- பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
- பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
- பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
- பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
- சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
- சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
- சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
- தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
- சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
- சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
- சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
- தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
- வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
- மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
- மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
- மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
- ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
- எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
- எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
- எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
- எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
- ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
- எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
- ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே.
- சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்
- சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
- தாயி னுலகனைத்துந் தாங்குந் திருப்புலியூர்க்
- கோயி லமர்ந்தகுணக் குன்றமே - மாயமிகும்
- காயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை
- வாயிலி னோங்கு மணிவிளக்கே - மேய
- பலிக்காவூர் தோறும் பதஞ்சேப்பச் சென்று
- கலிக்காமூர் மேவுங் கரும்பே - வலிக்காலில்
- பாய்48க்காடு கின்றவொரு பச்சை முகில்பரவுஞ்
- சாய்க்காடு மேவுந் தடங்கடலே - வாய்க்கமையச்
- சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
- பல்லவ னீச்சரத்தெம் பாவனமே - நல்லவர்கள்
- கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ
- வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே - தண்காட்டிக்
- கார்49காழி னெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
- சீர்காழி ஞானத் திரவியமே - ஓர்காழிப்
- பாலற்கா வன்று பசும்பொற்றா ளங்கொடுத்த
- கோலக்கா மேவுங் கொடையாளா - கோலக்கா
- இடைமுடியின் றீங்கனியென் றெல்லின் முசுத்தாவும்
- கடைமுடியின் மேவுங் கருத்தா - கொடைமுடியா
- நன்றியூ ரென்றிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற
- நின்றியூர் மேவு நிலைமையனே - ஒன்றிக்
- கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
- திருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே
- மன்னியூ ரெல்லாம் வணங்க வளங்கொண்ட
- அன்னியூர் மேவு மதிபதியே - மன்னர்சுக
- விண்ணெதிர்கொண் டிந்திரன்போன் மேவிநெடு நாள்வாழப்
- பண்ணெதிர்கொள் பாடிப் பரம்பொருளே - நண்ணும்
- வாரட்ட கொங்கை மலையா ளொடுங்கொறுக்கை
- வீரட்ட மேவும் வியனிறைவே - ஓரட்ட
- மாவளருஞ் செந்தா மரைவளருஞ் செய்குரக்குக்
- காவளரு மின்பக் கனசுகமே - தாவுமயல்
- நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற
- மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே - விண்ணினிடை
- வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
- ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே - நேமார்ந்த
- வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
- கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே - மேனாட்டும்
- தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
- நாரையூர் மேவு நடுநிலையே - பாரில்
- உடம்பூர் பவத்தை யொழித்தருளும் மேன்மைக்
- கடம்பூர்வாழ் என்னிரண்டு கண்ணே - தடம்பொழிலில்
- நாடிக்கா வுள்ளே நமச்சிவா யம்புகலும்
- கோடிக்கா மேவுங் குளிர்மதியே - ஓடிக்
- மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளும்
- கொட்டையூ ருட்கிளருங் கோமளமே - இட்டமுடன்
- என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
- இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே - முன்னம்பு
- வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
- வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக்
- வெய்யாற்றி னின்றவரை மெய்யாற்றி னேற்றுதிரு
- ஐயாற்றின் மேவியஎன் னாதரவே - பொய்யாற்றி
- மெய்த்தான நின்றோர் வெளித்தான மேவுதிரு
- நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே - மைத்த
- பொன்னுங்53 கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்தருளை
- மன்னு மழபாடி வச்சிரமே - துன்னுகின்ற
- நாய்க்குங் கடையேன் நவைதீர நற்கருணை
- வாய்க்கும் பழுவூர் மரகதமே - தேய்க்களங்கில்
- தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
- ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல்
- மைஞ்ஞ“ல வாட்கண் மலராள் மருவுதிருப்
- பைஞ்ஞ“லி மேவும் பரம்பரமே - எஞ்ஞான்றும்
- தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
- ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே - ஓங்காது
- நாட்போக்கி நிற்கு நவையுடையார் நாடரிதாம்
- வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே - கோட்போக்கி
- நற்குடியு மோங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
- கற்குடியிற் சந்தான கற்பகமே - சிற்சுகத்தார்
- அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும்
- சிராப்பள்ளி ஞானத் தெளிவே - இராப்பள்ளி
- கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ்
- தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே - எண்ணார்
- வாந்துருத்தி கொண்டுள் ளனலெழுப்பு வோர்புகழும்
- பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே - காந்தருவத்
- வேற்றுத் துறையுள் விரவா தவர்புகழும்
- சோற்றுத் துறையுட் சுகவளமே - ஆற்றலிலாத்
- தீதிக் குடியென்று செப்பப் படார்மருவும்
- வேதிக் குடி58 யின்ப வெள்ளமே - கோதியலும்
- வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
- தென்குடித் திட்டைச் சிவபதமே - நன்குடைய
- உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
- புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ்
- சோலைத் துறையிற் சுகஞ்சிவநு‘ல் வாசிக்கும்
- பாலைத் துறையிற் பரிமளமே - சீலத்தர்
- சொல்லூ ரடியப்பர் தூயமுடி மேல்வைத்த
- நல்லூ ரமர்ந்தநடு நாயகமே - மல்லார்ந்த
- சித்திமுற்ற யோகஞ் செழும்பொழிலிற் பூவைசெயும்
- சத்திமுற்ற மேவுஞ் சதாசிவமே - பத்தியுற்றோர்
- முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
- பட்டீச் சரத்தெம் பராபரமே - துட்டமயல்
- ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
- சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - சேர்ந்த
- காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்
- கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே - வாழ்க்கோட்டத்
- தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
- போக்கும் இடைமருதிற் பூரணமே - நீக்கமிலா
- ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க் குண்மைதரு
- நீலக் குடியிலங்கு நிட்களமே - ஞாலத்து
- நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
- மாடக்கோ யிற்குண் மதுரமே - பாடச்சீர்
- தீரா வடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச்
- சீரா வடுதுறையெஞ் செல்வமே - பேராக்
- நாளு மெழுந்தூர் நவையறுக்கு மன்பருள்ளம்
- நீளும் அழுந்தூர் நிறைதடமே - வேளிமையோர்
- வாயூரத் தேமா மலர்59 சொரிந்து வாழ்த்துகின்ற
- மாயூரத் தன்பர் மனோரதமே - தேயா
- செறியலூர் கூந்தல் திருவனையா ராடும்
- பறியலூர் வாழ்மெய்ப் பரமே - நெறிகொண்டே
- அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
- பொன்பள்ளி வாழ்ஞான போதமே - இன்புள்ளித்
- தெள்ளியார் போற்றித் திகழுந் திருநன்னிப்
- பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே - எள்ளுறுநோய்
- ஏய வலம்புரத்தை யெண்ணாம லெண்ணுகின்றோர்
- மேய வலம்புரத்து மேதகவே - தூயகொடி
- அங்காடு கோபுரம்வா னாற்றாடு கின்றதலைச்
- சங்காடு மேவுஞ் சயம்புவே - பொங்குமிருட்
- கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில்
- வீறுதிரு வாக்கூர் விளக்கமே - மாறகற்றி
- சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதோங்கு
- நற்கடவூர் வீரட்ட நாயகனே - வற்கடத்தும்
- வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
- வேட்டக் குடிமேவு மேலவனே - நாட்டமுற்ற
- கரும புரத்திற் கலவா தருள்செய்
- தரும புரஞ்செய் தவமே - இருமையினும்
- எள்ளாற்றின் மேவாத ஏற்புடையோர் சூழ்ந்திறைஞ்சு
- நள்ளாற்றின் மேவியஎன் நற்றுணையே - தெள்ளாற்றின்
- நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
- கோட்டாறு மேவுங் குளிர்துறையே - கூட்டாக்
- கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
- திருவம்பர் ஞானத் திரட்டே - ஒருவந்தர்
- மாகாளங் கொள்ள மதனைத் துரத்துகின்ற
- மாகாளாத் தன்பர் மனோலயமே - யோகாளக்
- துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
- மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்
- தாஞ்சியத்தை62 வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
- வாஞ்சியத்தின் மேவு மறையோனே - ஆஞ்சியிலா
- நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத்
- தண்பனையூர் மேவுஞ் சடாதரனே - பண்புடனே
- எற்குடியா னங்கொண் டிருக்க மகிழ்ந்தளித்த
- விற்குடியின் வீரட்ட மேயவனே - சொற்கொடிய
- ஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப
- தீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே - ஏச்சகல
- இக்கூடன் மைந்த வினிக்கூட லென்றுபள்ளி
- முக்கூடன் மேவியமர் முன்னவனே - தக்கநெடுந்
- கூறை64 யுவந்தளித்த கோவேயென் றன்பர்தொழச்
- சேறை யுவந்திருந்த சிற்பரமே - வேறுபடாப்
- பாலூர் நிலவிற் பணிலங்கள் தண்கதிர்செய்
- நாலூரில் அன்பர்பெறு நன்னயமே - மேலூரும்
- நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்தகடு
- வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே - வாய்த்த
- பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும்
- இரும்பூளை மேவி யிருந்தோய் - விரும்பும்
- தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
- பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம்
- மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
- வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும்
- வீட்டிலன்ப ரானந்தம் மேவச் செயுங்கொள்ளிக்
- காட்டி லமர்ந்தஎன்கண் காட்சியே - நீட்டுமொளி
- ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
- தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே - ஓங்குமலை
- வல்லிக்கா தார மணிப்புயவென் றன்பர்தொழ
- நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே - எல்அல்கண்
- சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து
- நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு
- நூறாயி லன்பர்தமை நோக்கி யருள்செய்திருக்
- காறாயின் மேலோர் கடைப்பிடியே - வீறாகும்
- நாடிக் குழக நலமருளென் றேத்துகின்ற
- கோடிக் குழகரருட் கோலமே - நீடுலகில்
- பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை
- ஆலவாய்ச் சொக்கழகா னந்தமே - சீலர்தமைக்
- காப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும்
- ஆப்பனூர் மேவுசதா னந்தமே - மாப்புலவர்
- ஞானபரங் குன்றமென நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
- வானபரங் குன்றலின்பா னந்தமே - வானவர்கோன்
- தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ
- ராமே டகத்தறிவா னந்தமே - பூமீதில்
- நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
- உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர்
- நாமீச ராகும் நலந்தருமென் றும்பர்தொழும்
- ராமீசம்67 வாழ்சீவ ரத்தினமே - பூமீது
- நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு
- வாடானை மேவுகரு ணாகரமே - சேடான
- பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
- பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவணத்தில்
- நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
- நெல்வேலி உண்மை நிலயமே - வல்வேலை
- வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
- பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே - தீண்டரிய
- வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
- நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே - தங்களற்றின்
- அம்புலியூர் சோலை யணிவயல்க ளோங்கெருக்கத்
- தம்புலியூர் வேத சமரசமே - நம்புவிடை
- னார்புரத்தை72 வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழச்
- சோபுரத்தின்73 வாழ்ஞான தீவகமே - வார்கெடிலச்
- சென்னதிகை யோங்கித்74 திலதவதி யார்பரவும்
- மன்னதிகை வீரட்ட மாதவமே - பன்னரிதாம்
- ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா
- நாவலூர் ஞானியருண் ஞாபகமே - தேவகமாம்
- நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற
- நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே - சொல்வண்ணம்
- காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
- மாணிக் குழிவாழ் மகத்துவமே - மாணுற்ற
- ஏர்ப்பனங்காட் டூரென் றிருநிலத்தோர் வாழ்த்துகின்ற
- சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்ஷேபமே - சூர்ப்புடைத்த
- தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
- ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும்
- உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
- அண்ணா மலைவாழ் அருட்சுடரே - கண்ணார்ந்த
- நாகம்ப ராந்தொண்ட நாட்டி லுயர்காஞ்சி
- ஏகம்ப மேவும்பே ரின்பமே - ஆகுந்தென்
- காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி
- மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே - நாற்றமலர்ப்
- பூந்தண் டளிவிரித்துப் புக்கிசைக்குஞ் சீரோண
- காந்தன் றளிஅருட்ப்ர காசமே - சேர்ந்தவர்க்கே
- மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
- கச்சி நெறிக்காரைக் காட்டிறையே - முச்சகமும்
- யோகறலி77 லாத்தவத்தோ ருன்ன விளங்குதிரு
- மாகறலில் அன்பரபி மானமே - ஓகையிலா
- ஆர்த்தான் பனகத் தவனிந் திரன்புகழ்வன்
- பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே - பார்த்துலகில்
- இல்ல மெனச்சென் றிரவா தவர்வாழும்
- வல்லமகி ழன்பர் வசித்துவமே - சொல்லரிக்குக்
- காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்
- மாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய்
- ஊற லடியா ருறத்தொழுது மேவுதிரு
- ஊற லழியா உவகையே - மாறுபடு
- தீது மிலம்பயங்கோட் டீரென் றடியர்புகழ்
- ஓது மிலம்பயங்கோட் டூர்நலமே - தீதுடைய
- பொற்கோலம் ஆமெயிற்குப் போர்க்கோலம் கொண்டதிரு
- விற்கோலம் மேவுபர மேட்டிமையே - சொற்போரில்
- ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
- ஆலங்காட் டிற்சூழ் அருள்மயமே - ஞாலம்சேர்
- மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
- பாசூரில் உண்மைப் பரத்துவமே - தேசூரன்
- கோளத்தி நீக்குங் குணத்தோர்க் கருள்செய்திருக்
- காளத்தி ஞானக் களஞ்சியமே - ஆள்அத்தா
- வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
- ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில்
- பொங்குமணிக் கால்கள் பொலஞ்செய்திரு வொற்றிநகர்
- தங்குஞ் சிவபோக சாரமே - புங்கவர்கள்
- சேர்ந்துவலங் கொள்ளுந் திருவொற்றி யூர்க்கோயிற்
- சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர்
- போற்றுந் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
- சாற்றும் புகழ்வேத சாரமே - ஊற்றுறுமெய்
- அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
- இன்பமிகு ஞான இலக்கணமே - துன்பமற
- வேற்காட்ட ரேத்துதிரு வேற்காட்டின் மேவியமுன்
- நூற்காட் டுயர்வேத நுட்பமே - பாற்காட்டும்
- ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
- கீர்த்திபெற்ற நல்வேத கீதமே - கார்த்திரண்டு
- வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில்
- மேவுகின்ற ஞான விதரணமே - தூவிமயில்
- ஆடும் பொழிற்கச்சூ ராலக்கோ யிற்குளன்பர்
- நீடுங் கனதூய நேயமே - ஈடில்லை
- என்னுந் திருத்தொண்ட ரேத்து மிடைச்சுரத்தின்
- மன்னுஞ் சிவானந்த வண்ணமே - நன்னெறியோர்
- துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
- முன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில்
- அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
- தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே - எம்மதமும்
- சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
- நேர்ந்தார் உபநிடத நிச்சயமே - தேர்ந்தவர்கள்
- தத்த மதுமதியாற் சாரும் அரசிலியூர்
- உத்தமமெய்ஞ் ஞான ஒழுக்கமே - பத்தியுள்ளோர்
- எண்ணும் புகழ்கொள் இரும்பைமா காளத்து
- நண்ணுஞ் சிவயோக நாட்டமே - மண்ணகத்துள்
- கோபலத்திற் காண்பரிய கோகரணங் கோயில்கொண்ட
- மாபலத்து மாபலமா மாபலமே - தாபமிலாப்
- பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
- தேடிவைத்த தெய்வத் திலகமே - நீடுபவம்
- என்போன் றவர்க்கும் இருள்நீக்கி இன்புதவும்
- பொன்போன்ற மேனிப் புராதனனே - மின்போன்ற
- வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
- திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம்
- நாளுரையா தேத்துகின்ற நல்லோர்மேல் இல்லாத
- கோளுரையென் றாலெனக்குக் கொண்டாட்டம் - நீளநினை
- ஆக்கமே சேரா தறத்துரத்து கின்றவெறுந்
- தூக்கமே யென்றனக்குச் சோபனங்காண் - ஊக்கமிகும்
- நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்
- சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான்
- வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற
- ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த
- மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
- பேதையென்ப தென்னுரிமைப் பேர்கண்டாய் - பேதமுற
- வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித்
- தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே - ஆய்துயர
- ஆனேன் பிழைக ளனைத்தினையு மையாநீ
- தானே பொறுக்கத் தகுங்கண்டாய் - மேல்நோற்ற
- இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென
- ஒப்பாரி யேனும் உடையேன்காண் - தப்பாய்ந்த
- செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்
- அறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு
- வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
- ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி
- கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்
- எட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற
- வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்
- தீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோது
- வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
- செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
- நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்
- சீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி
- ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்
- சென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்றொருநாள்
- ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
- சென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும்
- சங்கமதே86 தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்
- செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற
- நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்
- தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம்
- தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்
- கங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும்
- போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்
- கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு
- வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்
- தாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் - பாற்குடத்தைத்
- முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு
- முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு
- சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்
- மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்
- நித்தம் தெரியா நிலைமே வியநமது
- சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென
- மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்
- நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
- மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய
- நாலா யிரம்தாயில் நற்றாய்காண் - ஏலாது
- வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு
- நீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக
- விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
- கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற
- கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல்
- திங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல்
- சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
- ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்
- எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்
- தெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்
- பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்
- மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்
- மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்
- தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த
- கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்
- கீழ்க்கோ வணத்தின் கிளரழகும் - கீட்கோலம்
- சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்
- பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம்
- கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்
- கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து
- பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்
- உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன்
- அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்
- தின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே
- வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்
- கோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும்
- சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
- வீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் - தாழ்வொன்றே
- சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்
- மேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக்
- பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்
- மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி
- நோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை
- ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்
- உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்
- நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி
- வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்
- தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய
- கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு
- கல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம்
- வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
- சொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில்
- கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்
- செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண்
- ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்
- வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்
- அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்
- செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார்
- சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்
- மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை10
- மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்
- சீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு
- மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்
- கோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக்
- தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி
- வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்
- தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்
- வெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா
- மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்
- தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும்
- மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ
- தொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்107 - ஒன்றாச்சொல்
- ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்
- தீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த
- ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது
- கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்
- வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்
- பாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு
- பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்
- ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய்
- நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே
- பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை
- வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
- ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்
- பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்
- இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார்
- பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்
- என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்
- மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை
- விண்காணி வேண்டல் வியப்பன்றே - எண்காண
- மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்
- பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ - மேல்வீட்டில்
- தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
- மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்
- பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை
- மெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று
- காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்
- கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்
- பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே
- காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து
- மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே
- சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை
- மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்
- பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ
- திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை
- எக்கணமோ என்றார்நீ எண்ணிலையே - தொக்குறுதோல்
- கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட
- ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ
- ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்
- மெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல்
- தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்
- என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்
- எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்
- தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்
- இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு
- முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்
- காலத்தை வீணில் கழிக்கும் படிமேக
- சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே - சாலத்தில்
- காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்
- காலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன்
- கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்
- ஏவல்கொ ளுமேழை என்கேனோ - பாவத்தில்
- மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்
- ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல
- போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா
- யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும்
- வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
- ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற
- தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்
- தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்
- மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்
- றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த
- நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய
- தன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம்
- டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே
- ஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் - ஏற்றபடி
- வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
- சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்
- அற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய
- கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்
- சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த
- கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு
- தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்
- கோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத்
- அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ
- புண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம்
- தேனே அமுதே சிவமே சிவமேஎம்
- மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான
- மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்
- அன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப்
- பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி
- கண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும்
- மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு
- இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்
- சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று
- தேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி
- மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்
- தாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன்
- சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர
- தத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப்
- பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
- நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால்
- நீடும் படிநீ நிகழ்த்து.
- மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
- பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
- விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
- பட்டால் வருமே பதம்.
- ஆமோ அலவோ அறியேன் சிறியேனான்
- தாமோ தரனும் சதுமுகனும் - தாமே
- அடியா தரிக்கும் அரசேநின் ஏவல்
- அடியார்குற் றேவலடி யன்.
- உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
- என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
- தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
- எந்தாயிங் கொன்றுமறி யேன்.
- வீட்டார் இறைநீ விடைமேல் வரும்பவனி
- காட்டா தடைத்த கதவன்றோ - நாட்டாதி
- நல்லத் துளையா நதிச்சடையாய் என்னுஞ்சீர்ச்
- செல்லத் துளையாச் செவி.
- தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ்
- நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
- கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான்
- மூளாது பாழ்த்த முகம்.
- அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்
- வங்கணமே132 வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில்
- நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற்
- றார்போ லழிக தளர்ந்து.
- பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
- நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
- தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
- தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
- செய்யார் அழலேநின் செம்மேனி என்னினும்என்
- அய்யாநின் கால்பிடித்தற் கஞ்சேன்காண் - மெய்யாஇஞ்
- ஞான்றுகண்டு நான்மகிழ நந்தொண்டன் என்றெனையும்
- ஏன்றுகொண் டால்போதும் எனக்கு.
- தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத
- வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த
- வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ
- ஏணிற் பிறப்பித்த தில்.
- தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
- தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
- நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில்
- எல்லோர்க்கும் ஐயுறவா மே.
- இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல்
- அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா
- தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில்
- இவ்வண்ணம் என்றறிகி லேன்.
- நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப்
- பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர்
- வைவமே என்னும் வறியேன் அறியேனென்
- தெய்வமே நின்றன் செயல்.
- வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
- மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
- முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
- நின்பொற் கழலே நிலை.
- ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன்
- வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின்
- செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று
- நம்பாத நாயடியேன் நான்.
- சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
- நவமே தவமே நலமே நவமாம்
- வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ
- படிவுற்ற என்னுட் பயன்.
- வித்தாகி முளையாகி விளைவ தாகி
- விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
- கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
- குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
- சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
- சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
- முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
- முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.
- பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
- பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
- சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
- சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
- திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
- சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
- அரமாகி ஆனந்த போத மாகி
- ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.
- நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா
- நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
- தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்
- தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
- சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்
- சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
- மன்மயமாய் வாசகா தீத மாகி
- மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே.
- அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
- அளவாகி அளவாத அதீத மாகிப்
- பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
- பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
- பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
- பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
- கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
- கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.
- விதியாகி அரியாகிக் கிரீச னாகி
- விளங்குமகேச் சுரனாகி விமல மான
- நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி
- நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
- பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
- பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
- கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்
- கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே.
- மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்
- வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
- நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற
- நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
- கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்
- கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
- தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்
- தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே.
- பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
- பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
- கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
- கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
- சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
- தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
- நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
- நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.
- தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
- திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
- மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
- மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
- காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
- காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
- தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
- சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
- கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
- கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
- காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
- கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
- தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
- தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
- பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
- பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
- வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்
- வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
- தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்
- தாபரமே சங்கமமே சாற்று கின்ற
- ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்
- துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
- தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்
- தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே.
- விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
- வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
- கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
- கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
- தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
- தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
- பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
- பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.
- மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
- மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
- பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
- புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
- ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
- அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
- தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
- சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
- பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும்
- புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும்
- வேதமே வேதத்தின் விளைவே வேத
- வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே
- நாதமே நாதாந்த நடமே அந்த
- நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான
- போதமே போதமெலாம் கடந்து நின்ற
- பூரணமே யோகியருள் பொலிந்த தேவே.
- ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த
- நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
- காலமே காலமெலாம் கடந்த ஞானக்
- கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
- கோலமே குணமேஉட் குறியே கோலங்
- குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
- சீலமே மாலறியா மனத்திற் கண்ட
- செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே.
- தத்துவமே தத்துவா தீத மேசிற்
- சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
- சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
- தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
- சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
- தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
- சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
- சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
- யோகமே யோகத்தின் பயனே யோகத்
- தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
- போகமே போகத்தின் பொலிவே போகம்
- புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
- யாகமே யாகத்தின் விளைவே யாகத்
- திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர்
- மோகமே மோகமெலாம் அழித்து வீறு
- மோனமே மோனத்தின் முளைத்த தேவே.
- காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
- கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
- மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
- வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
- ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
- அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
- சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
- துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
- மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
- வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
- குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
- கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
- பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
- பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
- இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
- இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.
- கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்
- குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
- வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்
- வானமுதே ஆனந்த மழையே மாயை
- வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
- வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
- தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த
- செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை
- அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்
- உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை
- ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த
- களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்
- கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்
- வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன
- வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே.
- சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
- சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
- அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
- ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
- நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
- நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
- கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
- கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
- வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப
- வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
- சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்
- சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
- பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்
- பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
- திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே
- தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.
- பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
- பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
- சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
- சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
- ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
- டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
- சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
- செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
- கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று
- கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
- கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே
- காணாமற் காண்கின்ற காட்சியே உள்
- அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்
- அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
- உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்
- உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே.
- பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
- புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
- கங்குகரை காணாத கடலே எங்கும்
- கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
- தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
- தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
- செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
- செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
- வான்காணா மறைகாணா மலரோன் காணான்
- மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
- நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
- நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
- மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
- வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
- ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
- அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.
- மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
- மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
- அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
- அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
- கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
- கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
- எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
- என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
- கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
- பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
- புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
- நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
- நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
- சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
- திருவாளர் உட்கலந்த தேவ தேவே.
- மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
- மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
- கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
- கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
- விட்டகன்று கருமமல போதம் யாவும்
- விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
- சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
- சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
- உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
- உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
- ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்
- வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
- இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்
- எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
- கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்
- கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.
- பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்
- பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
- ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி
- இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
- வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு
- மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
- தேங்குபர மானந்த வெள்ள மேசச்
- சிதானந்த அருட்சிவமே தேவே தேவே.
- எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
- தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
- பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
- பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
- கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்
- கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
- விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
- வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- தோன்றுபர சாக்கிரமும் கண்டோம் அந்தச்
- சொப்பனமும் கண்டோம்மேல் சுழுத்தி கண்டோம்
- ஆன்றபர துரியநிலை கண்டோம் அப்பால்
- அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்
- ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்
- இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று
- சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற
- தன்மயமே சின்மயமே சகசத் தேவே.
- பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்
- பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
- எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல
- எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
- தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்
- சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்
- தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்
- தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே.
- மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல
- வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
- இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
- கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
- கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ
- காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
- பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற
- பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே.
- அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
- அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
- கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
- கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
- திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
- திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
- பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
- பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
- மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
- பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ
- பேயேறி நலிகின்ற பேதை யானேன்
- வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்
- மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
- ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்
- உடையானே இதுதகுமோ உணர்கி லேனே.
- உய்குவித்து143 மெய்யடியார் தம்மை எல்லாம்
- உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
- மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து
- வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
- கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்
- கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ
- செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே.
- கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும்
- குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத்
- தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்
- தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து
- ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன்
- உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே
- தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும்
- தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே.
- வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
- மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
- அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
- கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
- இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
- இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
- ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
- உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே
- தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
- தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
- வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
- விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
- செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
- செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
- இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
- இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.
- கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்
- கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
- உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்
- ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
- மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ
- மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
- வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே
- மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே.
- அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே
- அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
- வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து
- மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
- துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்
- துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
- இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ
- என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே.
- புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு
- பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
- உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை
- உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
- மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும்
- வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான்
- கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும்
- கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய்மதி மேவுசடைக்
- கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை யாய்அருட் கண்ணுடையாய்
- பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருட்
- பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே.
- விடையுடை யாய்மறை மேலுடை யாய்நதி மேவியசெஞ்
- சடையுடை யாய்கொன்றைத் தாருடை யாய்கரம் தாங்குமழுப்
- படையுடை யாய்அருட் பண்புடை யாய்பெண் பரவையின்பால்
- நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குகவே.
- கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
- தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
- வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
- ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.
- தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
- தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
- நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
- வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
- மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
- பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
- தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
- நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே.
- கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
- ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
- வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
- வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே.
- சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
- போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
- வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
- காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே.
- அடுத்தார் தமைஎன்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப்பிச்சை
- எடுத்தா யினும்இடு வார்கள்என் பார்அதற் கேற்கச்சொற்பூத்
- தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி லேபிச்சைச் சோறெடுத்துக்
- கொடுத்தாய்நின் பேரருள் என்சொல்லு கேன்எண் குணக்குன்றமே.
- நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயந்திட்டநீ
- குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத்
- திடும்பாட்டை நீக்கிலை என்னினுந் துன்பத் திழுக்குற்றுநான்
- படும்பாட்டை யாயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே.
- சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
- வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
- பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
- பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே.
- நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
- தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
- நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
- சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.
- நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்
- திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்
- விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்
- இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே.
- சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்
- பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்
- கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே
- மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே.
- சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
- கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
- அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
- நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.
- வருஞ்செல்லுள்148 நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள்
- பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே
- தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால்
- அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே.
- பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
- ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
- மாழையைப்150 போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
- வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே.
- எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
- முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
- வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
- உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே.
- கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்
- தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்
- வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்
- ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.
- விடையிலை யோஅதன் மேலேறி என்முன் விரைந்துவரப்
- படையிலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதங்கொளருட்
- கொடையிலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய்
- புடையிலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே.
- நறையுள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நற்சடைமேல்
- பிறையுள தேகங்கைப் பெண்ணுள தேபிறங் குங்கழுத்தில்
- கறையுள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன்
- குறையுள தேஎன் றரற்றவும் சற்றுங் குறித்திலதே.
- பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
- கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
- மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
- குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே.
- அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
- தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
- பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
- இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
- அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்
- கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின்
- துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
- தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே.
- படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே
- மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால்
- அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ
- பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே.
- பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
- ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ
- வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை
- அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே.
- சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால்
- மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற்
- கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப்
- பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே.
- வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின்
- பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
- துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம்
- என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே.
- கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
- துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
- பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
- குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே.
- விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி
- திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான்
- துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த
- பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே.
- பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல்
- சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள்
- அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ
- கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே.
- வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
- கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல்
- தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப்
- பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே.
- மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
- கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
- மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
- நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.
- வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
- மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
- காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
- பாணிக்குமோ154 தரும் பாணி155 வந் தேற்றவர் பான்மைகண்டே.
- மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள்
- இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக்
- குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என்
- முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே.
- நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
- கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
- சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
- ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே.
- காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
- சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
- தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
- சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.
- எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை
- மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண்
- விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன்
- வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே.
- ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு
- கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க
- நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல்
- ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே.
- கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும்
- பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால்
- புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால்
- ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே.
- காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்
- நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்
- பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்
- ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.
- வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
- மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
- ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
- காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
- மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட
- நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா
- போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ
- ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே.
- பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
- திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்
- விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்
- கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே.
- மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
- காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
- கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
- பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.
- என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென்
- சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
- தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க
- நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே.
- சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின்
- பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே
- நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
- கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும்
- ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட
- நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
- ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே.
- கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற
- ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச்
- சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர்
- வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
- ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
- உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுழல்பவர்மேல்
- தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே.
- எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
- உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
- தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
- வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே.
- நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
- குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
- பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
- உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.
- ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
- பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
- மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
- திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே.
- வேல்கொண்ட கையுமுந் நு‘ல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற்
- கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை
- மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு
- மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே.
- விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
- கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
- தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
- மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே.
- பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற
- திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக்
- கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன்
- மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே.
- மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக்
- கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ
- பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள
- மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே.
- தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
- அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ
- உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
- சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.
- சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த
- நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே
- கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப்
- பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே.
- சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
- மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய
- மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
- பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே.
- இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக்
- கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும்
- புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும்
- துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே.
- நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
- புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
- கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
- முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
- விடநாகப் பூணணி மேலோய்என் நெஞ்சம் விரிதல்விட்டென்
- உடனாக மெய்அன்பு ளூற்றாக நின்னரு ளுற்றிடுதற்
- கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச் செய்குவ திங்குனக்கே
- கடனாக நிற்பது கண்டேன்பின் துன்பொன்றுங் கண்டிலனே.
- சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
- தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி
- தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக்
- கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே.
- எல்லா முடைய இறையவ னேநினை ஏத்துகின்ற
- நல்லார் தமக்கொரு நாளேனும் பூசை நயந்தியற்றிச்
- சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ் வண்ணம் துயர்வதற்கென்
- கல்லாமை ஒன்றுமற் றில்லாமை ஒன்றிரு காரணமே.
- ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
- நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
- குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
- மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
- மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால்
- மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர்
- கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என்
- கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே.
- மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
- பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
- கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
- பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே.
- ஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந்
- நாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி
- மேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த
- ஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே.
- தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
- சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
- பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
- ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
- வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால்
- போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள்
- வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச்
- சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே.
- கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
- பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
- இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
- சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
- சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம்
- வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண்
- நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள்
- ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே.
- பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
- திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர்
- கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா
- நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே.
- என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
- என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
- என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
- என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.
- கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
- மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
- வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
- தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
- மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
- துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
- கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
- பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே.
- போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
- போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
- போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
- போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
- இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
- கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
- கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
- வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே
- அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே
- அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே
- அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே.
- நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
- தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
- அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
- விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.
- மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே
- கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற
- தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம்
- நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே.
- கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு
- மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ்
- சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த
- பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே.
- மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
- இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
- செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
- ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.
- 145. ஓர்பிள்ளைப்பேர் - மதலை - சரக்கொன்றை. ச. மூ. க.
- 146. மயங்குகின்றேன், மயங்கின்றேன் என விகாரமாயிற்று. தொ. வே.
- 147. கொண்டிடேல் என முன்னிலை எதிர்மறை ஏவன்முற்றாகக் கொள்க. தொ. வே.
- 148. செல் - மேகம். தொ. வே.
- 149. உரும் - இடி. தொ. வே.
- 150. மாழை - பொன். தொ. வே.
- 151. பொன்கின்று பூத்த சடை - கொன்றை பூத்த சடை. தொ. வே.
- 152. கல் - மலை. தொ. வே.
- 153. வேணி - நதி. தொ. வே.
- 154. பாணிக்குமோ - தாமதிக்குமோ. ச. மு. க.
- 155. பாணி - கை, நீர். ச. மு. க.
- 156. கடா, தாம், பாயினும் - பாய்ந்தாலும் ; தாம்பு - கயிறு. ச. மு. க.
- 157. சொல் - நெல், தொ. வே.
- 158. கனல் - அக்கினி. இனன் - சூரியன். இந்து - சந்திரன். ச. மு. க.
- கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
- உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
- அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
- மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
- அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
- குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
- பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
- மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
- மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
- கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
- தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
- வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
- பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
- அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும்
- தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
- மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
- திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
- தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
- பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
- மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
- உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
- பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
- அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
- மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
- விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
- பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
- மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
- சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
- அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
- வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
- சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
- தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
- வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
- நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
- பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
- வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
- நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
- போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
- பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
- மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
- கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய்
- நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
- தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
- மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
- சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின்
- வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
- தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
- மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.
- தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
- வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
- எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
- மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
- பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
- முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
- கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
- மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
- செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
- கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
- மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
- தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய்
- நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
- மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
- அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய்
- தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
- மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
- தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
- பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
- மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
- காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி
- யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
- நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
- மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
- ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
- ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே
- மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
- விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
- நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
- மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
- தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
- தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
- மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
- ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
- சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
- நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
- வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
- சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
- கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
- தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண்
- வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
- நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
- பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும்
- தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத
- வாயேர் சவுந்தர35 மானே வடிவுடை மாணிக்கமே.
- முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
- ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
- எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
- மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
- மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
- பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
- பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
- மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
- நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
- தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
- வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
- சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
- துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
- மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
- சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
- ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
- வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
- வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
- புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
- கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
- தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
- வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
- துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
- என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
- மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
- றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
- காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
- வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
- வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
- லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
- யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
- மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- முத்தேவர் விண்ணன்37 முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
- எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
- செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
- மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள்
- கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
- ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
- மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
- பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
- காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
- மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
- சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
- போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
- யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
- வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
- போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
- வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
- ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
- மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
- ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
- பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
- தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
- மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
- பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம்
- கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
- வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
- அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
- முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
- கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால்
- வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
- ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
- ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
- காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
- வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
- எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
- கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
- மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
- வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
- ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
- எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
- மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
- விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
- வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
- குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன்
- மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
- பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
- துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை
- இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
- மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
- மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
- தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
- வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
- எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
- இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
- மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
- எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
- தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
- செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே
- வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
- தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்
- தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த
- இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம்
- மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
- கயிலேந்39 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
- குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த
- மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
- செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான்
- மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர்
- கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
- வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
- தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங்
- கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
- இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
- வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
- சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
- பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
- மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
- மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
- எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
- செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
- வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
- வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
- ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
- சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
- தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
- வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ
- அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம்
- முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
- வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே
- குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன்
- பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ
- மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
- குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத்
- திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த
- மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்
- பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
- புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
- மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
- தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
- வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன்
- ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
- மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
- திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
- விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
- வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
- என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
- நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
- பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
- மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
- இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
- கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
- வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
- பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
- சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
- மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
- சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
- அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
- நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
- வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
- செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
- கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
- வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
- நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
- எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட
- வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.
- கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த
- பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே
- சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
- மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
- தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
- சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
- மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
- வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
- பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
- பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
- வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
- மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
- நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
- கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
- வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
- ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே
- கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன்
- தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
- மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
- எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
- சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
- சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
- மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
- கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
- தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
- வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
- சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
- நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
- வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ
- தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர்
- தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே
- வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
- நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ
- வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
- மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய்
- கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
- அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
- மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
- பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
- சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
- நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
- மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
- பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
- காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர்
- மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
- மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
- காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
- வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
- களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
- உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
- குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
- வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
- தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற்
- காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும்
- வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
- திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
- வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம்
- கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
- மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.
- உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
- நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
- படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
- மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
- பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
- சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே
- மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
- என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
- முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
- ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
- நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
- நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ
- தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
- மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
- முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
- இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
- மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
- கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
- தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
- ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
- மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
- ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல்
- ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
- சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
- மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
- துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
- கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
- வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
- ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
- சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
- மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
- என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே
- மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
- மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
- பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
- கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
- மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
- மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
- நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
- தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
- ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
- வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
- வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
- வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
- வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
- பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
- வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
- காக்கக் கடனுனக்கே காண்.
- திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
- மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
- னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
- லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
- னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
- செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
- வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
- நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
- வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
- மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
- வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
- கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
- யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன்
- மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார்
- கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு
- மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச்
- சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
- னோர்வா ழடியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
- மேர்வா ழொருகை பார்க்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
- விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
- வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
- ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே
- னிதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதா
- னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
- யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
- யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு
- மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார்
- மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
- யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
- வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
- தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் றோகாய் நாமே தொண்டனென
- வெண்டங் குறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றே
- னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா மிசைத்தே மென்றா ரெட்டாக
- வுட்டா வுறுமவ் வெழுத்தறிய வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க்
- கிட்டார் நாம மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றே
- னீது நமக்குத் தெரிந்ததென்றா ரிறையா மோவிங் கிதுவென்றே
- னோது மடியார் மனக்கங்கு லோட்டு நாமே யுணரன்றி
- யேது மிறையன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேரா ரொற்றி யீரும்பைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
- மேரார் பெயரின் முன்பினிரண் டிரண்டா மெழுத்தா ரென்றாரென்
- னேரா யுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென்
- றேரா யுரைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே
- யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே
- யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் செவ்வ னுரைத்தா லிருவாவென்
- றுய்ய வுரைப்பே மென்றார்நும் முரையென் னுரையென் றேனிங்கே
- யெய்யுன் னுரையை யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை
- மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே
- னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைவா னினைவீரேற்
- பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யாங்கதன்மே
- லன்மேற் குழலாய் சேயதன்மே லலவ னதன்மேன் ஞாயிறஃ
- தின்மே லொன்றின் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நாம மியாதென்றேன்
- மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் வந்த விளைய நாமமென்றார்
- செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
- கியலா ரயலா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே
- யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
- ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
- சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
- யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய
- பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே
- னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
- ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அளிக்குங் குணத்தீர் திருவொற்றி யழக ரேநீ ரணிவேணி
- வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளியா விளம்பத் திரமென்றேன்
- விளிக்கு மிளம்பத் திரமுமுடி மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
- யெளிக்கொண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
- நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார்
- தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா
- மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர்
- பொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்
- குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின்
- வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின்
- னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
- யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
- விச்சை யடுக்கும் படிநம்பான் மேவினோர்க்கிவ் வகில நடைப்
- பிச்சை யெடுப்பே மலதுன்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே
- யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கூம்பா வொற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
- னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
- பாம்பா வதுவே கொடும்பாம்பெம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
- றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன்
- வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப்
- பாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே
- மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங்
- குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ
- லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
- கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பங்கே ருகப்பூம் பணையொற்றிப் பதியீர் நடுவம் பரமென்னு
- மங்கே யாட்டுக் காலெடுத்தீ ரழகென் றேனவ் வம்பரமே
- லிங்கே யாட்டுத் தோலெடுத்தா யாமொன் றிரண்டு நீயென்றா
- லெங்கே நின்சொல் லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
- கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
- மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
- லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாங்கும் விடைமே லழகீரென் றன்னைக் கலந்துந் திருவொற்றி
- யோங்குந் தளியி லொளித்தீர்நீ ரொளிப்பில் வல்ல ராமென்றேன்
- வாங்கு நுதலாய் நீயுமெனை மருவிக் கலந்து மலர்த்தளியி
- லீங்கின் றொளித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பதங்கூ றொற்றிப் பதியீர்நீர் பசுவி லேறும் பரிசதுதான்
- விதங்கூ றறத்தின் விதிதானோ விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே
- னிதங்கூ றிடுநற் பசுங் கன்றை நீயுமேறி யிடுகின்றா
- யிதங்கூ றிடுக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
- முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
- குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
- விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊற்றார் சடையீ ரொற்றியுளீ ரூரூ ரிரக்கத் துணிவுற்றீர்
- நீற்றால் விளங்குந் திருமேனி நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன்
- சோற்றா லிளைத்தே மன்றுமது சொல்லா லிளைத்தே மின்றினிநா
- மேற்றா லிகழ்வே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் புரிந்த தெதுவெம் புடையென்றே
- னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் றாரென் னென்றே னியம்புதுமேன்
- மின்னே நினது நடைப்பகையா மிருகம் பறவை தமைக்குறிக்கு
- மென்னே யுரைப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அடையார் புரஞ்செற் றம்பலத்தே யாடு மழகீ ரெண்பதிற்றுக்
- கடையா முடலின் றலைகொண்டீர் கரமொன் றினிலற் புதமென்றே
- னுடையாத் தலைமேற் றலையாக வுன்கை யீரைஞ் ஞாறுகொண்ட
- திடையா வளைக்கே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
- மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
- தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
- யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
- கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
- ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
- பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
- அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
- துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
- ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
- நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
- ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
- கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
- அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
- விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
- அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.
- நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
- தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
- ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
- உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
- அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
- இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
- அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
- கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
- அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
- கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
- அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
- நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
- காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
- கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
- குழக வோஎனக் கூவிநம் துயராம்
- ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
- கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
- இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
- பரவு சண்முக சிவசிவ சிவஓம்
- பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
- அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
- இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
- சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
- வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
- வரசு யம்புசங் கரசம்பு எனவே
- ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
- இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
- பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
- ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
- ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
- ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
- காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
- இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
- எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
- இறைவ சங்கர அரகர எனவே
- அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
- உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
- குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
- நிறைந்த சண்முக குருநம சிவஓம்
- நிமல சிற்பர அரகர எனவே
- அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
- வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
- பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
- பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
- ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
- அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
- நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
- உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
- கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
- கடந்த மேலவர் கலந்திடும் உறவை
- எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
- யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
- நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
- சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
- உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
- உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
- மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
- விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
- நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
- பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
- உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
- உயிரை மேவிய உடல்மறந் தாலும்
- கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
- கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
- நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
- மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
- புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
- பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
- தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
- சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
- நன்மை என்பன யாவையும் அளிக்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- இன்னும் பற்பல நாளிருந் தாலும்
- இக்க ணந்தனி லேஇறந் தாலும்
- துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
- சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
- என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
- எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
- நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
- நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
- வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
- வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான்
- கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
- கொடிய காமனைக் கொளுவிய நுதல்தீ
- நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
- மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
- சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
- செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
- ஊர னாருடன் சேரனார் துரங்கம்
- ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
- நார மார்மதிச் சடையவன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
- திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
- உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
- கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.
- பைச்சூர் அரவப் படநடத் தான்அயன் பற்பலநாள்
- எய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை யாப்பதம் ஏய்ந்துமண்மேல்
- வைச்சூரன் வன்தொண்டன் சுந்தரன் என்னுநம் வள்ளலுக்குக்
- கச்சூரில் சோறிரந் தூட்டின ரால்எம் கடவுளரே.
- எல்லாம் செயவல்ல சித்தரின் மேவி எழில்மதுரை
- வல்லாரின் வல்லவர் என்றறி யாமுடி மன்னன்முன்னே
- பல்லா யிரஅண்ட மும்பயம் எய்தப் பராக்கிரமித்துக்
- கல்லானை தின்னக் கரும்பளித் தார்எம் கடவுளரே.
- மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
- மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
- ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
- காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.
- போற்றி நீறிடாப் புலையரைக் கண்டால்
- போக போகநீர் புலமிழந் தவமே
- நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
- நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க
- சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்
- தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
- காற்றி நின்றநம் கண்நுதற் கரும்பைக்
- கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
- நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
- நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
- கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
- கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
- மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
- மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
- அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
- அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
- ஒற்றி ஊரனைப்
- பற்றி நெஞ்சமே
- நிற்றி நீஅருள்
- பெற்றி சேரவே.-
- சேர நெஞ்சமே
- தூரம் அன்றுகாண்
- வாரம் வைத்தியேல்
- சாரும் முத்தியே.
- முத்தி வேண்டுமேல்
- பத்தி வேண்டுமால்
- சத்தி யம்இது
- புத்தி நெஞ்சமே.
- நெஞ்ச மேஇது
- வஞ்ச மேஅல
- பிஞ்ச கன்பதம்
- தஞ்சம் என்பதே.
- அல்லல் என்பதேன்
- தொல்லை நெஞ்சமே
- மல்லல் ஒற்றியூர்
- எல்லை சென்றுமே.-
- சென்று வாழ்த்துதி
- நன்று நெஞ்சமே
- என்றும் நல்வளம்
- ஒன்றும் ஒற்றியே.-
- அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
- ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
- கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
- கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா
- பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
- புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
- செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும்
- நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த
- நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய்
- மலம்இ லாதநல் வழியிடை நடப்போர்
- மனத்துள் மேவிய மாமணிச் சுடரே
- சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல்
- புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச்
- சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும்
- சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய்
- கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள்
- குமரன் தந்தையே கொடியதீ வினையைத்
- தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும்
- மூடன் என்னநின் மொய்கழல் பதமேத்
- துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ
- நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே
- நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே
- சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல்
- நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
- பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன்
- புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ
- கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக்
- கமலம் மேவிய விமலவித் தகனே
- செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
- துட்டனேன் தூய்மைஒன் றில்லா
- எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
- பரமனேஎம் பசு பதியே
- அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
- ஐயனே ஒற்றியூர் அரைசே.
- தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
- தோகையர் மயக்கிடை அழுந்தி
- ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
- மாமணிக் குன்றமே மருந்தே
- ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
- யூர்வரும் என்னுடை உயிரே.
- கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
- கடையனேன் விடையமே உடையேன்
- இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
- தெய்வமே தெய்வநா யகமே
- உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
- ஒற்றியூர் வாழும்என் உவப்பே.
- கருதென அடியார் காட்டியும் தேறாக்
- கன்மனக் குரங்கனேன் உதவா
- எருதென நின்றேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- மருதிடை நின்ற மாணிக்க மணியே
- வன்பவம் தீர்த்திடும் மருந்தே
- ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
- ஒற்றியூர் மேவும்என் உறவே.
- வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
- வஞ்சக மனத்தினேன் பொல்லா
- ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
- புனிதமே புதுமணப் பூவே
- பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
- பாதுகாத் தளிப்பதுன் பரமே.
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
- பத்தர்கட் கருள்செயும் பரமே
- மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
- பெருமநின் அருள்பெற லாம்என்
- றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
- புண்ணியம் விளைகின்ற புலமே
- மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
- பூங்கழற் கன்புபூண் டவன்காண்
- எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- தாயின் மேவிய தற்பர மேமுல்லை
- வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
- கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
- தேயின் மேவி இருந்தனன் என்னையே.
- வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
- குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
- உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
- களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.
- மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
- விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
- குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
- தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.
- சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
- ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
- தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
- ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
- சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
- பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
- மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
- கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.
- வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
- அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
- கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
- நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
- தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
- கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
- வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
- ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.
- சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
- எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
- தந்தை யேவலி தாயத்த லைவநீ
- கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
- பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
- மன்னும் மாமணி யேவல்லி கேசனே
- உன்ன நீஇங்கு டுத்திய கந்தையைத்
- துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
- துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
- மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
- துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
- என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
- மாசில் சோதிம ணிவிளக் கேமறை
- வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
- தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
- தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
- இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
- கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
- நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
- கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
- தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
- மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
- சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே.
- உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
- வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
- மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
- கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
- விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
- தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே.
- அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
- வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
- சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.
- துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட
- விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே
- இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே.
- இன்றுவந் தெனைநீ அடிமைகொள் ளாயேல் எவ்வுல கத்தரும் தூற்ற
- நன்றுநின் றன்மேல் பழிவரும் என்மேல் பழியிலை நவின்றனன் ஐயா
- அன்றுவந் தொருசேய்க் கருள்புரிந் தாண்ட அண்ணலே ஒற்றியூர் அரசே
- நின்றுசிற் சபைக்குள் நடம்செயும் கருணா நிலயமே நின்மலச் சுடரே.
