- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
திருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.
உதாரணமாக : " இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை " என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து "இப்பாரிடை உனையே..." என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.