- வந்தித்தேன்131 பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
- சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ்
- சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
- வந்துசிந்திப் பித்தல் மறந்து.
- வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
- சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
- வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
- நின்மலக்கண் தண்ணருள்தான் நேர்.
- வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
- தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
- சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
- பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
- வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
- வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
- எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
- என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
- கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
- கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
- தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
- முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
- கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
- சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.
- வந்தோடி நைமனத்து வஞ்சகனேன் வஞ்சமெலாம்
- அந்தோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- வந்திப் பறியேன் வழங்கியவன் சொல்லையெலாம்
- சிந்திக் கிலுள்ளே திடுக்கிட் டழுங்குதடா.
- வந்தருள் புரிக விரைந்திது தருணம்
- மாமணி மன்றிலே ஞான
- சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
- சுத்தசன் மார்க்கசற் குருவே
- தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
- தனிஅருட் சோதியை எனது
- சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
- செய்வித் தருள்கசெய் வகையே.
- வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
- வல்லபம் பெற்றன டி - அம்மா
- வல்லபம் பெற்றன டி. ஆணி