- சுடர்கொளும் மணிப்பூண் முலைமட வியர்தம் தொடக்கினில் பட்டுழன் றோயா
- இடர்கொளும் எனைநீ ஆட்கொளும் நாள்தான் எந்தநாள் அந்தநாள் உரையாய்
- படர்கொளும் வானோர் அமுதுண நஞ்சைப் பரிந்துண்ட கருணைஅம் பரமே
- குடர்கொளும் சூலப் படைஉடை யவனே கோதையோர் கூறுடையவனே.
- உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா
- மறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான் வருந்துவ தன்றிஎன் செய்கேன்
- நிறவனே வெள்ளை நீறணி பவனே நெற்றிமேல் கண்ணுடை யவனே
- அறவனே தில்லை அம்பலத் தாடும் அப்பனே ஒற்றியூர்க் கரைசே.
- என்னைநின் னவனாக் கொண்டுநின் கருணை என்னும்நன் னீரினால் ஆட்டி
- அன்னைஅப் பனுமாய்ப் பரிவுகொண் டாண்ட அண்ணலே நண்ணரும் பொருளே
- உன்னருந் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும்என் உறவே
- நன்னர்செய் கின்றோய் என்செய்வேன் இதற்கு நன்குகைம் மாறுநா யேனே.
- தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
- பவள மேனிப் படம்பக்க நாதரே
- கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
- இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
- சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
- பால மேவும் படம்பக்க நாதரே
- ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
- ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.
- அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
- படிவ மாகும்ப டம்பக்க நாதரே
- நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
- மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.
- மதிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப்
- பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே
- விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர்
- துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே.
- மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
- தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
- சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
- என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
- போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
- ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
- பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
- ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
- நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
- மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
- இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
- எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
- பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
- மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
- துக்க மியாவையும் தூர ஓடுமே.
- ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
- நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்
- பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
- நாடு நாடிடில் நாடு நம்மதே.
- நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால்
- அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
- பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார்
- தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே.
- தம்ப லம்பெறும் தைய லார்கணால்
- வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
- அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
- செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.
- செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
- உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
- மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
- பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
- வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
- ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
- பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
- யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே.
- இல்லை உண்டென எய்தி ஐயுறும்
- கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
- ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
- நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.
- மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
- ஓலை காட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
- பாலை சேர்படம் பக்க நாதர்தம்
- காலை நாடிநற் கதியின் நிற்பையே.
- நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
- அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
- சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
- பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
- போற்றி ஒற்றியூர்ப் புண்ணி யன்திரு
- நீற்றி னான்தனை நினைந்து நிற்பையேல்
- தோற்ற ரும்பரஞ் சோதி நல்அருள்
- ஊற்றெ ழும்கடல் ஒக்க நெஞ்சமே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கண்ண னோடயன் காண்பரும் சுடரே
- கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
- எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
- இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
- அண்ண லேதிரு ஆலங்காட் டுறையும்
- அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
- திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
- மயிலின் மேல்வரு மகவுடை யவனே
- ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
- அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
- காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
- கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
- சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
- நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
- வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
- வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
- கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
- குற்ற முங்குண மாக்குறிப் பவனே
- தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
- ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
- அடையாளம் என்னஒளிர் வெண்ற் றுக்கும்
- அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
- நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்
- இடையாத கொடுந்தீயால் கடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
- கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்
- பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்
- பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே
- நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ
- எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
- ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
- மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
- வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
- வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
- வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
- இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்
- சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்
- விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி
- வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை
- உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி
- உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்
- எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- காரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற
- ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல்
- நீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான்
- பேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
- உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
- வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே
- மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க்
- கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
- கோயில் மேவிநம் குடிமுழு தாளத்
- தாள்த லந்தரும் நமதருள் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- ஏங்கி நோகின்ற தெற்றினுக் கோநீ
- எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு
- வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல்
- மகிழ்ந்து நெஞ்சமே வருதிஎன் னுடனே
- ஓங்கி வாழ்ஒற்றி யூர்இடை அரவும்
- ஒளிகொள் திங்களும் கங்கையும் சடைமேல்
- தாங்கி வாழும்நம் தாணுவாம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே
- காம ஐம்புலக் கள்வரை வீட்டி
- வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை
- மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே
- உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்
- குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்
- தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை
- தாயி லார்எனத் தயங்குகின் றாயே
- மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்
- உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்
- தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- விடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ
- வெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ
- மடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல
- வாழ்வு வந்தது வருதிஎன் னுடனே
- இடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா
- ரியார்கண் டாய்ஒன்றும் எண்ணலை கமலத்
- தடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
- போக்கி நின்றனை போனது போக
- வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
- வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
- திருந்தி நின்றநம் மூவர்தம் பதிகச்
- செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
- தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா
- நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
- வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்
- கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்
- தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
- உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
- மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
- அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
- தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- மோக மாதியால் வெல்லும்ஐம் புலனாம்
- மூட வேடரை முதலற எறிந்து
- வாகை ஈகுவன் வருதிஎன் னுடனே
- வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
- போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
- போற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
- சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- பசிஎ டுக்குமுன் அமுதுசே கரிப்பார்
- பாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ
- வசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா
- மதியில் நெஞ்சமே வருதிஎன் னுடனே
- நிசிஎ டுக்கும்நல் சங்கவை ஈன்ற
- நித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச்
- சசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்
- எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்
- கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது
- குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்
- பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்
- பேய ருண்மனை நாயென உழைத்தேன்
- செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
- அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
- வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
- வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
- வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
- வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
- செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- ஒற்றி மேவிய உத்தம னேமணித்
- தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
- நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
- பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
- மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
- ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றியப் பாஉன்தன்
- ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
- கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
- உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
- செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
- பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
- எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
- திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத்
- திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப்
- பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு
- வருந்த என்தனை வைத்தத ழகதோ.
- வைத்த நின்அருள் வாழிய வாழிய
- மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
- உய்த்த நல்அருள் ஒற்றியப் பாஎனைப்
- பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
- போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
- சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
- தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
- ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.
- வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
- செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
- கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
- எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே
- நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு
- ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து
- மற்றிசைப்ப தெல்லாம் வரும்.
- கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள்
- மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும்
- என்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே
- என்அருமை அப்பாவே என்று.
- பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
- எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து
- விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர்
- புடையானை நெஞ்சமே போற்று.
- தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன்
- விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் -பரிந்தநெற்றிக்
- கண்ணானை மாலயனும் காணப் படாதானை
- எண்ணாரை எண்ணாதே என்று.
- என்றென் றழுதாய் இலையேஎன் நெஞ்சமே
- ஒன்றென்று நின்ற உயர்வுடையான் - நன்றென்ற
- செம்மைத் தொழும்பர்தொழும் சீர்ஒற்றி யூர்அண்ணல்
- நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்.
- பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
- அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
- தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
- மேலானை நெஞ்சே விரும்பு.
- வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர்
- தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை
- ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால்
- சென்றுதொழு கண்டாய் தினம்.
- கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
- ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
- உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
- நள்ளவனை நெஞ்சமே நாடு.
- நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர்
- கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
- சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
- உத்தமனை நெஞ்சமே ஓது.
- ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
- தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி
- ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
- பாதம் பிடிக்கும் பயன்.
- தவராயி னும்தேவர் தாமாயி னும்மற்
- றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத
- நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ்
- எந்தை அடிவணங்கா ரேல்.
- வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
- நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்
- கொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்
- செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே.
- தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்
- அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்
- நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்
- சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்
- கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே
- பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ
- செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- அலைஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்தம்
- நிலைஓர் சிறிதும் அறியேன் எனக்குன் நிமலஅருள்
- மலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்குங் கொலோபொன் மலைஎன்கின்ற
- சிலையோய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்
- நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே
- வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்
- தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே.
- களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா
- ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்
- தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்
- தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
- மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
- நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
- சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.
- பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
- வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
- மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
- சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.
- இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
- தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
- வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
- தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.
- வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
- வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
- கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
- கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
- உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
- உலகுடை யானைஎன் உற்றது ணையை
- எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
- கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
- கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
- கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
- பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
- பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
- திணிகொள் சங்கர சிவசிவ என்று
- சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
- செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
- திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
- பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
- பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
- வைத போதினும் வாழ்த்தென நினைத்து
- மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
- கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
- கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ
- ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான்
- முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை
- முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண்
- என்னை நீஎனக் குறுதுணை அந்தோ
- என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில்
- மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால்
- மற்று நாம்பிற வாவகை வருமே.
- பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
- பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
- இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
- இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
- மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
- மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
- துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
- சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
- நன்று செய்வதற் குடன்படு வாயேல்
- நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
- இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
- இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
- ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
- உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
- அன்று முன்னரே கடந்தனர் அன்றி
- அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
- அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
- அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
- ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
- உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
- முன்றில் காத்தனை அவ்வள வேனும்
- முயன்று காத்திலை முன்னவன் கோயில்
- துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
- தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
- தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
- சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
- காய மாயமாம் கான்செறிந் துலவும்
- கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
- பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
- பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
- ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
- காய சோதிகண் டமருதல் அணியே.
- சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
- தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
- போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
- பூத நாதர்நற் பூரணா னந்தர்
- தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
- தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
- வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
- மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
- விதியும் மாலுமுன் வேறுரு எடுத்து
- மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
- நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
- நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
- பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
- பணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
- வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
- குணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்
- உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
- ஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்
- களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
- கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
- வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
- திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
- ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
- ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
- மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
- வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
- நன்று வேண்டிய யாவையும் வாங்கி
- நல்கு வேன்எனை நம்புதி மிகவே.
- தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
- சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
- யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
- யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
- மாது வேண்டிய நடனநா யகனார்
- வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
- ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
- ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.
- இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
- என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
- பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
- பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
- நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
- குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
- கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.
- கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
- கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
- அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனைநீ
- அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
- தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
- தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
- மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
- வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே.
- 23. ஈண்டு மேற்கொண்ட குறட்பா.இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054 (106 - இரவு - 4)
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
- கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
- மாறு மாயையால் மயங்கிய மனனே
- வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
- ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
- ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- விச்சை வேண்டினை வினையுடை மனனே
- மேலை நாள்பட்ட வேதனை அறியாய்
- துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
- சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ
- பிச்சை எம்பெரு மான்என நினையேல்
- பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால்
- இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
- மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
- பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
- பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
- ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
- இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
- ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
- கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற
- பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
- பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
- சாவ நீயில தேல்எனை விடுக
- சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
- ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத் தாரனைச் சராசர சடத்துள்
- உடையனை ஒற்றி ஊரனை மூவர் உச்சனை உள்கிநின் றேத்தாக்
- கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக
- நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- கஞ்சனைச் சிரங்கொய் கரத்தனை மூன்று கண்ணனைக் கண்ணனைக் காத்த
- தஞ்சனை ஒற்றித் தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்துநின் றேத்தா
- வஞ்சரைக் கடைய மடையரைக் காம மனத்தரைச் சினத்தரை வலிய
- நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- தாமனை மழுமான் தரித்தசெங் கரனைத் தகையனைச் சங்கரன் தன்னைச்
- சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்துநின் றேத்தா
- ஊமரைநீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்
- நாமரை நரக நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத்
- தேசனைத் தலைமைத் தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்துநின் றேத்தா
- நீசரை நாண்இல் நெட்டரை நரக நேயரைத் தீயரைத் தரும
- நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
- சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
- மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
- நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- இலனே மற்றோர் துணைசிறிதும் என்னே காமம் எனும்கடலில்
- மலனேன் வருந்தக் கண்டிருத்தல் மணியே அருளின் மரபன்றே
- அலனே அயலான் அடியேன்நான் ஐயாஒற்றி யப்பாநல்
- நலனேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினனே.
- துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை
- இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே
- அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
- பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.
- பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல்
- இரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன்
- எரிந்திட எயில்மூன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே
- விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.
- இன்றிருந் தவரை நா€ளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
- என்றிருந் தவத்தோர் அரற்றுகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
- சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
- மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- நீரின்மேல் எழுதும் எழுத்தினும் வி€ரைந்து நி€லைபடா உடம்பி€னை ஓம்பிப்
- பாரின்மேல் அ€லையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
- காரின்மேல் வரல்போல் கடாமி€சை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
- வாரின்மேல் வளரும் திருமு€லை ம€லையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே.
- மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே €மைவடித் தெடுக்குநர் போல
- நொடிக்குளே ம€றையும் உடம்பி€னை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
- படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
- வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- தக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்
- துக்கம் அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
- மிக்க அடியார் என்சொல்லார் விண்ணோர் மண்ணோர் என்புகலார்
- செக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே.
- கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை
- விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய
- பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்
- துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே.
- வலமே உடையார் நின்கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
- மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும் உவர்ச்
- சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
- நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ.
- நாளை வருவ தறியேன்நான் நஞ்சம் அனைய நங்கையர்தம்
- ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
- கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
- வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.
- முத்தி முதலே முக்கணுடை மூரிக் கரும்பே நின்பதத்தில்
- பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
- எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
- தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.
- மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
- தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
- முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
- இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே.
- எற்றுக் கடியர் நின்றதுநின் இணைத்தாள் மலரை ஏத்தஅன்றோ
- மற்றிக் கொடியேன் அஃதின்றி மடவார் இடைவாய் மணிப்பாம்பின்
- புற்றுக் குழன்றேன் என்னேஎன் புந்தி எவர்க்குப் புகல்வேனே
- கற்றுத் தெளிந்தோர் புகழ் ஒற்றிக் கண்ணார்ந் தோங்கும் கற்பகமே.
- பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
- கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
- தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
- துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
- செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
- எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
- உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றியப்பா உன்வடிவம்
- இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ.
- பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
- கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
- ஒண்மணியே தேனேஎன் றொற்றியப்பா உன்தனைநான்
- பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.
- தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
- சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
- உந்தைஎன்போர் இல்லாத ஒற்றியப்பா உன்அடிக்கீழ்
- முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.
- பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்றும் பேசாத
- வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலானேன்
- உய்என் றருள்ஈயும் ஒற்றியப்பா உன்னுடைய
- மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ.
- தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
- ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
- ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றியப்பா நின்அடிக்கீழ்
- நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ.
- பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
- மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
- உன்னாசை கொண்டேஎன் ஒற்றியப்பா நான்மகிழ்ந்துன்
- மின்னாரும் பொன்மேனி வெண்ற்றைப் பாரேனோ.
- பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
- வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
- ஓராதார்க் கெட்டாத ஒற்றியப்பா உன்னுடைய
- நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ.
- நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக்
- கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான்
- ஒன்றுமனத் துள்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
- வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ.
- கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
- வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
- ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா நீஉலகை
- ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ.
- மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
- பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
- உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
- தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.
- முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
- மூட னேன்தனை முன்வர வழைத்துப்
- பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
- பித்தர் என்றுமைப் பேசிட லாமே
- என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
- இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர்
- புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- வினையி னால்உடல் எடுத்தன னேனும்
- மேலை நாள்உமை விரும்பிய அடியேன்
- எனைஇன் னான்என அறிந்திலி ரோநீர்
- எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர்
- மனையி னால்வரும் துயர்கெட உமது
- மரபு வேண்டியே வந்துநிற் கின்றேன்
- புனையி னால்அமர்ந் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- நீல னேன்கொடும் பொய்யல துரையா
- நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
- சால ஆயினும் நின்கழல் அடிக்கே
- சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
- ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
- அகில கோடியும் அழிந்திடும் அன்றே
- சீல மேவிய ஒற்றியம் பரனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- கண்ணுன் மாமணி யேஅருட் கரும்பே
- கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே
- எண்ணுள் உட்படா இன்பமே என்றென்
- றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும்
- மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன்
- மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே
- திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன்
- நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண்
- சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ
- தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன்
- வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே
- மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண்
- செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- இரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ
- இகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன்
- பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன்
- பார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ
- கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய்
- காள கண்டனே கங்கைநா யகனே
- திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத்
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
- சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
- நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
- நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
- ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
- தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத்
- தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
- ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
- செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
- செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
- மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
- மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
- செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும்
- சீல மென்பதுன் திருமொழி அன்றே
- வறிய னேன்பிழை யாவையும் உனது
- மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ
- இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை
- ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும்
- செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- கந்த மும்மல ரும்என நின்றாய்
- கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
- சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- எந்த நல்வழி யால்உனை அடைவேன்
- யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
- புந்தி இன்பமே ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி
- அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த்
- தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஒல்லை இங்குவா என்றருள் புரியா
- தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ
- புல்லர் மேவிடா ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
- நாய்க ளுக்கெலாம் நாயர சானேன்
- சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
- இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே
- போல என்றுரை யாஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
- ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
- நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் நாஎழா துண்மையீ திதற்குச்
- சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
- கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே
- மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ்
- உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்தஉடம்புகொண் டுழல்வனோஎன்று
- நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் நான்செயும் வகைஎது நவிலே.
- வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
- தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
- திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
- பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
- பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
- பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
- மற்று நோக்கிய வல்வினை அதனால்
- வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
- அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
- அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
- உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
- கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
- கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
- கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
- அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
- ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
- ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
- கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்
- சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
- சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
- ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
- ஏட நீகடை என்றிடில் அவர்முன்
- ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
- வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
- கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
- காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
- எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
- தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
- உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
- விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
- மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
- வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
- தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
- சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
- உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- யாதும் உன்செய லாம்என அறிந்தும்
- ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
- தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
- தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
- கோது செய்மலக் கோட்டையைக் காவல்
- கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
- பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
- இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
- ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
- அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
- அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
- உந்த மட்டினால் தருதியோ உரையாய்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
- ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
- ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
- அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
- வான மேவிய அமரரும் அயனும்
- மாலும் என்முனம் வலியிலர் அன்றே
- ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
- அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
- எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
- எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
- களிய மாமயல் காடற எறிந்தாங்
- கார வேரினைக் களைந்துமெய்ப் போத
- ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன்
- நரகில் ஏகென நவிலினும் அமைவேன்
- ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன்
- அல்லல் ஆம்பவம் அடைஎனில் அடைவேன்
- தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர்
- தருதல் இல்எனச் சாற்றிடில் தரியேன்
- ஓகை நாட்டிய யோகியர் பரவும்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்துல குயிர்தொறும் ஒளித்த
- இறைவநின் திருத்தாட் கன்பிலாக் கொடியன் என்னினும் ஏழையேன் தனக்கு
- நிறைதரும் நினது திருவருள் அளிக்க நினைத்தலே நின்கடன் கண்டாய்
- கறைமணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.
- உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
- ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
- கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
- கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
- இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
- இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
- திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
- இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
- கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
- பிரமன் ஆதியர் பேசரும் திறனே
- தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த
- ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க்
- காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மாணு றக்களங் கறுத்தசெம் மணியே
- வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே
- சேணு றத்தரும் ஒற்றிநா யகமே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ
- யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில்
- காது கின்றதென் வஞ்சக நெஞ்சம்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- ஓது மாமறை உபநிட தத்தின்
- உச்சி மேவிய வச்சிர மணியே
- தீது நீக்கிய ஒற்றியந் தேனே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
- துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
- கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
- அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
- செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- இம்மை இன்பமே வீடெனக் கருதி
- ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே
- கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மும்மை யாகிய தேவர்தம் தேவே
- முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
- செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
- நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
- கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
- அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
- தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
- போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
- கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- விலையி லாஉயர் மாணிக்க மணியே
- வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
- சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச்
- சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான்
- கந்த வாதனை இயற்றுகின் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த
- இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே
- சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர்
- குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும்
- கடிய தாதலின் கசிந்தில தினிஇக்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அடிய னேன்பிழை உளத்திடை நினையேல்
- அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே
- செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப்
- பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும்
- இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல்
- இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர்
- செச்சை மேனியீர் திருவுளம் அறியேன்
- சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண்
- துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- குற்ற மேபல இயற்றினும் எனைநீர்
- கொடியன் என்பது குறிப்பல உமது
- பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப்
- பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண்
- உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால்
- உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண்
- நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப்
- பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ
- மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல்
- வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ
- உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை
- ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர்
- நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச்
- சமைவர் என்பது சற்றும்இன் றுலகில்
- எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில்
- இருத்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன்
- பந்த மேலிட என்பரி தாபம்
- பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர்
- நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
- மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது
- தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண்
- எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ.
- தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
- ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
- அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
- கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
- எனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ
- என்னை வஞ்சகர் யாவருங் கூடிக்
- கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக்
- கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன்
- தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல்
- தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண்
- மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
- பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
- என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
- மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
- வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
- நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
- ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும்
- பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.
- பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
- மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற
- விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக்
- கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.
- மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு
- முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான்
- சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே
- என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே.
- ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
- போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
- ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
- சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
- சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே
- கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே
- நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே
- செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே.
- கண்டவ னேசற்றும் நெஞ்சுரு காக்கொடுங் கள்வர்தமை
- விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம்அனைத்தும்
- உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக்
- கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.
- இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
- வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
- மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
- துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
- தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
- அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
- புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார்
- நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
- செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
- சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
- ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம்
- குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார்
- புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து
- புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன்
- நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும்
- நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும்
- அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
- மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
- நாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
- மேலே அருள்கூர்ந் தெனைநின்தாள் மேவு வோர்பால் சேர்த்தருளே.
- வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத
- நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
- விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால்
- எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே.
- மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
- இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
- தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
- அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
- நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
- எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
- கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
- பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
- தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
- இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
- அவ்வண்ண மான அரசே அமுதேநின்
- செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
- அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்
- சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல்
- வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய
- செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே.
- பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன்
- கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத
- முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு
- வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே.
- நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன்
- சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல்
- பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர்
- வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே.
- பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங்
- குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே
- மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே
- பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.
- கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த
- தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே
- தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப்
- பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.
- முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
- தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
- சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
- எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
- ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
- மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
- சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
- ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
- விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
- செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
- அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு
- நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம்
- மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல்
- கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே.
- நாயினும் கீழ்ப்பட்ட என்நெஞ்சம் நன்கற்ற நங்கையர்பால்
- ஏயினும் செல்கின்ற தென்னைசெய் கேன்உனை ஏத்தியிடேன்
- ஆயினும் இங்கெனை ஆட்கொளல் வேண்டும்ஐ யாஉவந்த
- தாயினும் நல்லவ னேஒற்றி மேவும் தயாநிதியே.
- நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம்
- சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம்
- விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள
- மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே.
- மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால்
- நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம்
- கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி
- வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
- வாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால்
- வீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள்
- தாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய்
- சூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே.
- குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
- சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே
- நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும்
- ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
- துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண்
- கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின்
- இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே
- பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே.
- கோடி நாவினும் கூறிட அடங்காக்
- கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை
- நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்
- நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே
- வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா
- வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்
- ஊடி னாலும்மெய் அடியரை இகவா
- ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.
- ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்
- ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்
- நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே
- நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்
- பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே
- பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி
- ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஊழை யேமிக நொந்திடு வேனோ
- உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
- பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
- பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
- மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
- மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
- தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
- அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
- இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
- றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
- செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
- செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
- எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
- உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
- நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
- நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
- பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
- பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
- றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
- சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
- இட்ட நல்வழி அல்வழி எனவே
- எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
- விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
- வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
- சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- ஊட்டு கின்றனை உண்ணுகின் றனன்மேல்
- உறக்கு கின்றனை உறங்குகின் றனன்பின்
- காட்டு கின்றனை காணுகின் றனன்நீ
- களிப்பிக் கின்றனை களிப்புறு கின்றேன்
- ஆட்டு கின்றனை ஆடுகின் றனன்இவ்
- அகில கோடியும் அவ்வகை யானால்
- தீட்டும் அன்பருக் கன்பநின் தனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம்
- விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான்
- நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன்
- நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ
- இச்சை நன்றறி வாய்அருள் செய்யா
- திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே
- செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி
- வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
- கூறு கின்றதென் என்றயர் கின்றேன்
- குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி
- ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம்
- இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே
- தேறு கின்றனன் என்செய்கேன் நினது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
- சுயம்பிர காசமே அமுதில்
- கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
- கடவுளே கண்ணுதற் கரும்பே
- குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
- கொடுந்துய ரால்அலைந் தையா
- முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
- மூடன்என் றிகழ்வது முறையோ.
- இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
- ஏன்றுகொள் பவரிலை அந்தோ
- அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
- அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
- புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
- பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
- திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
- செல்வமே சிவபரம் பொருளே.
- பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
- புத்தமு தேகுணப் பொருப்பே
- இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
- இன்பமே என்பெருந் துணையே
- அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
- அண்ணலே நின்அடிக் கபயம்
- மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
- மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
- பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
- அருமையில் பிரமன் ஆதிய தேவர்
- அடைந்தநற் செல்வமே அமுதே
- இருமையிற் பயனும் நின்திரு அருளே
- என்றுநின் அடைக்கலம் ஆனேன்
- கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
- களைகளைந் தெனைவிளைத் தருளே.
- அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
- துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
- இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
- செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே.
- தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
- தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
- கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
- யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
- ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
- பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
- ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
- கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே.
- ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
- பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
- வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
- கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே.
- மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
- வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
- ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
- அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
- செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
- தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
- உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்
- பொன்பொலி மேனிக் கருணையங் கடலே பொய்யனேன் பொய்மைகண் டின்னும்
- துன்பமுற் றலையச் செய்திடேல் அருணைத் தொல்நக ரிடத்துன தெழில்கண்
- டென்புளம் உருகத் துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கிவண் அருளே.
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- மறையும் அம் மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர்மேல்
- இறையும்மா தவனும் இறையும்இன் னவன்என் றெய்திடா இறைவனே அடியேன்
- பொறையும்நன் னிறையும் அறிவும்நற் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும்
- அறையும்நற் புகழ்சேர் அருணையை விழைந்தேன் அங்கெனை அடைகுவித் தருளே.
- தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருஅரு ணாபுரித் தேவே
- ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே எந்தையே எம்பெரு மானே
- பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
- நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்கிவண் அருளே.
- கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா
- அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே
- இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே
- பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே.
- சரதத் தால்அன்பர் சார்ந்திடும் நின்திரு
- விரதத் தால்அன்றி வேறொன்றில் தீருமோ
- பரதத் தாண்டவ னேபரி திப்புரி
- வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே.
- வேத னேனும்வி லக்குதற் பாலனோ
- தீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய
- நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல்
- நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே.
- மாலும் நான்குவ தனனும் மாமறை
- நாலும் நாடரு நம்பர னேஎவ
- ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின்
- ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே.
- தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
- மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
- மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
- ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
- கல்லை வில்லில்க ணித்தருள் செய்ததோர்
- எல்லை இன்றிஎ ழும்இன்ப வெள்ளமே
- இல்லை இல்லைநின் இன்னருள் இல்லையேல்
- தொல்லை நோயின்தொ டக்கது நீங்கலே.
- நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
- சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
- ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல்
- வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
- அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே
- துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே
- வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்
- இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.
- நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
- சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
- குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
- புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
- தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
- மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
- சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
- ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே.
- கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
- வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
- வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
- ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.
- விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
- இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
- நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
- உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
- கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
- உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
- மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
- சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.
- வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
- உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
- தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
- கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.
- திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
- குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
- பொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்
- தரும வெள்விடைச் சாமிநின் நாமமே.
- கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
- வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
- உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
- கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே.
- நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
- வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
- பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
- ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.
- சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
- எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
- இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
- தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே.
- உண்டு வறிய ஒதிபோல உடம்பை வளர்த்தூன் ஊதியமே
- கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை
- விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக்
- கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
- இடைவிடா துழலஒளிஓர்
- எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
- இருண்டுயிர் மருண்டுமாழ்க
- நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
- ஞானஅருள் நாட்டைஅடையும்
- நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
- நாயினேற் கருள்செய்கண்டாய்
- விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
- வெளிக்குள்வளர் கின்றசுடரே
- வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
- விஞ்ஞான மழைசெய்முகிலே
- கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
- கருணைநடம் இடுதெய்வமே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
- எய்துகபி றப்பில்இனிநான்
- எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
- இன்பம்எய் தினும்எய்துக
- வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு
- வாழ்வுவந் திடினும்வருக
- வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
- மதிவரினும் வருகஉயர்வோ
- டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
- தெதுபோ கினும்போகநின்
- இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
- எனக்கடைதல் வேண்டும்அரசே
- கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
- கதிமருந் துதவுநிதியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
- வாழ்விக்க வேண்டுவல் போற்றி
- அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
- கருளமு தருளுக போற்றி
- பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
- பாடுதல் வேண்டும்நான் போற்றி
- தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
- தாங்குக போற்றிநின் பதமே.
- நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
- நெறிதரு நிமலமே போற்றி
- மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
- வாழ்வித்த வள்ளலே போற்றி
- விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
- வியன்நெறி விளக்கமே போற்றி
- பதிபசு பதியே போற்றி நின்பாதம்
- பாடஎற் கருளுக போற்றி.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- போதஆ னந்த போகமே என்னைப்
- புறம்பிட நினைத்திடேல் போற்றி
- சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
- சிறுமைதீர்த் தருளுக போற்றி
- பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
- பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
- வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
- வேறெனக் கிலைஅருள் போற்றி.
- அடியனேன் பிழைகள் பொறுத்தருள் போற்றி
- அயல்எனை விட்டிடேல் போற்றி
- கொடியனேற் கின்பந் தந்தருள் போற்றி
- குணப்பெருங் குன்றமே போற்றி
- நெடியஎன் துன்பந் துடைத்தருள் போற்றி
- நினைஅலால் பிறிதிலேன் போற்றி
- படிமிசைப் பிறர்பால் செலுத்திடேல் எங்கள்
- பரமநின் அடைக்கலம் நானே.
- பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
- மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
- மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
- நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே.
- உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
- வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
- கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
- தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
- அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
- பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
- மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
- என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
- நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
- விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
- திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.
- காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்
- பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ
- வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்
- தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே.
- சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
- வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
- தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
- வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே.
- குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்
- நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்
- பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே
- என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே.
- தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
- யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
- போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
- மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே.
- ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
- நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
- ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
- வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே.
- நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன்
- பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
- எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
- தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.
- இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
- மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
- நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
- திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.
- தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
- பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
- தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
- அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ.
- நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
- கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
- தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
- சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
- சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
- மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
- புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
- அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.
- என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
- என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
- தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
- தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
- உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
- உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
- முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
- முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே.
- வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
- மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
- தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
- தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
- மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
- மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
- பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
- பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே.
- படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
- முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
- கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
- பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே.
- நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ
- வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்
- தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்
- மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே.
- மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
- ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
- தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
- பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே.
- ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
- மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
- தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
- தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.
- சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு வார்அருள் தேன்தருவார்
- ஊர்தரு வார்மதி யுந்தரு வார்கதி யுந்தருவார்
- ஏர்தரு வார்தரு வார்ஒற்றி யூர்எம் இறைவர்அன்றி
- யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும் அங்கும் இயம்புகவே.
- சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காய் இலைநல்ல சோமன்இல்லை
- பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமன்இல்லை
- வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகமது
- நாடில்லை நீநெஞ்ச மேஎந்த ஆற்றினில் நண்ணினையே.
- நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும்
- பாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ
- வாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால்
- சேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே.
- பொய்விரிப் பார்க்குப் பொருள்விரிப் பார்நற் பொருட்பயனாம்
- மெய்விரிப் பார்க்கிரு கைவிரிப் பார்பெட்டி மேவுபணப்
- பைவிரிப் பார்அல்குற் பைவிரிப் பார்க்கவர் பாற்பரவி
- மைவிரிப் பாய்மன மேஎன்கொ லோநின் மதியின்மையே.
- துட்ட வஞ்சக நெஞ்சக மேஒன்று சொல்லக் கேள்கடல் சூழ்உல கத்திலே
- இட்டம் என்கொல் இறையள வேனும்ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்
- நட்ட மிக்குறல் கண்டுகண் டேங்கினை நாணு கின்றிலை நாய்க்குங் கடையைநீ
- பட்ட வன்மைகள் எண்ணில் எனக்குடல் பதைக்கும் உள்ளம் பகீல்என ஏங்குமே.
- அறுசீர்க்21 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
- இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
- திலக வாணுத லார்க்கு ழன்றனை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
- கலக மேகனிந்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே.
- சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
- பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
- வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
- காய்நின்று சந்துரைத்த தார்.
- நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
- கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
- அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
- சந்தோட மோநின் றனக்கு.
- நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
- தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
- அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
- எங்ஙனம்என் றுள்ளம் எழும்.
- உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
- பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
- விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
- கொடாதே எனைஏன்று கொள்.
- பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
- கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
- பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
- என்னேநின் தன்மைமன மே.
- இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
- அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
- சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
- கென்னால் உறவே தினி.
- ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை
- ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
- பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
- சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர்
- சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
- காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ.
- ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
- நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
- சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
- சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
- தாவி நான்பெரும் பாவி ஆயினன்
- ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
- அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
- அருண்மருந் தொளிர்குணக் குன்றே
- அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
- அருட்கிர ணங்கொளும் சுடரே
- அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
- அருட்சுவை கனிந்தசெம் பாகே
- அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
- அருண்மய மாம்பர சிவமே.
- வீழாக ஞான்றசெவ் வேணிப் பிரான்என் வினைஇரண்டும்
- கீழாக நான்அதன் மேலாக நெஞ்சக் கிலேசமெல்லாம்
- பாழாக இன்பம் பயிராக வாய்க்கில்அப் பாற்பிறவி
- ஏழாக அன்றிமற் றெட்டாக இங்கென்னை என்செயுமே.
- செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
- செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
- அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
- அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
- சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
- சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
- வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
- மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
- செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- தாய்தடை என்றேன் பின்னர்த் தாரமே தடைஎன் றேன்நான்
- சேய்தடை என்றேன் இந்தச் சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
- தோய்தடைச் சிறியேன் இன்னுந் துறந்திலேன் எனைத் தடுக்க
- ஏய்தடை யாதோ எந்தாய் என்செய்கேன் என்செய் கேனே.
- எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
- இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
- விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
- விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
- பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
- பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
- கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
- கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே.
- கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
- மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
- நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
- உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்
- ஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்
- ஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ
- ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே.
- வெள்ளங்கொண் டோங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
- பள்ளங்கொண் டோங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
- உள்ளங்கொண் டோங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
- கள்ளங்கொண் டோங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே.
- நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
- பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
- சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
- ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே.
- பொன்அ ளிக்கும்நற் புத்தியுந் தந்துநின்
- தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே
- மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே
- என்னை நான்பல கால்இங்கி யம்பலே.
- ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
- அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
- பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
- விழியாய் விழியாய் வினைதூள் படவே.
- வெண்துறை
- பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
- மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்
- என்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்
- முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி.
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
- புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
- பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
- பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
- மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
- மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
- கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
- கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.
- கட்டளைக் கலிப்பா
- உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை
- உண்ண வோஉண வுக்கும் வழியிலை
- படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை
- பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
- எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்
- கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்
- விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
- வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே.
- இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்
- அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ
- பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்
- விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே.
- கலி விருத்தம்
- சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்
- பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட
- மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி
- உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே.
- தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
- தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
- தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
- தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே.
- மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
- பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
- செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
- நெய்விளக்கே போன்றொருதண்ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
- போகாத நாளும் விடயம்
- புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
- புந்திதள ராத நிலையும்
- எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
- என்றும்மற வாத நெறியும்
- இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
- ஏழையேற் கருள்செய் கண்டாய்
- கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
- கோமளத் தெய்வ மலரே
- கோவாத முத்தமே குறையாத மதியமே
- கோடாத மணிவி ளக்கே
- ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
- பதிநிலை அணைந்து வாழப்
- பகலான சகலமுடன் இரவான கேவலப்
- பகையுந் தடாத படிஓர்
- தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
- தமியேன் நடத்த வருமோ
- தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
- சரணமே சரணம் அருள்வாய்
- உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
- உறவான முத்தர் உறவே
- உருவான அருவான ஒருவான ஞானமே
- உயிரான ஒளியின் உணர்வே
- அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
- உற்றிடில் சிறுது ரும்பும்
- உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
- உயர்மறைகள் ஓர்அ னந்தம்
- தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
- தியானம் இல்லா மல்அவமே
- சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
- சேராமை எற்க ருளுவாய்
- களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
- கருணைதரு கலாப மயிலே
- கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
- கலைகி ளரவளர் அன்னமே
- அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
- குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
- பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
- கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே.
- கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
- நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
- தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
- சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.
- ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக
- ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே.
- இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
- மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமா ரே.
- நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
- நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
- வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
- வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.
- வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
- விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே.
- வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
- மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
- தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
- தானாகி நானாகித் தனியேநின் றவருக்குதெண்ட
- சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட
- சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந்
- பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த
- பரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந்
- ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
- தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
- பாடுவாள்பதைப்பாள் பதறுவாள்நான்பெண்பாவிகாண்பாவிகாண்என்பாள்
- வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே.
- திருஎலாம்அளிக்கும்தெய்வம்என் கின்றாள் திருச்சிற்றம்பலவன்என்கின்றாள்
- உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
- கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
- மருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே.
- விண்படைத்த பொழிற்றில்லை183 அம்பலத்தான் எவர்க்கும்
- மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
- பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
- பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
- பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
- பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
- கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
- புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
- கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
- குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
- செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
- திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
- நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
- நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ.
- 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.
- சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
- தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
- புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
- பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
- இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
- எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
- கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
- கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.
- எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
- என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
- மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
- மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
- கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
- கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
- குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
- கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே.
- மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
- மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
- தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்
- சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
- சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே
- சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
- இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்
- ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே.
- நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
- நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
- மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
- வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
- தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
- சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
- தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
- தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே.
- குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
- குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
- சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
- சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
- பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
- பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
- இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
- என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.
- சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
- வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
- போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
- ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
- பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
- மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
- என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல்
- மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்
- துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- மின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
- பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.
- நன்று புரிவார் திருவொற்றி நாதர் எனது நாயகனார்
- மன்றுள் அமர்வார் மால்விடைமேல் வருவார் அவரை மாலையிட்ட
- அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்தறியேன்
- குன்று நிகர்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஒற்றி நகர்வாழ் உத்தமனார் உயர்மால் விடையார் உடையார்தாம்
- பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகைதெரிந்து
- வெற்றி மதனன் வீறடங்க மேவி அணைந்தார் அல்லரடி
- குற்றம் அணுவும் செய்தறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
- தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
- படுத்தும் அறியார் எனக்குரிய பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும்
- கொடுத்தும் அறியார் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெற்பை வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது
- கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால்
- சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி
- கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் மேலார் ஒற்றி யூரர்என்பால்
- சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் சேர்ந்தார் அல்லர் யான்அவரை
- அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
- குன்றிற் றுயர்கொண் டழும்எனது குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
- பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
- சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
- ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
- விடையார் கொடிமே லுயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
- உடையா ரொற்றி யூரமர்ந்தா ருவந்தென் மனையி லின்றடைந்தார்
- இடையா வைய மென்றார்நா னிடைதா னைய மென்றேனாற்
- கடையா ரளியா ரென்றார்கட் கடையா ரளியா ரென்றேனே.
- வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
- தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
- சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
- பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- உரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
- கரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
- வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
- இரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
- முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
- புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
- எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- மாறித் திரிவார் மனம்அடையார் வணங்கும் அடியார் மனந்தோறும்
- வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகுவிலை
- கூறித் திரிவார் குதிரையின்மேற் கொள்வார் பசுவிற் கோல்வளையோ
- டேறித் திரிவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் அழகு ததும்ப வரும்பவனி
- நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டலது
- பால்ஆர் குதலைப் பெண்ணேநான் பாயிற் படுக்கை பொருந்தேனே.
- தென்னஞ் சோலை வளர்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் பிறங்கா நிற்க வரும்பவனி
- மன்னுங் கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்திக் கண்டலது
- துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் சோறெள் ளளவும் உண்ணேனே.
- மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன்
- வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார்
- நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
- கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
- மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
- பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
- கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- வில்லார் நுதலாய் மகளேநீ மேலை நாட்செய் தவம்எதுவோ
- கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண்விழித்தார்
- வில்லார் விசையற் கருள்புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
- கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ
- வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார்
- கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால்
- கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மலைநேர் முலையாய் மகளேநீ மதிக்கும் தவமே தாற்றினையோ
- தலைநேர் அலங்கல் தாழ்சடையார் சாதி அறியாச் சங்கரனார்
- இலைநேர் தலைமுன் றொளிர்படையார் எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
- குலைநேர் சடையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
- வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண் றுடையார் வெள்விடையார்
- பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
- குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மலையை வளைத்தார் மால்விடைமேல் வந்தார் வந்தென் வளையினொடு
- கலையை வளைத்தார் ஒற்றியில்என் கணவர் என்னைக் கலந்திலரே
- சிலையை வளைத்தான் மதன்அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
- திலக நுதலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
- நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
- ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
- தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- கமலன் திருமால் ஆதியர்கள் கனவி னிடத்துங் காண்பரியார்
- விமலர் திருவாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
- அமலர் அவர்தாம் என்மனைக்கின் றணைகு வாரோ அணையாரோ
- தமல மகன்ற குறப்பாவாய் தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
- கற்றைச் சடைமேல் கங்கைதனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
- பொற்றைப் பெருவிற் படைஉடையார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்து வாரோ எய்தாரோ
- சுற்றுங் கருங்கட் குறமடவாய் சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.
- சலங்கா தலிக்கும் தாழ்சடையார் தாமே தமக்குத் தாதையனார்
- நிலங்கா தலிக்கும் திருஒற்றி நியமத் தெதிரே நின்றனர்காண்
- விலங்கா தவரைத் தரிசித்தேன் மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்
- கலங்கா நின்றேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
- சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
- தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
- தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- காவி மணந்த கருங்களத்தார் கருத்தர் எனது கண்அனையார்
- ஆவி அனையார் தாய்அனையார் அணிசேர் ஒற்றி ஆண்தகையார்
- பூவின் அலங்கல் புயத்தில்எனைப் புல்லார் அந்திப் பொழுதில்மதி
- தாவி வருமே என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.
- ஆயும் படிவத் தந்தணனாய் ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
- தோயும் கமலத் திருவடிகள் சூட்டும் அதிகைத் தொன்னகரார்
- ஏயும் பெருமை ஒற்றியுளார் இன்னும் அணையார் எனைஅளித்த
- தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனிநான் சகியேனே.
- தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்
- மிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்
- துக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்
- ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
- மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
- ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
- ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
- உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
- தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
- எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
- அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
- திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
- கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
- அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
- ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
- கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
- கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
- வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்
- கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
- அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
- துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்
- கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
- ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்
- நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
- கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்
- வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
- புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
- கன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
- தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்
- ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்
- காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
- அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்
- நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்
- கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
- ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்
- வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்
- கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
- ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
- தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
- கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்
- சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்
- மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்
- காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
- அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
- படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
- கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
- நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
- கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
- கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
- பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
- பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
- குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
- குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
- துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
- துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
- அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
- அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
- இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
- தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
- தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
- குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
- குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
- என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
- எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
- பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
- பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
- அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
- ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
- பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே
- பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
- சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
- மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி
- வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
- கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
- காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- சுற்றதுமற் றவ்வழியா சூததுஎன் றெண்ணாத்
- தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
- எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
- கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
- கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
- பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
- பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே.
- ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
- இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
- வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
- மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
- தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
- தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
- ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
- உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
- முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
- முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
- பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
- பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
- தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
- தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
- இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
- எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.
- மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
- தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
- தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
- அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
- ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
- என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.
- பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
- போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
- வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
- வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
- போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
- பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
- ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
- செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
- திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
- இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
- என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
- அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
- ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
- எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
- தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
- வருமாலை மண்ணுறத்தப் பெயர்த்துநடந் தருளி
- வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
- தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
- செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
- குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
- குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
- இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
- கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
- கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
- மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
- மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
- புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
- பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
- கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
- கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
- தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
- துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
- வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
- மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
- தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
- தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
- வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
- விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
- பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
- போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
- நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
- ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
- முழுதிரவில் நடந்தெளியேன் முயங்கமிடத் தடைந்து
- அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
- என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
- டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
- வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
- வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
- விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
- நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
- நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
- போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
- புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
- சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
- துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.
- முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
- முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
- கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
- கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
- பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
- பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
- தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
- தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
- தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
- தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
- பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
- தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
- என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
- என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
- பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
- பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
- மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
- வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
- தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
- செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
- திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
- திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
- முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
- முடிகள்முடித் துரைகின்ற அடிகள்மிக வருந்தப்
- பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
- படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
- சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
- திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
- சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
- தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
- உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
- சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
- பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
- பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
- நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
- நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
- மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
- மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
- மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
- மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
- தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
- தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
- அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
- இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
- எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
- உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
- உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
- திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
- தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
- குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
- குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
- தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
- தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
- வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
- வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
- எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
- விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
- மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
- மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
- வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
- பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
- போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
- தாவிநடந் திரவின்மனைக் கதவுதிப் பித்தே
- தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
- நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
- திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
- திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
- தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
- தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
- மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
- மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
- குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
- குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.
- அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே
- அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
- கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
- களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
- குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
- கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
- மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
- மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.
- விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
- வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்
- கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்
- கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
- அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்
- அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
- மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
- மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே.
- சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
- தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
- செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
- எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
- எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
- ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
- தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
- கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
- எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
- இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
- சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
- முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
- மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
- புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
- போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
- பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
- படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
- அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று
- ஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான்
- ஓதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன்
- இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து
- சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
- எம்மாயென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
- மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
- வங்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ் தெனக்கும்
- தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
- பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
- ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
- அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
- மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
- வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.
- உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும் உற்றிலாச் சிறியஓர் பருவத்
- திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்
- விலகுறங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
- திலகநன் காழி ஞானசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.
- தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
- ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
- றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
- சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே.
- தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
- பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
- இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
- றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
- உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
- நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
- விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
- றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே.
- செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில்
- எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும்
- இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே
- தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே.
- சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
- தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
- காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
- கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
- ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
- இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
- பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
- பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
- வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
- தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
- சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
- சேம்மைவிடா தணிமைவிடத் தாள வந்த
- செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
- ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
- அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.
- தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
- திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
- நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான
- நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
- பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்
- பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
- மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய
- வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே.
- விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா
- வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்
- மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான
- வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்
- பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்
- பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே
- கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்
- கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே.
- விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
- மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
- களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
- கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
- துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
- துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
- வளங்கெழும்ஆ கநநெறியை வளர்க்க வந்த
- வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.
- தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
- செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
- சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
- தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
- கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
- குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
- தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
- செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.
- 191. எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோஎம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்கண்ணிலேன் மற்றோர்களைகண் இல்லேன்கழலடியே கைதொழுது காணின்அல்லால்ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணியனே.- 7215 (6-99-1) திருநாவுக்கரசர். திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.
- வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
- ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
- பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
- மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.
- வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
- தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
- கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
- நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
- வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
- ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
- தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
- குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.
- பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
- எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
- மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
- புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .
- உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
- இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
- திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
- விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
- பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
- ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
- வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
- பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
- அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
- மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- கேவலசகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி
- ஓவற மயங்கி உழலும்இச் சிறியேன் உன்அருள் அடையும்நாள் உளதோ
- பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரமசிற் சுகபரம் பரனே
- மேவுறும் அடியார்க் கருளிய சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான்
- பெருநெடு மேனி தனிற்படப்165 பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
- கருநெடுங் கடலைக் கடத்து166 நற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
- வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே.
- விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
- கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
- தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
- வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே.
- நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
- சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
- தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
- வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
- இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
- பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
- வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.
- துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
- விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
- நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
- மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே.
- பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
- திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
- மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
- வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.
- திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
- உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
- குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
- வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட்
- டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத்
- தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும்
- வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
- துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
- வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
- வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நாவி னால்உனை நாள்தொறும் பாடுவார் நாடு வார் தமை நண்ணிப்பு கழவும்
- ஓவி லாதுனைப் பாடவும் துன்பெலாம் ஓடவும்மகிழ் ஓங்கவும் செய்குவாய்
- காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக் கடவுளேநற்க ருங்குழி என்னும்ஊர்
- மேவி அன்பர்க்க ருள்கண நாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
- கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
- பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
- அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே.
- அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
- கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
- வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
- கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே.
- திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
- இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
- குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
- வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே.
- கண்மூன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
- மண்மூன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
- திண்மூன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
- வண்மூன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.
- அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்
- என்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்
- பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த
- மன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே.
- அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே
- சமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே
- குமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன்
- எமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே.
- கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
- துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
- கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
- தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
- சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
- தற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
- கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
- பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.
- போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
- சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
- ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
- மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.
- வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
- மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
- கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
- கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.
- கையாத துன்பக் கடல்மூழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்
- ஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்
- மையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே.
- செய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே.
- கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
- வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
- தோளா மணிச்சுட ரேதணி காசலத் து‘ய்ப்பொருளே
- நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.
- மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
- தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
- கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
- தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
- தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
- பணியாத பாவிக் கருளும்உண் டோபசு பாசம்அற்றோர்க்
- கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
- அணிஆ தவன்முத லாம்அட்ட மூர்த்தம் அடைந்தவனே.
- பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்
- கண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே
- விண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்
- புண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே.
- சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
- வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
- எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
- செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.
- சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
- மால்பி டித்தவர் அறியொணாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
- வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
- கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.
- களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
- ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
- தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
- தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே.
- இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
- கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
- விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
- தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.
- மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
- கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
- பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
- தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
- செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
- கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
- குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
- பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
- பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
- பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
- பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.
- தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
- தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
- பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
- பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
- ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
- திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
- சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
- தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.
- தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
- செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
- களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
- கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
- சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
- தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
- அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
- அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ.
- கையாத அன்புடையார் அங்கை மேவும்
- கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
- பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
- பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
- உய்யாத குறைஉண்டோ துயர்சொல் லாமல்
- ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
- ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
- கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.
- வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
- வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
- நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
- நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
- தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
- என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
- து‘ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
- சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.
- ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
- ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
- கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
- கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
- நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
- நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
- தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
- சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.
- அன்னைமுத லாம்பந்தத் தழுங்கி நாளும்
- அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
- முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
- முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
- பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
- பூமணமே நறவேநற் புலவர் போற்றத்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
- கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
- சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
- தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
- சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
- செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
- தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
- மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
- என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
- இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
- இன்செல்அடி யவர்மகிழும் இன்ப மேஉள்
- இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
- தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
- வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
- புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
- பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
- எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
- இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
- தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
- வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
- பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
- பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
- ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
- இன்பமே என்அரசே இறையே சற்றும்
- தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
- கரைந்துருகி எந்தாய்நின் கருணை காணா
- தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
- கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
- பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
- பூரணமே புண்ணியமே புனித வைப்பே
- தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
- பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
- மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
- மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
- தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
- தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
- தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
- கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
- அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
- அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
- சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
- செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
- தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
- வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
- எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
- என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
- கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
- கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
- தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
- டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
- பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
- சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
- சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
- சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
- இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
- கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
- கருதி டாதுழல் கபட னேற்கருள்
- நண்ணி வந்திவன் ஏழை யாம்என
- நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
- தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின்
- செய்ய தாள்துதி செய்தி டாதுழல்
- கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டுசெய்
- கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
- சொல்லும் இன்பவான் சோதி யேஅருள்
- தோற்ற மேசுக சொருப வள்ளலே
- சல்லி யங்கெட அருள்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- பொய்யர் தம்மனம் புகுதல் இன்றெனப்
- புனித நு‘லெலாம் புகல்வ தாதலால்
- ஐய நின்திரு அருட்கி ரப்பஇங்
- கஞ்சி நின்றென்இவ் விஞ்சு வஞ்சனேன்
- மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே
- வித்தி லாதவான் விளைந்த இன்பமே
- தைய லார்இரு வோரும் மேவுதோள்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
- ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்
- தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
- வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே.
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
- ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
- அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
- தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
- மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா
- தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
- நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
- தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.
- பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
- கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
- விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
- வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.
- வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
- மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
- சால நின்றவன் தணிகை நாயகன்
- வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.
- நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
- வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
- தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
- கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.
- வெற்ப னேதிருத் தணிகை வேலனே
- பொற்ப னேதிருப் போரி நாதனே
- கற்ப மேல்பல காலம் செல்லுமால்
- அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.
- அத்த னேதணி காச லத்தருள்
- வித்த னேமயில் மேற்கொள் வேலனே
- பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
- சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.
- தணிகை மேவிய சாமி யேநினை
- எணிகை விட்டிடேல் என்று தோத்திரம்
- அணிகை நின்அடிக் கயர்ந்து நின்றுவீண்
- கணிகை போல்எனைக் கலக்கிற் றுள்ளமே.
- உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
- நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
- தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
- வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.
- மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே
- இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்
- பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே
- தன்னில் நின்றிடும் தணிகை மேலனே.
- மேலை வானவர் வேண்டும் நின்திருக்
- காலை என்சிரம் களிக்க வைப்பையோ
- சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
- வேலை ஏந்துகை விமல நாதனே.
- வண்ண னேஅருள் வழங்கும் பன்னிரு
- கண்ண னேஅயில் கரங்கொள் ஐயனே
- தண்ண னேர்திருத் தணிகை வேலனே
- திண்ணம் ஈதருள் செய்யும் காலமே.
- கால்கு றித்தஎன் கருத்து முற்றியே
- சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்
- மால்ப கைப்பிணி மாறி ஓடவே
- மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.
- சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
- புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
- அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
- கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.
- கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின் றேன்நின் திருக்கருணை
- அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவில்லேன்
- விடையே றீசன் புயம்படும்உன் விரைத்தாள் கமலம் பெறுவேனோ
- கொடைஏர் அருளைத் தருமுகிலே கோவே தணிகைக் குலமணியே.
- அரைசே அடியர்க் கருள்குகனே அண்ணா தணிகை ஐயாவே
- விரைசேர் கடம்ப மலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே
- புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
- தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.
- தனியே துயரில் வருந்திமனம் சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங்
- கினிஏ துறுமோ என்செய்கேன் என்றே நின்றேற் கிரங்காயோ
- கனியே பாகே கரும்பேஎன் கண்ணே தணிகைக் கற்பகமே
- துனிஏய் பிறவி தனைஅகற்றும் துணையே சோதிச் சுகக்குன்றே.
- குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
- நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
- என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
- இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.
- இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
- விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
- திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
- பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.
- போதா நந்த அருட்கனியே புகலற் கரிய பொருளேஎன்
- நாதா தணிகை மலைஅரசே நல்லோர் புகழும் நாயகனே
- ஓதா தவமே வருந்துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன்
- ஏதாம் உனதின் அருள்ஈயா திருந்தால் அந்தோ எளியேற்கே.
- எளியேன் நினது திருவருளுக் கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
- களியேன் எனைநீ கைவிட்டால் கருணைக் கியல்போ கற்பகமே
- அளியே தணிகை அருட்சுடரே அடியர் உறவே அருள்ஞானத்
- துளியே அமையும் எனக்கெந்தாய் வாஎன் றொருசொல் சொல்லாயே.
- கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின்
- கருணைஅம் கழல்அடிக் கன்பாம்
- பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அற்பிலேன் எனினும் என்பிழை பொறுத்துன்
- அடியர்பால் சேர்த்திடில் உய்வேன்
- தற்பரா பரமே சற்குண மலையே
- தணிகைவாழ் சரவண பவனே.
- மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
- அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
- பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
- என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.
- இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
- அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
- உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
- வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
- செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
- விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
- வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
- பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
- சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்
- காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே
- மூவர்க் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்
- தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியேனே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
- வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
- ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.
- பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
- கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
- உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- துதிஏர் நினது பதந்தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.
- தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயஞ்சுடரே
- ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஈன்றாள் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.
- கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
- நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
- சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
- அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே.
- சேவி யாதஎன் பிழைகளை என்னுளே சிறிதறி தரும்போதோ
- பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
- ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
- பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.
- என்செய் கேன்இனும் திருவருள் காண்கிலேன் எடுக்கரும் துயர்உண்டேன்
- கன்செய் பேய்மனக் கடையனேன் என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
- பொன்செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள்வைப்பே
- மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ் வள்ளலே மயிலோனே.
- மலங்கி வஞ்சகர் மாட்டிரந் தையகோ வருந்திநெஞ் சயர்வுற்றே
- கலங்கி நின்திருக் கருணையை விழையும்என் கண்அருள் செய்யாயோ
- இலங்கி எங்கணும் நிறைந்தருள் இன்பமே எந்தையே எந்தாயே
- நலங்கி ளர்ந்திடும் தணிகையம் பதியமர் நாயக மணிக்குன்றே.
- சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
- தெய்வ மேநினை அன்றிஓர் துணையிலேன் திருவருள் அறியாதோ
- வைவ தேகொளும் வஞ்சகர் தம்இடை வருந்திநெஞ் சழிகின்றேன்
- செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே.
- வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
- தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
- கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
- வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
- என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
- கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால
- நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
- துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே.
- வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
- காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
- ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
- மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.
- வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
- சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
- வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
- தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.
- காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
- போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
- பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
- நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
- கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே
- முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் மூட முழுநெஞ்சே
- அலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.
- நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
- மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
- நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
- உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
- இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்
- பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை
- மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
- திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.
- 9. நலிந்திங்கவமே. தொ.வே.முதற்பதிப்பு, ச.மு.க.பதிப்பு
- மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
- மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
- கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
- கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
- மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
- வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
- தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
- தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே.
- முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
- முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
- குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
- கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
- நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
- நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
- கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
- காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
- வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
- மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
- நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
- நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
- கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
- கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
- தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
- தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
- பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
- பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
- கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
- குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
- மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
- வேல னேதணி காசல மேலனே
- தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
- தெய்வ யானை திருமண வாளனே.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
- கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
- கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
- வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
- உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
- பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
- மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
- சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
- பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
- வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
- அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
- குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
- மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
- சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
- வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
- மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
- நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
- சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
- வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
- உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
- அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
- வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
- ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
- தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
- வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.
- காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
- ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ
- மாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ
- தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே.
- தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
- கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
- தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
- நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமோ.
- நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
- சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
- நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
- வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.
- மணியே கலாப மலைமேல் அமர்ந்த மதியே நினைச்சொல் மலரால்
- அணியேன் நல்அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
- பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்த படியே
- எணியே நினைக்கில் அவமாம்இவ் வேழை எதுபற்றி உய்வ தரசே.
- முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
- மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
- விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
- இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.
- சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
- பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
- பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
- வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
- வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
- ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- காமாந்த காரியாய் மாதர் அல்குல்
- கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
- நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
- நாயகமா மணியேநல் நலமே உன்றன்
- பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
- பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
- ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
- ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
- செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
- தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
- கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
- கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
- எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
- திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
- தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
- கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
- எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
- சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்
- கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
- சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
- ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
- காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
- நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
- கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
- காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
- விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
- நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
- கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
- மால்நிகழ் பேதையேன் மதித்தி லேன் ஐயோ
- தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
- தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே.
- வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
- பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
- மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
- செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.
- பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
- வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ
- மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய
- கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே.
- வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
- வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
- தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
- திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
- ஊன்பிறந்த உடல்ஓம்பி அவமே வாழ்நாள்
- ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
- ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
- மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
- உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
- ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
- பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
- புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
- ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
- யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
- வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
- மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
- சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
- நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
- நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
- கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
- குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
- பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்
- புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
- கல்லாத பாவிஎன்று கைவிட் டாயோ
- கருணைஉரு வாகியசெங் கரும்மே மேரு
- வில்லான்தன் செல்வமே தணிகை மேவும்
- மெய்ஞ்ஞான ஒளியேஇவ் வினையேன் துன்பம்
- எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
- திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
- மூடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
- இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
- ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
- மலைஒருபால் வாங்கியசெவ் வண்ண மேனி
- வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
- புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
- புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே.
- வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
- அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
- எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
- முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
- ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
- போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே.
- மூதா னந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ.
- மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய
- வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
- பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
- மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
- செய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த
- செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
- மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
- மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
- பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பித்த நாயகன் அருள்திருப் பேறே
- பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
- தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
- சலத்தின் மேவிய தற்பர ஒளியே.
- தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
- காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
- மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
- நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.
- மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
- கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
- மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
- வேல்ஏந்திய முருகாஎன வெண்றணிந் திடிலே.
- மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
- மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
- சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
- பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
- அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
- மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
- சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
- முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.
- அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
- நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே.
- என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
- நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.
- போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
- புண்ணிய நின்திரு அடிக்கே
- யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
- யாதுநின் திருஉளம் அறியேன்
- தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
- செய்திடா திருப்பையோ சிறியோன்
- ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
- ஈவையோ தணிகைவாழ் இறையே.
- வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
- வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
- ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
- அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
- தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
- சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
- வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
- வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.
- கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
- சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே
- பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
- ஏர்பூத்த ஒண்பளி தம்11 காண் கிலன்அதற் கென்செய்வனே.
- கருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்
- அருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே
- திருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
- ஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.
- கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
- திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
- விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
- தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.
- எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
- ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
- செய்யாள் மருவும் புயனுடைத் தேவனும் சேணவனும்
- நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.
- ஊன்பார்க்கும் இவ்வுடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
- மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே
- தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை
- நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே.
- என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
- மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
- தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
- பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் புகலிடமே.
- பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயுலக
- வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யும்மயங்கேல்
- போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த
- தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே.
- விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
- விம்முறும் இளமுலை மடவார்
- களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
- கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
- அளக்கருங் கருணை வாரியே ஞான
- அமுதமே ஆனந்தப் பெருக்கே
- கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
- கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
- வலித்திடும் மங்கையர் தம்பால்
- தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
- தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
- சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
- தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
- ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
- உதவுசீர் அருட்பெருங் குன்றே.
- பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
- பாவியேன் தன்முகம் பார்த்திங்
- கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
- இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
- சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
- தெள்ளிய அமுதமே தேனே
- குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
- மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
- ஒருவரும் நினது திருவடிப் புகழை
- உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
- அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
- அரும்பெறல் செல்வமே அமுதே
- குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
- றலைந்திடும் பாவியேன் இயற்றும்
- பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
- பாதுகாத் தளிப்பதுன் பரமே
- மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
- முத்தமே முக்தியின் முதலே
- கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
- விதிமால் அறியா விமலனார்
- மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
- மகனார் குகனார் மயில்ஊர்வார்
- முதுவாழ் வடையா தவமே அலைவேன்
- முன்வந் திடயான் அறியாதே
- புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
- நின்றேன் அந்தோ பொல்லேனே.
- காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
- காடே இடமாக் கணங்கொண்ட
- பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
- பித்தப் பெருமான் திருமகனார்
- தாயோ டுறழும் தணிகா சலனார்
- தகைசேர் மயிலார் தனிவேலார்
- வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
- வெள்வளை கொண்டார் வினவாமே.
- பொன்னார் புயனார் புகழும் புகழார்
- புலியின் அதளார் புயம்நாலார்
- தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- என்நா யகனார் என்னுயிர் போல்வார்
- எழின்மா மயிலார் இமையோர்கள்
- தந்நா யகனார் தணிகா சலனார்
- தனிவந் திவண்மால் தந்தாரே.
- கல்லால் அடியார் கல்லடி உண்டார்
- கண்டார் உலகங் களைவேதம்
- செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- எல்லாம் உடையார் தணிகா சலனார்
- என்நா யகனார் இயல்வேலார்
- நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின்
- நண்ணார் மயில்மேல் நடந்தாரே.
- வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
- மெய்யனை ஐயனை உலக
- மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
- மாணிக்க மணியினை மயில்மேல்
- கால்கொளும் குகனை எந்தையை எனது
- கருத்தனை அயன்அரி அறியாச்
- சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
- மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
- து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
- ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
- கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
- ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
- மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
- ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
- ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
- துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
- வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
- செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே.
- பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரல் விடுத்துய்யக்
- கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
- ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
- வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.
- எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
- ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
- வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
- அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
- வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
- தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
- சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
- அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
- இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- நச்சி லேபழ கியகருங் கண்ணார்
- நலத்தை வேட்டுநற் புலத்தினை இழந்தேன்
- பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன்
- பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன்
- சச்சி12 லேசிவன் அளித்திடும் மணியே
- தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
- எச்சி லேவிழைந் திடர்உறு கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பண்அ ளாவிய மொழியினால் மயக்கும்
- படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
- தண்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்
- தடத்த ளாவிய தருமநல் தேவே
- பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்
- பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே
- எண்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ
- டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- கான்அ றாஅள கத்தியர் அளக்கர்
- காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்
- வான மேவுறும் பொழில்திருத் தணிகை
- மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்
- ஞான நாயகி ஒருபுடை அமர்ந்த
- நம்ப னார்க்கொரு நல்தவப் பேறே
- ஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்
- பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
- தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
- நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.
- ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
- மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
- நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற
- தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.
- மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்
- நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்
- அலைதீங்கின குழல்தூங்கின அகம்ஏங்கின அரைமேல்
- கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே.
- மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்
- நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே
- மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்
- ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே.
- மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
- நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
- பூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
- நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
- கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
- புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
- புத்தமுதே ஆனந்த போக மேஉள்
- எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
- என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
- திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
- நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
- நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
- என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
- ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
- பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
- போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
- சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
- கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
- பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
- புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
- உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
- உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
- சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
- நாயகனே வடிவேற்கை நாத னேநான்
- கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
- குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
- சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
- சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
- சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
- பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
- என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
- ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
- மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
- விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
- சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
- கலகம் தருசூர்க் கிளைகளைந்த கதிர்வேல் அரசே கவின்தருசீர்த்
- திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல்அதனால்
- இலகும் கலப மயிற்பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே.
- அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம்மேவும்
- குழகா குமரா எனைஆண்ட கோவே நின்சீர் குறியாரைப்
- பழகா வண்ணம் எனக்கருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்
- கழகா தரவாம் பணிபுரிவார் அடியார்க் கடிமை ஆக்குகவே.
- புரிவேன் விரதம் தவந்தானம் புரியா தொழிவேன் புண்ணியமே
- பரிவேன் பாவம் பரிவேன்இப் பரிசால் ஒன்றும் பயன்காணேன்
- திரிவேன் நினது புகழ்பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல்
- எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே.
- விளைப்பேன் பவமே அடிச்சிறியேன் வினையால் விளையும் வினைப்போகம்
- திளைப்பேன் எனினும் கதிர்வடிவேல் தேவே என்னும் திருமொழியால்
- இளைப்பேன் அலன்இங் கியம்புகிற்பேன் எனக்கென் குறையுண் டெமதூதன்
- வளைப்பேன் எனவந் திடில்அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே.
- சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
- அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
- இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
- முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
- ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
- வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
- சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
- நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே.
- அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
- அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
- கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
- கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
- படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
- பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்
- தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
- நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
- சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
- செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
- பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
- போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
- தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
- மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
- அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
- அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
- துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
- தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
- தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
- மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
- ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
- அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
- வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
- வேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
- சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
- அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
- இலகுசிற் பரகுக என்று நீறிடில்
- கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே.
- மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
- இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
- தெருளுறு நீற்றினைச் சிவஎன் றுட்கொளில்
- அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.
- வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
- கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
- இல்வினைச் சண்முக என்று நீறிடில்
- நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே.
- கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே
- விடும்புனல் எனத்துயர் விளைக்கும் நெஞ்சமே
- இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில்
- நடுங்கும்அச் சம்நினை நண்ணற் கென்றுமே.
- அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
- என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
- இன்பறாச் சண்முக என்று நீறிடில்
- துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்குமே.
- செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
- அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே
- எறிவிலாச் சண்முக என்று நீறிடில்
- மறிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.
- மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
- வெறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
- நெறிசிவ சண்முக என்று நீறிடில்
- முறிகொளீஇ நின்றஉன் மூடம் தீருமே.
- காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
- மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
- நேயமாம் சண்முக என்று நீறிடில்
- தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.
- சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
- மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
- நிதிசிவ சண்முக என்று நீறிடில்
- வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே.
- பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
- வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
- இசைசிவ சண்முக என்று நீறிடில்
- திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே.
- பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
- கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
- தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
- பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
- ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால்
- வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயல்அம்மா.
- நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்மாலும்
- விதியுந் துதிஐம் முகனார் மகனார் மிகுசீரும்
- நிதியும் பதியும் கதியும் தருவார் நெடுவேலார்
- வதியும் மயின்மேல் வருவார் மலரே வரும்ஆறே.
- சந்தார் வரையுள் சிந்தா மணிநேர் தணிகேசர்
- மந்தா நிலம்மே வுந்தார் மறுகில் மயிலேறி
- வந்தார் நிலவோர் செந்தா மரையின் மலர்வாசக்
- கொந்தார் குழல்என் நிலையுங் கலையுங் கொண்டாரே.
- தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்
- சந்தே னொழிவாய் அந்தேன் மொழியாய் தனிஇன்று
- வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி
- நொந்தேன் முலைமீ தவ்வுரை என்றார் நுவல்என்னே.
- தண்தணி காந்தள்ஒர்14 சண்பக மலரின் தளர்வெய்தத்
- தெண்டணி நீலம்ஒர்14 செங்குவ ளையினிற் றிகழ்வேன்பால்
- வண்டணி கேசரும் வந்தருள் வாரோ வாராரோ
- தொண்டணி வீர்ஒரு சோதிட மேனும் சொல்லீரே.
- பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
- இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
- துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
- தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
- தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
- பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி
- நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
- சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.
- மூவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
- மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
- சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
- தூவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி
- தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
- பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
- மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
- அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
- பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி
- கையனேன் தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி
- மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி
- ஐயனே அப்ப னேஎம் அரசனே போற்றி போற்றி
- கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
- தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி
- போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
- ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.
- என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி
- பன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றி
- மின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றி
- நின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.
- திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
- பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்
- வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்
- குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- தேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்
- கோனே குருவே குலமே குணமே குகனேயோ
- வானே வளியே அனலே புனலே மலையேஎன்
- ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதுமியாம்
- ஓதா தவமே யுழனெஞ்சே-மீதாத்
- ததிதி யெனமயிலிற் றானாடி நாளுந்
- திதிதி தருந்தணிகைத் தே.
- ஏலுந் தயங்கென்னு மேவற் கெதிர்மறைதான்
- ஆலுந் தொழிற்கேவ லாகுமோ-மாலுந்தி
- மாற்றுந் தணிகையர்க்கு மாமயின்மேல் நாடோறுந்
- தோற்றுந் தணிகையன்பொற் றோள்.
- பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
- பசுஏது பாசம்ஏது
- பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
- பாவபுண் யங்கள்ஏது
- வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
- மனம்விரும் புணவுண்டுநல்
- வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
- மலர்சூடி விளையாடிமேல்
- கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
- கலந்துமகிழ் கின்றசுகமே
- கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
- கயவரைக் கூடாதருள்
- தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
- துணைஎனும் பிணையல்அளகம்
- சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
- சுழிஎன்ன மொழிசெய்உந்தி
- வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
- மங்கையர்தம் அங்கம்உற்றே
- மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
- மாழ்கநான் வாழ்கஇந்தப்
- படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
- படிஎன்ன அறியாதுநின்
- படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
- படிஎன்னும் என்செய்குவேன்
- தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
- மதித்திடுவ தன்றிமற்றை
- வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
- மாட்டினும் மறந்தும்மதியேன்
- கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
- கடவுளர் பதத்தைஅவர்என்
- கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
- கடுஎன வெறுத்துநிற்பேன்
- எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
- என்னை ஆண் டருள்புரிகுவாய்
- என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
- என்றன்அறி வேஎன்அன்பே
- தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
- பசுகரணம் ஈங்கசுத்த
- பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
- பதியோக நிலைமைஅதனான்
- மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
- மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
- வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
- வந்துணர்வு தந்தகுருவே
- துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
- துரிசறு சுயஞ்சோதியே
- தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
- சொல்லரிய நல்லதுணையே
- ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
- கதறுவார் கள்ளுண்டதீக்
- கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
- கடும்பொய்இரு காதம்நாற
- வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
- மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
- மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
- வழக்குநல் வழக்கெனினும்நான்
- உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
- ரோடுறவு பெறஅருளுவாய்
- உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
- உவப்புறு குணக்குன்றமே
- தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
- கன்மவுட லில்பருவம்நேர்
- கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
- கடல்நீர்கொ லோகபடமோ
- உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
- ஒருவிலோ நீர்க்குமிழியோ
- உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
- உன்றும்அறி யேன் இதனைநான்
- பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
- பட்டுமதி கெட்டுழன்றே
- பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
- பற்றணுவும் உற்றறிகிலேன்
- சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
- உற்றசும் பொழுகும்உடலை
- உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
- உற்றிழியும் அருவிஎன்றும்
- வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
- மின்என்றும் வீசுகாற்றின்
- மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
- வெறுமாய வேடம்என்றும்
- கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
- கனவென்றும் நீரில்எழுதும்
- கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
- கைவிடேன் என்செய்குவேன்
- தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
- ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
- எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
- இகழ்விற கெடுக்கும்தலை
- கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
- கலநீர் சொரிந்தஅழுகண்
- கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
- கைத்திழவு கேட்கும்செவி
- பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
- பகீர்என நடுங்கும்நெஞ்சம்
- பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
- பலிஏற்க நீள்கொடுங்கை
- சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
- அழுதுண் டுவந்ததிருவாய்
- அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
- அணிந்தோங்கி வாழுந்தலை
- மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
- மிக்கஒளி மேவுகண்கள்
- வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
- விழாச்சுபம் கேட்கும்செவி
- துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
- சுகரூப மானநெஞ்சம்
- தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
- சுவர்ன்னமிடு கின்றகைகள்
- சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
- கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
- கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
- கருதிலேன் நல்லன்அல்லேன்
- குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
- குற்றம்எல் லாம்குணம்எனக்
- கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
- குறைதவிர்த் தருள்புரிகுவாய்
- பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
- பெற்றெழுந் தோங்குசுடரே
- பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
- பேதமில் பரப்பிரமமே
- தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
- ஒல்லைவிட் டிடவுமில்லை
- உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
- உனைஅன்றி வேறும்இல்லை
- இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
- இசைக்கின்ற பேரும்இல்லை
- ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
- றியம்புகின் றோரும்இல்லை
- வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
- மற்றொரு வழக்கும்இல்லை
- வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
- வன்மனத் தவனும்அல்லை
- தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
- நாடாமை ஆகும்இந்த
- நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
- நாய்வந்து கவ்விஅந்தோ
- தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
- தளராமை என்னும்ஒருகைத்
- தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
- தன்முகம் பார்த்தருளுவாய்
- வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
- மழையே மழைக்கொண்டலே
- வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
- மயில்ஏறு மாணிக்கமே
- தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பண்ணேர் மறையின் பயனே சரணம்
- பதியே பரமே சரணம் சரணம்
- விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
- வெளியின் விளைவே சரணம் சரணம்
- உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
- உருவே அருவே உறவே சரணம்
- கண்ணே மணியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- பூவே மணமே சரணம் சரணம்
- பொருளே அருளே சரணம் சரணம்
- கோவே குகனே சரணம் சரணம்
- குருவே திருவே சரணம் சரணம்
- தேவே தெளிவே சரணம் சரணம்
- சிவசண் முகனே சரணம் சரணம்
- காவேர் தருவே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
- ஒன்றே பலவே சரணம் சரணம்
- தெளியும் தெருளே சரணம் சரணம்
- சிவமே தவமே சரணம் சரணம்
- அளியும் கனியே சரணம் சரணம்
- அமுதே அறிவே சரணம் சரணம்
- களியொன் றருள்வோய் சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
- செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
- கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
- கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
- ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
- டாறு புயந்திகழ் அற்புதமும்
- வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
- மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
- ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
- ஒன்றிரண் டாகா அளவாண்டி
- மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
- மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.
- மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்
- கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர்
- ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்
- சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
- சோறு வேண்டினும் துகிலணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர்
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் முலையென்றேன்
- இதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதான்
- எதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார்
- அதுவின் றணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார்
- அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
- வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
- தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன் றோகாய் நாமே தொண்டரென்றார்
- அண்டர்க் கரியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றேன்
- எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன்
- உட்டா வகற்று மந்தணர்க ளுறையூர் மாதே யுணரென்றார்
- அட்டார் புரங்க ளென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றேன்
- ஈது நமக்குந் தெரியுமென்றா ரிறையா மோவிங் கிதுவென்றேன்
- ஓது மடியர் மனக்கங்கு லோட்டு மியாமே யுணரென்றார்
- ஆது தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் விளங்கு மதனன் மென்மலரே
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் காணென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றார்
- ஆற்றா விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- திண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார்
- அண்ணஞ் சுகமே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- துய்ய வதன்மேற் றலைவைத்துச் சொன்னாற் சொல்வே மிரண்டென்றார்
- உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே னுலகி லெவர்க்கு மாமென்றார்
- ஐய விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நும்பே ரியாதென்றேன்
- இயலா யிட்ட நாமமதற் கிளைய நாம மேயென்றார்
- செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
- கயலா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைய நினைவீரேற்
- பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யறியென்றார்
- மின்மேற் சடையீ ரீதெல்லாம் விளையாட் டென்றே னன்றென்றார்
- அன்மேற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றற்றதென்றார்
- அடியார்க் கெளியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஞால ராதி வணங்குமொற்றி நாதர் நீரே நாட்டமுறும்
- பால ராமென் றுரைத்தேனாம் பால ரலநீ பாரென்றார்
- மேல ராவந் திடுமென்றேன் விளம்பேல் மகவு மறியுமென்றார்
- கோல ராமென் றுரைத்தேன்யாங் கொண்டோ முக்க ணென்றாரே.
- கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் கடிநகரீர்
- தனிமா னேந்தி யென்றேனென் றலைமே லொருமா னேந்தியென்றார்
- துனிமாற் றுகிலீ ரென்றேனற் றுகில்கோ வணங்கா ணென்றாரென்
- பனிமால் வரையீ ரென்றேனென் பனிமால் வரைகா ணென்றாரே.
- மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
- மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
- விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
- வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
- புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
- பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
- கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
- கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.
- தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்
- சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
- வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம
- வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்
- இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்
- கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ
- செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்
- திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.
- வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
- மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
- தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
- தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
- ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
- குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
- கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
- காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.
- மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
- மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
- ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
- அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
- பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
- புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
- மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
- வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.
- மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
- கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
- ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
- வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.
- ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
- உந்தியே வைகுந்தம்மேல்
- ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
- ஊறலே அமுதம்அவர்தம்
- பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
- பார்வையே கருணைநோக்கம்
- பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
- பரமசுக மாகும்இந்த
- யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
- உறுசுவைப் பழம்எறிந்தே
- உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
- லோரைநிந் திப்பர்அவர்தம்
- வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
- பேச்சிவை எலாம்வேதனாம்
- பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
- பெரும்புரட் டாகும்அல்லால்
- ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
- ஒருசிறிதும் இல்லைஇல்லை
- உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
- உலர்ந்தீர்கள் இனியாகினும்
- மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
- விரைமலர்த் தொடைஆதியா
- வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
- விளையாடு வீர்கள்என்பார்
- வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
- காண்பதே அருமைஅருமை
- கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
- கருணையால் அவர்வலியவந்
- திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
- தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
- கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
- ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
- பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
- புல்லாதி உணும்உயிர்களும்
- போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
- புறச்சுவர் எனப்புகலலாம்
- வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
- விளம்பஎனில் இவ்வுலகிலோ
- மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
- மேவுமண் ணெனினும்உதவக்
- கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
- களவுகட் காமம்முதலாக்
- கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
- கனவிலும் கண்டறிகிலார்
- ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
- அங்கைதாங் கங்கைஎன்னும்
- ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
- வசுத்தநீங் காதுகண்டாய்
- மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
- இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
- ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
- இலங்குமர மியஅணையுமாய்த்
- தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
- தழைத்திடு நிலாக்காலமாய்த்
- தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
- தன்னிசைப் பாடல்இடமாய்
- களவேக லந்தகற் புடையமட வரல்புடை
- கலந்தநய வார்த்தைஉடனாய்க்
- களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
- கழல்நிழற் சுகநிகருமே
- வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத்
- தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
- ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
- ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே.
- தவள நிறத்துத் திருநீறு தாங்கு மணித்தோள் தாணுவைநம்
- குவளை விழித்தாய் ஒருபுறத்தே குலவ விளங்கும் குருமணியைக்
- கவள மதமா கரியுரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப்
- பவள மலையைப் பழமலையிற் பரவி ஏத்திக் கண்டேனே.
- மடந்தை மலையாண் மனமகிழ மருவும் பதியைப் பசுபதியை
- அடர்ந்த வினையின் தொடக்கைஅறுத் தருளும் அரசை அலைகடன்மேல்
- கிடந்த பச்சைப் பெருமலைக்குக் கேடில் அருள்தந் தகம்புறமும்
- கடந்த மலையைப் பழமலைமேற் கண்கள் களிக்கக் கண்டேனே.
- ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
- பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
- ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
- மின்திரண்டு நின்றசடை மேல்.
- தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
- சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
- மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
- வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
- பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
- புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
- அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- ஆனந்த மதுசச்சி தானந்த மேஇஃது
- அறிந்தடைதி என்றநலமே
- இரவுபகல் அற்றஇடம்அதுசகல கேவலம்
- இரண்டின்நடு என்றபரமே
- இச்சைமன மாயையே கண்டன எலாம்அவை
- இருந்துகாண் என்றதவமே
- என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
- இருந்தசிவ மேஎன் அன்பே
- என்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று
- எடுத்ததா யேஎன்உறவே
- என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே
- என்அருட் குருவடிவமே
- கலகமனம் உடையஎன் பிழைபொறுத் தாட்கொண்ட
- கருணையங் கடல்அமுதமே
- கருதவரும் ஒருதிருப் பெயர்கொள்மணியேஎமைக்
- காப்பதுன் கடன்என்றுமே.
- பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
- நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
- மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
- பொய்யகலப் போற்றுவம்இப் போது.
- வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
- மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
- தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
- தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்
- பண்படா ஏழையின்சொற்
- பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான
- பரமார்த்த ஞானநிலையை
- கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
- கருணைசெய் தாளாவிடில்
- கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்
- கடவுளே கருணைசெய்வாய்
- தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி
- தந்தஒரு சுந்தரியையும்
- தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய
- சத்தியையும் வைத்துமகிழ்என்
- அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
- றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
- நெறிநிற்கும் அன்பர்மனமாம்
- நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
- நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
- வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
- விண்ணே அகண்டசுத்த
- வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
- வேதமே வேதமுடிவே
- தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
- துணைமலர்த் தாட்குரியனாய்த்
- துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
- தோயஅருள் புரிதிகண்டாய்
- ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
- அம்மைசிவ காமியுடனே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே
- இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே
- மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்
- அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே.
- திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
- உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
- குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
- மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே.
- அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
- பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
- இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
- மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
- வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
- பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
- ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
- செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர்.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
- மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்
- சிவமே நினது திருவடிதான் நோவாதா.
- தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
- சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா.
- வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்
- செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா.
- பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
- ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே.
- இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்
- இச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே.
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
- அன்பெனும் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
- அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
- அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
- அன்புரு வாம்பர சிவமே.
- ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
- ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
- ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
- அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
- சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
- அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
- அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
- அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
- அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
- மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
- வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
- ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
- ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
- மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய
- அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
- நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
- ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
- அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காலமே முதலிய கருவிகள் கலைவெளி
- ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
- அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
- ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
- ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
- பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
- பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
- பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
- பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
- பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
- பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
- பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
- பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே
- தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே
- வரம்பரா பரமே வணம்பரா பரமே
- பரம்பரா பரமே பதம்பரா பரமே
- சத்திய பதமே சத்துவ பதமே
- நித்திய பதமே நிற்குண பதமே
- தத்துவ பதமே தற்பத பதமே
- சித்துறு பதமே சிற்சுக பதமே
- தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
- அம்பரம் பதமே யருட்பரம் பதமே
- தந்திர பதமே சந்திர பதமே
- மந்திர பதமே மந்தண பதமே
- நவந்தரு பதமே நடந்தரு பதமே
- சிவந்தரு பதமே சிவசிவ பதமே
- பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
- பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
- பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
- பரமமே பரம பதந்தருஞ் சிவமே
- அவனோ டவளா யதுவா யலவாய்
- நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
- எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்
- செம்பொரு ளாகிய சிவமே சிவமே
- ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
- திருநிலை மேவிய சிவமே சிவமே
- மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
- தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
- புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
- சிரமுற நாட்டிய சிவமே சிவமே
- கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
- செல்வமு மளித்த சிவமே சிவமே
- அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
- தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
- சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
- சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
- எங்கே கருணை யியற்கையி னுள்ளன
- அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
- யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
- சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே
- பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
- செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
- கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
- பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
- உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
- செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
- பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
- உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
- உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
- உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
- இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
- உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
- அருளலா தணுவு மசைந்திடா ததனால்
- அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
- அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
- அருளுற முயல்கவென் றருளிய சிவமே
- அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
- இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
- அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
- தெருளிது வெனவே செப்பிய சிவமே
- அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
- மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
- அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
- மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
- அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
- றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
- அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
- பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
- அருளறி யார்தமை யறியார் எம்மையும்
- பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
- அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
- பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
- அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
- வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
- அருளே நம்மிய லருளே நம்முரு
- அருளே நம்வடி வாமென்ற சிவமே
- அருளே நம்மடி யருளே நம்முடி
- அருளே நம்நடு வாமென்ற சிவமே
- அருளே நம்மறி வருளே நம்மனம்
- அருளே நங்குண மாமென்ற சிவமே
- அருளே நம்பதி யருளே நம்பதம்
- அருளே நம்மிட மாமென்ற சிவமே
- அருளே நந்துணை யருளே நந்தொழில்
- அருளே நம்விருப் பாமென்ற சிவமே
- அருளே நம்பொரு ளருளே நம்மொளி
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளே நங்குல மருளே நம்மினம்
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
- அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
- அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
- அருளர சியற்றுகென் றருளிய சிவமே
- கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
- வையமேல் வைத்த மாசிவ பதியே
- எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
- வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
- பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
- பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
- சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
- வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
- தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே
- என்னைமே லேற்றிய வினியநற் றாயே
- ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
- ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
- விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
- யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
- உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
- வணமுறு மின்ப மயமே யதுவாய்க்
- பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
- ஆரண முடியுட னாகம முடியுங்
- கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
- நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே
- அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
- பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
- விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
- கண்பெற நடத்துங் ககனமா மணியே
- வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
- நான்பெற வளித்த நாதமந் திரமே
- கற்பம் பலபல கழியினு மழியாப்
- பொற்புற வளித்த புனிதமந் திரமே
- அகரமு முகரமு மழியாச் சிகரமும்
- வகரமு மாகிய வாய்மைமந் திரமே
- ஐந்தென வெட்டென வாறென நான்கென
- முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
- வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
- ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
- உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
- துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
- சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்
- ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே
- கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
- மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
- கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
- இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
- புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
- கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே
- நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
- சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே
- இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
- உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
- திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே
- அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே
- என்பெருந் தவமே என்றவப் பலனே
- என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே
- என்பெரு நலமே யென்பெருங் குலமே
- என்பெரு வலமே யென்பெரும் புலமே
- என்பெரு வரமே யென்பெருந் தரமே
- என்பெரு நெறியே யென்பெரு நிலையே
- என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
- என்பெருந் தயவே யென்பெருங் கதியே
- தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
- மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட
- உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
- அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
- தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
- என்வசங் கடந்த என்னுடை யன்பே
- மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
- இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே
- ஆகம முடிமே லருளொளி விளங்கிட
- வேகம தறவே விளங்கொளி விளக்கே
- பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
- மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
- உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
- வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
- முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
- என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
- சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
- சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
- அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
- தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
- அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
- அருட்பெருந் திருவிலே அமர்ந்த
- அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
- அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
- அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
- கோடிகோ டிகளும்ஆங் காங்கே
- நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
- நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
- விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
- மெய்யறி வானந்தம் விளங்க
- அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
- நண்ணியும் கண்ணுறா தந்தோ
- திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
- திரும்பின எனில்அதன் இயலை
- இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
- இசைத்திடு வேம்என நாவை
- அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- சுத்தவே தாந்த மவுனமோ அலது
- சுத்தசித் தாந்தரா சியமோ
- நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
- நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
- புத்தமு தனைய சமரசத் ததுவோ
- பொருள்இயல் அறிந்திலம் எனவே
- அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
- வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
- எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
- இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
- அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
- அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
- திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
- அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
- மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
- மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
- துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
- துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
- உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
- ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
- கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
- கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
- கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
- கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
- ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
- வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
- புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
- புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
- மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
- விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
- உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
- தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
- வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
- பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.
- திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
- உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
- கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
- குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.
- தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே
- நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே
- துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே
- சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே.
- நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
- இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
- திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
- கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.
- நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே
- மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே
- கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே
- பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே.
- கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் கலகர்தம் உறவினிற் களித்தேன்
- உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியற் போகமே உவந்தேன்
- செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
- குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கண்மனக் குரங்கனேன் கடையேன்
- நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
- நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
- கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
- கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
- ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
- கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
- விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
- குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
- கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
- வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
- மாய மேபுரி பேயரில் பெரியேன்
- பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
- பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
- மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
- வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
- இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
- ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
- குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
- கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
- சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
- தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
- வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
- பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
- பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
- கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
- கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
- பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
- புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
- கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
- காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
- மான மேலிடச் சாதியே மதமே
- வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
- ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
- இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
- ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
- நாய காஎனை நயந்துகொண் டருளே.
- இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
- இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
- மருளை யேதரு மனக்குரங் கோடும்
- வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
- பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
- பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
- அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
- பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
- கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
- இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
- முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
- உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
- மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
- கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
- அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
- இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
- செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
- எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
- படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
- கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
- பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
- அடிமேல் அசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.
- கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
- வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
- பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
- ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
- போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
- ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக்
- காகமேஎனப்போய்ப்பிறர் தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன்
- மோகமேஉடையேன் என்னினும்எந்தாய் முனிந்திடேல்காத்தருள் எனையே.
- கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
- கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
- அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அறவுண்டு குப்பைமேற் போட்ட
- நெட்டிலை அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே.
- உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் தோதிய வறிஞருக் கேதும்
- கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் குணம்பெரி துடையநல் லோரை
- அடுத்திலேன் அடுத்தற்காசையும் இல்லேன் அவனிமேல் நல்லவன் எனப்பேர்
- எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் றிருக்கின்றேன் காத்தருள் எனையே.
- தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
- சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
- ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
- காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
- கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்
- நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்
- ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்
- பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
- மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
- சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
- இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
- குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
- செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையும் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
- சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
- நீதியே நிறைநின் திருவருள் அறிய
- நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
- ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
- உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
- ஆதியே நடுவே அந்தமே ஆதி
- நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
- விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
- கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
- கரைஎலாம் கடந்தது கண்டாய்
- வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
- வல்லவா அம்பல வாணா
- திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
- திகழ்வித்த சித்தனே சிவனே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
- றிருள்இர வொழிந்தது முழுதும்
- மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
- மங்கல முழங்குகின் றனசீர்ப்
- பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
- பூவையர் புணர்ந்திடப் போந்தார்
- சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
- துலங்கவந் தருளுக விரைந்தே.
- சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
- காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
- வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
- ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
- தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.
- அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
- அழைத்தனன் அப்பனே என்னை
- எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
- எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
- பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
- பெருந்திறல் சித்திகள் எல்லாம்
- சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
- சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
- களித்தென துடம்பில் புகுந்தனை எனது
- கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
- தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
- சிறப்பினால் கலந்தனை உள்ளம்
- தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
- தடைபடாச் சித்திகள் எல்லாம்
- அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
- அடியன்மேல் வைத்தவா றென்னே.
- என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்
- ஏற்றினை யாவரும் வியப்பப்
- பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்
- பூரண ஞானமும் பொருளும்
- உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்
- உவகையும் உதவினை எனக்கே
- தன்னிகர் இல்லாத் தலைவனே நினது
- தயவைஎன் என்றுசாற் றுவனே.
- சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
- தூயநல் உடம்பினில் புகுந்தேம்
- இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
- இன்புறக் கலந்தனம் அழியாப்
- பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
- பரிசுபெற் றிடுகபொற் சபையும்
- சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
- தெய்வமே வாழ்கநின் சீரே.
- என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி
- மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
- பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன்
- அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே.
- கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
- திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே
- உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்
- அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத்
- துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் நின்னருளே துணைஎன் றந்தோ
- என்பேதை மனமடங்கி இருப்பதன்றி எல்லாங்கண் டிருக்கும் என்றன்
- அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
- செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
- காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
- கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
- மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
- விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
- ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
- எப்படியோ திருவுளந்தான் ஏதும்அறிந் திலனே.
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
- மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
- கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
- கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
- தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
- தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
- திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
- கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
- நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
- நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
- ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
- இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
- தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
- பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
- பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
- அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.
- வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
- சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே
- இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
- செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு
- நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே
- கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
- செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
- அப்பணி முடி204 என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே
- இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே
- எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே
- செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.
- அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
- பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி இன்றுநான் பேசுவ தென்னே
- செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் திருவருள் அமுதமே விழைந்தேன்
- எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
- செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்தநாள் அன்றி
- அறிவதில் லாத சிறுபரு வத்தும் அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
- எறிவதும் மேட்டில் எறிந்தும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந் ததுவே
- பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவ தென்னே.
- கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் கிளைத்திலேன் பசிஅற உணவு
- திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
- தளைத்திடு முடைஊன்உடம்பொருசிறிதும்தடித்திடநினைத்திலேன் இன்றும்
- இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் இயம்பல்என்நீ அறிந்ததுவே.
- திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில்
- உருவளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
- மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும்
- கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய்.
- தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
- துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
- அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
- திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
- பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
- பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
- உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
- என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா
- என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே
- என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே
- என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
- கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
- வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
- தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
- தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
- சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
- ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
- வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
- பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
- விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
- ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
- கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
- காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
- மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
- ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
- பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
- நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
- அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
- இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
- வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
- மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
- நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
- மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
- இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
- துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
- அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ213 தெய்வமே இவற்றால்
- வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
- அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
- சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
- வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
- தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
- பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
- இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
- உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
- நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
- சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
- பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
- தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
- கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
- வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
- நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
- பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
- முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
- தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
- குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
- பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
- பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
- மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
- வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
- ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
- நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
- பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
- வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
- அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
- கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
- மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன்
- வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
- பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.
- வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
- சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
- பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும்
- கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.
- எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
- தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
- களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
- அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
- பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
- அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
- பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
- முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
- ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத்
- தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால்
- நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
- தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
- பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
- நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே
- நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.
- இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ
- துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
- உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது
- மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.
- என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன்
- தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும்
- வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும்
- இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.
- தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
- சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
- பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
- ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
- சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
- பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
- நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
- பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
- சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
- நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
- ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
- கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்
- மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
- இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
- தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
- உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
- சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும்
- மறுகிநின் றாடிஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச்
- சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச்
- சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும்
- எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு
- தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்.
- அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே
- வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே
- இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
- வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.
- பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய்யுல காசைசற் றறியேன்
- நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
- கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
- செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ தெய்வமே என்றிருக் கின்றேன்.
- பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் புண்ணியா கண்ணினுள் மணியே
- கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்பருங் கருணையங் கடலே
- தெய்வமே எனநான் நின்னையே கருதித் திருப்பணி புரிந்திருக் கின்றேன்
- மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
- தேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
- வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம்
- தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.
- அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
- நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
- படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
- செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
- பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
- உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும்
- என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
- மன்னிய சோதி யாவும்நீ அறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே.
- ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
- வெய்யதீ மூட்டிவிடுதல்232 ஒப் பதுநான் மிகஇவற் றால்இளைத் திட்டேன்
- வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
- உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
- எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
- எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
- செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
- திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
- தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
- தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
- களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
- களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
- துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
- துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
- தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
- தெளித்தனன் செய்கைவே றறியேன்
- ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
- ஊழிதோ றுழிசென் றிடினும்
- என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
- இயல்அருட் சித்திகள் எனைவந்
- தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
- உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
- உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
- மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
- இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்
- என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
- சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
- சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
- பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
- பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.
- முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
- முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
- தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
- தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
- என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
- யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
- பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
- பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.
- விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
- விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
- மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
- முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
- செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
- சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
- பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
- பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.
- கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
- கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
- சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
- திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
- விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
- விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
- தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
- சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.
- காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
- கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
- கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
- கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
- சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
- சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
- பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
- பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.
- சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
- செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
- இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
- கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
- சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
- சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
- நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- வேண்டார் உளரோ நின்னருளை மேலோ ரன்றிக் கீழோரும்
- ஈண்டார் வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான்வேண்டல்
- தூண்டா விளக்கே திருப்பொதுவிற் சோதி மணியே ஆறொடுமூன்
- றாண்டா வதிலே முன்னென்னை ஆண்டாய் கருணை அளித்தருளே.
- திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
- புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய்உரைத்தே
- இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
- அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
- கருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
- தெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே
- இருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்
- தருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.
- அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
- குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
- நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
- பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
- சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
- அகமே விளங்கத் திருஅருளா ரமுதம் அளித்தே அணைத்தருளி
- முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல்
- சகமேல்240 இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.
- தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை
- எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
- சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால்
- வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே.
- 235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
- 236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
- 238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 239. ஒருவா - ச. மு. க.
- 240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.
- மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்
- மெய்யனே ஐயனே எனக்கு
- மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்
- வல்லனே நல்லனே அருட்செங்
- கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்
- குணத்தனே இனிச்சகிப் பறியேன்
- காலையே தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- தனித்துணை எனும்என் தந்தையே தாயே
- தலைவனே சிற்சபை தனிலே
- இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணுள்மா மணியே
- அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்
- திசைந்தபே ரின்பமே யான்தான்
- பண்ணிய தவமே தவத்துறும் பலனே
- பலத்தினால் கிடைத்தஎன் பதியே
- தண்ணிய மதியே மதிமுடி அரசே
- தனித்தசிற் சபைநடத் தமுதே
- புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே
- மந்திர மேஒளிர் மணியே
- நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த
- நேயனே தாயனை யவனே
- பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்
- பரமனே பரமசிற் சுகந்தான்
- புலப்படத் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
- கற்பகத் தீஞ்சுவைக் கனியே
- வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
- விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
- ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
- ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
- புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
- நல்லதிருக் கூத்தாட வல்லதிரு வடிகள்
- கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
- கள்ளமற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
- பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
- பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
- மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
- வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
- நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
- நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
- அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
- அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
- வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
- வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
- கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
- கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
- நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
- நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
- வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
- தாய்கையில் கொடுத்தனை அவளோ
- வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
- மாயமே புரிந்திருக் கின்றாள்
- கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
- கேட்பதற் கடைந்திலன் அந்தோ
- உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
- உற்றிலை பெற்றவர்க் கழகோ.
- அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
- நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
- நீலியோ தன்புடை ஆடும்
- தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
- தனித்தனி அவர்அவர் எடுத்தே
- கத்தவெம் பயமே காட்டினர் நானும்
- கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
- ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
- ஆண்டுகொண் டருளி பொருளே
- வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
- மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
- வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
- தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
- நாடகக் கருணை நாதனே உன்னை
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
- வயங்குசிற் சோதியே அடியேன்
- இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
- இன்பமே என்பெரும் பொருளே
- கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
- கடவுளே கனகமன் றகத்தே
- நட்டமே புரியும் பேரரு ளரசே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
- லாமையால் அழுங்குவார் எனஉண்
- மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
- விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
- தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
- சித்தனே சத்திய சபைக்கு
- நாயகா உயிர்க்கு நயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
- ஆடிய சிறுபரு வத்தே
- குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
- குணப்பெருங் குன்றமே குருவே
- செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
- சிந்தையில் இனிக்கின்ற தேனே
- நற்றக வுடைய நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
- கடியனேன் காமமே கலந்து
- வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
- வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
- மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
- மக்களை ஒக்கலை மதித்தே
- நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
- ஊர்தொறும் உண்டியே உடையே
- தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
- தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
- வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
- வஞ்சமே பொருளென மதித்து
- நாடினேன் எனினும் பாடினேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
- வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
- அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
- அடிக்கடி வாங்கிய கொடியேன்
- இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
- எனைவிடக் கொடியருக் கீந்தேன்
- நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
- காசிலே ஆசையில் லவன்போல்
- பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
- பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
- இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
- இழுதையிற் றூங்கினேன் களித்து
- நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
- எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
- களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
- காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
- துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
- சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
- நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- திண்ணமும் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
- வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
- தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
- எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
- நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
- ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
- பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
- வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
- வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
- பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
- சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
- ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
- காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
- மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
- விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
- செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
- தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
- மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
- பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
- கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
- கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
- மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
- மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
- மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
- கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
- அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
- தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
- சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
- நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
- நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
- இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
- இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
- மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
- வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
- குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
- குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
- பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
- புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
- காரண காரியக் கல்விகள் எல்லாம்
- கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
- நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
- நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
- பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
- புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
- ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
- செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
- போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
- போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
- ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
- இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
- ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- ஓங்கு பொன்னணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
- பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
- தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறுமாறே.
- ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
- உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
- வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
- வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
- கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
- கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
- நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
- நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
- பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
- புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
- சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
- தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
- எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
- இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
- இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
- என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
- உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
- உலவா ஒருபே ரருளா ரமுதம்
- தருவாய் இதுவே தருணம் தருணம்
- தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
- வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
- மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
- குருவாய் முனமே மனமே இடமாக்
- குடிகொண் டவனே அபயம் அபயம்.
- கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
- கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
- முடியேன் பிறவேன் எனநின் அடியே
- முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
- படியே அறியும் படியே வருவாய்
- பதியே கதியே பரமே அபயம்
- அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
- அரசே அருள்வாய் அபயம் அபயம்.
- குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
- குணமே கொளும்என் குருவே அபயம்
- பற்றம் பலமே அலதோர் நெறியும்
- பதியே அறியேன் அடியேன் அபயம்
- சுற்றம் பலவும் உனவே எனவோ
- துணைவே றிலைநின் துணையே அபயம்
- சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
- சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
- கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
- காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
- விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
- மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
- துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
- தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
- அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
- குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
- ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
- உகந்ததண் ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
- மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
- மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
- ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
- விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
- துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
- நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
- பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
- பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
- கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- கோவேஎன் கணவாஎன் குரவாஎன்281 குணவா
- நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
- நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.
- கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
- கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
- மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
- மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
- நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
- நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
- பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
- கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
- பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
- பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
- மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
- வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
- பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
- பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.
- உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
- உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
- பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
- பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
- மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
- மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
- திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
- சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
- நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
- ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
- ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
- தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
- வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
- அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
- படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
- பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
- பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
- பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
- அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
- அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
- கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
- காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
- செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
- செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
- வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
- விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
- வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
- ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
- ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
- சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
- சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
- போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
- புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
- நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
- நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
- வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
- விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
- தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
- தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
- உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
- துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
- பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
- காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
- வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
- மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
- நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
- நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
- எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
- என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
- சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
- விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
- மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
- பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
- படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
- உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
- கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
- சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
- தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
- பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
- படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
- ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
- ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
- உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
- பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
- பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
- திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
- செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
- கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
- காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
- இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
- பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
- போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
- மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
- மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
- அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
- நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்283 மலர்க்கால்
- தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
- தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
- ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
- எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
- தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
- ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
- பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
- பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
- நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
- நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
- அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.
- சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
- தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
- நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
- நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
- சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
- சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
- புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
- எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
- தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
- தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
- ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
- புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
- தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
- தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
- முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
- முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
- என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
- இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
- என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
- இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
- உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
- பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
- பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
- நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
- நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
- மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
- வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
- குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
- நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
- மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
- விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
- கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
- காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
- மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
- வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
- களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
- மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
- மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
- சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
- சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
- மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
- மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
- ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
- மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
- வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
- சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
- துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
- சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
- சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
- எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
- அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
- அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
- திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
- திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
- பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
- தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
- மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
- வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
- நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
- நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி
- அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- 281. எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 282. தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.
- 283. முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க. மடிமேல் - பி. இரா., ஆ. பா.
- 284. மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
- பரம்பர ஒளிஎலாம் அணுவில்
- கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
- கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
- அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
- அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
- கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
- திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
- நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
- ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
- உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
- இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
- மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
- மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
- நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
- நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
- குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
- காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
- ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
- உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
- மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
- மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
- குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
- சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
- மேயானைக் கண்காண விளங்கி னானை
- மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
- வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
- வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
- ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
- பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
- காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
- கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
- மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
- மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
- ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
- மந்திரங்க ளானானை வான நாட்டு
- விருந்தானை உறவானை நண்பி னானை
- மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
- பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
- பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
- இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
- சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
- வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
- வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
- வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
- மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
- ஈய்ந்தானை268 ஆய்ந்தவர்தம் இதயத் தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- நனவிலும் எனது கனவிலும் எனக்கே
- நண்ணிய தண்ணிய அமுதை
- மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
- வழங்கிய பெருந்தயா நிதியைச்
- சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
- சிவகுரு பதியைஎன் சிறப்பை
- உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
- ஆகம முடிஅமர் பரத்தைக்
- காரண வரத்தைக் காரிய தரத்தைக்
- காரிய காரணக் கருவைத்
- தாரண நிலையைத் தத்துவ பதியைச்
- சத்திய நித்திய தலத்தைப்
- பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
- பொருளினைக் கண்டுகொண் டேனே.
- தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
- யேச்சுரன் சதாசிவன் விந்து
- நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
- நவில்பர சிவம்எனும் இவர்கள்
- இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
- இடதுகாற் கடைவிரல் நகத்தின்
- கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
- கண்டனன் திருவடி நிலையே.
- இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
- பிரமன்ஈ சானனே முதலாம்
- மகத்துழல் சமய வானவர் மன்றின்
- மலரடிப் பாதுகைப் புறத்தும்
- புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
- புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
- செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
- தெரிந்தனன் திருவடி நிலையே.
- பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
- போந்தவான் முடியதாங் கதன்மேல்
- மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
- வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
- என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
- தத்திலே இலங்கிய ததன்மேல்
- தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
- தழுவினன் திருவடி நிலையே.
- மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
- மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
- அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
- அமைந்தன சத்திகள் அவற்றின்
- கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
- கருதுரு முதலிய விளங்க
- நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
- நவின்றனர் திருவடி நிலையே.
- பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
- பெரியஓங் காரமே முதலா
- ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
- என்றவற் றவண்அவண் இசைந்த
- மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
- மன்அதி காரம்ஐந் தியற்றத்
- தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
- என்பரால் திருவடி நிலையே.
- பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
- பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
- உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
- வெறுவெளி எனஉல குணர்ந்த
- புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
- திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
- திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
- என்பரால் திருவடி நிலையே.
- எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
- இடங்கொண்ட இறைவன் தன்னை
- இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
- தந்தானை எல்லாம் வல்ல
- செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
- தெள்ளமுதத் திரளை என்றன்
- அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
- இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
- எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
- பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
- பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
- செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
- சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
- மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
- மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
- ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
- எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
- தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- ஆனந்த போகமே அமுதே
- மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- மன்னும்என் ஆருயிர்த் துணையே
- துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
- தூயவே தாந்தத்தின் பயனே
- பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
- உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
- ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
- உவந்தர சளிக்கின்ற அரசே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- சோதியுட் சோதியே எனது
- மதிவளர் மருந்தே மந்திர மணியே
- மன்னிய பெருங்குண மலையே
- கதிதரு துரியத் தனிவெளி நடுவே
- கலந்தர சாள்கின்ற களிப்பே
- பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
- செல்வமே என்பெருஞ் சிறப்பே
- நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
- நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
- ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
- திருந்தர சளிக்கின்ற பதியே
- பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- ஒள்ளிய தெள்ளிய ஒளியே
- வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
- மந்திரத் தாற்பெற்ற மணியே
- நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
- நிறைந்தர சாள்கின்ற நிதியே
- பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மெய்யறி வானந்த விளக்கே
- கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
- கதிர்நடு வளர்கின்ற கலையே
- ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
- பால்அர சாள்கின்ற அரசே
- பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- இன்பமே என்னுடை அன்பே
- திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
- திகழுறத் திகழ்கின்ற சிவமே
- மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
- வெளிஅர சாள்கின்ற பதியே
- பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- அரும்பெருஞ் சோதியே எனது
- பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
- புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
- மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
- மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
- நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
- நண்புகொண் டருளிய நண்பே
- வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
- வயங்கிய தனிநிலை வாழ்வே
- பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அம்பலத் தாடும் அமுதமே என்கோ
- அடியனேன் ஆருயிர் என்கோ
- எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
- என்னிரு கண்மணி என்கோ
- நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
- நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
- இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
- என்னுயிர்க் கின்பமே என்கோ
- துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
- தனிப்பெருந் தலைவனே என்கோ
- இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
- மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
- குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
- குணப்பெருங் குன்றமே என்கோ
- பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
- பெரியஅம் பலத்தர சென்கோ
- இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- என்உளம் பிரியாப் பேரொளி என்கோ
- என்உயிர்த் தந்தையே என்கோ
- என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
- என்உயிர்த் தலைவனே என்கோ
- என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
- என்னுடை நண்பனே என்கோ
- என்ஒரு275 வாழ்வின் தனிமுதல் என்கோ
- என்னைஆண் டருளிய நினையே.
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
- கணவனே கணவனே என்கோ
- ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
- ஒருதனிப் பெரியனே என்கோ
- திருத்தனே எனது செல்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே என்கோ
- நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
- நிறைஅருட் சோதிநின் றனையே.
- தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
- சர்க்கரை அமுதமே என்கோ
- மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
- முகநகைக் கணவனே என்கோ
- போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
- புணர்ந்தஓர் பூவையே என்கோ
- ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
- அம்பலத் தாடிநின் றனையே.
- யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
- ஓங்கிய காட்சியே என்கோ
- ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
- இசைந்தபே ரின்பமே என்கோ
- சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
- சார்ந்தசற் குருமணி என்கோ
- மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
- மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
- ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
- அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
- காரணமே காரியமே காரணகா ரியங்கள்
- கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
- பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
- புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
- தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
- ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
- அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
- அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
- புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
- பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
- துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
- இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
- ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
- உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
- வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
- மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
- சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
- அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
- போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
- பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
- ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
- இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
- தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
- தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
- ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
- உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
- நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
- நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
- ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
- கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
- பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
- படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
- சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
- சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
- ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
- உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
- ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
- ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
- சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
- சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
- அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
- சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
- உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
- உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
- இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
- எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- அடுக்கியபே ரண்டமெலாம் அணுக்கள்என விரித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- நடுக்கியஎன் அச்சமெலாம் தவிர்த்தருளி அழியா
- ஞானஅமு தளித்துலகில் நாட்டியபே ரறிவே
- இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக்
- கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே
- முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து
- முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே.
- ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
- ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
- பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
- படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
- தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
- சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
- ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
- என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
- பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
- பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
- காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
- கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
- அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
- மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
- கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
- கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
- மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
- மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
- அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
- வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
- இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
- எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
- சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
- சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
- அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
- அளித்தெனை வளர்த்திட அருளாம்
- தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
- தெய்வமே சத்தியச் சிவமே
- இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
- ஏற்றிய இன்பமே எல்லாப்
- பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
- கற்பங்கள் கணக்கில கடப்ப
- நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
- நித்திய நிற்குண258 நிறைவே
- அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
- அருட்பெருங் கடல்எனும் அரசே
- புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
- சத்திய சாத்தியக் கனலே
- ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
- உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
- நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
- நல்கிய ஞானபோ னகமே
- புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
- அறிவென அறிகின்ற அறிவே
- சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
- துரியநல் நிலத்திலே துலங்கும்
- சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
- செல்வமே சித்தெலாம் புரியும்
- பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
- விளைவெலாம் காட்டிமெய் வேத
- நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
- நோக்கமே ஆக்கமும் திறலும்
- நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
- நாயகக் கருணைநற் றாயே
- போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
- அரும்பெருஞ் சோதியே சுடரே
- மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
- மருந்தெலாம் பொருந்திய மணியே
- உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
- உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
- புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே
- முடிபெலாம் கடந்ததோர் முதலே
- தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
- சத்தியத் தனிநடு நிலையே
- மேவிய நடுவில் விளங்கிய விளைவே
- விளைவெலாம் தருகின்ற வெளியே
- பூவியல் அளித்த புனிதசற் குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
- விளம்பிய அனுபவ விளைவும்
- போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
- போனது மாய்ஒளிர் புலமே
- ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
- விருநிலத் தியல்அருள் ஒளியால்
- பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
- அருள்வடி வெடுத்தெழுந் தருளி
- நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
- நிலைஎலாம் அளித்தமா நிதியே
- மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
- வயங்கநல் வரந்தந்த வாழ்வே
- பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சத்திய பதியே சத்திய நிதியே
- சத்திய ஞானமே வேத
- நித்திய நிலையே நித்திய நிறைவே
- நித்திய வாழ்வருள் நெறியே
- சித்திஇன் புருவே சித்தியின் கருவே
- சித்தியிற் சித்தியே எனது
- புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
- சிவபத அனுபவச் சிவமே
- மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
- மதிநிறை அமுதநல் வாய்ப்பே
- சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
- சாமியே தந்தையே தாயே
- புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைவளர் கலையே கலையினுட் கலையே
- கலைஎலாம் தரும்ஒரு கருவே
- நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
- நித்திய வானமே ஞான
- மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
- மாபலம் தருகின்ற வாழ்வே
- புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
- விளக்கமே விளக்கத்தின் வியப்பே
- கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
- கருணையே கரிசிலாக் களிப்பே
- ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
- அற்புதக் காட்சியே எனது
- பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- காரண அருவே காரிய உருவே
- காரண காரியம் காட்டி
- ஆரண முடியும் ஆகம முடியும்
- அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
- நாரண தலமே263 நாரண வலமே
- நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
- பூரண ஒளிசெய் பூரண சிவமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- 258. நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 259. சற்புதர் - நல்லறிவுடையவர்.
- 260. பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
- 261. தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 262. முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
- 263. தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.
- அன்பனே அப்பா அம்மையே அரசே
- அருட்பெருஞ் சோதியே அடியேன்
- துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
- சுகத்திலே தோற்றிய சுகமே
- இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
- என்னுளே இலங்கிய பொருளே
- வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
- ஒருவனே உலகெலாம் அறியத்
- தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
- சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
- கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
- கடவுளே கனகஅம் பலத்தென்
- வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- திண்மையே முதலைங் குணக்கரு வாய
- செல்வமே நல்வழி காட்டும்
- கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
- கண்ணுற இயைந்தநற் கருத்தே
- உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
- ஒருதனித் தெய்வமே உலவா
- வண்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
- கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
- பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
- அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
- தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
- கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
- அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
- செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
- எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
- அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
- கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
- செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
- ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
- மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
- பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
- அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
- விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
- தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
- உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
- வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
- அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
- ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
- இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
- உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
- அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
- இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
- உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
- அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
- கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
- உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
- தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
- ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
- உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
- வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
- வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
- நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
- நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
- கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
- காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
- எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
- ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
- இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
- இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ராய்
- அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
- அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
- திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்
- பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்
- படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
- விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்
- வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே
- கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்
- கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
- வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
- கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
- முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.
- இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும்
- கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே
- தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே
- முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம் முழுதையுமே.
- புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
- நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
- முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
- தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
- சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
- ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே
- தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே
- பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்
- தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.
- தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
- கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
- ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
- ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
- எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின்
- நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே
- கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென்
- பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே.
- அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளா ரமுதம் மிகப்புகட்டிச்
- சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
- நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
- தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
- எம்மே தகவும் உடையவர்தம் இதயத் தமர்ந்த இறையவனே
- இம்மே தினியில் எனைவருவித் திட்ட கருணை எம்மானே
- நம்மே லவர்க்கும் அறிவரிய நாதா என்னை நயந்தீன்ற
- அம்மே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
- கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
- பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
- பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
- நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
- நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
- எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
- என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
- புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
- பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
- சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
- சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
- மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
- வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
- என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
- மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
- வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
- அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
- அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
- தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
- சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
- இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
- எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
- தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
- கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
- அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
- பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
- கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
- அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
- ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
- வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
- லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
- புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
- தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
- இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
- முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
- சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
- அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
- வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
- பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
- ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
- கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
- நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
- ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
- மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
- எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
- அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
- தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
- கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
- அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
- பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
- நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
- எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
- அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
- மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
- தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
- அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
- நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
- நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
- கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
- கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
- ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்
- திருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்
- எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி
- என்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்
- சித்திக்கு மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே
- திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே
- இத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
- சேர்கதி பலபல செப்புகின் றாரும்
- பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
- பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
- மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
- மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
- எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
- மன்னிய உண்மை ஒன்றென்றே
- எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
- திறையும்வே றெண்ணிய துண்டோ
- அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
- அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
- தெளிவித்துக் காப்பதுன் கடனே.
- காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
- சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
- சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
- ஏகா நினக்கடிமை ஏற்று.
- மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
- யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
- நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
- தாய்க்குத் தனிஇயற்கை தான்.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
- அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
- அழியாச்சிற் றம்பலத்தே யான்.
- தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
- மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
- குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
- மணவாளன் பாத மலர்.
- துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
- சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
- விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
- விழித்திருந் திடவும்நோ வாமே
- மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
- மன்றிலே வயங்கிய தலைமைப்
- பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
- வெம்மையே நீங்கிட விமல
- வாதமே வழங்க வானமே முழங்க
- வையமே உய்யஓர் பரம
- நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
- நன்மணி மன்றிலே நடிக்கும்
- பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
- நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
- போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
- நாற்றிசையும் வாழ்க நயந்து.
- செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
- இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
- சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
- துன்மார்க்கம் போக தொலைந்து.
- செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
- சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
- சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
- என்மார்க்கம் நின்மார்க்க மே.
- ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல்
- சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய
- இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்
- கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்.
- தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்
- சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்
- காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்
- தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.
- வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
- மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
- நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி
- நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி.
- நவநிலை மேற்பர நாதத் தலத்தே
- ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
- மவுனத் திருவீதி வருவாயோ தோழி
- வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.
- அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
- அன்பினால் அணைத்தருள் என்றாள்
- பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
- படமுடி யாதெனக் கென்றாள்
- செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
- திருவுளம் அறியுமே என்றாள்
- வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
- பொங்கிய தாசைமேல் என்றாள்
- என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
- என்னள வன்றுகாண் என்றாள்
- கொன்செயும் உலகர் என்னையும் உனது
- குறிப்பையும் குறித்திலார் என்றாள்
- வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
- மேவிலை என்னையோ என்றாள்
- நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
- நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
- மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
- வைத்தல்உன் மரபல என்றாள்
- வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
- பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
- இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
- எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
- மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
- மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
- தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
- வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
- இக்குல மாதரும் யானும்என் நாதர்
- இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
- பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
- பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
- எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
- அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
- தேறறி வாகிச் சிவானு பவத்தே
- சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
- மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
- வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
- ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
- எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
- வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
- நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
- கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
- இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
- சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
- துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
- வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
- இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
- புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
- பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
- பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
- மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
- எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
- குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
- மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
- புண்ணியம் புகல்அரி தென்றாள்
- தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
- தயவைநான் மறப்பனோ என்றாள்
- எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
- என்னையோ என்னையோ என்றாள்
- அண்ணிய பேரா னந்தமே வடிவம்
- ஆயினாள் நான்பெற்ற அணங்கே.
- ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
- என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
- பாலும்இன் சுவையும் போன்றென தாவி
- பற்றினன் கலந்தனன் என்றாள்
- சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
- சத்தியை அளித்தனன் என்றாள்
- மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்
- மிகுகளிப் புற்றனள் வியந்தே.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
- பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
- திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
- திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
- புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
- புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
- வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
- வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
- திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
- பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
- படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
- இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
- இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
- நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
- நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
- நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
- ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
- இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
- ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
- அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
- ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
- உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
- மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
- வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
- எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
- எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
- விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
- விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
- அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
- மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
- வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
- கண்ணென்னும் உணர்ச்சிசெலாக் காட்சியவாய்க் நிற்பக்
- கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
- நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
- நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
- அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
- அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
- வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
- விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
- விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
- எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
- இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
- தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
- சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.
- வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல்
- மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள்
- நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும்
- நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில்
- பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும்
- பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில்
- கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல்
- காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி.
- விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
- விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
- பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
- பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
- தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
- செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
- எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
- எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
- வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
- மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
- மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
- தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
- தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
- தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
- இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
- இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
- நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
- நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
- ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி
- ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும்
- வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
- விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
- உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
- உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
- தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
- தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.
- ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம்
- என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில்
- சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்
- சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத்
- தேற்றமிகு தண்ரைச் சீவர்கள்பற் பலரைச்
- செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும்
- ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ
- உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி.
- பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
- பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
- பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
- பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
- உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
- உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
- தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
- தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
- இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்
- றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
- துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ
- சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
- விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த
- மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி
- வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்
- மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.
- வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
- மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
- தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
- துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
- மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
- விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
- ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
- அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
- உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
- நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
- இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
- மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
- மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
- இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
- பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
- சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
- மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
- தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
- தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
- தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
- தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
- ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
- றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
- எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
- அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
- மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
- பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
- தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
- இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
- துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
- அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
- திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
- உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
- இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
- கலகமி லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
- திலகமெ னாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
- தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
- உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
- சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
- மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
- வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
- செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
- சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
- தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
- செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
- குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
- பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
- கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
- திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
- சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
- கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
- செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
- காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்
- வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
- கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
- சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.
- சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
- கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமமிலார்
- நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
- செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே.
- ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
- மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
- மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
- தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
- சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
- பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க
- வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே
- எந்தாய்நின் உள்ளமறி யேன்.
- பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
- நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
- தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
- பாக்கியவான் ஆனேன் பதிந்து.
- என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில்
- முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே
- படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை
- எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே.
- சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந்
- தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய்
- எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை
- எடுத்தாய் தயவைவிய வேன்.
- உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
- தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
- தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
- ஆக்கமுற வைத்தாய் அது.
- நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி
- ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த
- மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின்
- காலிடத்தே வாழ்கின்றேன் காண்.
- கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையாள் கால்மலர்க்குக்
- கைத்தலைமே லிட்டலையிற் கண்ர்கொண் - டுய்த்தலைமேல்
- காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
- காணாயே நெஞ்சே களித்து.
- அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
- அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
- நலமே வதிலேநின் னாவூர் திருவம்
- பலமேவக் காட்டும் பரிசு.
- தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
- வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
- கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
- காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே
- தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில்
- ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் டுஞற்றி யோடும் மனக்குரங்கைக்
- காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
- எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
- திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
- கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
- வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
- காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
- சேமநட ராஜன் தெரிந்து.
- ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்
- வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார
- விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த
- எந்தைநட ராஜன் இசைந்து.
- என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
- பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
- நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
- வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
- நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய்
- மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய்
- பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித்
- தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி
- அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து
- மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத்
- திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
- இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
- தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
- பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
- விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
- கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ர் பெருகக் கருத்தலர்ந்தே
- வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
- திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
- கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை
- ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு
- நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல்
- ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே.
- ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
- தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
- நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
- வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
- மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க்
- காலவ னேகனல் கையவ னேநுதற் கண்ணவனே
- மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தர வல்லியைஓர்
- பாலவ னேஎனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே.
- அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
- அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
- வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
- மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
- தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
- தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
- உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
- உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
- விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
- மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
- மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
- மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
- துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
- சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
- குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
- குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
- வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
- போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
- போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
- நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
- நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
- ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
- எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
- ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
- வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
- ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
- தேவா கதவைத் திற.
- சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
- மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
- ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
- தேகா கதவைத் திற.
- சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
- நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
- தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
- பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
- ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
- தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
- பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
- ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
- கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
- மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
- ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
- செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.
- திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
- கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
- உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
- வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
- அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
- எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
- மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
- இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
- அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
- பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்
- அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்
- கொள்ளற் கபயங் கொடு.
