் சத்திய பதியே
- சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
- தமக்குளே சார்ந்தநற் சார்பே
- பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
- பெறல்அரி தாகிய260 பேறே
- புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
- அரும்பெருஞ் சோதியே சுடரே
- மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
- மருந்தெலாம் பொருந்திய மணியே
- உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
- உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
- புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- பரம்பர நிறைவே பராபர வெளியே
- பரமசிற் சுகந்தரும் பதியே
- வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
- வயங்கிய பெருஞ்சுடர் மணியே
- கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
- கருதிய கருத்துறு களிப்பே
- புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே
- முடிபெலாம் கடந்ததோர் முதலே
- தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
- சத்தியத் தனிநடு நிலையே
- மேவிய நடுவில் விளங்கிய விளைவே
- விளைவெலாம் தருகின்ற வெளியே
- பூவியல் அளித்த புனிதசற் குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
- அருள்வடி வெடுத்தெழுந் தருளி
- நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
- நிலைஎலாம் அளித்தமா நிதியே
- மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
- வயங்கநல் வரந்தந்த வாழ்வே
- பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
- இதயத்தில் இருக்கின்ற குருவே
- அன்புடை அரசே அப்பனே என்றன்
- அம்மையே அருட்பெருஞ் சோதி
- இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
- என்னுயிர் நாதனே என்னைப்
- பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
- சிவபத அனுபவச் சிவமே
- மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
- மதிநிறை அமுதநல் வாய்ப்பே
- சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
- சாமியே தந்தையே தாயே
- புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- 258. நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 259. சற்புதர் - நல்லறிவுடையவர்.
- 260. பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
- 261. தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 262. முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
- 263. தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.
- அன்பனே அப்பா அம்மையே அரசே
- அருட்பெருஞ் சோதியே அடியேன்
- துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
- சுகத்திலே தோற்றிய சுகமே
- இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
- என்னுளே இலங்கிய பொருளே
- வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
- கற்பகத் தனிப்பெருந் தருவே
- தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
- சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
- சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
- சித்தியே சுத்தசன் மார்க்க
- வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
- ஈன்றவா என்னவா வேதம்
- சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
- துதியவா அம்பலத் தமுதம்
- அன்னவா அறிவால் அறியரி வறிவா
- ஆனந்த நாடகம் புரியும்
- மன்னவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
- கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
- பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
- அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
- தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
- கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
- அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
- குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
- செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பே
- ரறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
- சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
- பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே
- அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
- சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
- தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
- லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
- நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
- மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
- ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
- அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
- கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
- உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
- அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
- எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
- உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
- தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
- ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
- உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
- வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
- வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
- நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
- நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
- கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
- கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
- தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
- சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
- புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
- பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
- நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
- நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
- கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
- காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
- எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
- ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
- இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
- இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ராய்
- அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
- அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
- திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்
- பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்
- படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
- விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்
- வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே
- கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்
- கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
- கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
- தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.
- திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
- டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
- பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
- இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
- புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
- நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
- முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
- இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
- மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
- பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
- உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
- போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
- தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
- ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
- மாதுதான் இடங்கொண் டோங்க வயங்குமா மன்று ளானே.
- சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
- குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
- பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
- கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
- பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
- ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
- தாயினும் இனிய உன்றன் தண்ணருட் பெருமை தன்னை
- நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
- துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
- பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
- அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
- கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
- நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
- கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
- நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
- வினைவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
- இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
- பெருமைஎன் னென்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி
- உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
- ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.
- உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
- புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
- வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
- தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
- முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
- பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
- சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
- மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
- விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
- நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
- கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
- உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
- மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
- பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
- நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
- சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
- தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
- துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
- சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின்
- நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே
- கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென்
- பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே.
- தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
- நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே
- காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின்
- சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே.
- பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
- மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
- எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
- நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.
- ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
- திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
- அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளா ரமுதம் மிகப்புகட்டிச்
- சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
- நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
- தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
- தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
- சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
- பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
- சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
- அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2
- 278. 4067, 4068. இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில் இருப்பதாகக்கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார். பொருளமைதிகருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன.
- கண்ணார் அமுதக் கடலேஎன் கண்ணே கண்ணுட் கருமணியே
- தண்ணார் மதியே கதிர்பரப்பித் தழைத்த சுடரே தனிக்கனலே
- எண்ணா டரிய பெரியஅண்டம் எல்லாம் நிறைந்த அருட்சோதி
- அண்ணா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
- திப்பா ரிடைநின் புகழ்பாடு கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
- டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
- துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
- வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
- பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
- தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
- சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
- முழுதும்ஆ னான்என ஆகம வேத
- முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
- எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
- என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
- தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
- சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
- சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
- நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
- நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
- எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
- நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
- அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
- அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
- புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
- போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
- இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
- கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
- கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
- பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
- பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
- நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
- நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
- எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
- என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
- புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
- பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
- சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
- சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
- மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
- வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
- என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
- ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
- ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
- பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
- பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
- அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
- அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
- இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
- வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
- கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
- கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
- பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
- பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
- இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
- வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
- அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
- அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
- தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
- சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
- இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
- அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
- அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
- வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
- வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
- விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
- விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
- இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
- எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
- சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
- தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
- சிந்தை களித்தேன்என்று உந்தீபற
- சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
- முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
- சித்தியை உற்றேன்என்று உந்தீபற
- சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.
- எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
- தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
- கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
- அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
- பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
- கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
- அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
- முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
- சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
- அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
- வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
- பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
- ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
- கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
- நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
- ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
- தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
- உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
- உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
- இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
- ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
- எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
- நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
- நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
- கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
- கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
- ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
- சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
- தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
- உகத்தென325 துடல்பொருள் ஆவியை நுமக்கே
- ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
- இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
- தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
- கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
- கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
- வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
- வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
- இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன்
- மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்
- தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும்
- சாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர்
- ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே
- அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர்
- ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
- மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
- செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
- குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- தேடிய துண்டு நினதுரு வுண்மை
- தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
- ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
- உரைத்ததும் உவந்ததும் உண்டோ
- ஆடிய பாதம் அறியநான் அறியேன்
- அம்பலத் தரும்பெருஞ் சோதி
- கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
- கூறவுங் கூசும்என் நாவே.
- அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
- அடுத்திடும் புறப்புறம் நான்கில்
- இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
- இறையும்இங் கெண்ணிய துண்டோ
- உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் கினிச்சிறி துந்தான்
- இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
- கென்னைஆண் டருள்வ துன்கடனே.
- காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
- சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
- சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
- ஏகா நினக்கடிமை ஏற்று.
- மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
- யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
- நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
- தாய்க்குத் தனிஇயற்கை தான்.
- கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
- பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
- தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
- எந்தாய் கருணை இது.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் அழியா உரம்266 பெற்றேன் - பண்டே
- எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
- தனைஉவந்து கொண்டான் தனை.
- கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
- கொழுநரும் மகளிரும் நாண
- நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
- நீங்கிடா திருந்துநீ என்னோ
- டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
- றறிவுரு வாகிநான் உனையே
- பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
- வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
- நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
- நாட்டமும் கற்பகோ டியினும்
- வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
- வழங்கிடப் பெற்றனன் மரண
- பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
- நாதனை என்உளே கண்டு
- கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
- கூடிடக் குலவிஇன் புருவாய்
- ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
- அம்பலம் தன்னையே குறித்துப்
- பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
- சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
- விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
- விழித்திருந் திடவும்நோ வாமே
- மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
- மன்றிலே வயங்கிய தலைமைப்
- பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
- புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
- கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
- கருத்தொடு வாழவும் கருத்தில்
- துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
- துலங்கவும் திருவருட் சோதிப்
- பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
- கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
- மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
- அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்
- ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.
- மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத
- அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன் அந்தோ அந்தோ.
- 315. இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல். பொருள் ஒற்றுமை கருதி இப் -பதிகத்தில் சேர்க்கப்பெற்றது.
- சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
- நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
- போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
- நாற்றிசையும் வாழ்க நயந்து.
- கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
- அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
- நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
- தெல்லோரும் வாழ்க இசைந்து.
- புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
- நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
- செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
- ஒத்தாராய் வாழ்க உவந்து.
- நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
- வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும்
- நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற
- சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து.
- நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
- சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
- பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
- யார்உளர்நீ சற்றே அறை.
- சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
- சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
- நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
- பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
- வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
- புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
- திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
- நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை
- இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம்
- அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே
- சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே.
- கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
- உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
- பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
- பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
- தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்
- சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்
- காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்
- தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.
- 288. மயமாய்ப் பெருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.
- 289. இருப்பாயோ - முதற்பதிப்பு.
- 290. பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,N
- காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
- கண்டுகொள் கணவனே என்றாள்
- ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
- உவந்திலேன் உண்மையீ தென்றாள்
- பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
- பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
- மாதய வுடைய வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
- மறப்பனோ கனவினும் என்றாள்
- உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
- உயிர்தரி யாதெனக் கென்றாள்
- கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
- கடலமு தளித்தருள் என்றாள்
- வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
- அன்பினால் அணைத்தருள் என்றாள்
- பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
- படமுடி யாதெனக் கென்றாள்
- செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
- திருவுளம் அறியுமே என்றாள்
- வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
- புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
- காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
- கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
- சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
- சற்றுநான் தரித்திடேன் என்றாள்
- மாமிகு கருணை வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
- தருகநற் றருணம்ஈ தென்றாள்
- கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
- குறையுமோ குறைந்திடா தென்றாள்
- நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
- ஞாயமோ நண்பனே என்றாள்
- வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
- பொங்கிய தாசைமேல் என்றாள்
- என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
- என்னள வன்றுகாண் என்றாள்
- கொன்செயும் உலகர் என்னையும் உனது
- குறிப்பையும் குறித்திலார் என்றாள்
- வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
- மேவிலை என்னையோ என்றாள்
- நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
- நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
- மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
- வைத்தல்உன் மரபல என்றாள்
- வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
- ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
- நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
- நம்பினேன் நயந்தருள் என்றாள்
- குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
- குழியிலே இருந்திடேன் என்றாள்
- மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
- அன்பினால் கூடினன் என்றாள்
- கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
- கூடுதல் கூடுமோ என்றாள்
- பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
- பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
- வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அங்கலிட்ட285 களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
- ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
- பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
- பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
- எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
- இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
- தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
- பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
- இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
- எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
- மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
- மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
- தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
- புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
- கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
- கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
- நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
- நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
- வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
- தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
- எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாரான்
- இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
- ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
- ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
- சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
- கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
- இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
- இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
- வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
- மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
- விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
- உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
- பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
- பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
- நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
- நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
- நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
- நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
- என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
- இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
- தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
- தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
- அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
- அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
- மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
- அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
- தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
- சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
- எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
- இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
- செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
- சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
- அன்னப்பார்ப் பால்365அழ காம்நிலை யூடே
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
- சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
- உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
- ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
- என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அதுபா வகமுகத் தானந்த நாட்டில்
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- விதுபா வகமுகத் தோழியும் நானும்
- மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
- பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே
- பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
- இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
- அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
- உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
- உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
- புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
- பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
- இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
- அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
- நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
- நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
- பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
- பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
- இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
- சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
- ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
- உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
- அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
- அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
- இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
- வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
- இக்குல மாதரும் யானும்என் நாதர்
- இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
- பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
- பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
- எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்
- பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
- வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே
- மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
- ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே
- எம்முடம் புன்னை366 இணைந்திங் கெமக்கே
- ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
- மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
- சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
- சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
- புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
- புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
- இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
- அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
- தேறறி வாகிச் சிவானு பவத்தே
- சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
- மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
- வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
- ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
- பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
- இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
- என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
- சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
- தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
- நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
- எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
- பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
- மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
- வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
- எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
- அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
- நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
- அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
- என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
- துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
- நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
- இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
- எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
- மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளமறிந் திலனே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
- வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
- ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
- தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்
- எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
- நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
- வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
- இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
- மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
- அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
- அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
- கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
- எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
- உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
- துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
- கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
- ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
- கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
- நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
- கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
- எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
- நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
- பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
- பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.
- கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
- கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
- எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
- மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
- விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
- விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
- வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
- இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
- புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
- பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
- பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
- தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
- ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
- கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
- சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
- அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
- இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
- களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
- விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
- வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
- வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
- இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
- முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
- ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
- ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
- உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
- அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
- அதிசயம் அதிசயம் என்றாள்
- துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
- தொட்டனன் பிடித்தனன் என்றாள்
- புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
- பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.
- தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்
- தவம்எது புரிந்ததோ என்றாள்
- அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்
- அதிசயம் அதிசயம் என்றாள்
- இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்
- எனக்கிணை யார்கொலோ என்றாள்
- சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்
- ததும்பினாள் நான்பெற்ற தனியே.
- புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
- புண்ணியம் புகல்அரி தென்றாள்
- தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
- தயவைநான் மறப்பனோ என்றாள்
- எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
- என்னையோ என்னையோ என்றாள்
- அண்ணிய பேரா னந்தமே வடிவம்
- ஆயினாள் நான்பெற்ற அணங்கே.
- சத்திய ஞான சபாபதி எனக்கே
- தனிப்பதி ஆயினான் என்றாள்
- நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
- நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
- பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
- பேறெலாம் என்வசத் தென்றாள்
- எத்திசை யீரும் ஒத்திவண் வருக
- என்றனள் எனதுமெல் லியலே.
- திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
- சிந்தையில் கலந்தனன் என்றாள்
- பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
- பேசுதல் அரிதரி தென்றாள்
- இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
- யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
- மருமலர் முகத்தே இளநகை துளும்ப
- வயங்கினாள் நான்பெற்ற மகளே.
- வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
- மாலையோ காலையோ என்றாள்
- எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
- ஏவல்செய் கின்றன என்றாள்
- தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
- சித்தியும் பெற்றனன் என்றாள்
- துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
- சோர்விலாள் நான்பெற்ற சுதையே.
- கனகமா மன்றில் நடம்புரி பதங்கள்
- கண்டனன் கண்டனன் என்றாள்
- அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன்
- அன்பிலே கலந்தனன் என்றாள்
- தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே
- செயல்செயத் தந்தனன் என்றாள்
- தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள்
- தவத்தினால் பெற்றநம் தனியே.
- கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
- கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
- கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
- கடிமணம் புரிந்தனன் என்றாள்
- ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
- ஒளிஎனக் களித்தனன் என்றாள்
- இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
- என்தவத் தியன்றமெல் லியலே.
- வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
- மாலைவந் தணிந்தனன் என்றாள்
- ஊழிதோ றூழி உலவினும் அழியா
- உடம்பெனக் களித்தனன் என்றாள்
- ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
- அளிக்கஎன் றருளினான் என்றாள்
- ஏழியன் மாட மிசையுற வைத்தான்
- என்றனள் எனதுமெல் லியலே.
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
- அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
- அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
- எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
- சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
- தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
- சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
- மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
- முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
- அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
- அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
- திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
- உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
- துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
- பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
- பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
- திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
- பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
- படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
- இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
- இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
- நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
- நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
- நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
- ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
- இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
- ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
- அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
- ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
- உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
- தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
- தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
- சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
- தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
- ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
- இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
- ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
- சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
- ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
- அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
- ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
- கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
- ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
- ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.
- ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
- ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
- இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
- இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
- பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
- பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
- அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
- அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.
- படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்
- பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
- புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்
- பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
- மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்
- மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
- அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்
- அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.
- சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
- சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
- வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
- மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
- தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
- திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
- அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
- அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
- நாரணர்கள் மற்றவரின்361 நாடின்மிகப் பெரியர்
- வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
- மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
- மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
- மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
- ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
- ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
- மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
- வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
- எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
- எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
- விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
- விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
- அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
- மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
- வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
- கண்ணென்னும் உணர்ச்சிசெலாக் காட்சியவாய்க் நிற்பக்
- கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
- நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
- நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
- அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
- அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
- வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
- விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
- விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
- எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
- இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
- தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
- சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.
- பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
- பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
- உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
- உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
- துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
- தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
- அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
- அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.
- பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம்
- புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக்
- கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா
- றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே
- விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த
- வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச்
- சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும்
- திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி.
- ஏற்றமுறும் ஐங்கருவுக் காதார கரணம்
- எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
- தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை
- துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
- ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்
- அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
- சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில்
- விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
- வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்
- மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
- தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- காணிகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்
- கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
- மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்
- மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
- பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்
- பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
- ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்
- எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- வாயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
- பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை363 ஒருகோடி
- பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
- எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்
- எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
- விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது
- விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
- கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
- கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
- பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
- பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
- நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
- நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
- வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல்
- மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள்
- நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும்
- நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில்
- பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும்
- பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில்
- கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல்
- காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி.
- ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
- உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
- தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
- தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
- தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
- திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி364 வெளியில்
- பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
- பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
- விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
- விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
- பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
- பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
- தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
- செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
- எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
- எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
- தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
- துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
- ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
- அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம்
- ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
- இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
- ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
- உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி.
- உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
- உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
- நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
- நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
- குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
- குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
- மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
- வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
- சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
- தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
- தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
- வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
- மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
- ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
- அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.
- பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை
- பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
- வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி
- வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
- தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி
- சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
- திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்
- திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி.
- பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
- பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
- மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
- வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
- ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
- இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
- தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
- துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.
- வளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்
- வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
- தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
- தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
- உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
- ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
- அளந்தறியும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
- அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.
- சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
- சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
- ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
- உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
- ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
- அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
- வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
- விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
- கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
- நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
- நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
- ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
- உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
- நடுங்குடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.
- மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
- மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
- இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
- எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
- மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
- வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
- அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.
- அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
- அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
- உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
- உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
- மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
- மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
- இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
- இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.
- பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
- பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
- பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
- பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
- உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
- உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
- தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
- தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
- பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
- பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
- தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
- சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
- திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
- திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
- சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
- திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
- வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
- மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
- தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
- துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
- மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
- விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
- ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
- அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
- சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
- சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
- நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
- உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
- வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
- குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
- மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
- மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
- சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
- இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
- கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
- கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
- கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
- தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
- உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.
- உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
- நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
- இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
- மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
- மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
- இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
- பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
- சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
- சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க
- விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன்
- றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய்
- இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே.
- தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
- சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
- நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
- இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
- நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
- மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
- குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
- தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
- நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
- பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
- கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
- மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.
- வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
- ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
- டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
- வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
- மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
- உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
- தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
- துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே.
- அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
- மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
- பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
- தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
- குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
- பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
- கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
- திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன்
- தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே
- ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான்
- அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்.
- நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
- போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
- ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
- மன்றொன்று வானை மகிழ்ந்து.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே
- பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
- விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
- கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற
- புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
- தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
- கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றமொன்றும்
- ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
- புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
- எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
- சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
- பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
- தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
- தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய்
- மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய்
- பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித்
- தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால்
- தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய்
- நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச்
- சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச்
- சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய்
- கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச்
- செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
- தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
- மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
- இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
- கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
- தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
- உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.
- விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
- கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ர் பெருகக் கருத்தலர்ந்தே
- வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
- திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
- தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
- ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
- வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
- நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
- நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
- வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
- குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
- நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
- அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
- சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
- இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
- உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
- பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
- உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
- எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
- துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
- வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன்
- கூட்டமெல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன்
- தேட்டமெல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே
- ஆட்டமெல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே.
- நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
- வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
- ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
- கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
- எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான்
- தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
- வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத்
- தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே.
- மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
- வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
- போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
- பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
- தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
- செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
- பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
- புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
- அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
- அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
- வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
- மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
- தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
- தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
- உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
- உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
- நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
- நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
- ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
- இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
- பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
- பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
- கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற
- குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.
- விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
- மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
- மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
- மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
- துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
- சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
- குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
- குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
- எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
- நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
- நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
- தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
- சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
- பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
- பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.
- திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
- வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
- வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
- தேனே கதவைத் திற.
- சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
- நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
- தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
- பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
- விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
- களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
- விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
- உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
- விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
- எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
- அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
- துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
- ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
- தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
- பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
- ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
- இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
- துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
- புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனை இஞ்ஞான்றே
- அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
- சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
- துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
- மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
- பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
- வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
- மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்
- கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
- தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.
- தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
- காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்
- நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
- பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
- தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
- கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
- இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
- புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
- கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
- மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
- ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
- செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.
- நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
- மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
- இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
- ஒன்றே எனினும் பொறேன்அரு ளாணை உரைத்தனனே.
- செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
- இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
- எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
- வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
- என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
- தன்னே ரிலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
- கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
- பொன்னேர் வடிவும் அளித்தென் னுயிரில் புணர்ந்தனனே.
- வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
- வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
- வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
- வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
- அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
- பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்
- அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்
- கொள்ளற் கபயங் கொடு.
- ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே
- ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்
- போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்
- போற்றும் படிப்பெற்ற போது.
- உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
- வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
- கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
- பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
- ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
- ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
- பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதி அது.
- துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த
- அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்
- அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்
- பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து.
- துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
- அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்
- தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
- ஓங்கினேன் உண்மை உரை.
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
- உள்ளனஎ லாங்கலந்தே
- ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
- உதயாத்த மானம்இன்றி
- இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
- ஏகமாய் ஏகபோக
- இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
- இலங்நிறை கின்றசுடரே
- கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
- ககன்எலாம் கண்டபரமே
- காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
- கண்காண வந்தபொருளே
- தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
- துணையாய் விளங்கும்அறிவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
- நிலையிலே நுண்மைதனிலே
- நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
- நெகிழிலே தண்மைதனிலே
- ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
- ஒண்சுவையி லேதிரையிலே
- உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே
- உற்றியல் உறுத்தும்ஒளியே
- காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
- கருணைமழை பொழிமேகமே
- கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
- கண்ணோங்கும் ஒருதெய்வமே
- தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
- சுகசொருப மானதருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
- ஒளியிலே சுடரிலேமேல்
- ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
- உறும்ஆதி அந்தத்திலே
- தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
- செயவல்ல செய்கைதனிலே
- சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
- சிறக்கவளர் கின்றஒளியே
- வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
- வானமே ஞானமயமே
- மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
- வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
- துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
- சுகம்எனக் கீந்ததுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
- ஆதிநடு அந்தத்திலே
- ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
- ஆடும்அதன் ஆட்டத்திலே
- உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
- உற்றபல பெற்றிதனிலே
- ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
- குபகரித் தருளும்ஒளியே
- குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
- கோடிகிர ணங்கள்வீசிக்
- குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
- குலாவும்ஒரு தண்மதியமே
- துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
- சொருபமே துரியபதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
- இயல்உருவி லேஅருவிலே
- ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
- எறிஆத பத்திரளிலே
- ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
- ஒளிஒளியின் ஒளிநடுவிலே
- ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
- ஒளியேஎன் உற்றதுணையே
- அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
- அய்யனே அரசனேஎன்
- அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
- அப்பனே அருளாளனே
- துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
- தூயனே என்நேயனே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
- ஆங்காரி யப்பகுதியே
- ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
- அடியினொடு முடியும்அவையில்
- கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
- கணித்தபுற நிலையும்மேன்மேல்
- கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
- கலந்துநிறை கின்றஒளியே
- கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
- குறியே குறிக்கஒண்ணாக்
- குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
- கொண்டதனி ஞானவெளியே
- தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
- சுகயோக அனுபோகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
- கடையிலே கடல்இடையிலே
- கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
- கடல்ஓசை அதன்நடுவிலே
- வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
- வடிவிலே வண்ணம்அதிலே
- மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
- வயங்கிஅவை காக்கும் ஒளியே
- புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
- புகுந்தறி வளித்தபொருளே
- பொய்யாத செல்வமே நையாத கல்வியே
- புடம்வைத் திடாதபொன்னே
- மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
- மறுப்பிலா தருள்வள்ளலே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
- வாழ்க்கைமுத லாஎனக்கு
- வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
- வயங்கிஒளிர் கின்றஒளியே
- இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
- ரின்பமே அன்பின்விளைவே
- என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
- என்னாசை யேஎன் அறிவே
- கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
- கருணைஅமு தேகரும்பே
- கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
- கடவுளே கலைகள்எல்லாம்
- விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
- மெய்ம்மையே சன்மார்க்கமா
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
- புகல்வழிப் பணிகள்கேட்பப்
- பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
- பொருள்கண்ட சத்தர்பலரும்
- ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
- கிசைந்தெடுத் துதவஎன்றும்
- இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
- றிருக்கஎனை வைத்தகுருவே
- நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
- நலம்பெறச் சன்மார்க்கமாம்
- ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
- நடத்திவரு நல்லஅரசே
- வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
- மாமதியின் அமுதநிறைவே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
- நின்வார்த்தை யாவும்நமது
- நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
- நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
- ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
- அழியாத நிலையின்நின்றே
- அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
- ஆடிவாழ் கென்றகுருவே
- நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
- நான்இளங் காலைஅடைய
- நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
- நண்பனே துணைவனேஎன்
- ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
- ஒருவனே அருவனேஉள்
- ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
- ஓங்குநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
- கருணைஅமு தேஎனக்குக்
- கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
- காட்சியே கனகமலையே
- தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
- தலைவனே நின்பெருமையைச்
- சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
- சார்கின்ற தோறும்அந்தோ
- வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
- மதிஎலாந் தித்திக்கும்என்
- மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
- வரும்இன்பம் என்புகலுவேன்
- தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
- தோன்றிட விளங்குசுடரே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
- மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
- கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
- கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
- வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
- விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
- சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
- கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
- சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
- துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
- சிற்கரை திரையறு திருவருட் கடலே
- தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
- சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
- கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
- தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
- சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
- ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
- அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
- தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
- உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
- கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
- கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
- திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
- சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
- தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
- அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
- கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
- கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
- பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
- பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
- சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
- அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
- துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
- சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
- விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
- விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
- தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
- அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
- கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
- காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
- எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
- எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
- சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பவநெறி செலுமவர் கனவிலும் அறியாப்
- பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
- நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே
- நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
- சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
- சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
- தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
- அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
- செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
- திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
- பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
- பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
- தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
- உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
- ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
- பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
- பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
- இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
- ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.
- பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
- பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
- கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
- குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
- என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
- இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
- பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
- பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
- பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
- பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
- சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
- தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
- ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
- அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
- பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
- பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
- அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
- அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
- செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
- திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
- இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
- இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
- சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
- மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
- வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
- ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
- ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
- கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
- கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
- ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
- இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.
- மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
- மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
- சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
- தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
- பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
- பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
- ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
- கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
- நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
- நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
- என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
- இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
- இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
- பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
- ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
- உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
- அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
- அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
- தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
- சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
- பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
- பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
- வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
- வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
- ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
- திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
- மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
- வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
- தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
- துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
- தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
- தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
- ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
- இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
- போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
- பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
- பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
- படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
- வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
- வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
- நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
- நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
- கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
- கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
- இரண்டரைக் கடிகையில் நினக்கே
- ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
- உண்மைஈ தாதலால் இனிவீண்
- போதுபோக் காமல் மங்கலக் கோலம்
- புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
- தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
- தெருட்டிய சிற்சபை யவரே.
- விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
- மெய்யருள் திருவினை நினக்கே
- வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
- வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
- இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
- எல்லையுள் எழில்மணக் கோலம்
- நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
- நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
- களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
- கடிகைஓர் இரண்டரை அதனில்
- ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
- உனக்குநன் மணம்புரி விப்பாம்
- அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
- அணிபெறப் புனைகநீ விரைந்தே
- வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
- விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
- அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
- பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
- மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
- தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
- ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
- சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
- நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
- வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
- துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
- பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
- அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
- உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
- வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
- ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
- ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
- ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.
- ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
- வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
- தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
- வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
- கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை
- நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
- மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
- கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.
- எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
- எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
- நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
- நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
- பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
- பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
- எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
- இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
- கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
- கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
- தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
- சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
- திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
- திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
- வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
- வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
- உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
- துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
- வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
- வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
- கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
- குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
- நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
- நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
- மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
- வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
- மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
- விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
- நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
- நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
- தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
- தூயதிரு நாள்வருநாள் தொடாங்கிஒழி யாவே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
- இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
- ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
- உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
- தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
- திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
- ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
- எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
- தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
- சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
- கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
- கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
- இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
- இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
- பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
- பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
- தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
- மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
- வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
- காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
- கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
- தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
- வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
- பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
- பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
- பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
- பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
- எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
- கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
- கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
- குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
- பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
- பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
- ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
- எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
- ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
- அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
- கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
- கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
- வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
- வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
- சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
- பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
- புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
- கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
- களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
- ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
- அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
- மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
- மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.
- எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
- எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
- கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
- கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
- ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
- அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
- உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
- உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
- உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
- மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
- வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
- இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
- எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
- நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.
- நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
- நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
- வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
- வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
- புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
- புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
- உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
- வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
- வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
- மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
- வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
- மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
- மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
- செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
- சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
- எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
- எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
- நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
- ஒன்றாகி நின்றான் உவந்து.
- அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
- அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
- செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
- தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
- தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
- ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
- மேகத்திற் குண்டோ விளம்பு.
- ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
- நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
- சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
- பத்திஎலாம் பெற்ற பலன்.
- சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
- நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
- ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
- தானவிளை யாட்டியற்றத் தான்.
- பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
- சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
- தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
- கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
- சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
- வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
- நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
- தாயே அனையான் தனித்து.
- நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
- ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
- பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
- நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
- நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
- நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
- அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
- இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
- வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்
- தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த
- மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
- இங்குநடஞ் செய்வான் இனி.
- இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்
- நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல்
- சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
- நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.
- செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
- கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
- அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
- தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.
- இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்
- எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்
- சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்
- உற்றவரை உற்றவர்கள் உற்று.
- என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
- அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
- திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்
- குருவம் பலத்தேஎன் றுன்.
- இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
- நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள்
- அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்
- அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்.
- ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில்
- சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த
- காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்
- நீரத்தைச் சேர்வீர் நிஜம்.
- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
- புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
- புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
- உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
- உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
- மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
- மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
- தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
- சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.
- பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
- பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
- துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
- துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
- தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
- சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
- கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
- காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
- எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
- அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
- அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
- பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
- பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
- வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
- மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
- நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
- சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
- தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
- சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
- சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
- ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
- உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
- விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
- மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
- திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
- செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
- வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
- வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
- கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
- கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
- களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
- களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
- தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
- செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
- ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
- ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
- அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
- ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
- அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
- கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
- காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
- இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
- யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
- உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
- ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
- திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
- சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
- வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
- வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
- பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
- பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
- கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
- கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.
- உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
- உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
- எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
- என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
- தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
- சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
- கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
- கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
- தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
- நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
- நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
- அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
- ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
- சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
- சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
- நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
- நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
- எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
- என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
- சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
- செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
- முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
- முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
- சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
- இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
- தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
- அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
- அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
- முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
- முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
- திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
- ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
- உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
- வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
- மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
- சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
- தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
- புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
- மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
- பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
- அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
- அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
- மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
- மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
- சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
- சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
- எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
- இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
- பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
- இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
- இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
- மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
- மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
- சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
- சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
- பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
- பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
- சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
- தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
- நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
- நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
- புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
- பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
- அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
- அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
- தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
- உலகாளச் சூழ்ந்த காமப்
- பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
- நும்முயிரைப் பிடிக்க நாளைச்
- சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
- ஞானசபைத் தலைவன் உம்மைக்
- கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
- இவ்வுலகில் குலாவு வீரே.
- பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
- திடுகின்றீர் பேய ரேநீர்
- இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
- மதித்தீரோ இரவில் தூங்கி
- மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
- நும்மனத்தை வயிரம் ஆன
- சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
- ஏன்பிறந்து திரிகின் றீரே.
- புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
- கருங்கடலில் போக விட்டீர்
- கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
- சுடுகின்ற கொடுமை நோக்கிக்
- கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
- கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
- தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
- புரிகுவதித் தருணம் தானே.
- இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
- துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
- அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
- என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
- தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
- ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
- தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
- மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
- வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
- நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
- மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
- என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
- மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
- திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
- நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
- கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
- பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
- எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
- மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
- பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
- இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
- முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
- சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
- சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
- ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
- ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
- ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
- வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
- இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
- மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
- தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
- தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.
- எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
- தம்உயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
- யாவர்அவர் உளந்தான் சுத்த
- சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
- இடம்எனநான் தெரிந்தேன் அந்த
- வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
- சிந்தைமிக விழைந்த தாலோ.
- கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
- தம்உயிர்போல் கண்டு ஞானத்
- தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
- பெருநீதி செலுத்தா நின்ற
- பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
- திருவாயால் புகன்ற வார்த்தை
- அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
- வார்த்தைகள்என் றறைவ ராலோ.
- மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
- உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
- அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
- கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
- ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
- திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
- வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
- கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
- அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
- பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
- மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
- இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
- தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
- கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
- ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
- சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
- முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
- தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
- மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.
- என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
- இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
- நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
- வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.
- போற்று கின்றஎன் புன்மை யாவையும்
- பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
- ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
- கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
- காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
- காணக் காட்டிய கருத்த போற்றிவன்
- கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
- கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
- கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
- தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
- செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
- அள்ளக் குறையா வள்ளற் பொருளை
- அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
- பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
- புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
- தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
- செல்வமே நான்பெற்ற சிறப்பே
- மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
- வாழ்வித்த என்பெரு வாழ்வே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
- புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
- தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
- தேடியும் காண்கிலாச் சிவமே
- மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
- வள்ளலே தெள்ளிய அமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
- புகன்றபோ தாந்த நாதாந்தம்
- தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
- தத்தினும் தித்திக்கும் தேனே
- மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
- மாபெருங் கருணையா ரமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- அருட்பெருஞ்சோதி அபயம்
- அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
- அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ்
- சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற்
- சோதி அபயம் துணை.
- இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்
- இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
- கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
- கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
- பிணக்கறிவீர் புரட்டறிவீர்348 பிழைசெயவே அறிவீர்
- பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
- மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
- வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.
- சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
- சிறியவர் சிந்தைமாத் திரமோ
- பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
- புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
- கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
- கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
- எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
- இனிப்பிலே புகுகின்ற திலையே.
- நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
- நான்செயத் தக்கதே தென்பாள்
- செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
- தெய்வமே தெய்வமே என்பாள்
- வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
- விருப்பிலர் என்மிசை என்பாள்
- வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
- வருந்துவாள் நான்பெற்ற மகளே.
- நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
- நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
- வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
- வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
- காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
- களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
- ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
- எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
- உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ
- என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும்
- அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை
- முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே.
- இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
- சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
- பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை
- வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் பிள்ளைஎன மதித்தி டாயே.
- சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
- உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
- தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
- பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
- உடைய நாயகன் பிள்ளைநான் ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
- அடைய நான்அருட் சோதிபெற் றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
- மிடைய அற்புதப் பெருஞ்செயல் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
- தடைய தற்றநல் தருணம்இத் தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
- கோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப்
- போது கொடுத்த நின்அருளாம் பொருளை நினைக்கும் போதெல்லாம்
- தாது கொடுத்த பெருங்களிப்பும் சாலா தென்றால் சாமிநினக்
- கேது கொடுப்பேன் கேட்பதன்முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.
- அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
- அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
- டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
- ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
- மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
- மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
- செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
- திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
- என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
- எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
- நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
- நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
- தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
- சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
- பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
- பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
- தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
- தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
- ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
- உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
- இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
- இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
- அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
- அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.
- வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
- மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
- எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
- தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
- செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
- நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
- சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
- நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
- ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை.
- கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
- றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
- அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
- துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.
- ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
- வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
- நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
- நாதனைக் கண்டவன் நடிக்கும்
- மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
- மருந்துகண் டுற்றது வடிவாய்
- நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
- நெஞ்சமே அஞ்சலை நீயே.
- கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
- கருணையங் கண்ணது ஞான
- நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
- நின்றது நிறைபெருஞ் சோதி
- மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
- வயங்குவ தின்பமே மயமாய்த்
- தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
- தனித்தெனக் கினித்ததோர் கனியே.
- சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
- தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
- காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
- நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.
- வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
- வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
- கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
- கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
- பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
- பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
- விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
- வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.
- நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
- யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன்
- என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே
- அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே.
- உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
- இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
- நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
- தானே எனக்குத் தனித்து.
- உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
- என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
- வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
- குண்மைஇன்பம் செய்தும் உவந்து.
- நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
- பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
- மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
- பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.
- அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
- அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
- அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
- அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
- மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
- இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
- தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.
- ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
- ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
- தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
- நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.
- என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான்
- நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால்
- பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என்
- தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே.
- எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
- எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
- எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
- எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.
- முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
- இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
- றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
- என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
- கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
- கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
- துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
- விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.
- செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
- ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
- சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
- இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
- கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
- தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
- அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
- பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.
- முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்
- முன்னர்நீ தோன்றினை அந்தோ
- அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்
- அப்பனே அய்யனே அரசே
- இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்
- என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
- எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்
- கெய்துதற் குரியமெய்த் தவமே.
- வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து
- மலத்திலே கிடந்துழைத் திட்ட
- நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்
- நன்றுறச் சூட்டினை அந்தோ
- தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்
- சோதியே நின்பெருந் தயவைத்
- தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்
- தயவும்உன் தனிப்பெருந் தயவே.
- பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த
- பெருமநின் தன்னைஎன் றனக்கே
- சாருறு தாயே என்றுரைப் பேனோ
- தந்தையே என்றுரைப் பேனோ
- சீருறு குருவே என்றுரைப் பேனோ
- தெய்வமே என்றுரைப் பேனோ
- யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்
- யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே
- என்உயிர்க் கமுதமே என்தன்
- அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே
- அருள்நடம் புரியும்என் அரசே
- வன்பிலே விளைந்த மாயையும் வினையும்
- மடிந்தன விடிந்ததால் இரவும்
- துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்
- சூழலில் துலங்குகின் றேனே.
- படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
- பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
- பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
- பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
- வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
- வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
- நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
- நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.
- கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக்
- கடவுளே என்இரு கண்ணே
- நிலையனே ஞான நீதிமன் றிடத்தே
- நிருத்தஞ்செய் கருணைமா நிதியே
- புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி
- பொருந்திய புதுமைஎன் புகல்வேன்
- சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ
- திருவருட் பெருந்திறல் பெரிதே.
- தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
- தனிமுதல் பேரருட் சோதிப்
- பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
- பராபர நிராமய நிமல
- உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
- உளத்ததி சயித்திட எனக்கே
- வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
- மாகடற் கெல்லைகண் டிலனே.
- யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
- என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
- ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
- ஒளிஉருக் காட்டிய தலைவா
- ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
- என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
- ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்
- அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
- துடிவிளங்கக் கரத்தேந்தும் சோதிமலை மருந்தே
- சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
- பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்
- போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
- படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்
- பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.
- அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
- வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
- வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
- இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
- இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
- என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
- எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.
- கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
- கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
- துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
- தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
- விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
- வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
- அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
- அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
- மாளாத ஆக்கை பெற்றேன்
- கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
- நடுவிருந்து குலாவு கின்றேன்
- பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
- அன்பினொடும் பாடிப் பாடி
- நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன்
- எண்ணமெலாம் நிரம்பி னேனே.
- ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
- அருள்ஒளி தருகின்றாம்
- கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
- குறிக்கொள்வர் நினக்கேஎம்
- ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
- வாழ்கநீ மகனேஎன்
- றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
- இணைமலர்ப் பதம்போற்றி.
- தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்
- தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
- பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
- புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
- என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
- இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
- நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்
- நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.
- கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
- கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
- அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
- அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
- உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
- உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
- இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
- இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
- காற்றாலே புவியாலே ககனமத னாலே
- கனலாலே புனலாலே கதிராதி யாலே
- கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
- கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
- வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
- மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
- ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
- எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- நீதியில் கலந்து நிறைந்தது நானும்
- நித்தியன் ஆயினேன் உலகீர்
- சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
- சத்தியச் சுத்தசன் மார்க்க
- வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
- விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
- 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
- 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
- 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
- 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
- 351. தாழைப்பழம் - தேங்காய்.
- நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
- ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
- ஏன்பற்று வாயென்ப தார்.
- இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
- யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
- விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
- விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- என்ன துடலும் உயிரும்336 பொருளும் நின்ன தல்ல வோ
- எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
- சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
- சிந்தை நினைக்கக் கண்ர் பெருக்கி337 உடம்பை நனைக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
- என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
- உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
- உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
- அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
- அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
- நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
- எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
- எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே
- விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே
- அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே
- அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
- அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
- பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
- பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
- எனக்கும் உனக்கும்
- கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
- கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே
- தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
- தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே.
- எனக்கும் உனக்கும்
- என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
- என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
- பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
- புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே.
- எனக்கும் உனக்கும்
- சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
- துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
- ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
- ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே.
- எனக்கும் உனக்கும்
- அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
- அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
- ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
- ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
- எனக்கும் உனக்கும்
- ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
- அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
- மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
- வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
- எனக்கும் உனக்கும்
- அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
- அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
- பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
- போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
- எனக்கும் உனக்கும்
- சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே
- சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே
- அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே
- அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.
- எனக்கும் உனக்கும்
- என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே
- இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே
- முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே
- முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே.
- எனக்கும் உனக்கும்
- விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
- மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
- அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
- அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
- அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
- இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
- என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
- எனக்கும் உனக்கும்
- மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன்
- வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன்
- குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன்
- கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
- பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
- தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
- தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
- எனக்கும் உனக்கும்
- அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
- அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
- எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
- எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே
- நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே
- ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே
- உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே.
- எனக்கும் உனக்கும்
- ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
- ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
- பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
- பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
- அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
- பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
- பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- 336. உயிரும் உடலும் - ச. மு. க.
- 337. பெருகி - ச. மு. க.
- 338. தனியன் - பி. இரா., ச. மு. க.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
- அம்பல வாணரே வாரீர்
- அன்புடை யாளரே வாரீர். வாரீர்
- அன்புரு வானவர் இன்புற உள்ளே
- அறிவுரு வாயினீர் வாரீர்
- அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
- அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
- அரும்பெருஞ் சித்தரே வாரீர்
- அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
- அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- ஆனந்த நாடரே வாரீர். வாரீர்
- ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
- கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்
- ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
- ஜோதிய ரேஇங்கு வாரீர்
- வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
- யோகம் கொடுத்தீரே வாரீர்
- போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்
- என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
- இன்பால் பெறுகின்றீர் வாரீர்
- தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
- ஒருமை நிலையில் இருமையும் தந்த
- ஒருமையி னீர்இங்கு வாரீர்
- பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
- ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
- உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
- பெண்மை304 இடங்கொண்டீர் வாரீர். வாரீர்
- ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
- ஓங்கு நடேசரே வாரீர்
- பாங்குசெய் வீர்இங்கு வாரீர். வாரீர்
- உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்
- உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர்
- கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்
- கண்ணனைய காதலரே அணையவா ரீர்
- அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்
- அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர்
- இலகுசபா பதியவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
- வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
- அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
- அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
- புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
- பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
- எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
- ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
- ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
- ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
- உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
- ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
- அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
- துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
- துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்
- பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
- என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
- வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
- தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
- துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
- இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
- திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
- திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
- பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
- பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
- உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
- உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
- இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
- ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
- உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
- மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
- சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
- தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
- ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
- உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
- ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- இசையாமல் போனவர் எல்லாரும் நாண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
- வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
- நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
- நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
- அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
- திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
- துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
- சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
- அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
- சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
- விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
- வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
- பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
- பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
- அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
- தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
- எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
- என்தோழி வாழிநீ என்னொடு கூடி
- துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
- சோதிஎன் றோதிய வீதியை விட்டே
- அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
- விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
- எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
- என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
- இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
- ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
- அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
- சூழலில் உண்டது சொல்லள வன்றே
- எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
- இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
- விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
- வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
- அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
- என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
- காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
- கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
- ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
- ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
- ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
- சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
- பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
- பாரிடை வானிடைப் பற்பல காலம்
- விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
- மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
- அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஆடேடி பந்து ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
- அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
- ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
- பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
- புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. ஞான
- எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்
- என்றும் விடாமல் இனிக்கு மருந்து
- சொல்லால் அளவா மருந்து - சுயஞ்
- ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து. ஞான
- காணாது காட்டு மருந்து - என்றன்
- கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து
- ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது
- வாகி மணிமன்றில் ஆடு மருந்து. ஞான
- என்பெரு வாழ்வா மருந்து - என்றும்
- என்செல்வ மாகி இருக்கு மருந்து
- என்னுயிர் நட்பா மருந்து - எனக்
- கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து. ஞான
- சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
- செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
- தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
- தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி. சிவசிவ
- மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக
- வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி
- துன்னிய வச்சிர ஜோதி - முத்து
- ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி. சிவசிவ
- கால முதற்காட்டும் ஜோதி - கால
- காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி
- கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்
- குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி. சிவசிவ
- தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத்
- தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
- அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம்
- அருளில் விளங்க அமர்த்திய ஜோதி. சிவசிவ
- ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
- கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
- வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
- வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. சிவசிவ
- சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
- சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
- உவமையில் லாப்பெருஞ் சோதி - என
- துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்
- சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி
- விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே
- வீதியும் வீடும் விளக்கிய ஜோதி. சிவசிவ
- கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்
- கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி
- எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான்
- எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி. சிவசிவ
- சுத்த சிவமய ஜோதி - என்னை
- ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
- சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
- தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி. சிவசிவ
- பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
- பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
- சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
- பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
- சீருறச் செய்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
- அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
- ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
- அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
- வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
- கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
- கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
- தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
- இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
- இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
- மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
- விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
- எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
- இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
- என்றும் தீரா வழக்குக் காண டி.
- எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
- இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்
- இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
- என்றும் தீரா வழக்குக் காண டி.
- துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
- சுகமய மாகிய சுந்தரப் பாதம்
- பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
- பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய
- தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
- தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
- ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
- உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய
- அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
- அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
- பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
- பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய
- நாரண னாதியர் நாடரும் பாதம்
- நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
- ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
- ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். ஆடிய
- சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
- சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
- நித்திய ஞான நிறையமு துண்டனன்
- நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
- சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
- சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
- மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
- மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
- பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
- பேர்மணி ஆச்சுத டி - அம்மா
- பேர்மணி ஆச்சுத டி. ஆணி
- வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
- வல்லபம் பெற்றன டி - அம்மா
- வல்லபம் பெற்றன டி. ஆணி
- எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
- இருவர் இருந்தார டி - அம்மா
- இருவர் இருந்தார டி. ஆணி
- சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
- சாமி அறிவார டி - அம்மா
- சாமி அறிவார டி.
- அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
- அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
- செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
- சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.
- ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி
- நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
- ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
- அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.
- அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
- அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
- செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
- சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.
- நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
- நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
- சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
- செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
- 345. இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு.
- அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
- அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
- மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
- மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
- அருட்பொது நடமிடு தாண்டவ னே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
- சிற்சபை அப்பனை உற்றே னே
- சித்திஎ லாம்செயப் பெற்றே னே.
- அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
- ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
- இருட்பெரு மாயையை விண்டே னே
- எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.
- 339. ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாகநாமாவளி தொடங்குகிறது. ஆ. பா. பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும்முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது.இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப்பெறுவதாயும்,கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே"என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விருநாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக்கொள்ளலாம்.
- 340. சவுதய - ஆ. பா. பதிப்பு.
- 341. அனுர்த - ச. மு. க. பதிப்பு.
- உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
- பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
- அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
- அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
- நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி
- நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி
- அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி
- அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி.
- உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
- அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.
- ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது
- ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது
- சூதமலங் காதுவிலங் காதுகலங் காது
- ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
- ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது
- ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
- சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது
- ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
- அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
- எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.
- எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
- என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
- சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- புரையறு புகழே புகழ்பெறு பொருளே
- பொருளது முடிபே முடிவுறு புணர்வே
- திரையறு கடலே கடலெழு சுதையே
- திருநட மணியே திருநட மணியே.
- கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
- எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
- இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
- மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
- மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
- பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
- பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
- நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
- நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
- பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
- பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
- வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
- வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
- எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
- எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
- பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
- பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
- விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
- விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
- இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
- எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
- சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
- சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
- துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
- தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
- மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
- என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
- என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
- மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
- விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
- அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
- அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
- கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
- கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
- எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
- தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
- பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
- பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
- உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
- உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
- தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
- சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
- வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
- மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
- சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
- துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
- ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
- கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
- மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
- குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
- குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
- தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
- சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
- அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
- அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
- பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
- அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
- அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
- கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
- களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
- புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
- புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
- தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
- தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
- சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
- திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
- அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
- அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
- எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
- வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
- எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்
- இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
- நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய
- நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்
- என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
- செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்
- சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.
- வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
- நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
- நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
- கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
- கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
- தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
- தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
- என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
- எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
- பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
- புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
- புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
- புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
- உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
- உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
- சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
- பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
- துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
- பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
- படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
- எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
- சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
- தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
- தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
- மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
- முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
- கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
- அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
- படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
- பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
- அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
- ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
- கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
- கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.
- இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
- எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
- அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
- அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
- என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
- சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
- துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
- சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
- பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
- பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
- இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
- ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
- என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
- காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
- கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
- தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
- தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
- மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
- வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
- சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
- இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
- இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
- எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
- என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
- சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
- சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
- காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
- கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
- கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
- குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
- ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
- அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
- தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
- தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
- வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
- துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
- துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
- இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
- இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
- ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
- வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
- ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே
- ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
- திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
- உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை
- எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
- எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்
- எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
- கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா
- கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
- செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்
- சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
- உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
- துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
- சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
- பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
- பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
- அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
- ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
- பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
- அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
- யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
- பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
- பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
- துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
- சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
- சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
- சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
- பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
- பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
- அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
- அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
- சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
- திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
- காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
- கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
- கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
- குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
- நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
- நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
- மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
- வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
- சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
- சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
- ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
- அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
- ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
- உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
- சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
- சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
- சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
- குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
- குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
- குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
- கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
- மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
- வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
- தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
- தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
- கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
- கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
- செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
- சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
- இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
- இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
- தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார்
- வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
- மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
- ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
- அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
- தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
- சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.
- அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
- ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
- செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
- திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
- பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
- பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
- அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
- அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.
- சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
- நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
- தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
- எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
- ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
- ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
- மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
- விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
- துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
- சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
- வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
- மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
- தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
- இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
- இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
- மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
- மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
- கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
- களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
- என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
- இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
- பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
- பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
- தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
- சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
- மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
- வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.
- 374. இத்திருப்பாட்டின் கீழ் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகளால்எழுதப்பெற்றுள்ளது.
- 375. இத்திருப்பாட்டின் கீழ் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துளேன்"என அடிகளால் எழுதப்பெற்றுள்ளது.