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
- உள்ளனஎ லாங்கலந்தே
- ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
- உதயாத்த மானம்இன்றி
- இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
- ஏகமாய் ஏகபோக
- இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
- இலங்நிறை கின்றசுடரே
- கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
- ககன்எலாம் கண்டபரமே
- காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
- கண்காண வந்தபொருளே
- தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
- துணையாய் விளங்கும்அறிவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
- நிலையிலே நுண்மைதனிலே
- நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
- நெகிழிலே தண்மைதனிலே
- ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
- ஒண்சுவையி லேதிரையிலே
- உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே
- உற்றியல் உறுத்தும்ஒளியே
- காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
- கருணைமழை பொழிமேகமே
- கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
- கண்ணோங்கும் ஒருதெய்வமே
- தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
- சுகசொருப மானதருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
- ஒளியிலே சுடரிலேமேல்
- ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
- உறும்ஆதி அந்தத்திலே
- தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
- செயவல்ல செய்கைதனிலே
- சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
- சிறக்கவளர் கின்றஒளியே
- வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
- வானமே ஞானமயமே
- மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
- வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
- துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
- சுகம்எனக் கீந்ததுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
- ஆதிநடு அந்தத்திலே
- ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
- ஆடும்அதன் ஆட்டத்திலே
- உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
- உற்றபல பெற்றிதனிலே
- ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
- குபகரித் தருளும்ஒளியே
- குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
- கோடிகிர ணங்கள்வீசிக்
- குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
- குலாவும்ஒரு தண்மதியமே
- துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
- சொருபமே துரியபதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
- ஆங்காரி யப்பகுதியே
- ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
- அடியினொடு முடியும்அவையில்
- கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
- கணித்தபுற நிலையும்மேன்மேல்
- கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
- கலந்துநிறை கின்றஒளியே
- கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
- குறியே குறிக்கஒண்ணாக்
- குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
- கொண்டதனி ஞானவெளியே
- தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
- சுகயோக அனுபோகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
- கடையிலே கடல்இடையிலே
- கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
- கடல்ஓசை அதன்நடுவிலே
- வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
- வடிவிலே வண்ணம்அதிலே
- மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
- வயங்கிஅவை காக்கும் ஒளியே
- புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
- புகுந்தறி வளித்தபொருளே
- பொய்யாத செல்வமே நையாத கல்வியே
- புடம்வைத் திடாதபொன்னே
- மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
- மறுப்பிலா தருள்வள்ளலே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
- வாழ்க்கைமுத லாஎனக்கு
- வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
- வயங்கிஒளிர் கின்றஒளியே
- இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
- ரின்பமே அன்பின்விளைவே
- என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
- என்னாசை யேஎன் அறிவே
- கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
- கருணைஅமு தேகரும்பே
- கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
- கடவுளே கலைகள்எல்லாம்
- விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
- மெய்ம்மையே சன்மார்க்கமா
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
- புகல்வழிப் பணிகள்கேட்பப்
- பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
- பொருள்கண்ட சத்தர்பலரும்
- ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
- கிசைந்தெடுத் துதவஎன்றும்
- இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
- றிருக்கஎனை வைத்தகுருவே
- நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
- நலம்பெறச் சன்மார்க்கமாம்
- ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
- நடத்திவரு நல்லஅரசே
- வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
- மாமதியின் அமுதநிறைவே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
- ஏதாக முடியுமோஎன்
- றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
- றேங்கிய இராவில்ஒருநாள்
- மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
- வெளிநின் றணைத்தென்உள்ளே
- மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
- வீற்றிருக் கின்றகுருவே
- நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
- நல்குரவி னோன்அடைந்த
- நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
- நான்கண்டு கொண்டமகிழ்வே
- வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
- வலியவந் தாண்டபரமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
- கருணைஅமு தேஎனக்குக்
- கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
- காட்சியே கனகமலையே
- தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
- தலைவனே நின்பெருமையைச்
- சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
- சார்கின்ற தோறும்அந்தோ
- வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
- மதிஎலாந் தித்திக்கும்என்
- மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
- வரும்இன்பம் என்புகலுவேன்
- தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
- தோன்றிட விளங்குசுடரே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
- மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
- கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
- கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
- வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
- விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
- சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே
- என்அறி வேஎன தறிவினுக் கறிவே
- அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே
- அற்புத மேபத மேஎன தன்பே
- பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்
- பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே
- தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
- கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
- தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
- சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
- ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
- அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
- தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
- உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
- கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
- கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
- திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
- சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
- தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சாகாத தலைஇது வேகாத காலாம்
- தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
- போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
- பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
- ஆகாத பேர்களுக் காகாத நினைவே
- ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
- தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
- இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
- விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
- மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
- பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
- புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
- சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
- இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
- முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
- முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
- இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
- இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
- தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
- காரண காரியக் கருவிது பலவாய்
- ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
- அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
- பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
- பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
- தாரணி தனில்என்ற தயவுடை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
- அடிநடு முடியிலா ததுஇது மகனே
- படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
- பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
- செடியற உலகினில் அருள்நெறி இதுவே
- செயலுற முயலுக என்றசிற் பரமே
- தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
- அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
- துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
- சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
- விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
- விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
- தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
- மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
- நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
- நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
- ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
- ஏற்றிய கருணைஎன் இன்னுயிர்த் துணையே
- தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பவநெறி செலுமவர் கனவிலும் அறியாப்
- பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
- நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே
- நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
- சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
- சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
- தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
- காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
- எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
- இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
- வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
- மாணிக்க மலைநடு மருவிய பரமே
- தருதான முணவெனச் சாற்றிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
- எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
- ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
- ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
- ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
- இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
- சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
- பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
- கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
- குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
- என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
- இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
- பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
- பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
- விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
- விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
- புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
- புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
- தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
- சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
- பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
- பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
- மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
- வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
- ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
- ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
- கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
- கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
- ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
- இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.
- மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
- மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
- சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
- தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
- பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
- பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
- ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.
- அன்புடை மகனே மெய்யருள் திருவை
- அண்டர்கள் வியப்புற நினக்கே
- இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
- இரண்டரைக் கடிகையில் விரைந்தே
- துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
- தூய்மைசேர் நன்மணக் கோலம்
- பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
- பொதுநடம் புரிகின்றார் தாமே.
- கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக்
- களிப்பொடு மணம்புரி விப்பாம்
- விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல்
- விரைந்துநன் மங்கலக் கோலம்
- நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர்
- நவிலும்அவ் வுலகவர் பிறரும்
- இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார்
- இயலுறு சிற்சபை யவரே.
- மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை
- மணம்புரி விக்கின்றாம் இதுவே
- வயங்குநல் தருணக் காலைகாண் நீநன்
- மங்கலக் கோலமே விளங்க
- இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை
- எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார்
- சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த
- தந்தையார் சிற்சபை யவரே.
- வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
- ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
- வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
- ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
- ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
- சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
- நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
- வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
- துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
- பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
- அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
- உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
- ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
- வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
- தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
- வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
- அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
- பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
- மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
- தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
- மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
- வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
- மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
- விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
- நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
- நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
- தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
- தூயதிரு நாள்வருநாள் தொடாங்கிஒழி யாவே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
- தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
- எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
- என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
- வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
- மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
- சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
- நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
- என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
- இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
- முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
- தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
- மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
- பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
- பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
- துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
- துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
- தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
- யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
- உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
- உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
- துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
- தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
- தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
- எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
- இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
- இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
- மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
- மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
- தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
- யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
- பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
- புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
- மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
- மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
- தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
- வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
- பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
- பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
- பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
- பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
- எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
- சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
- ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
- அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
- நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
- நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
- வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
- மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
- பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
- புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
- கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
- களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
- ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
- அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
- மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
- மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.
- தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
- தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
- ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
- மேகத்திற் குண்டோ விளம்பு.
- பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
- மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்
- சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
- இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.
- யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
- ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
- அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
- கம்பலத்தால் ஆகும் களித்து.
- ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
- நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
- கென்மார்க்க மும்ஒன்றா மே.
- புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
- புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
- உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
- உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
- மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
- மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
- தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
- சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.
- பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
- பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
- துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
- துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
- தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
- சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
- கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
- காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
- எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
- அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
- அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
- பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
- பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
- வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
- மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
- நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
- சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
- தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
- சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
- சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
- ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
- உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
- விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
- மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
- திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
- செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
- வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
- வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
- கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
- கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
- சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
- தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
- நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
- நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
- அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
- ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
- சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
- சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
- கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
- வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
- மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
- பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
- புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
- செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
- சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
- மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
- சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
- சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
- எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
- இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
- பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
- கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
- பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
- பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
- சுடுகின்றீர் புதைக்க நேரீர்
- சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
- துடியாதென் சொல்லீர் நும்மைத்
- தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
- கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.
- பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
- தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
- ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
- தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
- ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
- ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
- ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
- வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
- மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
- தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
- கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
- ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
- தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
- சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
- வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
- இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
- இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
- நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
- வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.
- மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
- ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
- பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
- தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
- கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
- தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
- செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
- அள்ளக் குறையா வள்ளற் பொருளை
- அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
- பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
- கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
- வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
- புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
- தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
- செல்வமே நான்பெற்ற சிறப்பே
- மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
- வாழ்வித்த என்பெரு வாழ்வே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
- புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
- தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
- தேடியும் காண்கிலாச் சிவமே
- மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
- வள்ளலே தெள்ளிய அமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- அபயம் பதியே அபயம் பரமே
- அபயம் சிவமே அபயம் - உபய
- பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
- விதத்தில் கருணை விளை.
- உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
- ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
- கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
- கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
- வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
- வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
- குழக்கறியே349 பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
- குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
- கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க எனக்கழறிக் களிக்கா நின்ற
- சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும் கணச்சுகமேசொல்லக் கேண்மின்
- முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர்
- இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ எமையும்இவ்வா றிடுகஎன்றே.
- பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
- ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
- தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
- ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
- நான்செயத் தக்கதே தென்பாள்
- செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
- தெய்வமே தெய்வமே என்பாள்
- வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
- விருப்பிலர் என்மிசை என்பாள்
- வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
- வருந்துவாள் நான்பெற்ற மகளே.
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
- என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
- பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
- உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
- உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ
- என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும்
- அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை
- முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே.
- கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம் காணக் காட்டும்
- என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் வல்லவனே இலங்குஞ் சோதி
- மன்றுடைய மணவாளா மன்னவனே என்னிருகண் மணியே நின்னை
- அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா.
- குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
- சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
- தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
- இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
- கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்
- தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
- பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
- தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.
- கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
- கருணைமா மழைபொழி முகிலே
- விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
- மேவிய மெய்ம்மையே மன்றுள்
- எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
- இன்றுநீ ஏழையேன் மனத்துப்
- புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
- புகுந்தென துளங்கலந் தருளே.
- அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
- அன்றுவந் தாண்டனை அதனால்
- துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
- சொல்லினேன் சொல்லிய நானே
- இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
- எனைஉல கவமதித் திடில்என்
- என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
- எய்துக விரைந்தென திடத்தே.
- வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத்
- தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
- ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
- நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.
- தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
- தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
- ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
- உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
- இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
- இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
- அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
- அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.
- அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும்
- ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே
- வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும்
- இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே.
- ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
- வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
- நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
- நாதனைக் கண்டவன் நடிக்கும்
- மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
- மருந்துகண் டுற்றது வடிவாய்
- நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
- நெஞ்சமே அஞ்சலை நீயே.
- கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
- கருணையங் கண்ணது ஞான
- நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
- நின்றது நிறைபெருஞ் சோதி
- மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
- வயங்குவ தின்பமே மயமாய்த்
- தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
- தனித்தெனக் கினித்ததோர் கனியே.
- மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது
- வள்ளல்என் றெனக்குளே தெரிந்த
- அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா
- ஐயனே அன்பனே அரசே
- என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன்
- எட்டுணை எனினும்வே றிடத்தில்
- சென்றுநின் றறியேன் தெய்வமே இதுநின்
- திருவுளம் தெரிந்தது தானே.
- உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
- ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
- இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
- எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான்
- வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு
- சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம்
- இத்தருணம் சத்தியமே என்று.
- அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய்
- துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே
- வெப்பூறு நீக்கிய வெண்று பூத்தபொன் மேனியனே
- உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே.
- அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
- அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
- அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
- ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
- சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
- மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
- மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.
- ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
- ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
- தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
- நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.
- என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
- முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய்
- நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்350 மேவுபசும்
- பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய்.
- நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப
- ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே
- நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே
- கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே.
- முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்
- முன்னர்நீ தோன்றினை அந்தோ
- அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்
- அப்பனே அய்யனே அரசே
- இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்
- என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
- எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்
- கெய்துதற் குரியமெய்த் தவமே.
- பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த
- பெருமநின் தன்னைஎன் றனக்கே
- சாருறு தாயே என்றுரைப் பேனோ
- தந்தையே என்றுரைப் பேனோ
- சீருறு குருவே என்றுரைப் பேனோ
- தெய்வமே என்றுரைப் பேனோ
- யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்
- யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே
- என்உயிர்க் கமுதமே என்தன்
- அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே
- அருள்நடம் புரியும்என் அரசே
- வன்பிலே விளைந்த மாயையும் வினையும்
- மடிந்தன விடிந்ததால் இரவும்
- துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்
- சூழலில் துலங்குகின் றேனே.
- வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
- வாரியைக் கண்டனம் மனமே
- அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
- ஆடலாம் அடிக்கடி வியந்தே
- உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
- ஓங்கலாம் உதவலாம் உறலாம்
- கள்எலாம் உண்டவண்டென இன்பம்
- காணலாம் களிக்கலாம் இனியே.
- அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்
- அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
- துடிவிளங்கக் கரத்தேந்தும் சோதிமலை மருந்தே
- சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
- பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்
- போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
- படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்
- பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.
- கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
- கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
- துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
- தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
- விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
- வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
- அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
- அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
- இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
- ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
- அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
- அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
- யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
- விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
- விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே
- மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே
- ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ
- எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ.
- எனக்கும் உனக்கும்
- அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே
- அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே
- எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே
- எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
- அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
- விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
- மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
- எனக்கும் உனக்கும்
- தனிஎன்338 மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே
- தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே
- வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே
- மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
- நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
- நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
- நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
- எனக்கும் உனக்கும்
- ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
- இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
- மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
- மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
- அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
- செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
- செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
- எனக்கும் உனக்கும்
- ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
- யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
- திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
- சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
- விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
- பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
- பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
- எனக்கும் உனக்கும்
- தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
- தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
- அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
- அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
- எனக்கும் உனக்கும்
- கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
- கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
- உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
- உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
- ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
- வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
- மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
- எனக்கும் உனக்கும்
- ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
- அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
- மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
- வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
- எனக்கும் உனக்கும்
- பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
- போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
- நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
- நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
- எனக்கும் உனக்கும்
- உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே
- உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே
- மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே
- மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே.
- எனக்கும் உனக்கும்
- அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
- அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
- பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
- புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
- எனக்கும் உனக்கும்
- எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
- இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
- கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
- கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
- எனக்கும் உனக்கும்
- விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
- மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
- அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
- அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
- தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
- ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
- உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
- எனக்கும் உனக்கும்
- அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
- அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
- இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
- என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
- எனக்கும் உனக்கும்
- அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
- அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
- மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
- வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே
- அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே
- தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே
- தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
- வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
- நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே
- நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
- எனக்கும் உனக்கும்
- கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே
- கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே
- உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே
- உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே.
- எனக்கும் உனக்கும்
- அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
- அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
- எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
- எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
- துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே
- துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
- ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
- இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
- சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
- என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
- எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
- எனக்கும் உனக்கும்
- இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே
- எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே
- கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே
- களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே.
- எனக்கும் உனக்கும்
- சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
- தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
- தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
- தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
- எனக்கும் உனக்கும்
- ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
- ஈசான மேலென்றீர் வாரீர்
- ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்
- ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
- ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்
- எட்டுக் குணத்தீரே வாரீர். வாரீர்
- 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
- 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
- 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,N' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
- 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
- 305. பாங்காரச் - பி. இரா.
- 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
- 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
- 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
- அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
- ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
- புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
- பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
- வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
- மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
- திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
- ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
- அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
- ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
- என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
- ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- இசையாமல் போனவர் எல்லாரும் நாண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
- வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
- நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
- நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
- அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- என்னிறை யான மருந்து - மகிழ்ந்
- தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
- தன்னறி வாகு மருந்து - என்னைத்
- தந்த மருந்தென்றன் சொந்த மருந்து. ஞான
- மேலை வெளியா மருந்து - நான்
- வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
- சாலை விளக்கு மருந்து - சுத்த
- சமரச சன்மார்க்க சங்க மருந்து. ஞான
- வானடு வான மருந்து - என்னை
- மாமணி மேடைமேல் வைத்த மருந்து
- ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
- துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. ஞான
- பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்
- பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
- ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்
- குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
- கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
- வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
- வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. சிவசிவ
- தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்
- சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி
- விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே
- வீதியும் வீடும் விளக்கிய ஜோதி. சிவசிவ
- சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
- சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
- சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
- விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
- செய்யென்று தந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
- துரியப் பதியில் அதுஅத னாலே
- தெரியத் தெரிவது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
- பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
- திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தற்பர மேவடி வாகி - அது
- தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
- சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மேருவெற் புச்சியின் பாலே - நின்று
- விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
- சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
- பிரம வெளியினில் பேரரு ளாலே
- சித்தாடு கின்றது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
- ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
- அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
- ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
- கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
- புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
- பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
- இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
- ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
- உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
- மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
- விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
- எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
- இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- 313. உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- அற்புதம் அற்புத மே - அருள்
- அற்புதம் அற்புத மே.
- புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
- பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
- மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
- வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
- சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
- சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
- மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
- மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
- அற்புதம் அற்புத மே - அருள்
- அற்புதம் அற்புத மே.
- வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
- மேடை இருந்தத டி - அம்மா
- மேடை இருந்தத டி. ஆணி
- மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
- கூடம் இருந்தத டி - அம்மா
- கூடம் இருந்தத டி. ஆணி
- கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
- மாடம் இருந்தத டி - அம்மா
- மாடம் இருந்தத டி. ஆணி
- ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
- இசைந்தபொற் றம்பம டி - அம்மா
- இசைந்தபொற் றம்பம டி. ஆணி
- மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
- மற்றது கண்டேன டி - அம்மா
- மற்றது கண்டேன டி. ஆணி
- கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
- கோயில் இருந்தத டி - அம்மா
- கோயில் இருந்தத டி. ஆணி
- மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
- மணிவாயில் உற்றேன டி - அம்மா
- மணிவாயில் உற்றேன டி. ஆணி
- இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
- எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
- திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
- சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.
- பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
- புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
- மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே
- மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.
- மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
- மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
- சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
- செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.
- துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
- தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
- தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
- செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
- ஐயர் திருச்சபை ஆடக மே
- ஆடுதல் ஆனந்த நாடக மே.
- உத்தர ஞான சிதம்பர மே
- சித்திஎ லாந்தரும் அம்பரமே.
- ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
- மானந்த போனகம் கொண்டோ மே.
- நடராஜ பலமது நம்பல மே
- நடமாடு வதுதிரு அம்பல மே.
- இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
- என்குரு மேல்ஆணை இட்டே னே.
- இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
- என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
- நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
- நடராஜ எனில்வரும் நித்திய மே.
- நடராஜர் தம்நடம் நன்னட மே
- நடம்புரி கின்றதும் என்னிட மே.
- நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
- நடராஜ நடராஜ நடராஜ பலமே.
- 339. ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாகநாமாவளி தொடங்குகிறது. ஆ. பா. பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும்முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது.இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப்பெறுவதாயும்,கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே"என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விருநாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக்கொள்ளலாம்.
- 340. சவுதய - ஆ. பா. பதிப்பு.
- 341. அனுர்த - ச. மு. க. பதிப்பு.
- ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
- தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
- கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே
- எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே.
- அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே
- அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.
- தகரககன நடனகடன சகளவகள சரணமே
- சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே.
- அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே
- அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே.
- தனககனக சபையஅபய சரதவரத சரணமே
- சதுரசதர சகசசரித தருணசரண சரணமே.
- உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
- உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.
- இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே
- இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.
- அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
- அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
- ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
- உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.
- அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே
- அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.
- எறிவில்உலகில்342 உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே
- எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.
- நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே
- நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே.
- வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
- மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.
- பரமநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
- திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே.
- அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
- எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.
- அரைசே குருவே அமுதே சிவமே
- அணியே மணியே அருளே பொருளே
- அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
- பசியாத அமுதே பகையாத பதியே
- பகராத நிலையே பறையாத சுகமே
- நசியாத பொருளே நலியாத உறவே
- நடராஜ மணியே நடராஜ மணியே.
- புரையாத மணியே புகலாத நிலையே
- புகையாத கனலே புதையாத பொருளே
- நரையாத வரமே நடியாத நடமே
- நடராஜ நிதியே நடராஜ நிதியே.
- தவயோக பலமே சிவஞான நிலமே
- தலையேறும் அணியே விலையேறு மணியே
- நவவார நடமே சுவகார புடமே
- நடராஜ பரமே நடராஜ பரமே.
- துதிவேத உறவே சுகபோத நறவே
- துனிதீரும் இடமே தனிஞான நடமே
- நதியார நிதியே அதிகார பதியே
- நடராஜ குருவே நடராஜ குருவே.
- வயமான வரமே வியமான பரமே
- மனமோன நிலையே கனஞான மலையே
- நயமான உரையே நடுவான வரையே
- நடராஜ துரையே நடராஜ துரையே.
- தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
- தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
- திருவளர் உருவே உருவளர் உயிரே
- திருநட மணியே திருநட மணியே.
- கலைநிறை மதியே மதிநிறை அமுதே
- கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே
- சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே
- திருநட மணியே திருநட மணியே.
- மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே
- விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே
- திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே
- திருநட மணியே திருநட மணியே.
- நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே
- நிறையருள் நிதியே நிதிதரு பதியே
- திகழ்சிவ பதமே சிவபத சுகமே
- திருநட மணியே திருநட மணியே.
- சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
- தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
- கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
- குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
- எம்புலப் பகையே எம்புலத் துறவே
- எம்குலத் தவமே எம்குலச் சிவமே
- அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
- அம்பலத் தரசே அம்பலத் தரசே.
- வேத சிகாமணியே போத சுகோதயமே
- மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
- நாத பராபரமே சூத பராவமுதே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஏக சதாசிவமே யோக சுகாகரமே
- ஏம பராநலமே காம விமோசனமே
- நாக விகாசனமே நாத சுகோடணமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- தூய சதாகதியே நேய சதாசிவமே
- சோம சிகாமணியே வாம உமாபதியே
- ஞாய பராகரமே காய புராதரமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆரண ஞாபகமே பூரண சோபனமே
- ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே
- நாரண னாதரமே காரண மேபரமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆகம போதகமே யாதர வேதகமே
- ஆமய மோசனமே ஆரமு தாகரமே
- நாக நடோதயமே நாத புரோதயமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
- ஆகம மேலவனே ஆரண நாலவனே
- நாடிய காரணனே நீடிய பூரணனே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
- எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
- என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
- வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
- மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
- நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
- நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
- இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
- எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
- சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
- சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
- துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
- தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
- மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
- என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
- என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
- மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
- விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
- அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
- அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
- கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது
- கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம்
- எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண்
- பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால்
- பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ
- இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
- எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே.
- மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
- மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
- தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
- சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
- தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
- திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
- உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
- துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
- பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
- பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
- அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
- அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
- கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
- களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
- புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
- புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
- கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
- குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
- நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
- நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
- ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
- ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
- ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
- என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
- அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
- ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
- தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
- திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
- இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
- என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
- மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
- மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
- தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
- தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
- சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
- திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
- அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
- அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
- எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
- வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
- என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
- அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
- அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
- எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
- இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
- நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
- நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
- நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
- போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
- புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
- வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
- விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
- வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
- மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
- புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
- பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
- எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
- இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
- பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
- பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
- அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
- ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
- ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
- முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
- முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
- விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
- வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
- பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
- பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
- ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
- வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
- விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
- தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
- சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
- உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்
- எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
- தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்
- தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
- பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்
- பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
- மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய
- மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.
- அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
- அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
- இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
- எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
- தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
- செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
- அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
- அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
- நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
- நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
- வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
- மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
- தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
- தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
- ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
- ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
- என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
- இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
- நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
- நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
- புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
- பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
- வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
- மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
- எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
- இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
- மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
- விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
- இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
- இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
- பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
- பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
- காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
- கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
- கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
- குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
- நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
- நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
- மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
- வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
- அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
- ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
- செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
- திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
- பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
- பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
- அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
- அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.
- சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
- சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
- இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
- இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
- சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
- தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
- செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
- திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
- என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
- இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
- பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
- பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
- தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
- சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
- மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
- வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.